செவ்வாய், 27 ஜனவரி, 2015

ஜாக்கி வாசுதேவின் unlimited அடாவடி மாபியா சாம்ராஜ்யம் அம்பலம்!

8318629ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை மிஞ்சும் அளவுக்கு, ஆன்மீக வியாபாரம் செய்து வருபவர்தான் ஜக்கி வாசுதேவ்.   இந்த ஆன்மீக வியாபாரியின் முகத்திரையை முதன் முதலில் கிழித்தது சவுக்குதான். மூன்று கட்டுரைகள் மூலமாக, ஜக்கி யார் என்பது விரிவாக அம்பலப்படுத்தப்பட்டது. இணைப்பு 1.   இணைப்பு 2 இணைப்பு 3.
இது தொடர்பாக நான்கு பொது நல வழக்குகள் தொடரப்பட்டும், அரசு ஈஷா மையங்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காத்து வருகிறது.

ஜக்கி வாசுதேவ் போன்ற சாமியார்கள் இந்த சமூகத்திலிருந்து அழித்து ஒழிக்கப்பட வேண்டிய தீய சக்திகள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. இவர்கள் ஏன் தீய சக்திகள் தெரியுமா ?
முதன் முதலாக ஈஷா குறித்து கட்டுரை எழுதிய பிறகு, ஈஷா குறித்து பல்வேறு தகவல்கள் வந்து குவிந்தவண்ணம் இருக்கின்றன. முதல் கட்டுரை எழுதுவதற்காக கோவை ஈஷா மையம் சென்று களமாடியபோது பல்வேறு உண்மைகள் தெரிய வந்தன.   ஏதோ மர்மமாக நடக்கிறது என்பதை உணர்த்தவது போலவே, ஏகப்பட்ட கெடுபிடிகள். வெளியே பதிவு செய்து, பாஸ் வாங்கி, அதை கழுத்தில் மாட்டிக் கொண்டால்தான் உள்ளே செல்ல முடியும். உள்ளே சென்றால் இருபது அடிக்கு ஒரு முறை பாஸை பார்த்து செக் பண்ணுவார்கள்.
அப்படியே இடுப்பை வளைத்து, வணங்கி அண்ணா வணக்கம் அண்ணா என்று கூறுவார்கள்.   வெள்ளை குர்தாவும் பேண்டும் அணிந்த ஏராளமான அழகுப் பெண்களை காண முடியும்.   எந்தப் பெண்ணாக இருந்தாலும், ஒரு ஆண் தன்னை கவனிக்கிறான் என்னும் பொழுது சிறிது மாற்றத்துக்கு உள்ளாவாள்.   ஆனால், இந்த ஈஷா மையத்தில் நீங்கள் பார்க்கும் எந்த பெண்ணுக்கும் எந்தவொரு மாற்றமும் ஏற்படாது.   ஒரு கம்ப்யூட்டர் மானிட்டரை பார்ப்பது போல உங்களைப் பார்த்து வணக்கம் வைப்பார்.
   ஆனால், காவி சீருடை அணிந்திருக்கும் ஆண் சீடர்களிடம் சிறிது முரட்டுத்தனம் காணப்படுகிறது.   உள்ளை நுழையும் முன், உங்கள் செல்போன் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களையும் வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். புகைப்படம் எடுக்க அனுமதி கிடையாது.  ஒவ்வொரு நூறு மீட்டரிலும் உங்களது பாஸ் சோதிக்கப்படும்.
உள்ளே சென்றால், கண்ணை மூடிக்கொண்டு மொட்டை அடித்துக் கொண்டு, ஆழ்ந்த தியானத்தில் பல இடங்களில் அமர்ந்திருப்பார்கள். பாதாள அறை போல இருக்கும் ஒரு அறைக்குள் லிங்கம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். அந்த லிங்கத்தை தியானலிங்கம் என்று கூறுகிறார்கள். அந்த தியானலிங்கத்தை சுற்றி பலர் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருப்பார்கள்.
Dhyanalinga
அந்த தியானலிங்கத்தின் அருகில் சென்றாலே தியானம் செய்தது போல மன அமைதி கிடைக்கும் என்று கூறுகிறார் ஜக்கி வாசுதேவ். தியானலிங்கம் பற்றி ஜக்கி கூறுவது ” Dhyanalinga is the distilled essence of yogic science. It does not ascribe to any particular belief or faith. It does not require any pooja or worship. Just sitting silently for few minutes within the sphere of Dhyanalinga is enough to make even those unaware of meditation experience a state of deep meditativeness and feel the divine energy that overflows from this glorious form.
Dhyanalinga was consecrated by Sadhguru Jaggi Vasudev, a realized master, mystic and yogi, after three years of intense process of prana prathista. Measuring 13′ 9″, Dhyanalinga is the largest mercury based live linga in the world. In the metaphysical sense, Dhyanalinga is a guru, an energy center of tremendous proportions. All the aspects of life are enshrined in the form of seven chakras energized to the very peak and locked. A doorway to enlightenment and spiritual liberation, Dhyanalinga offers a sadhaka ² the opportunity to perform sadhana ³ in utmost intimacy with a live guru, – an opportunity which is traditionally available to a select few.
Situated at the foothills of the Velliangiri Mountains, Dhyanalinga is a colossal entity of eternal vibrations. The earth colors, the natural granite, and the fusion of irregular surfaces and shapes creates an ethereal ambiance and an apt atmosphere to receive the grace of the Dhyanalinga.”
அதன் உள்ளே சென்று ஜக்கி சொன்னது போல 20 நிமிடம் அமர்ந்திருந்தும் எந்த மன அமைதியும் தோன்றவில்லை.     அந்த லிங்கம் மெர்குரியால் செய்யப்பட்டது என்று சத்குருவே அறிவிக்கிறார்.
மெர்குரி என்பது ஒரு விஷப்பொருள்.   சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்தானது. மெர்குரியை சுவாசித்தாலோ, வாய் மூலம் உட்கொண்டாலோ, மூளை பாதிக்கப்படும் என்கிறது, ஐக்கிய நாடுகளின் சுற்றுச் சூழல் அமைப்பு.   அறையில் தட்பவெட்பத்தில் அறைக்குள் இருக்கும் மெர்குறி சிறிய அளவே வெப்பம் உயர்ந்தாலும் மெர்குரி ஆவியாகிவிடும்.   மிக எளிதாக மனித உடலில் நுழைந்து விடும்.   மெர்குரி எவ்விதமான மணமும் இல்லாத காரணத்தால், மெர்குரியை சுவாசிக்கிறோம் என்பதே ஒருவருக்கு தெரியாது. கனடாவைச் சேர்ந்த கால்கரி பல்கலைக்கழகம் மெர்குரி எந்த வகையில் மூளையை பாதிக்கும் என்பதை ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டள்ளது. இணைப்பு
இந்தியாவில் மெர்குரி பயன்பாட்டை கட்டுப்படுத்துவதற்கு எவ்விதமான சட்ட திட்டங்களும் இல்லாத காரணத்தால், இத்தகைய கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் மெர்குரியால் நான் ஒரு சிலையை உருவாக்கியிருக்கிறேன் என்று வெளிப்படையாக அறிவிக்கிறார் ஜக்கி. இணைப்பு
இத்தகைய கடும் பாதிப்பை ஏற்படுத்தும் மெர்குரியால் செய்யப்பட்ட லிங்கம் அடங்கிய குளத்தில் குளித்தால், தீராத வினையெல்லாம் தீரும் என்று அறிவிக்கிறார் ஜக்கி.
Theerthakund
ஈஷா மையத்தினர் வெளியிட்டுள்ள வீடியோவிலேயே மெர்குரியை அவர்கள் கையால் கையாள்வது வெளிப்படையாக தெரிகிறது. இணைப்பு. ஏற்கனவே இருக்கும் மெர்குரியால் அமைக்கப்பட்ட தீர்த்தகுண்டம் பத்தாது என்று, புதிதாக சூர்யகுண்டம் என்று மற்றொரு மெர்குரி சிலை அடங்கிய குளத்தை உருவாக்கியிருக்கிறார் ஜக்கி. இணைப்பு.   மெர்குரி பயன்பாட்டில் உள்ள ஆபத்துகளையும், அதை தவிர்ப்பதற்கான வழிமுறைகளையும், பயன்படுத்துவதற்கான விதிமுறைகளையும் மத்திய மாசு கட்டுப்பாட்டுத் துறை உருவாக்கியிருக்கிறது. அந்த அறிக்கையில் கூறியுள்ளபடி
3.0 EFFECTS OF MERCURY ON HUMAN HEALTH
Mercury is very toxic and linked with a wide range of healtheffects including irreversible damage to the human nervous system. The severity of health effects from mercury exposures is influenced by the following factors:
(i) Chemical form of mercury i.e. inorganic or organic mercury,
(ii) Dose,
(iii) Age of the person exposed (the foetus is the most susceptible),
(iv) Duration of exposure,
(v) Route of exposure i.e. inhalation, ingestion, dermal contacts, and
(vi) Health of the person exposed
Inhalation:
Mercury vapor is highly toxic via inhalation. It can cause severe respiratory tract damage. Symptoms of mercury toxicity include sore throat, coughing, pain, tightness in chest, breathing difficulties, shortness of breath, headache, muscle weakness, anorexia, and gastrointestinal disturbance, ringing in the ear, liver changes, fever, bronchitis and pneumonitis. Mercury can be absorbed through inhalation with symptoms similar to those appearing after ingestion.
Ingestion:
Ingestion (through mouth) of mercury may cause burning of the mouth and pharynx, abdominal pain, vomiting, corrosive ulceration, bloody diarrhea. Ingestion may be followed by a rapid and weak pulse, shallow breathing, paleness, exhaustion, tremors and collapse.
Skin Contact:
Contact of mercury with skin causes irritation and burns to skin. Symptoms include redness and pain. It May cause skin allergy and sensitization. Mercury can be absorbed through the skin with symptoms parallel to ingestion.
Eye Contact:
Contact of mercury with eye causes irritation and burns to eyes. Symptoms include redness, pain, blurred vision; may cause serious and permanent eye damage, also depending upon exposure.
Chronic Exposure:
Chronic exposure of mercury through any route can produce central nervous system disorders. It may cause muscle tremors, personality and behavior changes, memory loss, metallic taste, loosening of the teeth, digestive disorders, skin rashes, brain damage and kidney damage. Mercury can cause skin allergies and accumulate in the body. Repeated skin contact with mercury can cause the skin to turn gray in color. Mercury is a suspected reproductive hazard; may damage the developing foetus and decrease fertility in males and females.
மெர்குரியோடு நெருங்குவது ஆண்மைக் குறைவை ஏற்படுத்தும் என்று மத்திய அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கையே தெரிவிக்கிறது இணைப்பு. ஆனால், இதையறியாத பல்வேறு பக்தர்கள் தாங்கள் கூவாத சேவலாகப் போகிறோம் என்பதையே அறியாமல், ஜக்கி வாசுதேவ் கூறியபடி மெர்குரி சிலை இருக்கும் குளத்தில் நீராடி மகிழ்கின்றனர்.
கோவையில் உள்ள ஈஷா மையத்தில் நீங்கள் நுழைந்தால், அங்கே ஜக்கியின் படங்கள், அவர் படம் பொறித்த பனியன்கள், வேட்டிகள், மாலைகள், நகைகள், லிங்கங்கள் உள்ளிட்ட ஏராளமானவை விற்பனை செய்யப்படும். இது ஒரு புறம் என்றால், மறுபுறம், பிஸ்கட், மூலிகை தேயிலை, ஊறுகாய் என்று உணவுப் பொருட்கள் ஒரு புறம் விற்பனை செய்யப்படும்.   பைரவி என்று வெறும் இரண்டு கண்கள் படம் மட்டுமே இருக்கும். அதன் விலையைக் கேட்டால் ஆயிரக்கணக்கில் சொல்வார்கள்.   இது போக உத்திராட்ச மாலை, ஸ்படிக லிங்கம் என்று பல்வேறு பொருட்கள் ஒரே நேரத்தில் விற்பனை செய்யப்படும்.   இவற்றில் நீங்கள் எதை வாங்கினாலும் ரசீது தரப்படாது.   மீறி ரசீது கேட்டீர்கள் என்றால், நன்கொடைக்கான ஒரு ரசீது தரப்படும்.   அந்த ரசீதில், ஈஷா என்ற ட்ரஸ்டுக்கு நீங்கள் நன்கொடை வழங்கியுள்ளீர்கள் என்றும், அந்த நன்கொடை, இந்திய வருமான வரித்துறை சட்டம் பிரிவு 80Gன் படி, வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும்.
Untitled-1
அரசாங்கத்தின் வரிச்சலுகையில் நகை வியாபாரம் செய்யும் ஜக்கி
80G இந்திய வருமானவரிச் சட்டத்தின் கீழ் விதிவிலக்கு பெற வேண்டுமென்றால் முக்கியமான ஒரு நிபந்தனை, எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தின் நலனையும் பிரதிபலிக்கக்கூடிய வகையில் சலுகை பெறும் நிறுவனம் செயல்படக்கூடாது என்பதே.   லிங்கமும், ருத்திராட்சமும் கிறித்துவர்களும், இஸ்லாமியர்களும் பயன்படுத்துகிறார்களா என்ன ?   அப்பட்டமாக இந்து மதத்தின் நலனைப் பாதுகாத்து ஈஷா மையம் நடத்தி வரும் ஜக்கி என்ற அயோக்கியனுக்கு, இந்த நாள் வரை வருமானவரிச் சலுகை அளித்து வருகிறது வருமானவரித்துறை.
இதுதான் மதச்சார்பற்ற அமைப்பாம்
இதுதான் மதச்சார்பற்ற அமைப்பாம்
சமீபத்தில் கோவை மாவட்டம் ஆலந்துறை காவல் நிலையத்தில், ஈஷா மையத்துக்கு எதிரான ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் தனது புகாரில் பின் வருமாறு தெரிவிக்கிறார்.
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஜெயபால் என்ற பெண்மணி தனது புகாரில், நான் 16 டிசம்பர் 2014ல் இந்தியா வந்தேன். நான் இந்தியா வந்தது, வெள்ளியங்கரி மலைப்பகுதியில் அமைந்துள்ள ஈஷா மையத்தின் யோகா மற்றும் யந்த்ரா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்தேன். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஈஷா மையம் என்னை நாலரை லட்சம் கட்டச் சொன்னார்கள். அதன்படியே நானும் நாலரை லட்சம் கட்டினேன்.   நான் கட்டிய நாலரை லட்சத்தை நன்கொடையாக பதிவு செய்வார்கள் என்பது எனக்குத் தெரியாது. நன்கொடை என்பது விரும்பி, தாமாக முன்வந்து தர வேண்டும்.
யந்த்ரா என்ற அந்த நிகழ்ச்சி 21 டிசம்பர் 2014 அன்று நள்ளிரவில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சி முடிவுற்ற பிறகு மேலும் 50 ஆயிரம் கேட்டார்கள். அந்த 50 ஆயிரம் அந்த யந்த்ராவை விமானம் மூலமாக ஸ்வீடன் அனுப்புவதற்காக என்று தெரிவித்தார்கள். எனக்கு அந்த யந்த்ராவே வேண்டாம் என்று நான் கூறியபோதும், 50 ஆயிரம் கட்டியே தீர வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். ஏற்கனவே நாலரை லட்சம் கட்டிய என்னை மேலும் 50 ஆயிரம் கட்ட வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தியது என்னை கடும் அதிர்ச்சியடையச் செய்தது.   அந்த யந்த்ராவை எடுத்துப் பார்த்தபோது, அது 165 கிலோ எடை இருந்தது என்பதும், அது உடைந்திருந்தது என்பதையும் கண்டு பிடித்தேன்.
மேலும் மேலும் என்னிடம் பணம் கேட்டு வற்புறுத்தியபோதுதான் நான் இவர்கள் ஏமாற்றுப் பேர்வழிகள் என்பதை உணர்ந்தேன்.   உணர்ந்ததும் வருத்தத்தோடு நான் கட்டிய நாலரை லட்சம் பணத்தை திருப்பித் தாருங்கள் என்று அவர்களிடம் கேட்டேன்.   பணம் திருப்பித் தர முடியாது என்று என்னோடு வாதத்தில் இறங்கியதோடு, மேலும் 50 ஆயிரம் தர வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தினார்கள்.
என்னுடைய நாலரை லட்சத்தை பெற்றுத் தருவதோடு, ஈஷா மையத்தின் மேல் நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.


புகார் மனு
புகார் மனு740107316_72245
இந்தப் புகாரையடுத்து, குற்ற எண் 1/2015 என்ற எண்ணில், ஆலந்துறை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்குப் பின் என்ன நடக்கும் ? வழக்கம் போலவே, புகாரளித்தவருக்கு பணத்தை திருப்பி அளித்து, சமாதானம் செய்து கொண்டனர் ஈஷா மையத்தினர்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், வெளிநாட்டில் வாழும் ஒருவரை வசியம் செய்து, அவரது சேமிப்புகளை வந்து ஈஷா மையத்தில் கொட்டம் அளவுக்கு மனமாற்றம் செய்யும் வலிமையை ஜக்கி பெற்றிருக்கிறார் என்பதே.   கடந்த வருடம், சென்னை மாம்பலத்தில் ஈஷா மையத்தின் ஒரு வார யோகா வகுப்புக்கு சென்றிருந்தபோது, யோகா கற்றுக்கொடுத்த, ஒரு பெண் வகுப்பு நடக்கையில் தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டார். “நான் இன்போசிஸ் நிறுவனத்தில் மிக உயர்ந்த சம்பளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். டீம் லீடர் அளவுக்கு வளர்ந்தேன்.   ஆனால், அப்போது இல்லாத நிம்மதியை ஈஷா மையத்தில் சேர்ந்ததும் அடைந்திருக்கிறேன். ” என்று கூறினார்.
செக்ஸ் போன்ற இயல்பான உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி பிரம்மச்சர்யத்தை கடைபிடிப்பதே உண்மையான ஞானம் என்று என்று ஜக்கி கூறுவதன் அடிப்படையில் தங்கள் வேலை, குடும்பம், மனைவி என்று அனைத்தையும் துறந்து, ஜக்கியின் ஆசிரமத்தில் முழு நேர தொண்டர்களாக மாறுகிறார்கள். ஜக்கியின் ஆசிரமத்தில் சேர்ந்ததால் நாசமான குடும்பங்கள் ஏராளம்.
செக்ஸ் போன்ற உணர்வுகள், மிக மிக இயல்பானவை. அந்த உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி, இயற்கைக்கு முரணான பிரம்மச்சர்யத்தை கடைபிடித்தால், மனச்சிதைவுக்கு ஆளாகி, ஒரு சாடிஸ்டாக மட்டுமே மாற முடியும். மன நிம்மதி கிடைக்காது.
ஜக்கி வாசுதேவ் கட்டுரை எழுதிய பிறகு, வழக்கறிஞர் ராதாகிருஷ்ணனின் அலுவலகத்துக்கு ஒரு வயதான பெண்மணி வந்தார்.   அவருடைய மகளும், மருமகனும், வேலையை ராஜினாமா செய்து விட்டு, தங்கள் சேமிப்பு அனைத்தையும் ஜக்கி நிறுனத்தில் செலுத்தி விட்டு, தங்கள் குழந்தையை சன்னியாசிகளை உருவாக்கும் சம்ஸ்கிருதி பள்ளியில் சேர்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.   என் மகளிடம் எவ்வளவோ மன்றாடிப் பார்த்தேன்.   ஆனால் அவள் என்னிடம் கோபப்படுகிறாள். என்னை அடிக்கிறாள்.   ஜக்கியைப் பற்றி பேசாதே என்று சண்டை போடுகிறாள். ஒரு நாள் முழுக்க ஒரே ஒரு வாழைப்பழத்தை மட்டுமே உணவாக உண்ணுகிறாள். என்னால் என் மருமனையோ, மகளையோ கட்டுப்படுத்த முடியும் என்று தோன்றவில்லை. என் பேத்தியின் வாழ்வை நாசமாக்கி விடுவார்களோ என்று அச்சமாக இருக்கிறது. தயவு செய்து, அந்த சம்ஸ்கிருதி பள்ளியை மூடுவதற்கான வழக்கை துரிதமாக நடத்துங்கள் என்று கூறினார்.   இதற்காக எவ்வளவு கட்டணம் ஆனாலும் நான் தருகிறேன் என்று கூறினார். அவரிடம் பணம் எதுவும் வேண்டாம் என்று கூறி அனுப்பி விட்டு, வழக்கை நாங்கள் நடத்திக் கொள்கிறோம் என்று கூறி அனுப்பி வைத்தோம்.   பிறகு இவரைப்போலவே மற்றொரு வயதான பெண்மணி, தொலைபேசியில் இதே போன்ற ஒரு கதையை கூறினார்.   அந்தப் பெண்மணிகளின் கண்ணீர் வேதனையை வரவழைத்ததோடு உணர்த்திய மற்றொரு விஷயம், இந்தப் பெண்மணிகளைப் போல ஆயிரக்கணக்கான குடும்பங்கள், ஜக்கி என்ற பொறுக்கியால் சீரழிந்ததுள்ளன என்பதே.
சன்னியாசினிகளாக்கப்படும் பிஞ்சுகள்
சன்னியாசினிகளாக்கப்படும் பிஞ்சுகள்
ஊருக்கெல்லாம் பிரம்மச்சர்யத்தை உபதேசம் செய்யும், ஜக்கி வாசுதேவால், தன்னுடைய சொந்த மகளுக்கு பிரம்மச்சர்யத்தின் தாத்பர்யங்களை கடைபிடிக்கும்படி அவரை நம்பவைக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தகுந்த விஷயம்.
மகளை கன்னியாதானம் செய்து தரும் ஜக்கி
மகளை கன்னியாதானம் செய்து தரும் ஜக்கி
இதைத்தவிர்த்து, உரிய விசா பெறாமல், பல வெளிநாட்டு நபர்களும், ஈஷா மையத்துக்குள் தங்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தகுந்த மற்றொரு விஷயம்.
ஒட்டுமொத்தமாக பார்த்தால், ஈஷா மையம் செய்து வரும் காரியங்கள் அனைத்தும் சட்டவிரோதமானவையே…..
ஆனால், இந்த அரசு அமைப்புகள் அனைத்தும், ஜக்கி வாசுதேவ் போன்ற சமூக விரோதியை பாதுகாத்து கொள்ளையடிக்க அனுமதிப்பதோடு, பல்வேறு குடும்பங்களை சீரழிக்க அனுமதித்து வருகின்றன.
முதன் முறையாக ஜக்கி வாசுதேவை அம்பலப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், தொடர்ச்சியாக மூன்று பொது நல வழக்குகள் தொடுப்பதற்கும் நாம் காரணமாக இருந்தோம்.   அடுத்த கட்ட நடவடிக்கையாக, ஜக்கி வாசுதேவின் ஈஷா மையத்துக்கு வருமானவரித்துறை வழங்கியுள்ள கீழ்கண்ட சலுகைகளை ரத்து செய்யவும், புகார் அளிக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு அறிவித்துக் கொள்கிறோம். savukkunews.com
  Legal Status and Registrations   Public Charitable Trust registered vide Trust Deed no. 102 of 2005 book 4 vol 30, dated 8-4-2005.
Registration under sec 12A(a) of IT Act: C.No.327(398)/2005-06/CIT-III/CBE dated 7-10-2005

Section 80G of IT Act: C.No.327(398)/2008-09/CIT-III/CBE

PAN (Permanent Account Number): AAATI4764K

FCRA Registration: No. 075850261 dated 12th November 2009

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக