சனி, 21 டிசம்பர், 2024

ஜெர்மனி: கிறிஸ்துமஸ் சந்தைக்குள் தாறுமாறாக ஓடிய கார் - என்ன நடந்தது?

 BBC : ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் சந்தைக்குள் தாறுமாறாக ஓடிய கார் மோதி 4 பேர் பலி - 200 பேர் காயம்
காணொளிக் குறிப்பு, ஜெர்மனியில் தாறுமாறாக ஓடிய கார் மோதி 4 பேர் பலி - 200 பேர் காயம்
ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் சந்தைக்குள் தாறுமாறாக ஓடிய கார் மோதி 4 பேர் பலி - 200 பேர் காயம்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் சந்தைக்குள் மக்கள் திரள் மீது ஒரு கார் தாறுமாறாக ஓடி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.

தமிழகத்தில் ஈழப்போராட்டம் ஏன் பெரிய அளவில் மாஸ் காட்டியது?

 LR Jagadheesan : மன்னராட்சிகளுக்குப்பின் தமிழ்நாட்டில் நடந்த ஆயுத போராட்டங்கள் எவை?     மாநில அளவில் கூட வேண்டாம் - மாவட்டம், மாநகரம், சிறுநகர அளவிலாவது?     அதில் ஈடுபட்டவர்கள் மொத்தமாய் மூன்றிலக்கத்தை தாண்டுவார்களா?
Uma Pa Se
ஆந்திரா ,ராயலசிமா, மாயுர்பஞ்ச் என அந்த corridor ல அதிகமே ஒழிய தமிழ்நாட்டில் இல்லை
அப்படியே இருந்தாலும் அவர்கள் முழுமையான மக்கள் விடுதலைக்கு எல்லாம் போராடிடவும் இல்லை. அவர்கட்கு இருந்த agenda மக்களுக்கானதாக இல்லை.
மருதையாற்று பாலம் வெடி வைத்து தகர்க்கப்பட்டதில் எப்படி பொருத்தினாலும் மக்கள்நலன் ஏதுமில்லை.
நல்வாய்ப்பாக வீரப்பன்- வி.பிரபா. கரன் குழுக்களை இணைக்கு முயன்று தோற்றார்கள்.இன்றேல் தமிழ்நாடு இன்னும்மோர் ஆயுத பூமியாய் இன்னும் பல அரசியல் படுகொலைகளை சந்தித்திருக்கும்.
அண்மைக் காலத்தில் தெற்கு சூடானைத் தாண்டி ஆயுதப் புரட்சியால் வென்ற நாடு என எதுவும் இல்லை. சூடானும் நன்றாக இல்லை

அமலாக்கத் துறையை அனுப்பி தொழிலதிபர் மனோஜ் பார்மர் தம்பதிகளை கொன்ற பாஜக அரசு!

May be an image of 2 people and text

M Ponnusamy  :   அமலாக்கத் துறையை அனுப்பி இரண்டு பேரை கொன்ற பாஜக அரசு!
உங்கள் குழந்தைகள் ராகுல் காந்தியை சந்திக்கிறார்கள்…. ராகுல் காந்தி கூட உங்களை காப்பாற்ற முடியாது. விரைவில் அவரையும் நாங்கள் கைது செய்யப் போகிறோம்.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சிகோர் மாவட்டத்தில் வசித்துவந்த தொழிலதிபரான மனோஜ் பார்மர் தனது மனைவியுடன் டிசம்பர் 13ஆம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார்.
மனோஜ் பார்மர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தான் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணங்களை விளக்கி ஐந்து பக்க கடிதத்தை ஜனாதிபதிக்கும் பிரமர் மோடிக்கும் உள்துறை அமைச்சர் அமித்சாவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கும் இன்னும் சிலருக்கும் அனுப்பியுள்ளார்.

Germany கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் இஸ்லாமிய பயங்கரவாதி தாக்குதல் .. ஜெர்மனியில்

 ஜெர்மனியில் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் இஸ்லாமிய பயங்கரவாதி தாக்குதல்
கூட்டத்தின் மீது காரால் மோதினான்
வன் சவுதியை சேர்ந்த ஒரு டாக்டர் என்று தெரியவருகிறது இதில் பலர் இறந்துள்ளனர் இன்னும் பலர் பலத்த காயத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்

முள்ளிவாய்க்காலில் கரை ஒதுங்கிய மியன்மார் ரோஹிங்கிய 115 அகதிகள்

ஜாப்னா முஸ்லீம் : முள்ளிவாய்க்காலில் கரை ஒதுங்கிய மியன்மார் ரோஹிங்கிய 115 அகதிகள்  அகதிகளை மிரிஹானை தடுப்பு நிலையத்துக்கு அனுப்ப உத்தரவு
மியன்மாரில் இருந்து இலங்கை கடற்பரப்புக்குள் வந்த 115 ரோகிங்யர்களை முல்லைத்தீவில் இருந்து திருகோணமலை அஷ்ரப் இறங்கு துறைக்கு இன்று (20)கொண்டு செல்லப்பட்டு திருகோணமலை துறை முகப் பொலிசாரிடம்  ஒப்படைக்கப்பட்டனர்.
குறித்த படகில் பயணித்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வாக்கு மூலத்தை பதிவு செய்ததன் பின்பு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் அப்துல் சலாம் சாஹிர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். 

அதானி வழக்கை விசாரித்த அமெரிக்க நீதிபதி breon peace பதவி விலகுவதாக அறிவிப்பு - ரூ.2100 கோடி லஞ்சம்:

லை மலர் :  இந்தியாவின் பிரபல தொழில் அதிபர் அதானி, மத்திய அரசின் நிறுவனத்திடம் இருந்து சூரிய ஒளி மின்சாரத்தைத் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தத்தை பெற தமிழ்நாடு உட்பட இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களின் மின் வாரிய அதிகாரிகளுக்கு ரூ.2100 கோடி லஞ்சம் கொடுத்து, அமெரிக்காவில் முதலீடுகளைத் திரட்டியதாக தகவல் வெளியானது.
இதுதொடர்பாக அமெரிக்க கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அவருக்கு பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டது.

வெள்ளி, 20 டிசம்பர், 2024

நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த ராகுல் காந்தியை தடுத்து தள்ளிவிட்ட பாஜக எம்பிக்கள்!

tamil.oneindia.com  -Mathivanan Maran ; டெல்லி: நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்ற தம்மை பாஜக எம்பிக்கள் தடுத்து தள்ளிவிட்டதாக லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
ஆனால் ராகுல் காந்திதான் தம்மை தடுத்து தள்ளிவிட்டதாக பாஜக எம்பி பிரதாப் சந்திர சாரங்கி புகார் கூறினார்.
அத்துடன் படுகாயம் ஏற்பட்டதாக கூறி பாஜக எம்பி பிரதாப் சந்திர சாரங்கி, வீல்சேரில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதால் நாடாளுமன்ற வளாகத்தில் பதற்றம் ஏற்பட்டது.     நாடாளுமன்றம் இன்று கூடுவதற்கு முன்பாக பாஜக எம்பிக்கள் ஒன்று திரண்டு, அம்பேத்கரை காங்கிரஸ் இழிவுபடுத்துகிறது; அவமானப்படுத்துகிறது என குற்றம்சாட்டி போராட்டம் நடத்தினர். இதனையடுத்து ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் பேரணியாக சென்று போராட்டம் நடத்தினர். அப்போது ராகுல் காந்தி, பிரியங்கா இருவரும் நீல நிற உடை அணிந்திருந்தனர். இதனையடுத்து நாடாளுமன்றத்துக்குள் ராகுல் காந்தி செல்ல முயன்றார். அப்போது பாஜக எம்பிக்கள் அவரை சிலர் தடுத்து நிறுத்தினர்.

வடகிழக்கு மாகாண சபை அமைப்பை பிரபாகரனுக்கு முன்பே முறியடித்தார் வரதராஜ பெருமாள்

From rebel to strongman: How Daniel ...
Varatha raja perumal
ராதா மனோகர் : இலங்கை தமிழர்களின் போராட்ட வரலாற்றில் திரு டயான் ஜெயதிலகா என்ற ஒரு மனிதரின் வகிபாகம் பற்றி பொதுவெளியில் ஒருபோதும் பேசப்பட்டதில்லை என்றெண்ணுகிறேன்
இவர் காலம்சென்ற பிரபல பத்திரிக்கை ஆசிரியர் திரு மேர்வின் டி சில்வாவின் மகனாவார்.
Uma Kanthan


இளமை காலத்தில் இ பி ஆர் எல் எப் ஈரோஸ் போன்ற இயக்கங்களோடும் சில சிங்கள இடதுசாரி இயக்கங்களோடும் நெருங்கிய தொடர்பில் இருந்தார்.
Dayan Jayatilak

வழமை போல இவர் சார்ந்த சிங்கள இடதுசாரி அமைப்புக்கள் பிற்காலத்தில் இந்திய எதிர்ப்பு தமிழ் எதிர்ப்பு போன்ற பாரம்பரிய பரிணாம வளர்ச்சியை எட்டி இருந்தன.
இவரும் இந்த பாரம்பரியத்திற்கு கொஞ்சம் கூட மாறாமல் அப்படியே அதே பரிணாம வளர்ச்சியை பெற்றிருந்தார்.
கொழும்பு செயின்ட் ஜோசெப் காலேஜ் . அக்குக்வினாஸ் பேராதனை பல்கலை கழகம் என்று இவரது கல்வி தொடர்ந்தது.
மறைந்த இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் மோசே டயனின் மீது இவரது இடதுசாரி தந்தைக்கு ஏற்பட்ட அதீத அபிமானம் காரணமாகவே இவருக்கு டயான் என்ற பெயர் சூட்டப்பட்டது என்பது ஒரு வகை நகைமுரண்தான்.

வியாழன், 19 டிசம்பர், 2024

ரஷியா : புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டோம்! இலவசமாக வழங்க அறிவிப்பு

 மாலை மலர் :  புற்றுநோய்க்கு தங்கள் நாடு தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டதாக ரஷியா அறிவித்துள்ளது. உலகளவில் பலரை ஆட்டிப்படைக்கும் கேன்சர் எனப்படும் புற்றுநோயை குணப்படுத்தப் பல நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் mRNA- அடிப்படையிலான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷிய சுகாதாரத்துறை கூறியுள்ளது.
ரஷிய விஞ்ஞானிகள் புற்று நோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும், விரைவில் அது பயன்பாட்டுக்கு வரும் என்றும் அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்தியாவும் ,இலங்கையும் செய்த ஒப்பந்தங்கள் வலிமையானவை அல்ல!

May be an image of 1 person and map
Annesley Ratnasingham : சர்வதேச( International agreements அல்லது இருநாட்டு (Bilateral agreements ) செய்த பின் சில காலத்தின் பின் ஒப்பந்தத்தில் இருந்து   நாடுகள்..
 அல்லது நாடு தனித்தனியாக வெளியேற முடியுமா ??.....( Vienna Convention on the Law of Treaties (1969)..
Can countries or states individually withdraw from international agreements or bilateral agreements after some time? (Vienna Convention on the Law of Treaties (1969)..
ஆம் வெளியேற முடியும்
ஆனால் அந்த ஒப்பந்தங்களை பொறுத்து வரும் consequences ஐ அதாவது விளைவுகளை ஏற்றுக்கொண்டு சமாளிக்க வேண்டும் ..
சில ஒப்பந்தங்களில் இருந்து வெளியேறும் போது பக்கவிளைவுகள் இருக்காது ..

புதன், 18 டிசம்பர், 2024

பிரியங்கா காந்தி ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: நாடாளுமன்ற ஆய்வு குழுவில் பிரியங்கா காந்தி

 மாலை மலர்  : ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்தது.
இந்த மசோதவை நிறைவேற்ற வேண்டுமென்றால் மூன்றில் இரண்டு பங்கு எம்.பி.க்கள் ஆதரவு தேவை. ஆனால் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இல்லாத நிலையில் மசோதாவை தாக்கல் செய்ததற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
எதிர்ப்பை மீறி மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின் மசோதாவை பாராளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அதற்கான வாக்கெடுப்பில் மத்திய அரசு வெற்றி பெற்றது. இதனால் மசோதா பாராளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

RSS (ஆர்.எஸ்.எஸ்) என்றால் என்ன? சங்கிகளின் உலகை அறிந்து கொள்வோம்

May be an image of 11 people

Arunachalam R  :  RSS(ஆர்.எஸ்.எஸ்) என்றால் என்ன?
அவர்கள் யார்?
அவர்களின் பணி என்ன?
ஆர்எஸ்எஸ்-க்கும், பிஜேபி-க்கும் என்ன தொடர்பு?
முழுவதும் படித்து உணருங்கள்!
1) ஆர்எஸ்எஸ் என்பது ராஷ்ட்ரிய சேவை சங்கம். இது  ஆரிய பார்ப்பன இந்து மதவெறி என்ற ஒன்றால் அமைக்கப்பட்ட, பார்ப்பனர்களால், கோல்வால்க்கரால் 1925 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம்.
2) இது உலகெங்கும் உள்ள பார்ப்பன மதவெறியர்கள் நன்கொடை அளித்து நடத்தி வரும் ஒரு பயங்கரவாத அமைப்பு.
3) இது தான் #கோட்சே மூலம் காந்தியை  சுட்டுக்கொன்றது. இன்று இந்தியாவில் நடக்கும் மதக் கலவரங்களுக்கும், சாதி மோதல்களுக்கும் இதுதான் காரணம்.
4) இந்தியாவில் பயங்கரவாத செயல்கள் இன்று அரங்கேற காரணமும் இந்த அமைப்புதான்.

ஒரே நாடு ஒரே தேர்தல் - அரசியலமைப்பு மீதான தாக்குதல் : ஆ.ராசா

மின்னம்பலம் - Kavi  :  ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது அரசியலமைப்பு, ஜனநாயகம் ஆகியவற்றின் மீது நடத்தப்படும் தாக்குதல் என்று திமுக எம்.பி.ஆ.ராசா கூறியுள்ளார்.
மக்களவையில் இன்று (டிசம்பர் 17) ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை தாக்கல் செய்ய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
முதல்முறையாக மின்னணு முறையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில்,269 பேர் ஆதரவாகவும் 196 பேர் எதிர்ப்பு தெரிவித்தும் வாக்களித்தனர்.
இதையடுத்து மக்களவையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

செவ்வாய், 17 டிசம்பர், 2024

சவுக்கு சங்கர் கைது - நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்த நிலையில் ..

மாலை மலர் :  கஞ்சா வைத்திருந்ததாக தேனி மாவட்ட போலீசார் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 பல்வேறு தடைகளை தாண்டி இந்த வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளில் ஜாமின் பெற்று சமீபத்தில் விடுதலை ஆனார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் ஆஜராகாததால் நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது.
இதனைத் தொடர்ந்து போலீசார் சவுக்கு சங்கரை கைது செய்துள்ளனர்.
முன்னதாக,
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் போலீஸ் குறித்தும், போலீஸ் அதிகாரிகள் பற்றியும் பாலியல் தொடர்பான அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக கடந்த சில மாதங்களுக்கு முன்பாக புகார்கள் எழுந்தன. அதன்பேரில் கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

தலைமன்னார்10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை கொலை

வீரகேசரி : தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் கடந்த பெப்ரவரி மாதம்10 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்
இவருக்கு வயது  55,
இவர்  தப்பிச் சென்ற நிலையில் இன்று (16) கைது செய்யப்பட்டு   மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் உத்தரவிட்டார்.

தமிழ்நாடு பள்ளி காலை உணவுத் திட்டத்தால் குழந்தைகளிடம் எழுச்சி! : மாநில திட்டக்குழு ஆய்வறிக்கை!

மின்னம்பலம் - christopher : முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால் தமிழகத்தில் 90% மேற்பட்ட குழந்தைகளிடம் நினைவாற்றல் அதிகரித்துள்ளதாக மாநில திட்டக்குழு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், ஆட்சிக்கு வந்து திமுக அரசு செயல்படுத்திய “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம் முதலான சீரிய திட்டங்கள் மூலம் நிகழ்ந்து வரும் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளது.
மாநிலத் திட்டக்குழுவின் சார்பில் தயாரிக்கப்பட்ட மதிப்பீட்டு அறிக்கைகளை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் திட்டக்குழுவின் அலுவல் சார் துணை தலைவரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின், செயல் துணைத் தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சன் ஆகியோர் இணைந்து தலைமைச் செயலகத்தில் நேற்று வழங்கினர்.

அனுராதா ரமணன் மீது கைவைத்த காஞ்சி சங்கராச்சாரி! ஒரு பிளாஷ் பேக்!


 புகழ் பெற்ற எழுத்தாளர் திருமதி. அனுராதா ரமணன் மீது கைவைத்த காஞ்சி சங்கராச்சாரி! ஒரு பிளாஷ் பேக்!
போலி சாமியார்ன்னு யார் யாரையோ தூற்றும் உலகம் உலகமகா பொம்பள பொருக்கி ஒருத்தனை பாப்பார கூட்டம் குடை போட்டு மறைத்து வைத்துள்ளது
நெற்றிக்கன் காம் :  .: கிழட்டு காஞ்சி காமேடி தன்னை விட பேத்தி  வயசு இருக்கிற நடிகை ஸ்வர்ணமால்யா கூட குஜாலா இருந்தான் அதப்பத்தி வாய் திறக்கமாட்டானுக,பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார்  கொடுத்தார் ஆசிவாங்க போன தன்னை காமேடி தொடாத இடத்த்தில் தொட்ட்தா சொல்லி புகார் அதுக்கு அன்னைக்கு வாய்திறக்கல,

த வா க வேல்முருகன் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறார்? CM ஸ்டாலினுக்கு அடுத்த நெருக்கடி!

