புதன், 28 ஜனவரி, 2015

மோடியின் தங்க ஆடை ! ரூ 10 லட்சம் செலவில் பகட்டான சூட்! ஒபாமாவை சந்திக்கும்போது இந்த சீப்......

புதுடெல்லி ஒபாமாவுடனான சந்திப்பின்போது, பிரதமர் மோடி ரூ.10 லட்சம் செலவில் தயாரிக்கப்பட்ட சூட் அணிந்திருந்ததாக சமூக வலைத் தளங்களில் தகவல் பரவியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க அதிபர் ஒபாமா கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா வந்தபோது, ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது பிரதமர் மோடி, ‘‘பந்த் கலா’’ எனும் கருப்பு நிறத்தினாலான கோட்–சூட் அணிந்திருந்தார். அந்த ‘கோட்’டில் தங்க நிறத்தில் கோடு, கோடு போல செய்யப்பட்ட டிசைனில்" நரேந்திர தாமோதர்தாஸ் மோடி’’ எனும் மோடியின் முழுப் பெயர் வடிவமைக்கப்பட்டிருந்தது. அன்று இது பற்றி யாருக்கும் தெரியவில்லை. ஆனால் மறுநாள் பத்திரிகைகளில் மோடியின் கோட் வாசகம் பெரிதுபடுத்தி காட்டப்பட்ட போதுதான் பிரதமர் மோடிக்காகவே பிரத்யேகமாக அந்த உடை தயாரிக்கப்பட்ட தகவல்  தெரிய வந்தது. அந்த உடையின்  விலை ரூ.10 லட்சம் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மோடிக்கு  டாடா காட்டியபின்பு ஒட்டு மொத்த அமெரிக்க குழுவும் விழுந்து விழுந்து சிரித்திருபார்கள்?  டுபாக்கூர் ஆசாமிகளும் கடைந்தெடுத்த சர்வாதிகாரர்களும் இந்த மாதிரி மேனா மினுக்கு அலங்காரங்களுக்கு ஆசைபடுபவர்கள் என்பது வரலாறு தரும் பாடம் .  சீக்கிரம் இன்னும் நெறைய கூத்து பாக்க போகிறோம்


மோடி பெயர் பொறித்த அந்த உடை எங்கு தயாரிக்கப்பட்டது என்று உறுதியாகத் தெரியவில்லை. என்றாலும் இங்கிலாந்தில் உள்ள ஷெர்ரி, ஹாலந்து ஆகிய இரு நிறுவனங்கள்தான் அந்த கோட்– சூட் தயாரிப்புக்கான துணி இழைகளை கொடுத்து இருக்கலாம் என்று தெரிகிறது.

துணிக்கான விலை மட்டும் ரூ.3 லட்சம் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பிரபல தையல் கலைஞர் டாம் ஜேம்ஸ் இந்த உடையை வடிவமைத்து தைத்து இருப்பார் என்றும்  தகவல் வெளியாகியுள்ளது. அவர் சிறப்பு உடை தைக்க ரூ.5 லட்சத்துக்கு மேல் வாங்குவார்.

இதன் அடிப்படையில் பார்த்தால் பிரதமர் மோடிக்காக தைக்கப்பட்ட கோட்–சூட் விலை குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் வரை இருக்கலாம் என்று இங்கிலாந்தில் வெளியாகும் ‘‘லண்டன் ஸ்டாண் டர்டு’’ இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரபல தையல் கலைஞர் டாம் ஜேம்ஸ் இதுபற்றி கூறுகையில், ‘‘இது போன்ற ஆடைகளை எங்களால் மட்டுமே வடிவமைக்க முடியும்’’ என்றார். ஆனால் துணி இழைகளை வழங்கிய லண்டன் நிறுவனங்கள் இந்த தகவலை உறுதிபடுத்த மறுத்து விட்டன. news.vikatan.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக