ஞாயிறு, 25 ஜனவரி, 2015

நேபாளத்துக்கு 500, 1000 ரூபாய் நோட்டுகளை கொண்டு செல்ல தடை நீங்கியது

இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய இருநாடுகளிலும் பெரிய அளவு பண மதிப்புள்ள நோட்டுகளின் புழக்கத்தினால் கள்ள நோட்டுகள் ஊடுருவ அதிக வாய்ப்பு இருப்பதாகக் கருதியதால் 100 ரூபாயைவிட அதிக மதிப்புடைய நோட்டுகளை நேபாளத்தில் தடை செய்யவேண்டும் என இந்தியா பல ஆண்டுகளுக்கு முன்பு நேபாள அரசிடம் வேண்டுகோள் விடுத்தது. அதற்கிணங்க நேபாள நாட்டில் கடந்த 2000-ம் ஆண்டு முதல் இந்தியாவின் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் மீது தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று மத்திய ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், ‘‘இந்தியா மற்றும் நேபாள நாடுகளுக்கு இடையே இனி 500, 1000 ரூபாய் நோட்டுகளை கொண்டு செல்லலாம். அதிகபட்சம் ரூ.25,000 மதிப்புள்ள தொகைக்கு மட்டுமே 500, 1000 ரூபாய் நோட்டுகளை கொண்டு செல்லலாம்’’ என்று கூறப்பட்டு உள்ளது. maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக