சென்னை,ஜன.24 (டி.என்.எஸ்) அறிமுக இயக்குனர் கேபிள் சங்கர் இயக்கத்தில்,
எப்.சி.எஸ் துவார். சி.சந்திரசேகர் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் படம்
'தொட்டால் தொடரும்'.>அமைச்சர் ஒருவர் விபத்தில் மரணமடைகிறார். விபத்து
சமயத்தில் அவருடைய டிரைவர் எடுத்த வீடியோ மூலம், இது விபத்து அல்ல கொலை,
என்பதை அறியும் அமைச்சரின் ஆட்கள், கொலைக்கான காரணமும், அதை செய்தவர்கள்
குறித்தும் கண்டுபிடிக்க விசாரிக்க தொடங்குகிறார்கள்.மறுமுனையில்,
கால்சென்டரில் பணிபுரியும் நாயகி அருந்ததியும், சாப்ட்வேர் நிறுவனத்தில்
பணிபுரியும் தமனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாமல், தொலைபேசி மூலம்
அறிமுகமாகி நட்பை வளர்க்கிறார்கள். நட்பு காதலாக மாற, இருவரும் ஒருவரை
ஒருவர் சந்தித்துக்கொள்ள முடிவு செய்கிறார்கள்.
இந்த நேரத்தில் அருந்ததி, தனது தம்பியுடன் பைக்கில் செல்லும் போது விபத்தில் சிக்குகிறார். ஆனால், அவர் பிழைத்துவிட, அவருடைய தம்பி பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடும் நிலையுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.
30 லட்சம் பணம் இருந்தால் தான் தனது தம்பியை காப்பாற்ற முடியும் என்ற நிலையில், அருந்ததி எடுக்கும் முட்டாள் தனமான ஒரு முடிவு, அவருடைய வாழ்க்கைக்கு எமனாக வருகிறது. அருந்ததியின் முடிவால் அமைச்சரை கொலை செய்த கும்பல், அருந்ததியையும் கொலை செய்ய முயற்சிக்கிறது.
இதற்கிடையில் தமன் அருந்ததியை சந்திக்க முயற்சிக்க, அதை தனது குடும்ப சூழ்நிலை காரணமாக தவிர்த்து வரும் அருந்ததி, கொலையாளிகளிடம் தன்னை எப்படி காப்பாற்றிக்கொண்டார். அவருக்கும் அமைச்சரைக் கொன்றவர்களுக்கும் என்ன தொடர்பு என்பது தான் க்ளைமாக்ஸ்.
இதற்கு முன்பு ஒரு சில படங்களில் தமன், நடித்திருந்தாலும், இந்த படத்தில் அனைவரையும் கவனிக்க வைக்கிறார். ஆக்ஷன் சஷ்பென்ஸ் திரில்லர் படமாக இருந்தாலும், யாரையும் அடிக்காமல், ஆக்ஷன் படம் என்பதை தனது நடிப்பு மூலம் வெளிக்காட்டுகிறார் தமன்.
பாட்டுக்காகவும், கவர்ச்சிக்காகவும் வரும் நாயகிகள் மத்தியில், அருந்ததி கதைக்காக பயன்படுத்தப்பட்டிருக்கிறார். இரண்டாம் பாதி கதையே அருந்ததியை மையமாக வைத்து தான் நகர்கிறது.
பாலாஜியின் காமெடி காட்சிகள் சில சிரிப்பு வர வைத்தாலும், பெரும்பாலான காட்சிகளில் "இந்த இடத்தில் இது தேவையா பாலாஜி..." என்று கேட்க தோன்றுகிறது.
பி.சி.சிவனின் இசையில், பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். "பாஸு...பாஸு...."பாடல் முனு முணுக்க வைக்கிறது.
விஜய் ஆம்ஸ்ட்ராங்கின் ஒளிப்பதிவில் சேசிங் காட்சிகள் மிரட்டலாக உள்ளது. ஹெலிகாப்டர் ஷாட்களும் பிரமிக்க வைக்கிறது.
அழகான காதல் கதை, அதன் பின்னணியில் ஒரு சஷ்பென்ஸ் திரில்லர் என்று திரைக்கதையை சுவாரஷ்யமாக அமைத்திருக்கிறார் இயக்குனர் கேபிள் ஷங்கர்.
வாகன விபத்து, அதன் பின்னணியில் ஒரு கொலை கும்பல், என்பதை மையமாக வைத்து ஒரு திரில்லர் படத்தை விறுவிறுப்பாக கொடுத்த இயக்குனர் கேபிள் சங்கர்,
காதல், குடும்ப செண்டிமெண்ட், நகைச்சுவை என அனைத்தையும் இப்படத்தில் வைத்தாலும், அவற்றை எந்த அளவுக்கு பயன்படுத்த வேண்டுமோ, அந்த அளவுக்கு மிகச்சரியாக பயன்படுத்தி இரண்டு மணிநேரம் படத்தை விறுவிறுப்பாக கொடுத்துள்ளார்.
ஜெ.சுகுமார் விகடன்.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக