செவ்வாய், 27 ஜனவரி, 2015

ஸ்டாலின் துர்கா உதயநிதி கிருத்திகா.? தவிர்க்க முடியாத சில கருத்துக்கள் !

386558_337019706327161_183718718323928_1318135_808070177_nதிமுக எங்கே போகிறது?  சொல்லியே தீரவேண்டிய சில கருத்துக்கள் : 
பல ஆயிரம் கோடிகளை வைத்திருக்கும் முரசொலி அறக்கட்டளை மற்றும் திமுக அறக்கட்டளையில் சத்தமே இல்லாமல் தன் மகன் உதயநிதியை உறுப்பினராக்கியிருக்கிறார்.

வாக்குவாதம் முற்றி, ஸ்டாலின் கருணாநிதியை வண்டியோடு தள்ளி விட்டதாக கூறப்படுகிறது.

கனிமொழி  மிகப்பெரிய தலைவராகி விடுவாரா? அல்லது மொத்த திமுகவும் அவர் பின்னால் சென்றுவிடுமா? எதுவும் நடக்கப் போவதில்லை. ஆனால், இப்படி அற்பத்தனமாக ஸ்டாலின் நடந்து கொள்வதற்கு ஒரே காரணம், தன் மீதே அவருக்கு நம்பிக்கை இல்லை என்பதே. தன்னம்பிக்கை இல்லாத ஒரு கோழையின் நடவடிக்கைகளே ஸ்டாலினின் நடவடிக்கைகள்.

இந்த விபரத்தை ஸ்டாலின் தன் மனைவி துர்க்காவிடம் தெரிவிக்கிறார். அதற்குப் பின் துர்க்கா பேசிய பல வார்த்தைகளை எழுத இயலாது. இறுதியாக துர்க்கா, தலைவரா ஆக முடியல…. இந்த பொருளாளர் பதவி இருந்தா என்ன இல்லாட்டி என்ன… அதையும் தூக்கி வீசுங்க என்று கூறுகிறார். இதையடுத்தே ஸ்டாலின் ராஜினாமா என்ற முடிவை அறிவிக்கிறார். ராஜினாமா கடிதம் கருணாநிதிக்கு அனுப்பப்படுகிறது. நள்ளிரவு 12 மணிக்கே, சென்னை மாவட்டச் செயலாளர்களுக்கு மறுநாள் காலை கணிசமான கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
காலை ஏழு மணியளவில் செய்தியாளர்களுக்கு தகவல் அனுப்பப்படுகிறது. ஆயிரம் பேர் ஸ்டாலின் வீட்டின் முன் கூடுகின்றனர். ஸ்டாலின் ராஜினாமா என்ற தகவல் கருணாநிதியை அடைகிறது. செய்தி கருணாநிதியை அடைந்ததும், என்ன சொன்னார் தெரியுமா ? “இந்த செய்தியை அவன் மறுக்கலன்னா, நான் ராஜினாமாக கடிதத்தை பத்திரிக்கைளுக்கு அனுப்புவேன்னு சொல்லு” என்று கூறுகிறார். (யாருக்கிட்ட….. ?) தகவல் அறிந்ததும், ஸ்டாலின் என்ன செய்வது என்று புரியாமல் விழிக்கிறார். இதற்குள், அழகிரி சென்னை வருகிறார் என்ற செய்தி பரவுகிறது. ஸ்டாலினின் ராஜினாமா ஏற்கப்பட்டு, அழகிரி புதிய பொருளாளர் என்றால் என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள். “தளபதி வாழ்க” என்று தொண்டை கிழிய வாயிலில் கத்திக் கொண்டிருந்த கூட்டம், சத்தமே இல்லாமல் அறிவாலயம் போய் விடும். இதை உணர்ந்தே ஸ்டாலின் ராஜினாமா செய்தியை மறுத்தார். அப்படி மறுத்ததிலும் ஒரு தந்திரம் வேண்டாமா ? வாசலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடியிருக்கிறார்கள். எ.வ.வேலு, ஆ.ராசா, மா.சுப்ரமணியம் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் ஸ்டாலினோடு வீட்டில் இருக்கிறார்கள். திடீரென்று பத்திரிக்கையாகர்களை அழைத்தார் ஸ்டாலின். பத்திரிக்கையாளர்கள் உள்ளே நுழையும் சமயத்தில், எ.வ.வேலுவைப் பார்த்து, “என்ன ஆச்சு ? எதுக்கு இங்க இவ்வளவு கூட்டம். எதுக்கு மீடியா வந்திருக்காங்க ?” என்று ஒன்றுமே தெரியாதது போலக் கேட்டார். பத்திரிக்கையாளர்களுக்கு இந்த நாடகத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாதா என்ன ? அவர்கள் சார் நீங்கள் ராஜினாமா என்று கூறுகிறார்களே… என்றனர். அப்படியா. அது முழுக்க முழுக்க பொய்ச் செய்தி. திமுகவின் உட்கட்சித் தேர்தல்கள் கட்டுக்கோப்பான முறையில் (??????) நடைபெற்று வருவதை விரும்பாத சில விஷமிகள் பரப்பிய வதந்தி இது என்றார். பத்திரிக்கையாளர்கள் விஷமிகள் என்று யாரைக் குறிப்பிடுகிறீர்கள் என்றதும், உங்களைப் போன்ற பத்திரிக்கையாளர்கள்தான் என்றார். நான் பொருளாளர் பதவியைத் தவிர வேறு எந்த பதவிக்கும் போட்டி போடவில்லை என்றார். சிறிது நேரத்தில் கிளம்பி, கோபாலபுரம் சென்றார். அவர் சென்றதும், கூடியிருந்த தொண்டர்கள் கலைந்து சென்றனர். அப்போது மகளிர் அணியைச் சேர்ந்த மூன்று பெண்கள், அங்கிருந்த கட்சிப் பிரமுகர் ஒருவரிடம் பேசினர். “அண்ணா, எல்லாம் முடிஞ்சுடுச்சு.. போகச் சொல்லிட்டாங்க அண்ணா. நாங்க கௌம்பறோம்” என்றனர். அந்த வார்த்தை அங்கே நடந்த நாடகத்தை மொத்தமாக விளக்கியது. தன் மனைவியின் பேச்சைக் கேட்டு, இந்த கட்சியையே அழிக்கும் வேலையை ஸ்டாலின் தீவிரமாக பார்த்து வருகிறார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு சென்றபோது, நீலகிரி மாவட்டத்தில் ஒரு ஃபர்னிச்சர் கடைக்கு செல்கின்றனர் ஸ்டாலினும் துர்க்காவும். அப்போது அங்கே வைக்கப்பட்டிருந்த ஒரு வேலைபாடுகள் அடங்கிய ஊஞ்சலை பார்த்த துர்க்கா, இது அழகாக இருக்கிறதே என்ன விலை என்றதும் மூன்று லட்ச ரூபாய் என்று கூறியிருக்கின்றனர். நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் அந்த ஊஞ்சலுக்கான விலையை கொடுத்தார். கடையை விட்டு வெளியே வந்த துர்கா, இந்த ஊஞ்சல் இன்னொன்று இருக்கிறதா என்று கேட்கிறார். கடைக்காரர் இன்னும் ஒன்றே ஒன்று இருக்கிறது என்றதும், அதையும் வாங்குங்கள் என்று கூறுகிறார். இன்னொன்று எதற்கு அம்மா என்று கேட்டதும், அது என் தங்கை வீட்டுக்கு என்கிறார். ஆறு லட்ச ரூபாயை அழுத அந்த மாவட்டச் செயலாளர், ஸ்டாலின் மனைவிக்கு வாங்கித் தரலாம். அவர் குடும்பத்துக்கேவா என்று புலம்புகிறார். stalin (7) சரியோ தவறோ… தமிழக அரசியல் சினிமா நட்சத்திரங்களை பெரிய அளவில் நம்பியிருக்கிறது. குஷ்பு தமிழாய்ந்த அறிஞராக இல்லாவிடினும், சினிமா மோகத்தால் அவரது பொதுக் கூட்டங்களுக்கு மக்கள் பெருமளவில் வந்தனர். அவர் எதிர்ப்பார்த்தது மக்களவையில் ஒரு எம்.பி சீட் மட்டுமே. ஆனால், துர்காவால் குஷ்பு வெளியேறினார். திமுகவில் அடுத்த தலைவர் ஸ்டாலின்தான் என்பதை நன்கு உணர்ந்த குஷ்பு, எப்போது ஸ்டாலின் வீட்டுக்கு சென்றாலும், அவர் பேரக்குழந்தைகளுக்கு, வைர மூக்குத்தி, நகைகள் என்று வாங்கித் தருவார். இது தொடக்கம் முதலே துர்காவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. ஆரம்பம் முதலே குஷ்பூவை வெறுப்போடுதான் அணுகினார். dmk-leader-and-actress-khushboo-during-an-177301 குஷ்பு கட்சியில் இணைந்த போது, ஸ்டாலினின் பேனாவை வாங்கித்தான் உறுப்பினர் படிவத்தை நிரப்பினார். ஸ்டாலின்தான், குஷ்புவுக்காக உறுப்பினர் கட்டணம் செலுத்தினார். ஆனால், தன் மனைவியின் பேச்சை மீற முடியாமல், கருணாநிதி தீவிரமாக வலியுறுத்தியும் கூட மக்களவை தேர்தலில் சீட் வழங்க மறுத்தார் ஸ்டாலின். திமுகவின் பலமே, தீவிரமான பிரச்சார யுக்திதான். தெருவுக்கு தெரு மேடை போட்டு, பல நட்சத்திர பேச்சாளர்களை வைத்து, பல்வேறு விஷயங்களை பிரச்சாரம் செய்வது திமுகவின் பலம். இன்று அத்தகைய பிரபல பேச்சாளர்கள் கட்சியில் இல்லை. அதை ஈடு செய்யும் விதமாகத்தான் குஷ்புவின் வருகை இருந்தது. ஆனால் அதையும் கெடுத்தார் ஸ்டாலின்.  மீதி வரலாற்றை சவுக்கு இணையதளத்திற்கு சென்று வாசித்து கொள்ளவும் , விபரங்கள் மிக அதிகமாக டீடெயிலாக உள்ளது savukkunews.com/9256/







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக