ஞாயிறு, 25 ஜனவரி, 2015

இன்டெலிஜென்ட் இடியட் ஸ்வேதா பாசுவுக்கு மறுவாழ்வு கொடுக்கட்டும்

விபசார வழக்கில் கைதாகி விடுதலை ஆனவர் சுவேதா பாஸு. காவலில் இருந்த நேரத்தில் அவர் மீது இரக்கப்பட்ட சில இயக்குனர்கள் வாய்ப்பு தருவதாக அறிவித்தார்கள். அதெல்லாம அறிவிப்போடு நின்றுவிட்டதால் சுவேதா நொந்துபோனார். மனம் தளராமல் மீண்டும் நடிப்பு பக்கம் கவனம் செலுத்தி இருக்கும் அவர் கடந்த 4 மாதங்களுக்கு முன் குத்து பாடலுக்கு ஆட்டம்போட்ட ‘இன்டலிஜென்ட் இடியட்ஸ்‘ தெலுங்கு பட புரமோஷனுக்காக ஐதராபாத் வந்தார். மீண்டும் நம்பிக்கை துளிர்விட்ட பொலிவான தோற்றத்துடன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பிறகு அவர் கூறியது: ஒரு நடிகையாக இந்த படத்தில் பணியாற்றியது சந்தோஷம். திடீர் திருப்பங்களுடன் கூடிய இப்படத்தை பாலாஜி இயக்கி இருக்கிறார்.
இதுவரை நடிப்பதற்காக என்னை அழைத்திருக்கும் ஒரே நடிகர் விஷ்ணு மன்ச்சு மட்டும்தான். இப்படம் பற்றி இன்னும் பேசி முடிக்கவில்லை. அவரைத் தவிர வேறு யாரும் என்னை அழைத்து வாய்ப்பு தருவதாக கூறவில்லை. எனக்கு மேனேஜர் கிடையாது. படத்துக்காக என்னை யாராவது அணுகவேண்டுமென்றால் அவர்கள் நேரடியாக என்னை அழைத்து பேசலாம்.
இவ்வாறு சுவேதா பாஸு கூறினார். - See more at tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக