டெல்லியில் மாசை கட்டுப்படுத்த முடியாததால் அமெரிக்க அதிபர் ஒபாமாவின்
வருகைக்காக 1,800 ஏர் ப்யூரிஃபையர் இயந்திரங்களை அந்நாட்டு தூதரகம்
விலைக்கு வாங்கி வந்தது.
குடியரசு தினவிழா சிறப்பு விருந்தினராக இந்தியாவுக்கு மூன்று நாட்கள்
சுற்றுப் பயணமாக அமெரிக்க அதிபர் ஒபாமா வந்திருந்தார். புதுடெல்லியில்
நிலவும் மாசு அளவு குறித்து வழக்கமாக கணக்கெடுக்கும் அங்குள்ள அமெரிக்க
தூதரகம், ஒபாமாவின் வருகைக்காக முன்னதாக 1,800 ஏர் ப்யூரிஃபையர்
இயந்திரங்களை ஸ்வீடன் நிறுவனமான ப்ளூ ஏரிடமிருந்து விலைக்கு வாங்கி
பொறுத்தப்பட்டது.
சனி, 31 ஜனவரி, 2015
இளங்கோவன் மீது அதிருப்தியில் சோனியா ! சிதம்பரத்தை வெளியேறச் சொல்வதா?
ஜெயந்தி நடராஜன் வெளியேறியதை அடுத்து கருத்துக்
கூறிய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்,
மற்றொருவரும் வாரிசோடு வெளியேறினால் நல்லது என்று கூறியதற்கு காங்கிரஸ்
தலைவர் சோனியா காந்தி அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
ஜெயந்தி நடராஜன் பதவி விலகியதற்கு கோடானு கோடி நன்றிகள் என்று கூறிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், காங்கிரஸ் கட்சியில் இருந்து மற்றொருவரும் வாரிசோடு வெளியேறினால், கட்சியே விமோசனம் அடையும் என்று தெரிவித்தார்.
ஜெயந்தி நடராஜன் பதவி விலகியதற்கு கோடானு கோடி நன்றிகள் என்று கூறிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், காங்கிரஸ் கட்சியில் இருந்து மற்றொருவரும் வாரிசோடு வெளியேறினால், கட்சியே விமோசனம் அடையும் என்று தெரிவித்தார்.
ஜெயந்தி நடராஜன் : வேதாந்த குழுமம், அதானி குழும திட்டங்கள் போன்ற விவகாரங்களில் ராகுல் நிர்ப்பந்தம்.....
டெல்லி: சில குறிப்பிட்ட தொழில் நிறுவனங்களுக்குச் சாதகமாக நடக்குமாறு
தன்னை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நிர்ப்பந்தம் செய்ததாகவும்,
தான் ராகுல் காந்தியின் உத்தரவுகளை மதித்து நடந்ததாகவும் காங்கிரஸ் தலைவர்
சோனியா காந்திக்கு முன்னாள் மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ஜெயந்தி
நடராஜன் கடிதம் எழுதியுள்ளது அம்பலமாகியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தக் கடிதத்தை ஜெயந்தி நடராஜன் சோனியாவுக்கு
அனுப்பியுள்ளார். கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் அவர்
காங்கிரஸிலிருந்து விலகுவதாக அறிவித்து பின்னர் மீண்டும் இணைந்து பணியாற்றி
வந்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர் போட்டியிடவில்லை.
இந்த நிலையில், சோனியா காந்திக்கு அவர் கடந்த நவம்பர் மாதம் எழுதியுள்ள
கடிதத்தில், ராகுல் காந்தியின் நிர்ப்பந்தம் குறித்து கூறியுள்ளதால்
பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தி இந்து நாளிதழ் வெளியிட்டுள்ள அந்தக் கடிதத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய
அம்சங்கள்
ராகுலின் கோரிக்கைகள்...
சுற்றுச்சூழல் தொடர்பான சில முக்கிய முடிவுகளில் காங்கிரஸ் துணைத் தலைவர்
ராகுல் காந்தியிடமிருந்து குறிப்பிட்ட கோரிக்கைகள் வந்தன.
சுனந்தா கொலை தொடர்பாக மகனிடம் விசாரணை: போலீசார் தகவல்
சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு தொடர்பாக அவரது மகன் ஷிவ் மேனனிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சசிதரூரின்
மனைவி சுனந்தா புஷ்கர், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17-ந்தேதி, டெல்லியில்
உள்ள ஒரு நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பிணமாக கிடந்தார்.
இதை மர்ம மரணமாக முதலில் பதிவு செய்து விசாரித்து வந்த டெல்லி போலீசார்,
கடந்த சில நாட்களுக்கு முன் கொலை வழக்காக மாற்றினர். இது குறித்து
விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.
இந்த குழுவினர் ஓட்டல் ஊழியர்கள், சசிதரூரின் வேலைக்காரர்கள்
உள்ளிட்டோரிடம் முதலில் விசாரணை நடத்தினர். பின்னர் சசிதரூர் மற்றும் மூத்த
பத்திரிகையாளர் நளினி சிங் ஆகியோரிடமும் கடந்த சில நாட்களுக்கு விசாரணை
நடத்தப்பட்டது.
சட்டசபை தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி? மனிஷங்கர் அய்யர் கலைஞர் சந்திப்பு ......
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரசின் மூத்த தலைவருமான மணிசங்கர்
அய்யர், நேற்று காலை, திடீர் என, தி.மு.க., தலைவர் கருணாநிதியை சந்தித்து
பேசியது, 'மீண்டும் தி.மு.க., - காங்., உறவு மலருவதற்கான துவக்கம்' என, இரு
கட்சிகளின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ஸ்ரீரங்கம்
இடைத்தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளரை, தமிழகத்தின்
அனைத்து கட்சியினரும் ஆதரிக்க வேண்டும் என, அக்கட்சித் தலைவர் கருணாநிதி
வேண்டுகோள் விடுத்த பின்னும், காங்., 'ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில்
போட்டியிடவும் இல்லை; யாருக்கும் ஆதரவும் இல்லை' என்ற நிலைப்பாட்டை எடுத்து
அறிவித்தது.
சீனாவில் 3500 தியேட்டர்களில் அமீர் கானின் பிகே திரையிடப்படுகிறது
நடிகர் அமீர்கான் நடிப்பில் வெளிவந்த பி.கே. திரைப்படம்
இந்தியாவில் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளானது. எனினும், வசூலில் சாதனை
படைத்தது. இந்நிலையில், சீனாவின் மிகப்பெரிய அரசு திரைப்பட நிறுவனமான China
Film Group Corporation (CFGC) பி.கே. படத்தின் இயக்குனர் ராஜ்குமார்
ஹிரானிக்கு அழைப்பு விடுத்திருந்தது. அழைப்பை ஏற்று பெய்ஜிங் சென்ற
ராஜ்குமார் அங்கு இரண்டு மாதங்களுக்குள் பி.கே. படத்தை 3500
திரையரங்குகளில் வெளியிடுவதற்கான Sino-India Mutual Film Importation
Agreement என்ற ஒப்பந்தத்தை முறைப்படி நிறைவேற்றுவதற்கான பணிகளில்
ஈடுபட்டார். அமெரிக்காவுக்கு பிறகு இரண்டாவது மிகப்பெரிய திரைப்பட சந்தையாக
சீனா இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 34 வெளிநாட்டு படங்கள் அங்கு ஹாலிவுட்
பிளாக்பஸ்டராக வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் ஹிந்தி படங்கள் ஹாலிவுட்
பிளாக்பஸ்டர் ரெக்கார்டை முறியடிப்பது அவ்வளவு எளிதல்ல என்றாலும், இந்த
புதிய ஒப்பந்தத்தின்படி CFGC நேரடியாக பி.கே திரைப்படத்தை இறக்குமதி செய்து
சீனாவின் திரையரங்குகளில் ஒளிபரப்புகிறது. thenee.com
வெள்ளி, 30 ஜனவரி, 2015
நீதியின் பலிபீடங்களாக நீதிமன்றங்கள்! நயவஞ்சகம் என்றால் என்ன என்று கற்று தரும் .........
குற்றவாளிகளைத் தப்புவிக்க வழக்கை ஆண்டுக் கணக்கில் இழுத்தடிப்பது, எதிர்த்
தரப்பு வாதங்கள் எதையுமே கேட்காமல் தீர்ப்பு கூறுவது, வழவழா கொழகொழாவென
தீர்ப்புகளை எழுதுவது, குற்றவாளிகளை எச்சரிப்பதுபோல நாடகமாடி சலுகை
காட்டுவது
மக்கள் நலன் சார்ந்த பிரச்சினை தொடர்பான வழக்குகளில் நீதிமன்றங்களின் செயல்பாடுகள், அதன் தீர்ப்புகள் நீதியைக் காவு வாங்குவதாகவே உள்ளன.நீதி – நியாயத்தை மக்கள் பெறுவதற்கான கடைசி புகலிடமாகச் சித்தரிக்கப்படும் நீதித்துறையானது, வழக்குகளைக் கையாளும் முறையே குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கில்தான் உள்ளது என்பதை ஜெயலலிதா – சசிகலா கும்பலுக்குப் பிணை வழங்கிய தீர்ப்பு அம்பலப்படுத்தியிருக்கிறது. இது ஏதோ விதிவிலக்கான விவகாரமாகக் கருத முடியாது. இப்படித்தான் ஏறத்தாழ எல்லா வழக்குகளையும் நீதித்துறை கையாள்கிறது .

உங்க தாத்தா (பக்தவத்சலம்) அரிசி பதுக்கிய கதை எங்களுக்குத் தெரியாதா.. ஜெயந்தி மீது பாயும் ஈவிகேஎஸ்!
ஜெயந்தி நடராஜனின் தாத்தாவான தமிழக முன்னாள் முதல்வர் பக்தவத்சலம்
தமிழகத்தில் பஞ்சம் தலைவிரித்தாடிய போது அரிசி பதுக்கியவர் என தமிழ்நாடு
காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதிலடி கொடுத்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரான ஜெயந்தி நடராஜன், காங்கிரஸில் இருந்து
வெளியேறுவதாக அறிவித்துள்ளார். சுமார் 30 ஆண்டு காலம் கட்சியில் இருந்த
தனக்கு, உரிய அங்கீகாரத்தை காங்கிரஸ் அளிக்கவில்லை என அவர் குற்றம்
சாட்டியுள்ளார்.
இந்நிலையில், ஜெயந்தி நடராஜனின் விலகல் தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ்
கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடனடியாக, தனியார் தொலைக்காட்சி
ஒன்றிற்கு தொலைபேசி மூலமாக பதிலடி கொடுத்துள்ளார்.
அதில் அவர், ஜெயந்தி நடராஜனின் தாத்தாவும், தமிழக முன்னாள் முதல்வருமான
பக்தவத்சலத்தை கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார்.
இளங்கோவன் கூறுகையில், ‘தமிழகத்தில் பஞ்சம் தலைவிரித்தாடிய போது
பக்தவத்சலம் கிடங்கில் அரிசியைப் பதுக்கியவர். பெருந்தலைவர் காமராஜரின்
நற்காரியங்கள் பக்தவத்சலத்தின் ஆட்சியால் வீணானது.
1967ம் ஆண்டு தமிழகத்தில் காங்கிரஸ் தோற்றதற்கு பக்தவத்சலமே காரணம் என்று
குற்றம் சாட்டியுள்ளார்.
ஜெயந்தி நடராஜன் அமீத் ஷாவை சந்தித்த பின்னரே ராகுல் காந்தி மீது புகார் மழை?
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரின்போது பாஜக தலைவர் அமீத்
ஷாவை ஜெயந்தி நடராஜன் ரகசியமாக சந்தித்துப் பேசியதாக ஒரு தகவல்
கசிந்துள்ளது. இருப்பினும் அவரை பாஜகவில் சேர்க்க சில முக்கியத் தலைவர்கள்
ஆர்வம் காட்டவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.
காங்கிரஸ் கட்சியிலிருந்து இன்று விலகியுள்ளார் ஜெயந்தி நடராஜன். இந்த
நிலையில் அவர் சமீபத்தில் அமீத் ஷாவைச் சந்தித்ததாக தகவல்கள்
வெளியாகியுள்ளன.
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரின்போது அமீத் ஷா, ஜெயந்தி சந்திப்பு
நடந்ததாகவும் இந்தத் தகவல்கள் கூறுகின்றன. எதற்காக இந்த சந்திப்பு என்பது
தெரியவில்லை. ஆனால் இந்த சந்திப்பு நடந்த நிலையில் தற்போது காங்கிரஸை
விட்டு விலகியுள்ளார் ஜெயந்தி. இடம் கிடைக்காமல் அலைந்து திரியும் ஆவி போல .எதோ இப்போதைக்கு பிஜேபி என்ற
முருங்கை மரம் ஏறுகிறது . ஆட்சி மாறினால் அந்த மரம் ஏறும் . அனுபவிக்கும்
போது ராகுலை புகழ்ந்து விட்டு இப்போது புழுதி வாரி இறைப்பது கேவலாமாக
தெரியவில்லை போலும் .
நல்லம நாயுடு நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு !ஜெ. சொத்துக் குவிப்பு: விசாரணை அதிகாரி
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், விசாரணை அதிகாரி நல்லம
நாயுடு நேரில் ஆஜராக வேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்றத்தின் சிறப்பு
அமர்வு உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு தொடர்பான
விசாரணை கர்நாடக உயர்நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது. 16வது நாளாக
நேற்று, சசிகலா தரப்பு இறுதி வாதம் முன் வைக்கப்பட்டது. இந்த வழக்கில்,
ஜெயலலிதாவின் பினாமிகளாக குற்றம்சாட்டப்பட்ட மற்ற மூன்று பேரும்
சித்தரிக்கப்பட்டிருப்பதாக சசிகலா தரப்பில் வாதிடப்பட்டது.
ஜெ. சொத்துக் குவிப்பு: விசாரணை அதிகாரி நல்லம நாயுடு நேரில் ஆஜராக கோர்ட்
உத்தரவு நல்லம்மா நாயுடுவின் அறிக்கையை தண்ணி ஊத்தி மூட ரொம்பவும் முயற்சி? பச்சையாகவே தெரியறது .
Pakistan:150 ஆசிரியைகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி ! தீவிரவாதிகள் தாக்குதலை சமாளிக்க ....
பெஷாவர்வடமேற்கு பாகிஸ்தானில் பெஷாவர் உள்ளிட்ட நகரங்களில் பணியாற்றும்
ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு போலீசார் துப்பாக்கியால் சுடுவதற்கு
பயிற்சி அளித்து வருகின்றனர். மேலும், அவர் கள் பள்ளிகளுக்கு செல்லும்போது
துப்பாக்கி எடுத்து செல்ல போலீசார் அனுமதி வழங்கி வருகின்றனர்.
பெஷாவர் நகரில் இருக்கும் ராணுவ பள்ளியின்மீது தலிபான் தீவிரவாதிகள் கடந்த மாதம் 16&ம் தேதி தீவிர துப்பாக்கி தாக்குதல் நடத்தினார்கள். இத்தாக்குதலில் 132 பள்ளி குழந்தைகள் உட்பட 151 பேர் பலியாகி விட்டனர். இதைத் தொடர்ந்து, வடமேற்கு மற்றும வடக்கு பிராந்தியங்களில் தலிபான் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத இயக்கங்களை ஒழிக்கும் பணியில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டு வருகிறது.

ஜெயா வழக்கில், அரசியல் பேச வேண்டாம் ! வக்கீல்களுக்கு வகுப்பெடுக்கும் நீதிபதி ?
பெங்களூரு: ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு மேல் முறையீடு தொடர்பாக,
கர்நாடகா உயர் நீதிமன்ற சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணையில்,
தி.மு.க., தலைவர் கருணாநிதி உண்டியல் வைத்து பணம் வசூலித்தது பற்றியும்,
சர்க்காரியா கமிஷன் பற்றியும் நேற்று விவாதம் நடந்தது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான, சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்
முறையீட்டு மனு மீது, 16வது நாளாக நேற்று விசாரணை நடந்தது. சசிகலாவின்
வக்கீல் பஸந்த் வாதிட்டார்.சிகலா வக்கீல்:
வழக்கு விசாரணையின்போது, ஜெயலலிதாவின் பணம், 32 கம்பெனிகளுக்கு
கொடுக்கப்பட்டதாக கூறும் போலீசார், அதற்கான ஆதாரங்களை, சமர்ப்பிக்கவில்லை.தி.மு.க.,
பொதுச்செயலர் அன்பழகன் வக்கீல் சரவணன்: நமது எம்.ஜி.ஆர்., நாளிதழுக்கு,
15,???, 18,??? ரூபாய் என, 'டெபாசிட்' வசூலித்தனர். இதில், 14 கோடி ரூபாய்
வசூலானது. அந்த பணத்தில், 32 கம்பெனிகளுக்கும் வழங்கப்பட்டது.
ஜெயலலிதாவின், 44வது பிறந்த நாளுக்கு, 'டிடி' யாக, பணம் வசூல்
செய்யப்பட்டது.நமது எம்.ஜி.ஆர் எல்லாம் சந்தா கட்டவே ஆள் இல்லை...மிஞ்சி மிஞ்சி போனா
தமிழ்நாடு முழுக்கவே அந்த நமது எம்.ஜி.ஆர் வாங்கறது இருநூற் பேறு கூட
இருக்காது...அதுல எப்படி கோடி கணக்குல பணம் வரும் ? ஒரு சந்தாவே அந்த
காலகட்டத்தில் நூறு ரூபாய் கிட்ட தான்...அதுல இவங்களுக்கு கோடி கணக்குல
பணம் வந்ததாமா?
ஸ்ரீ ரங்கத்தில் ஜெயலலிதா காணொளி மூலம் பிரசாரம் ? பன்னீருக்கு வெற்றியில் பங்கு கிடையாது?
ஸ்ரீரங்கம் தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து, முன்னாள்
முதல்வர் ஜெயலலிதா, டிஜிட்டல் திரை மூலம் பிரசாரம் செய்ய உள்ளார். இதற்கான
ஏற்பாடுகளை, அ.தி.மு.க.,வினர் செய்து வருகின்றனர்.ஸ்ரீரங்கம்
சட்டசபைத் தொகுதிக்கு, அடுத்த மாதம் 13ம் தேதி, இடைத்தேர்தல் நடக்கிறது.
அ.தி.மு.க., சார்பில், வழக்கறிஞர் வளர்மதி நிறுத்தப்பட்டு உள்ளார்.
இதுதவிர, தி.மு.க., - பா.ஜ., - மா.கம்யூ., மற்றும் சுயேச்சை வேட்பாளர்களும்
களத்தில் உள்ளனர். ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்
என்ற துடிப்புடன், தேர்தல் பணிகளை அ.தி.மு.க., வினர் துவக்கி உள்ளனர்.
தி.மு.க.,வினர், 2011 தேர்தலில் பெற்ற ஓட்டு களை விட, கூடுதல் ஓட்டுகளை
பெற்று விட வேண்டும் என்ற குறிக்கோளுடன், களம் இறங்கி உள்ளனர். நான் கூட முதல்ல நினைச்சேன் இந்த அம்மா ஏதோ வசமா இந்த கும்பல்கிட்ட
மாட்டிகிச்சு..ஏதோ ஒரு ஆதாரம் செமையா சிக்கிகிச்சு அதான் அந்த கும்பல்
இந்தம்மாவ ஆட்டி வக்குதுன்னு நினைச்சேன்....இப்படி தான் ராதா அண்ணனும்
ஏமாந்து அந்தம்மாவுக்கு ஜால்ரா தட்டிகிட்டு இருந்தார் ரொம்ப நாள்
முன்னாடி....போக போக தான் தெரிஞ்சது இந்தம்மா பினாமிகளை உருவாக்கி வச்சு
இருக்குது...சசிகலா நட்டுவுடன் இருந்தால் ரெண்டும் மொத்தமா சுருட்டிகிட்டு
இந்தம்மாவ காலி பண்ணிட்டு போயிடும்னு ரெண்டையும் பிரிச்சு இந்தம்மா அது மேல
ஆதிக்கம் செலுத்திகிட்டு இருக்குன்னு...ஆமா இத்தனை ஆயிரம் கோடிய
வச்சுக்கிட்டு யாருக்காக? பணம் ஒரு போதை ..கட்டுமரம் மாதிரி கட்டிய மேல
வைக்கிற வரைக்கும் அந்த போதை தேவை படுகிறது...
வியாழன், 29 ஜனவரி, 2015
உத்தர பிரதேஷ் Police Station 100 மண்டை ஓடுகள் கண்டெடுப்பு
உத்தரபிரதேசம் மாநிலம் உன்னாவ் போலீஸ் அலுவலக வளாகத்தில் பயன்படுத்தப்படாத
கட்டத்தில் இருந்து சுமார் 60-க்கும் மேற்பட்ட மனித மண்டை ஓடுகள் மற்றும்
எலும்கூடுகள் கண்டுபிடிக்கபட்டுள்ளது. அதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது.
கிரிமினல் விசாரணை தொடர்பாக பயன்படுத்தப்பட்ட மண்டை ஓடுகள் மற்றும் எலும்பு
கூடுகள் இதுவாகும். எழும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ள இடம் முன்னதாக போலீஸ்
மருத்துவமனையின் ஒருபகுதியாக செயல்பட்டுவந்தது. பலஆண்டாக பூட்டப்பட்டு
இருந்த அறையில் தேவையில்லாத பொருட்கள் அடைக்கப்பட்டு இருந்தது. பிரேத
பரிசோதனை முடித்த மனித மண்டை ஓடுகள் இவையாகும். கண்டெடுக்கப்பட்ட மனித
எலும்பு கூடுகள் பத்து ஆண்டுகளாக இங்கே கிடந்துள்ளது. பிரேத பரிசோதனையை
அடுத்து இவைகள் தகனம் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நீராவி முருகன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான்! கத்தி முனையில் பட்ட பகலில் ஆசிரியரின் செயினை பிரித்த .....
சென்னை,ஜன.28 (டி.என்.எஸ்) நீராவி முருகனிடம் நகைகளை பறிகொடுத்த ஆசிரியை
வேலம், போலீசாரிடம் கண்ணீர் மல்க கூறும் போது, எனக்கு ஏற்பட்ட நிலைமை எந்த
பெண்ணுக்கும் வரக்கூடாது என்று நினைத்திருந்தேன். நீராவி முருகன்
பிடிபட்டது நிம்மதி தருகிறது என்று கூறியுள்ளார்.இச்சம்பவம் பற்றி
ஆசிரியை வேலம் மேலும் கூறும்போது கத்தி முனையில் என்னிடம் செயினை பறித்த
போது எனது உடலெல்லாம் நடுங்கியது. நகைகளையெல்லாம் கழற்றி கொடுத்த பின்னர்,
எனது ஸ்கூட்டியையும் எடுக்க அந்த நபர் (நீராவி முருகன்) முயற்சி செய்தார்.
அப்போது நான் கெஞ்சி கேட்டுக்கொண்டதாலேயே ஸ்கூட்டியை விட்டுச்சென்றார்
என்றார்.நேற்று வேலத்திடம், நீராவி முருகன் செயினை பறித்த
இடத்துக்கு போலீசார் அவனை அழைத்துச்சென்றனர். அப்போது நீராவி முருகன்,
ஆசிரியை வேலத்தின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான் chennaionline.com
கிரண் பேடியிடம் இரண்டு வாக்கார் அட்டைகள்? விசாரணை நடக்கிறது
பாஜக முதல்வர் பதவி வேட்பாளர் கிரண் பேடியிடம்
இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம்
தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
இதுகுறித்து தேர்தல் ஆணையத்தின் அதிகாரி கூறியதாவது:
தில்லியில் உள்ள உதய் பூங்கா முகவரியிலும், தல்கோத்ரா லேன் முகவரியிலும் கிரண் பேடிக்கு வாக்காளர் அடையாள அட்டை உள்ளன. இந்த விவகாரம் தேர்தல் ஆணையத்துக்கு ஏற்கெனவே தெரியும். இரு வேறு முகவரிகளில் வாக்காளர் அடையாள அட்டைகள் எப்படி விநியோகிக்கப்பட்டன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சட்டத்தை பற்றியும் நேர்மையை பற்றியும் வகுப்பெடுக்கும் கிறேன்பேடி தானே நல்ல முன்னுதாரணமாக நடக்கவேண்டாமா ? திருட்டு கோட்டாவில் மகளுக்கு மெடிகல் சீட் வாங்கிய புண்ணியவதி அல்லவா?

சுஜாதா சிங் ஏன் திடீரென்று மாற்றப்பட்டார்?சந்தேகத்துக்கு நிச்சயமாக இடம் இருக்கிறது
மத்திய வெளியுறவுத் துறையின் புதிய செயலாளராக, அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் எஸ்.ஜெய்சங்கர் புதன்கிழமை இரவு நியமிக்கப்பட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நியமனங்களுக்கான குழுவின் கூட்டம் தில்லியில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, புதிய வெளியுறவுச் செயலர் நியமனம் தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. வெளியுறவுச் செயலராகப் பணியாற்றி வந்த சுஜாதா சிங்கின் இரண்டு ஆண்டு பதவிக்காலம்,வருகிற ஆகஸ்டில்தான் நிறைவடையும். இந்த நிலையில், அவர் அதிரடியாக நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக புதிய வெளியுறவுத் துறை செயலராக ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

முதல்வர் பன்னீர்செல்வம்: இலங்கை அகதிகள் திருப்பி அனுப்ப இன்னும் காலம் கனியவில்லை!
பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
இலங்கை தமிழ் அகதிகள் தாங்களாகவே இலங்கைக்கு திரும்பிச் செல்வது குறித்து,
நாளை (30-ந் தேதி) நடைபெறவுள்ள அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க தமிழக
அரசின் மூத்த அதிகாரி ஒருவரை அனுப்பிவைக்குமாறு, தமிழக அரசுக்கு மத்திய
வெளியுறவு அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. தற்போது அகதிகள்
விருப்பப்பட்டு இலங்கைக்கு செல்வதானால், அது அவர்களின் விருப்பம் என்பதை
பிரதமர் அறிவார்.
எனவே, இலங்கை தமிழ் அகதிகளை அந்நாட்டுக்கு செல்ல ஊக்குவிக்கும் ஒரு
நடவடிக்கையாகவே இந்த கூட்டம் கருதப்படும். மேலும், தமிழ் அகதிகள் தங்கள்
சொந்த நாட்டிற்கு திரும்புவதற்கு உகந்த சுமூகமான நிலை, இலங்கையின் வடக்கு
மற்றும் கிழக்கு மாகாணங்களில் இப்போதும் இல்லை என்பதை பதிவு செய்ய
விரும்புகிறேன்.
3 லட்சம் பேர் வருகை
சீனாவிலிருந்து அதிக அளவில் மருந்துகள் இறக்குமதி ஆரோக்கியமானதல்ல?
லோகாஸ்ட் பிளாஸ்டிக், மலிவான காது குடை பஞ்சு ( ஆஸ்பத்திரி வேஸ்ட் பளிச்
பண்ணியதாம்), ஹேர் பேண்ட் (கண்டம் ரீமக்காம்) , இப்படி எல்லாவற்றிலும்
சீப் ஐடம்சை டம்ப் செய்யுதே. மருந்தெல்லாம் எக்கச்செக்க கய்யூட்டடித்து
உள்ளூர் தயாரிப்பை (IDPL லை கொலை செய்து) , பலே வேலை செய்து ,
பயமாயிருக்கப்பா. நம்ம ப்ராண்ட் பேரில் வளரும் நாடுகளுக்கு சப்ளை வேற
செய்யுதாம். யு எஸ், சைனா இரண்டிடமும் ஜாக்கிரதையாகத்தான் இருக்க
வேண்டும்
புதுடில்லி: மக்களின் சாதாரண பயன்பாட்டில் உள்ள பொருட்கள், இயந்திரங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் போன்றவை, சீனாவில் இருந்து ஏராளமாக இறக்குமதி செய்யப்படும் நிலையில், அத்தியாவசிய, அடிப்படை மருந்து பொருட்களும், அங்கிருந்து தான், கோடிக்கணக்கில் இறக்குமதி செய்யப்படுகிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான சீனா, வல்லரசு நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது. தொழில்வளம் நிறைந்த அந்த நாட்டின் தயாரிப்புகள், உலகச் சந்தைகளை நிரப்பி வருகின்றன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தயாரிப்புகளை விட, விலை மிகக்குறைவாக இருப்பதால், சீன பொருட்களுக்கு, வளரும் நாடுகளில் ஏராளமான சந்தை வாய்ப்பு உள்ளது.

புதன், 28 ஜனவரி, 2015
மோடியின் தங்க ஆடை ! ரூ 10 லட்சம் செலவில் பகட்டான சூட்! ஒபாமாவை சந்திக்கும்போது இந்த சீப்......
புதுடெல்லி
ஒபாமாவுடனான சந்திப்பின்போது, பிரதமர் மோடி ரூ.10 லட்சம் செலவில்
தயாரிக்கப்பட்ட சூட் அணிந்திருந்ததாக சமூக வலைத் தளங்களில் தகவல்
பரவியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க அதிபர் ஒபாமா கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா
வந்தபோது, ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப்
பேசினார். அப்போது பிரதமர் மோடி, ‘‘பந்த் கலா’’ எனும் கருப்பு நிறத்தினாலான
கோட்–சூட் அணிந்திருந்தார்.
அந்த ‘கோட்’டில் தங்க நிறத்தில் கோடு, கோடு போல செய்யப்பட்ட டிசைனில்"
நரேந்திர தாமோதர்தாஸ் மோடி’’ எனும் மோடியின் முழுப் பெயர்
வடிவமைக்கப்பட்டிருந்தது.
அன்று இது பற்றி யாருக்கும் தெரியவில்லை. ஆனால் மறுநாள் பத்திரிகைகளில்
மோடியின் கோட் வாசகம் பெரிதுபடுத்தி காட்டப்பட்ட போதுதான் பிரதமர்
மோடிக்காகவே பிரத்யேகமாக அந்த உடை தயாரிக்கப்பட்ட தகவல் தெரிய வந்தது.
அந்த உடையின் விலை ரூ.10 லட்சம் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மோடிக்கு டாடா காட்டியபின்பு ஒட்டு மொத்த அமெரிக்க குழுவும் விழுந்து விழுந்து சிரித்திருபார்கள்? டுபாக்கூர் ஆசாமிகளும் கடைந்தெடுத்த சர்வாதிகாரர்களும் இந்த மாதிரி மேனா மினுக்கு அலங்காரங்களுக்கு ஆசைபடுபவர்கள் என்பது வரலாறு தரும் பாடம் . சீக்கிரம் இன்னும் நெறைய கூத்து பாக்க போகிறோம்
டெல்லி : ஆம் ஆத்மி முன்னணியில்! பாஜக கடும் போட்டி! காங்கிரஸ் பின்னடைவு ?
A pre-poll survey conducted by ABP News – Nielsen shows that the Aam Aadmi Party has managed to win back supporters in New Delhi
.புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜ, ஆம் ஆத்மி கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது என்றும், தற்போதைய நிலவரப்படி பாஜவின் செல்வாக்கு சரிந்தும், ஆம் ஆத்மியின் செல்வாக்கு சற்று அதிகரித்துள்ளதாகவும் கருத்துக்கணிப்பு ஒன்று தெரிவிக்கிறது.டெல்லி சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 7ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 10ம் தேதி நடக்கிறது. வேட்புமனுக்கள் தாக்கல் முடிவடைந்த நிலையில் பாஜ, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பூத் கமிட்டி அமைப்பது, வீடுதோறும் சென்று பொதுமக்களை சந்திப்பது, கலை நிகழ்ச்சிகள் மூலம் வாக்காளர்களை கவர்வது போன்றவற்றை கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர்.

சுனந்தா கொலை வழக்கு: அமர்சிங்கிடம் 2 மணி நேரம் விசாரணை
மத்திய முன்னாள் மந்திரி சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில்
முக்கிய விவரங்களை சேகரிப்பதற்காக இன்று முன்னாள் எம்.பி. அமர்சிங்கிடம்
சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தியது.
சுனந்தா கொல்லப்படுவதற்கு இரு தினங்களுக்கு முன் அமர்சிங்கை தொடர்பு
கொண்டு, ஐ.பி.எல். சிக்கல் குறித்து பேசியுள்ளார். எனவே, சுனந்தா கொலைக்கு
ஐ.பி.எல். பிரச்சினை காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்த
முடிவு செய்ததன் அடிப்படையில் புலனாய்வு குழு அமர்சிங்குக்கு சம்மன்
அனுப்பியிருந்தது.
அதன்படி இன்று விசாரணைக்கு ஆஜரான அமர் சிங்கிடம் சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது, அவரிடம் 20 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதன்படி இன்று விசாரணைக்கு ஆஜரான அமர் சிங்கிடம் சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது, அவரிடம் 20 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஷிராணி பண்டாரநாயக்கா மீண்டும் தலைமை நீதியரசரானர்
இலங்கையின் முந்தைய ஆட்சிக்காலத்தில்
அந்நாட்டின் நாடாளுமன்றத்தின் கண்டனத் தீர்மானம் மூலம் பதவிநீக்கம்
செய்யப்பட்ட இலங்கையின் முன்னாள் தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்கா,
இன்று புதன்கிழமை மீண்டும் அந்தப் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார்.அதனையடுத்து பதவிகளை பொறுப்பேற்க உச்சநீதிமன்றம் வந்த அவரை அங்கு கூடியிருந்த சட்டத்தரணிகள் வரவேற்றார்கள்.
அவர் தனது அலுவலகத்துக்கும் சென்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்
ஷிராணி
பண்டாரநாயக்காவை பதவி நீக்கம் செய்ததற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில்
முறையாக நிறைவேற்றப்படாத காரணத்தினால், அவரது பதவி நீக்கம் செல்லுபடியாகாது
என்றும், அதேவேளை மொஹான்பீரிஸ் அவர்கள் தலைமை நீதியரசராக நியமிக்கப்பட்டமை
சட்டவிரோதமானது என்றும் மூத்த சட்டத்தரணியும், நாடாளுமன்ற உறுப்பினருமான
சுமந்திரன் கூறினார்.
அதனால்தான் ஷிராணி தொடர்ந்து பணியாற்ற முடியும் என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார் மேலும் அடையளமாக ஒரே ஒருநாள் மட்டும் அவர்தான் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருக்க போவதாக தெரிவித்துள்ளார் . அவருக்குபின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஸ்ரீ பவன் என்ற தமிழர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்பார் என்று நம்ப படுகிறது bbc.co.uk/tamil

17 பெண்கள், குழந்தைகளை பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்ற சுரேந்தருக்கு தூக்கு தண்டனை ஆயுளாக குறைப்பு!
டெல்லியை
அடுத்துள்ள நொய்டாவிலுள்ள நிதாரி கிராமத்தில் இளம்பெண்கள் மற்றும்
குழந்தைகள் திடீர், திடீரென காணாமல் போயினர். இந்த விஷயத்தில் உத்தரபிரதேச
எந்த அக்கறையும் காட்டவில்லை இதனால் காணாமல் போவோரின் எண்ணிக்கை கூடிக்
கொண்டிருந்தது. 26 வயது இளம்பெண் பாயலும் காணாமல் போக, அவரது தந்தை
ரோஷன்லால் உ.பி உயர் நீதிமன்றம் வரை சென்று, கடந்த 2006-ம் ஆண்டு நவம்பர்
29-ல் போலீசாரைத் தட்டி எழுப்பினார்.காணாமல்
போன பாயலின் செல்போன் எண்ணை போலீசார் கண்காணித்து வந்தனர். சுமார் ஒன்றை
வருடங்களுக்குப் பின் திடீரென அந்த செல்போன் எண் மீண்டும் இயங்கத்
தொடங்கியது.
அதைப் பயன்படுத்திய சுரேந்தர் கோலியை விசாரித்தபோது, இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.ஒரு வருடத்துக்கு முன்பே பாயலை கொன்று அந்த பங்களாவில் புதைத்து விட்டதாக போலீசாரிடம் கோலி ஒப்புக் கொண்டான். அவர்களிடம், “அங்கு தோண்டினால் பாயலின் செருப்பு வேண்டுமானால் கிடைக்கலாம்” எனவும் அலட்சியமாகக் கூறியுள்ளான்.

பவானிசிங் ஆடியோவால் பரபரப்பு! அதிக ஊதியம் கேட்டு நெருக்கடி கொடுத்தாரா?
ஆடியோ உரையாடலில் இருந்து:
வழக்கறிஞர்: சார்.. வணக்கம் சார்.. பவானிசிங் ரிசைன் பண்ணிட்டாரா?
போலீஸ் அதிகாரி: இல்லீங்க சார்..
வழக்கறிஞர்: சார்.. தமிழ் இந்துவிலெல்லாம் வந்துருக்கே..
போலீஸ் அதிகாரி: அப்படிலாம் இல்லீங்க சார்.. அவர் ஏன் ரிசைன்
பண்றாரு. ஜி.ஓ. வரலேங்கிறதுக்காக மிரட்டி கிட்ருக்கார். தமிழ் இந்துவை
இப்பத்தான் படிச்சேன்.
வழக்கறிஞர்: சார்.. அவர (பவானிசிங்) கேட்டீங்களா?
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக ஆஜராகிவரும்
பவானிசிங், அதிக ஊதியம் கேட்டு ராஜினாமா நெருக்கடி கொடுத்தாரா என்பது பற்றி
பரபரப்பான விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலை யில் இந்த
விவாதத்துக்கு வலு சேர்க்கும்விதமாக ஒரு ஆடியோ ‘தி இந்து'வுக்கு
கிடைத்துள்ளது.
இந்த ஆடியோ மூலம் தெரியவந்திருக்கும் உரையாடலில் பெங்களூருவைச் சேர்ந்த
வழக்கறிஞர் ஒருவரும், சொத்து குவிப்பு வழக்குடன் தொடர்புடைய தமிழக போலீஸ்
அதிகாரி ஒருவரும் பேசிக் கொள்வதாகச் சொல்லப்படுகிறது.
ஆடம்பர திருமணங்களுக்கு வரி விதிக்கப்படும்! கர்நாடகாவில் புதிய சட்டம் வருகிறது
பெங்களூரு: ஆடம்பர திருமணங்களுக்கு கடிவாளம் போட, கர்நாடக அரசு, புதிய
சட்டத்தை வடிவமைக்க தீர்மானித்து உள்ளது. இச்சட்டம், வரும் சட்டசபை
கூட்டத்தொடரின் போது தாக்கல் செய்யப்பட உள்ளது.காங்., அரசு
ஆட்சிக்கு வந்தவுடன், மூட நம்பிக்கைகள் தடை மற்றும் ஆடம்பர திருமணங்களை தடை
செய்யும் மசோதாக்களை அமல்படுத்த முன்வந்தது. ஆனால், அதற்கு எதிர்ப்பு
கிளம்பி, விவாதத்துக்கு உள்ளானது. எனவே, இவ்விரு மசோதாக்களையும்
பரிசீலிக்கும்படி, சட்டக் கமிஷனிடம், அரசு கேட்டு கொண்டது.சட்டக்
கமிஷனும், முதலில் ஆடம்பர திருமண மசோதாவை பரிசீலித்து, இப்படிப்பட்ட
மசோதாக்கள் கொண்டுவர வேண்டிய அவசியம் உள்ளது.
சொத்து குவிப்பு வழக்கு ஜோடிக்கப்பட்டது: ஜெயலலிதா தரப்பு வக்கீல் வாதம் நிறைவு
சொத்து குவிப்பு வழக்கு ஜோடிக்கப்பட்டது’’ என்று கர்நாடக ஐகோர்ட்டில்
ஜெயலலிதா தரப்பு மூத்த வக்கீல் குமார் இறுதி வாதத்தில் எடுத்துரைத்தார்.
இத்துடன் ஜெயலலிதா தரப்பு வக்கீல்கள் வாதம் நிறைவடைந்தது.
சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா உள்பட 4 பேருக்கும்
தண்டனை வழங்கி பெங்களூரு தனிக்கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை
எதிர்த்து அவர்கள் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
கர்நாடக ஐகோர்ட்டு தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் இந்த மனு மீதான
விசாரணை கடந்த 5-ந்தேதி தொடங்கி தினமும் நடைபெற்று வருகிறது. வாய்தா வாங்குபவர்கள் இனிமேல் அப்படி செய்ய முடியாது
என்பதால் இது போல செய்வார்கள். தினமும் அந்த நீதி அரசர் இது வரை ஜெயாவுக்கு
ஆதரவா தான் கருத்து சொன்னார் இப்போது தான் இப்படி சொல்லி இருக்கின்றார்.
இனி அல்ல கைகள் எல்லாம் தையா தக்கான்னு குதிக்க ஆரம்பிக்கும் பால்
குடம்,அலகு எல்லாம் அதிகமா குத்தும், எப்படியும் ஜெயா வெளியே வரப்போவது
நிச்சயம் இது எல்லாம் சும்மா.
செவ்வாய், 27 ஜனவரி, 2015
பவானி சிங் ராஜினாமா நாடகம் ஏன்?- காசு பணம் துட்டு ?வெளியாகாத பின்னணி தகவல்கள்
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு
வழக்கறிஞராக ஆஜராகி வரும் பவானி சிங், கடந்த 23-ம் தேதி ராஜினாமா செய்தார்.
இந்த செய்தி நேற்று முன் தினம் ‘தி இந்து'வில் வெளியானது. இந்நிலையில்,
தான் ராஜினாமா செய்யவில்லை என்று திடீரென பல்டி அடித்துள்ளார். இதன்
பின்னணியில் என்ன நடந்தது என நீதிமன்ற வட்டாரத்தைச் சேர்ந்தவர்களிடம்
விசாரித்தோம்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை பவானி சிங் தனது ராஜினாமா கடிதத்தை தமிழக லஞ்ச
ஒழிப்புத் துறை போலீஸ் ஐஜி குணசீலனி டம் கொடுத்துள்ளார். உடனே சொத்துக்
குவிப்பு வழக்கை கவனிப்பதற்காக ஜெயலலிதா நியமித்துள்ள வழக்கறிஞர்
செந்திலுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து செந்தில், தமிழக
லஞ்ச ஒழிப்புத் துறை யைச் சேர்ந்த குணசீலன், சம்பந்தம் ஆகியோர் பவானி
சிங்கை சமாதானப் படுத்தும் முயற்சியில் இறங்கினர்.இந்த அரசு வழக்கறிஞர் தொடர்ந்து ஆஜாராக வேண்டும் என்பதில் ஜெயலலிதாவுக்கு இருக்கும் நிர்பந்தம் புரிந்து கொள்ள கூடியதே.
நாகார்ஜுனாவுக்கு மறுத்த சுவாதி! லிங்காவுக்கு பின்பு வயதான நடிகர்களுடன் நடிக்க பயப்படும் நடிகைகள்
சுப்ரமணியபுரம்,
போராளி, இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி படங்களில்
நடித்திருப்பவர் சுவாதி. இளம் ஹீரோயின்களின் கடும்போட்டிகளை சமாளிக்க
முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறார். அங்கொன்றும் இங்கொன்றுமாக தமிழ்,
தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நாகார்ஜுனா,
தந்தை மகன் இரட்டை வேடம் ஏற்று நடிக்கும் புதிய தெலுங்கு படத்தில் நடிக்க
அழைப்பு வந்தது. ஏற்கனவே சீனியர் நடிகர்களுடன் நடிப்பதற்கு ஹீரோயின்கள்
தயக்கம் காட்டி வருகின்றனர். சமீபத்தில் வெங்கடேஷ் ஜோடியாக நடிக்க சில
நடிகைகளை அணுகியபோது நடிக்க மறுத்தனர்.
அதே பாலிசியை சுவாதியும்
பின்பற்றி இருக்கிறார். தந்தை மகனாக நாகார்ஜுனா நடிக்கும் படத்தில் மகன்
கதாபாத்திரத்துக்கு ஜோடியாக நடிக்கவே சுவாதியிடம் கால்ஷீட் கேட்கப்பட்டது.
கதையை கேட்டுபிடித்திருக்கிறது என்றவர் கால்ஷீட் தர மறுத்துவிட்டார்.
சிதம்பரம் தனிக்கட்சி? காங்கிரசில் ஓரங்கட்டியதால் விரக்தி?
ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை
சென்னை: காங்கிரசில் முற்றிலும் ஓரங்கட்டப்பட்டுள்ள சிதம்பரம்,
தனிக்கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன.தமிழக காங்கிரசில் ஜி.கே.வாசன், இளங்கோவன், தங்கபாலு,
கிருஷ்ணசாமி, சிதம்பரம் என பல கோஷ்டிகள் இருந்தன. மேலிடத்தில் அதிக
செல்வாக்காக இருந்த சிதம்பரத்தின் பேச்சை கேட்டு, வாசனையும் அவரது
ஆதரவாளர்களையும் புறக்கணித்ததால் அவர் கட்சியில் இருந்து வெளியேறி
தனிக்கட்சி தொடங்கினார். அவருடன் 60 சதவீதத்துக்கும் அதிகமான தொண்டர்களும்,
இரண்டாம் கட்டத் தலைவர்களும் சென்று விட்டனர்.ஜெயந்தி நடராஜனை போல பாஜகவுக்கு துண்டு வீசினாலும் வீசுவாரு ?
ராமஜெயத்தை கொன்றவர்கள் விமானத்தில் வந்தார்களா? பெரம்பலூர் கிடைக்கும் என நம்பியபோது நெப்போலின் பெரம்பலூரில் .....
ராமஜெயம் கொலை செய்யப்பட்ட விதம் இலங்கையில் உள்ள மட்டக்களப்பு பகுதியில்
நடக்கும் கொலைகள் பாணி என்றும், மலேசியா ஸ்டைல் என்றும் சொல்லப்பட்டது.
காரணம், கட்டுக் கம்பிக் குவியலில் இருந்து கம்பிகளை எடுத்து ராமஜெயத்தின்
கை, கால்களைக் கட்டி, வேனின் ரெக்சின் ஸீட் மீது போர்த்தப்பட்டு இருக்கும்
துணியைக் கிழித்து வாயில் வைத்து அடைத்து இருந்தார்கள். தலையின் பின்பக்கம்
கனமான ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்யப்பட்டு இருந்தது.
இவை எல்லாம் வெளிநாட்டு பாணி, இவ்வளவு கொடூரமாக
ராமஜெயத்தை கொலை செய்யும் அளவுக்கு யாரும் இங்கு இல்லை. காரணம் ராமஜெயம்
உயிரோடு இருந்தவரை அவரை ஸ்கெட்ச் போட்ட பலரை தன்வயப்படுத்துவதில் வல்லவர்
அவர் என்கிறார்கள்.
பெண்களை பாதுகாக்க தந்தை, மகன் போல ஓடிவர வேண்டும்: இந்தியர்களுக்கு ஒபாமா 'குட்டு'
பெண்களின் மதிப்பை காப்பாற்றுவதற்காக நாம் ஒவ்வொருவரும்,
தந்தையாகவும், மகனாகவும் மாற வேண்டும் என்று மாணவர்களுக்கு ஒபாமா
அழைப்புவிடுத்தார்.
டெல்லியில் உள்ள சிரிபோர்ட் என்ற ஆடிட்டோரியத்தில், சுமார் 2000 இந்திய
மாணவ, மாணவிகள் மத்தியில் அமெரிக்க அதிபர் ஒபாமா இன்று உரையாற்றினார்.
அப்போது அவர் பெண்கள் பற்றி கூறியதாவது:
எனது வாழ்க்கையில், மூன்று சக்தி வாய்ந்த பெண்களால் நான் சூழப்பட்டுள்ளேன்
(மனைவி, இரு மகள்கள்). ஆனால் இந்திய பெண்கள், அனைத்து குடும்பத்தையும்,
தங்கள் குடும்பம் போல நினைத்து பாசம் காட்ட கூடியவர்கள். இந்திய பெண்கள்,
நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தங்களால் சாதித்து காட்ட முடியும்
என்பதை நிரூபித்துள்ளனர்.
பெண்கள் வெற்றிகரமானவர்களாக மாறினால்தான், அந்த நாடு வெற்றிகரமான நாடாக மாற
முடியும். அமெரிக்க அதிபரான நான் ஏதாவது தவறு செய்தால் கூட என் மனைவி
மிட்சேல் அதை எடுத்துச் சொல்ல பயப்பட்டது கிடையாது (இவ்வாறு ஒபாமா
சொன்னபோது அருகே இருந்த மிட்சேல் முகத்தில் அத்தனை வெட்கம்).
திமுக விடுதலை சிறுத்தைகளை தவிர்க்கிறதா? திருமாவளவன் பதில்!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது
அவர், ‘’கொளத்தூர் செட்டிப்பட்டியை சேர்ந்த பழனி என்பவர் கர்நாடக
வனத்துறையால் சுட்டுகொல்லப்பட்டார். இந்த சம்பவம் நடந்து பலமாதங்கள்
ஆகியும் தமிழக அரசு அவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கவில்லை.நான்
பழனியின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லி நிவாரண உதவி வழங்க முயற்சித்தேன்.
காவல்துறை சட்டம்–ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என நான் அங்கு செல்ல அனுமதி
தரவில்லை. இதிலும் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி தமது சாதி அரசியலை
செய்திருக்கிறது.திருச்செங்கோடு
எழுத்தாளர் பெருமாள் முருகனை ஊரைவிட்டே ஓட வேண்டும் என மிரட்டி மன்னிப்பு
கேட்க வைத்தது ஜனநாயக விரோதம் ஆகும். மோடி பிரதமரான பின்னர் இத்தகைய போக்கு
தலைதூக்கி உள்ளது. சங் பரிவார் அமைப்புகளின் ஆதிக்கம் மேலோங்கி
இருக்கிறது.சாதிவாரியாக கட்சிகள் பிரிந்த பின்பு அண்ணன் என்னடா தம்பி என்னடா? ராமதாஸ் வந்தா திருமா......
சிதம்பரம் முதல்வர் வேட்பாளரா? காங்கிரஸ்காரனே ஓட்டுப் போடமாட்டான்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காட்டம்!
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை முதல்வர் வேட்பாளராக
அறிவித்தால் காங்கிரஸ் கட்சிக்காரன் கூட ஓட்டுப் போடமாட்டான் என்று
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடுமையாக
சாடியுள்ளார்.
சென்னையில் சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களுக்கு இன்று இளங்கோவன்
அளித்த பேட்டி:
ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடபோவதில்லை என்ற
முடிவை எடுத்து இருக்கிறோம். இந்த தேர்தல் போலியானது. பணப்பலம்,
அதிகாரப்பலத்திற்கு மத்தியில் நடக்கிறது.
இதில் எங்கள் சக்தியை விரயமாக்க விரும்பவில்லை. தேர்தல் ஆணையத்தின் மீதும்
எங்களுக்கு நம்பிக்கை இல்லை.
இவ்வாறு இளங்கோவன் கூறினார்.
பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு இளங்கோவன் அளித்த பதில்கள்:
கேள்வி: தேசிய கட்சியான பாரதிய ஜனதா இடைத்தேர்தலில் களம் காண்கிறது. ஆனால்
காங்கிரஸ் பின்வாங்குவது, பின்னடைவு இல்லையா?
பதில்: எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை. நடக்கும் தேர்தல் என்பது
கண்துடைப்பு. வாக்காளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வரை பட்டுவாடா செய்ய
இருக்கிறார்கள்.
ஜெயா பிணை மனு : உச்ச நீதிமன்றத்தின் அதீத அக்கறை – அவசரம் !
பிரம்மஸ்ரீ கிரிமினல் குற்றவாளி மீதான வழக்கு என்பதால், அதனை விரைந்து
முடிக்க சட்டத்திற்குப் புறம்பான சலுகைகள் உச்ச நீதிமன்றத்தால்
அளிக்கப்பட்டுள்ளன.
இயற்கை நீதிக்கு முரணாக ஜெயா-சசி கும்பலுக்குப் பிணை வழங்கியிருப்பதோடு அவ்வழக்கை விரைந்து முடிப்பதற்குமான ஏற்பாடுகளை செய்து கொடுத்திருக்கும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல்.தத்துஜெயலலிதா-சசிகலா கும்பலுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின் போக்கும் முடிவும் எத்தகையதாக இருக்கும் என்பதை, அக்கும்பலின் பிணை கோரும் மனுவைப் பல சட்ட விதிகளுக்கும் மரபுகளுக்கும் இயற்கை நீதிக்கும் எதிராக, மாறாகக் கையாண்டு, உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் ஆணைகள் வெளிப்படுத்தியிருக்கின்றன. சொத்துக் குவிப்புக்காக ஜெயலலிதா- சசிகலா கும்பல் புரிந்துள்ள குற்றங்களுக்கு இணையான அதிகார முறைகேடு குற்றங்களை உச்ச நீதிமன்றம் புரிந்துள்ளது. இந்தக் குற்றங்களே தனியே விசாரித்துத் தண்டிக்கத்தக்கன.;
ஆனால், உச்ச நீதி, உயர் நீதி மன்ற நீதிபதிகள் அவ்வாறான தான்தோன்றித்தனமான தீர்ப்புகள் வழங்குவதைத் தடுப்பதற்கோ, வளையும் செங்கோலை நேராக்குவதற்கோ நீதியான வழி – நேரான வழியேதும் கிடையாது.

புக் கு விக்றவங்களைத் தாண்டி வெளியில் வாங்க பெருமாள் முருகன்
எதிர்ப்பை போர்குணத்தோடு எதிர்கொண்ட எம்.ஆர். ராதா, ராவணக் காவியம் எழுதிய புலவர் குழந்தை…
‘வேலைக்குப் போகிற பெண்கள் விபச்சாரிகள்’
ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கருத்துக்கே எதிர்ப்பு வரல.. மாதொரு பாகனுக்கு
எதிர்ப்பு வருது என்றால்… கதை.
மதிமாறன்
மதிமாறன்
ஒரே உடையில் ஒபாமா: அரை மணிக்கு ஒரு ஆடை அணிந்த மோடி! இளங்கோவன் கிண்டல்!
நூறுநாள்
தேசிய வேலை வாய்ப்பு திட்டத்தை பாரதீய ஜனதா அரசு ரத்து செய்ய முயற்சிப்பதை
கண்டித்து, சென்னையில் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழக காங்கிரஸ் கட்சி
எஸ்.சி., எஸ்.டி. பிரிவு சார்பில் செவ்வாக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.
இளங்கோவன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியதாவது:–ஏழை–எளிய
மக்களின் வயிற்றில் அடிப்பதை மோடி அரசு செய்து வருகிறது. 100 நாள்
வேலைவாய்ப்பு திட்டத்தை ரத்து செய்யும் முயற்சியில் இந்த அரசு ஈடுபடுகிறது.
இந்த திட்டத்தின் மூலம் கிராமங்களில் ஏழை–எளிய பெண்கள், ஆதரவற்றவர்கள்,
கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் அதிக பயன் அடைந்து வந்தனர்.ஐ.நா.சபையே
இந்த திட்டத்தை புகழ்ந்து உள்ளது. வளர்ந்து வரும் நாடுகள் இதுபோன்ற
திட்டத்தை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால் இந்த
திட்டத்தை ஒழிக்க மோடி அரசு எல்லா வழியிலும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
ஸ்டாலின் துர்கா உதயநிதி கிருத்திகா.? தவிர்க்க முடியாத சில கருத்துக்கள் !
திமுக எங்கே போகிறது? சொல்லியே தீரவேண்டிய சில கருத்துக்கள் :
பல ஆயிரம் கோடிகளை வைத்திருக்கும் முரசொலி அறக்கட்டளை மற்றும் திமுக அறக்கட்டளையில் சத்தமே இல்லாமல் தன் மகன் உதயநிதியை உறுப்பினராக்கியிருக்கிறார்.
வாக்குவாதம் முற்றி, ஸ்டாலின் கருணாநிதியை வண்டியோடு தள்ளி விட்டதாக கூறப்படுகிறது.
கனிமொழி மிகப்பெரிய தலைவராகி விடுவாரா? அல்லது மொத்த திமுகவும் அவர் பின்னால் சென்றுவிடுமா? எதுவும் நடக்கப் போவதில்லை. ஆனால், இப்படி அற்பத்தனமாக ஸ்டாலின் நடந்து கொள்வதற்கு ஒரே காரணம், தன் மீதே அவருக்கு நம்பிக்கை இல்லை என்பதே. தன்னம்பிக்கை இல்லாத ஒரு கோழையின் நடவடிக்கைகளே ஸ்டாலினின் நடவடிக்கைகள்.
இந்த விபரத்தை ஸ்டாலின் தன் மனைவி துர்க்காவிடம் தெரிவிக்கிறார். அதற்குப் பின் துர்க்கா பேசிய பல வார்த்தைகளை எழுத இயலாது. இறுதியாக துர்க்கா, தலைவரா ஆக முடியல…. இந்த பொருளாளர் பதவி இருந்தா என்ன இல்லாட்டி என்ன… அதையும் தூக்கி வீசுங்க என்று கூறுகிறார். இதையடுத்தே ஸ்டாலின் ராஜினாமா என்ற முடிவை அறிவிக்கிறார். ராஜினாமா கடிதம் கருணாநிதிக்கு அனுப்பப்படுகிறது. நள்ளிரவு 12 மணிக்கே, சென்னை மாவட்டச் செயலாளர்களுக்கு மறுநாள் காலை கணிசமான கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

ஜாக்கி வாசுதேவின் unlimited அடாவடி மாபியா சாம்ராஜ்யம் அம்பலம்!
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை மிஞ்சும் அளவுக்கு, ஆன்மீக வியாபாரம் செய்து
வருபவர்தான் ஜக்கி வாசுதேவ். இந்த ஆன்மீக வியாபாரியின் முகத்திரையை முதன்
முதலில் கிழித்தது சவுக்குதான். மூன்று கட்டுரைகள் மூலமாக, ஜக்கி யார்
என்பது விரிவாக அம்பலப்படுத்தப்பட்டது. இணைப்பு 1. இணைப்பு 2 இணைப்பு 3.
இது தொடர்பாக நான்கு பொது நல வழக்குகள் தொடரப்பட்டும், அரசு ஈஷா மையங்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காத்து வருகிறது.
ஜக்கி வாசுதேவ் போன்ற சாமியார்கள் இந்த சமூகத்திலிருந்து அழித்து ஒழிக்கப்பட வேண்டிய தீய சக்திகள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. இவர்கள் ஏன் தீய சக்திகள் தெரியுமா ?
முதன் முதலாக ஈஷா குறித்து கட்டுரை எழுதிய பிறகு, ஈஷா குறித்து பல்வேறு தகவல்கள் வந்து குவிந்தவண்ணம் இருக்கின்றன. முதல் கட்டுரை எழுதுவதற்காக கோவை ஈஷா மையம் சென்று களமாடியபோது பல்வேறு உண்மைகள் தெரிய வந்தன. ஏதோ மர்மமாக நடக்கிறது என்பதை உணர்த்தவது போலவே, ஏகப்பட்ட கெடுபிடிகள். வெளியே பதிவு செய்து, பாஸ் வாங்கி, அதை கழுத்தில் மாட்டிக் கொண்டால்தான் உள்ளே செல்ல முடியும். உள்ளே சென்றால் இருபது அடிக்கு ஒரு முறை பாஸை பார்த்து செக் பண்ணுவார்கள்.
அப்படியே இடுப்பை வளைத்து, வணங்கி அண்ணா வணக்கம் அண்ணா என்று கூறுவார்கள். வெள்ளை குர்தாவும் பேண்டும் அணிந்த ஏராளமான அழகுப் பெண்களை காண முடியும். எந்தப் பெண்ணாக இருந்தாலும், ஒரு ஆண் தன்னை கவனிக்கிறான் என்னும் பொழுது சிறிது மாற்றத்துக்கு உள்ளாவாள். ஆனால், இந்த ஈஷா மையத்தில் நீங்கள் பார்க்கும் எந்த பெண்ணுக்கும் எந்தவொரு மாற்றமும் ஏற்படாது. ஒரு கம்ப்யூட்டர் மானிட்டரை பார்ப்பது போல உங்களைப் பார்த்து வணக்கம் வைப்பார்.

சீனா இந்தியாவுக்கு எச்சரிக்கை : அமெரிக்க சதிக்கு வீழ்ந்துவிடாதீர்!
அமெரிக்க சதிவலையில் வீழ்ந்துவிட வேண்டாம்" என குடியரசு
தின விழாவையொட்டி வெளியிட்ட செய்தியில் இந்தியாவுக்கு சீனப் பத்திரிகைகள்
எச்சரிக்கை விடுத்துள்ளன.
சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு
அனுப்பியுள்ள குடியரசு தின வாழ்த்துச் செய்தியில், "இந்தியா - சீனா உறவு
மேம்பட்டு இருநாடுகளுக்கும் இடையே அமைதி மேலோங்க வேண்டும் என சீனா
விரும்புவகிறது" என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே இன்று (திங்கள்கிழமை) சீனாவில் வெளியான குளோபல் டைம்ஸ்,
பீப்பிள்ஸ் டெய்லி ஆகிய இரண்டு பத்திரிகைகளிலும் வெளியான கட்டுரைகளில்,
"அமெரிக்க சதிவலையில் இந்தியா வீழ்ந்துவிட வேண்டாம். சீனாவுக்கு எதிராக
இந்தியாவை திசை திருப்பவே அண்மைகாலமாக, அமெரிக்கா இந்தியாவுடன் அதிகளவு
நெருக்கம் காட்டுகிறது.
மேற்கு வங்க kanyashree ஊர்திக்கு வாய்ப்பு மறுப்பு ! குடியரசு தினவிழாவில் பாஜகவின் சுயரூபம்?
டில்லியில் நடந்த குடியரசு தின விழா அணிவகுப்பில், மேற்கு வங்க
மாநில கலாசார ஊர்திக்கு வாய்ப்பு அளிக்குமாறு விடுத்திருந்த கோரிக்கையை
மத்திய அரசு நிராகரித்துவிட்டதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி
குற்றம்சாட்டியது.இதுகுறித்து, அந்த கட்சியின் செய்தித் தொடர்பாளரும்,
பார்லிமென்ட் உறுப்பினருமான டெரிக் ஓ பிரையன்
கூறியதாவது:பெண் கல்வி முன்னேற்றத்திற்காக மேற்கு வங்க அரசு செயல்படுத்திய திட்டத்தை, கடந்தாண்டு நடைபெற்ற சர்வதேச மகளிர் மாநாட்டில் யூனிசெப் அமைப்பு இடம்பெறச் செய்தது.அந்த திட்டத்தை விளக்கும் கலாசார ஊர்தியை குடியரசு தின விழா அணிவகுப்பில் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும், அதனை மத்திய அரசு நிராகரித்துவிட்டதாக பிரையன் தெரிவித்தார்.

திங்கள், 26 ஜனவரி, 2015
டெல்லியில் ஒபாமா பெங்களூருவில் ரெட்டி பிரதர்ஸ் – பாஜக சியர்ஸ்
சுஷ்மா ஸ்வராஜின் ஆசீர்வாதம் பெற்று வளர்ந்த ரெட்டிகள் நீதிபதியையே வளைத்த
திறமையாளர்கள். அந்த வகையில் மாறன் சகோதரர்களும், ஜெயலலிதாவும்
பா.ஜ.க.விடமிருந்து கற்க வேண்டிய நிலையிலே தான் இருக்கிறார்கள்
குஜராத் கலவர சாதனைக்காக உலகப் ‘புகழ்’ பெற்றிருந்த மோடிக்கு விசா கொடுக்காமல் இருந்து வந்த அமெரிக்கா பின்பு ஒரு நாட்டின் பிரதமர் என்ற முறையில் யாரையும் வரக்கூடாதென்று சொல்ல மாட்டோம் என சுபம் பாடியது. ஆனந்தக் கண்ணீர் தளும்பமோடியும் அமெரிக்கா சென்று வெள்ளை மாளிகையில் டீ சாப்பிட்டு, என்ஆர்ஐ-க்கள் மத்தியில் சமோசாவும் முழுங்கிவிட்டு வந்து விட்டார். மற்றவரிடமெல்லாம் சவுண்டும், சண்டமாருதமும் செய்யும் பாஜக கூட்டம் அமெரிக்கா என்றால் மட்டும் ஒரு அடிமைக்குரிய லாவகத்துடன் பேசும்.
ஏற்கனவே இந்தியாவை அமெரிக்காவிற்கு கூறு போட்டு விற்று வந்த மன்மோகன் சிங்கை மவுன சிங் என்று கேலி செய்த பாஜக இன்று மன்மோகனே வெட்கப்படும் அளவுக்கு அமெரிக்க அடிமைத்தனத்தை வெளிப்படுத்தி வருகிறது.
ஒபாமாவுடன் எப்போது வேண்டுமானாலும் பேச ஹாட் லைன், அமெரிக்க ஆயுதங்களை இறக்குமதி செய்வது, அமெரிக்க படைகளுடன் கூட்டு பயிற்சி, முத்தாய்ப்பாக அணுசக்தி ஒப்பந்தம் என்று கைப்பிள்ளையின் சாதனயை அடுக்குகிறார்கள்.

ஜாக்கி வாசுதேவ் ! கொலை பெண்பித்து கொள்ளை மோசடி போன்ற குவாலிபிகேசன்........சவுக்கு.காம்
கடந்த வருடம் மூன்று தேசியவிருது வாங்கிய " தங்கமீன்கள் " என்ற திரைப்படத்தில் நாயகன் வறுமையிலும் தனது அன்பு மகளை எப்படி பொக்கிஷமாக கருதி சிறப்பாக உருவாக்க முயற்சிக்கிறான் என்பதே கதை. மேற்கொண்டு நம் பார்க்கப் போகும் நாயகனும் தன் மகள் மேல் உள்ள அளவு கடந்த பாசத்தை எப்படியெல்லாம் காட்டுகிறார். அதற்காக என்னவெல்லாம் செய்கிறார் என்பதை பார்க்கப்போகிறோம். இவர் ஆஸ்கார் விருதுக்கு முழு தகுதி உடையவர். இந்தியாவின் மிகச் சிறந்த குணசித்திர நடிகரும் சிறந்த நடிப்புக் கலை பள்ளியை நடத்தும் அனுப்பம் கேரே அசந்து பாராட்டி "நீங்கள் ஏன் நடிக்க வரக் கூடாது?" என்று இவரிடம் கெஞ்சியதுண்டு. "நான் ஏற்கனவே அதைத்தானே வாழ்கையில் செய்து கொண்டிருக்கிறேன்" என்று அவரது வேண்டுகோளை மறுத்துவிட்டார்.
தெலுங்கரான இவர் மைசூரில் பிறந்து, வளர்ந்து தமிழ்நாட்டுக்கு சேவை செய்ய 1989-ம் ஆண்டு தனது காலடியை வைத்த நாள் முதல் தமிழ்நாடு சுபிக்ஷம் பெற்றுவிட்டது.
பசி, பட்டினி, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, லஞ்சம், பொறாமை, கோபம்
போன்றவற்றை தனது *யோகா என்ற ஒரே ஆயுதத்தால் முடிவுக்கு கொண்டு வந்தவர்.
தற்போது தமிழ் மக்கள் எல்லாம் "ஆனந்த அலையில்" சிக்கித் தவிக்க காரணமாய் இருப்பவர்.
தற்போது அவர் தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத தலை சிறந்த சக்தி. அவருடைய
வாகனம் தமிழ்நாட்டில் உள்ள எந்த toll gate இல் சென்றாலும் பணம் கூட
வசூலிக்காமல் விட்டு விடுவதாகக் கூறி அவரே பெருமை பட்டுக்கொள்கிறார்
என்றால் பாருங்களேன்.
அவர் வேறுயாரும் அல்ல... நம்மையெல்லாம் "வாருங்கள் உங்களில் மலருங்கள்"
என்று அன்போடு அழைக்கும் சத்குரு என்று தனக்கு தானே பெயர் சூட்டி கொண்ட
ஜக்கி வாசுதேவ் அவர்களே.
கேபிள் ஷங்கர் தாயரிக்கும் தொட்டால் தொடரும்
சென்னை,ஜன.24 (டி.என்.எஸ்) அறிமுக இயக்குனர் கேபிள் சங்கர் இயக்கத்தில்,
எப்.சி.எஸ் துவார். சி.சந்திரசேகர் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் படம்
'தொட்டால் தொடரும்'.>அமைச்சர் ஒருவர் விபத்தில் மரணமடைகிறார். விபத்து
சமயத்தில் அவருடைய டிரைவர் எடுத்த வீடியோ மூலம், இது விபத்து அல்ல கொலை,
என்பதை அறியும் அமைச்சரின் ஆட்கள், கொலைக்கான காரணமும், அதை செய்தவர்கள்
குறித்தும் கண்டுபிடிக்க விசாரிக்க தொடங்குகிறார்கள்.மறுமுனையில்,
கால்சென்டரில் பணிபுரியும் நாயகி அருந்ததியும், சாப்ட்வேர் நிறுவனத்தில்
பணிபுரியும் தமனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாமல், தொலைபேசி மூலம்
அறிமுகமாகி நட்பை வளர்க்கிறார்கள். நட்பு காதலாக மாற, இருவரும் ஒருவரை
ஒருவர் சந்தித்துக்கொள்ள முடிவு செய்கிறார்கள்.
ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு ஊத்தி மூடப்படுமா?
நடப்பது சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை?
பொங்கல் விடுமுறைக்குப் பிறகு சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு விசாரணையைத் தொடங்கியது பெங்களூரு நீதிமன்றம்.
நீதிபதி: விடுமுறையை சிறப்பாகக் கொண்டாடினீர்களா?
வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ்: இவர்களுக்குத்தான் பொங்கல் திருவிழா. அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடியதாகச் சொன்னார்கள்.
நீதிபதி: இன்று என்ன வாதிட இருக்கிறீர்கள்?
நாகேஸ்வர ராவ்: கட்டட மதிப்பீடு பற்றி எனது வாதங்களை வைக்க இருக்கிறேன்.
நீதிபதி: உச்ச நீதிமன்றம் கொடுத்த பெயில் ஆர்டரைக் கொடுங்கள்.
(ஆர்டர் நகலை வழக்கறிஞர் கொடுத்தார். நீதிபதி படித்துக் கொண்டிருந்தார்.)
நாகேஸ்வர ராவ்:
உச்ச நீதிமன்றம் இந்த மேல்முறையீட்டு மனுவை 3 மாதங்களில் விசாரித்து
முடிக்க வேண்டும் என்று உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை. 3 மாதங்களில்
முடிக்க வேண்டும் என்று கர்நாடக உயர் நீதிமன்றத்துக்குப் பரிந்துரைதான்
செய்திருக்கிறது. எனவே வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்ற நிபந்தனை
எதுவுமில்லை.
(நீதிபதி அதை கேட்டு மௌனமாக இருந்தார்.)
சினிமா தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் விபரம் :கலைப்புலி தாணு தலைவர்,தியாகராஜன் பொருளாளர் .....
சினிமா தயாரிப்பாளர்கள்
சங்க தேர்தலில் ‘கலைப்புலி’ எஸ்.தாணு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 438
ஓட்டுகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார்.
தேர்தல் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். 2015–2017–ம் ஆண்டுகளுக்கான தேர்தல் நேற்று நடந்தது.
இந்த சங்கத்தில் சில நடிகர்–நடிகைகள் மற்றும் டைரக்டர்களும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். ஓட்டு போட தகுதியுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 967 பேர். ஓட்டுப்பதிவு சென்னை அண்ணாநகரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரியில் நேற்று நடந்தது. காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. மாலை 3 மணி வரை ஓட்டுப்பதிவு நடந்தது.

Obama Modi ! அணுசக்தி ஒப்பந்தம்: முட்டுக்கட்டை நீங்கியது!
தில்லியில் ஹைதராபாத் இல்லத்தில், ஞாயிற்றுக்கிழமை இரு தரப்பு
பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்பாக செய்தியாளர்களை நோக்கி கையசைக்கும்
அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரதமர் மோடி.
இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும்,
பிரதமர் நரேந்திர மோடியும் தில்லியில் சுமார் 3 மணிநேரம் பேச்சுவார்த்தை
நடத்தினர்.
அப்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கடந்த 7 ஆண்டுகளாக நீடித்து வந்த முட்டுக்கட்டை நிலை நீங்கியது. குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக அமெரிக்கா அதிபர் ஒபாமா தன் மனைவி மிஷெல் மற்றும் உயர்நிலைக் குழுவினருடன்சிறப்பு விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை காலை தில்லி வந்தார்.

ஞாயிறு, 25 ஜனவரி, 2015
11 ஆயிரம் வோல்டேஜ் மின்சாரத்தை தாங்கும் அதிசய வாலிபர்
ஹரியானாவில் 11 ஆயிரம் வோல்டேஜ் மின்சாரத்தை தாங்கும் அதிசய வாலிபர் சாதனை நாயகனாகி உள்ளார்.
ஹரியானாவில் உள்ள சோனிபட் நகரின் அருகே உள்ள குக்கிராமத்தை சேர்ந்த 16
வயது வாலிபர் தீபக் ஜங்ரா என்பவர்தான் இந்த சாதனைக்குச் சொந்தக்காரர்
ஆவார்.
இது குறித்து அவர் கூறுகையில், “நான் மூன்று வருடங்களுக்கு முன் தனது தாய்
ஹீட்டர் வேலை செய்யவில்லை என்று சொன்னதால் அதை சரி செய்ய முயற்சி செய்து
கொண்டிருந்தேன். அப்போது கையில் இருந்த ஸ்குரு டிரைவர் தெரியாமல் மின்சாரம்
பாய்ந்து கொண்டிருக்கும் ஒயரின் மீது பட்டது.
இதனால் எனக்கு ஷாக் அடித்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக அந்த
கிராமத்திற்கே மின்சாரம் தடைபட்டு இருளானது.
இன்டெலிஜென்ட் இடியட் ஸ்வேதா பாசுவுக்கு மறுவாழ்வு கொடுக்கட்டும்
விபசார
வழக்கில் கைதாகி விடுதலை ஆனவர் சுவேதா பாஸு. காவலில் இருந்த நேரத்தில்
அவர் மீது இரக்கப்பட்ட சில இயக்குனர்கள் வாய்ப்பு தருவதாக அறிவித்தார்கள்.
அதெல்லாம அறிவிப்போடு நின்றுவிட்டதால் சுவேதா நொந்துபோனார். மனம் தளராமல்
மீண்டும் நடிப்பு பக்கம் கவனம் செலுத்தி இருக்கும் அவர் கடந்த 4
மாதங்களுக்கு முன் குத்து பாடலுக்கு ஆட்டம்போட்ட ‘இன்டலிஜென்ட் இடியட்ஸ்‘
தெலுங்கு பட புரமோஷனுக்காக ஐதராபாத் வந்தார். மீண்டும் நம்பிக்கை
துளிர்விட்ட பொலிவான தோற்றத்துடன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பிறகு அவர்
கூறியது:
ஒரு நடிகையாக இந்த படத்தில் பணியாற்றியது சந்தோஷம். திடீர்
திருப்பங்களுடன் கூடிய இப்படத்தை பாலாஜி இயக்கி இருக்கிறார்.
ஜெயலலிதாவுக்கு சவால்விட்ட ராமஜெயம்! ராமஜெயம் கொலை வழக்கு... திகில் ஃப்ளாஷ்பேக்! (மினி தொடர் -5)
ஜெயலலிதாவின் வாக்குகள் வித்தியாசம் 50 ஆயிரத்தைக்கூட தாண்டாதற்கு ராமஜெயம்
தடைக்கல்லாக இருந்தார். கடுமையாக உழைத்தார். சவால் விட்டார்
''இந்த சவால்கள்தான் ஆட்சியாளர்களுக்கு ராமஜெயத்தின் மீது வெறுப்பை
ஏற்படுத்தியது. மக்கள் நெருக்கம் மிக்க தில்லை நகர் பகுதியில் இருந்து
ராமஜெயம் கடத்தப்பட்டதும், நகரின் முக்கிய வீதிகளில் இருந்த கண்காணிப்பு
கேமராக்கள் இயங்காமல் இருந்தது. விசாரணை என்கிற பெயரில் காவல்துறை
அதிகாரிகள் நேருவின் குடும்பத்தினரையே வட்டமிட்டனர்" என்று சொல்லும்
ராமஜெயத்தின் ஆதவாளர்கள், ''இந்த கொலைக்கான எந்தத் துருப்பையும்
கண்டுபிடிக்காமல் இருக்க, இந்தச் சவால் காரணமாக இருக்கலாம். இதன்
பின்னணியில் சில காவல்துறை அதிகாரிகள் மூளையாக செயல்பட்டிருக்கலாம்"
என்கிறார்கள்.
இதோ... ஸ்ரீரங்கத்தில் இடைத்தேர்தல் களைகட்டத் தொடங்கிவிட்டது. அ.தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் படை களமிறங்கியிருக்கிறது. போட்டிக்கு பொதுவேட்பாளர் என்றெல்லாம் மற்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து சோர்ந்துபோன கருணாநிதி, 63 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு பட்டியலை அறிவித்தார்.

கடலில் 12 நாட்டிக்கல் மைலுக்குள் மட்டுமே மீன்பிடிக்க வேண்டும் மீனாகுமாரி கமிட்டி அறிக்கை!
இந்தியாவில் புதிய ஆழ்கடல் மீன்பிடி கொள்கையை பரிந்துரை செய்வதற்காக
டாக்டர் மீனாகுமாரி தலைமையில் மத்திய அரசு ஒரு கமிட்டியை அமைத்தது. அந்த
கமிட்டி மத்திய அரசிடம் அறிக்கையை சமர்பித்துள்ளது. பிப்ரவரி மாதம் நடைபெற
உள்ள மத்திய பட்ஜெட்டில் அறிக்கை சட்ட வடிவமாக மாற்றப்பட உள்ளது.
இந்த நிலையில் மீனா கமிட்டி அறிக்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்
வகையில் உள்ளதாக கூறி அனைத்திந்திய மீனவ சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும்
அனைத்து மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம்
அருகில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் தலைவர் மா.அ.ஜெயகுமார் தலைமை தாங்கினார்.
தென்னிந்திய மீனவர் நல சங்க தலைவர் கு.பாரதி, தமிழ்நாடு மீனவர் முன்னேற்ற
சங்க தலைவர் கபடி மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மீனா மாமிக்கு மீனவர் வாழ்வு வரலாறு ஏதாவது தெரியுமா? முதல்ல மீனாமாமி மீன் சாப்பிடுவாய்ங்களா ?அதை சொல்லுங்க?
மானியத்தைக் குறைக்கும் சாந்தகுமார் குழு பரிந்துரைகளை நிராகரிக்க வேண்டும்: கருணாநிதி
பொது விநியோகத் திட்டத்துக்கு எதிரான சாந்தகுமார்
குழு பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என்று திமுக தலைவர்
கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-
இந்திய உணவுக் கழகத்தை முற்றிலும் மாற்றியமைக்கும் பரிந்துரைகளை சாந்தகுமார் குழு மத்திய அரசுக்கு அளித்துள்ளது.
நாட்டின் 67 சதவீத மக்களுக்கு, உணவுப் பாதுகாப்புச் சட்டப்படி உணவு வழங்குவதற்குப் பதிலாக 40 சதவீதம் பேருக்கு மட்டுமே அளிக்கும் வகையில் மானியத்தைக் குறைத்துவிடலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
உரம், பெட்ரோலியப் பொருள்களுக்கான மானியத்தைப் பெருமளவுக்குக் குறைத்திட முடிவு செய்திருப்பதைப் போல, உணவுக்கான மானியத்தையும் குறைத்திட மத்திய பாஜக அரசு பரிசீலித்து வருகிறது. இந்த நடவடிக்கைகள் மூலம் விவசாயிகளும், ஏழைய எளிய மக்களும்தான் பாதிக்கப்படுவர் என்பதை மத்திய அரசு அலட்சியம் செய்துவருகிறது.சுமார் 15 லட்சம் டன் அரிசி மான்ய அளவை குறைக்கக் முயற்சி? மோடி அரசின் மேட்டுக்குடி மனோபாவம்!

நேபாளத்துக்கு 500, 1000 ரூபாய் நோட்டுகளை கொண்டு செல்ல தடை நீங்கியது
இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய இருநாடுகளிலும் பெரிய அளவு பண மதிப்புள்ள
நோட்டுகளின் புழக்கத்தினால் கள்ள நோட்டுகள் ஊடுருவ அதிக வாய்ப்பு
இருப்பதாகக் கருதியதால் 100 ரூபாயைவிட அதிக மதிப்புடைய நோட்டுகளை
நேபாளத்தில் தடை செய்யவேண்டும் என இந்தியா பல ஆண்டுகளுக்கு முன்பு நேபாள
அரசிடம் வேண்டுகோள் விடுத்தது.
அதற்கிணங்க நேபாள நாட்டில் கடந்த 2000-ம் ஆண்டு முதல் இந்தியாவின் 500,
1,000 ரூபாய் நோட்டுகள் மீது தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில்
நேற்று மத்திய ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில்,
‘‘இந்தியா மற்றும் நேபாள நாடுகளுக்கு இடையே இனி 500, 1000 ரூபாய் நோட்டுகளை
கொண்டு செல்லலாம். அதிகபட்சம் ரூ.25,000 மதிப்புள்ள தொகைக்கு மட்டுமே 500,
1000 ரூபாய் நோட்டுகளை கொண்டு செல்லலாம்’’ என்று கூறப்பட்டு உள்ளது. maalaimalar.com
வி எஸ்.ராகவன் காலமானார்.பழம்பெரும் நடிகரும் சிறந்த டைரக்டருமாவார்
பழம்பெரும் திரைப்பட நடிகர் டைரக்டர் வி.எஸ்.ராகவன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 90. உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி காலமானார்.
1925ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம், வெம்பாக்கத்தில் பிறந்தவர் வி.எஸ்.ராகவன். ஆரம்ப காலங்களில் பத்திரிக்கை ஒன்றில் பணியாற்றி வந்தார். நடிப்பு மீது கொண்ட ஆர்வத்தால், நாடகங்களில் நடித்து வந்த அவர், பின்னர் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் தோன்றி புகழ் பெற்றார்.
1954ல் வைரமாலை என்ற திரைப்படத்தில் அறிமுகமான அவர், ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.