 மின்னம்பலம் -  Aara  பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவருமான வேல்முருகன்… அவ்வப்போது திமுக கூட்டணிக்குள் உரிமைக் குரல்களை எழுப்பி வருபவர்தான்.
சட்டமன்றத்திலும் சரி மக்கள் மன்றத்திலும் சரி,  அரசுக்கு நெருடலான கருத்துகளை தைரியமாக எடுத்துரைப்பவர் வேல்முருகன்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் கூட, ‘எனது பண்ருட்டி தொகுதி ஃபெஞ்சல் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனது தொகுதியில் நீர்வளத்துறையில் இருந்து ஒரு சிறு நற்பணி கூட நடைபெறவில்லை’ என்று வேல்முருகன் பேச, குறுக்கிட்ட பேரவைத் தலைவர், ‘மூத்த உறுப்பினர் நீங்க பொத்தாம் பொதுவா பேசக் கூடாது.
நீங்க சொன்னதை அவைக் குறிப்பில் இருந்து நீக்குகிறேன்’ என்றார். அப்போது வேல்முருகன், ‘செய்யலைன்னா செய்யலைனுதானே சொல்ல முடியும் பேரவைத் தலைவரே…’ என்று மீண்டும் எதிர்க்கேள்வி கேட்டார்.

இந்தியாவில் மூத்த குடிமக்களுக்கு வாழ வழியில்லை .. ஜெயா பச்சன் நாடாளுமன்றத்தில் ஆவேசம்

 Sesharathnam Veeramalla :   பாராளுமன்ற உறுப்பினர் திருமதி.ஜெயாப்பசசன் மிக முக்கியமான பிரச்சினையை பாராளுமன்றத்தில் எழுப்பினார்,
அதற்காக கீழே உள்ளவாறு அவர் ஆற்றிய உரைக்காக அவருக்கு வணக்கம் செலுத்துகிறோம்;
 “மூத்த குடிமக்களைச் சாகடியுங்கள்.
அனைத்து சீனியர்களையும் அரசு கொல்ல வேண்டும்.  
65 வயதிற்குப் பிறகு குடிமக்கள், ஏனெனில் இந்த தேசத்தைக் கட்டியெழுப்புபவர்களுக்கு அரசாங்கம் கவனம் செலுத்தத் தயாராக இல்லை.
 “இந்தியாவில் மூத்த குடிமகனாக இருப்பது குற்றமா?
இந்தியாவின் மூத்த குடிமக்கள் 70 ஆண்டுகளுக்குப் பிறகு மருத்துவக் காப்பீட்டிற்குத் தகுதியற்றவர்கள்,
அவர்கள் EMI இல் கடன் பெற மாட்டார்கள்.  
ஓட்டுநர் உரிமம் வழங்கப்படவில்லை.  

ஜார்ஜியாவில் விஷ வாயு தாக்கி 11 இந்தியர்கள் உயிரிழப்பு-

மாலை மலர்  :  ஜார்ஜியாவின் குடாரியில் உள்ள ஒரு உணவகத்தில் கார்பன் மோனாக்சைடு விஷம் பரவியதில 11 இந்தியர்கள் உள்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
இறந்தவர்கள் அனைவரும் உணவகத்தில் பணிபுரிந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரியவந்ததை அடுத்து, ஜார்ஜிய அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஆனால் இந்த சம்பவத்தில் வன்முறைக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்பதையும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இறந்தவர்கள் அனைவரும் கார்பன் மோனாக்சைடு விஷத்தால் இறந்துள்ளனர். பாதிக்கப்பட்ட 12 பேரும் பணிபுரிந்த இந்திய உணவகத்தின் இரண்டாவது மாடியில் ஓய்வெடுக்கும் பகுதியில் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

திங்கள், 16 டிசம்பர், 2024

அம்பேத்கரின் மறுபக்கம் சங்கிகளுக்கு ஏன் அம்பேத்கர் பயன்படுகிறார்?

May be an image of 8 people, temple and text

முகமது ஜமீல் :  RSS ன் கூரிய ஆயுதமா? அம்பேத்கரும், அம்பேத்கரியமும்:-
திராவிட/மார்க்சீயத்திற்க்கு முழுக்க முழுக்க நேர் எதிரானவர் அம்பேத்கரும் அவரின் அம்பேத்கரியமும். அம்பேத்கரின் முரணான கருத்துக்களை எடுத்து அப்படியே போட்டால்.
அடுத்து அம்பேத்கரை விமர்சிப்பதால் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களை அவமதிப்பது போல் ஆகும் என்கிறார்கள். என்னுடைய எந்த பதிவாவது, ஒடுக்கப்பட்ட மக்களை தவறாக சித்தரித்து இருக்கிறதா? அம்பேத்கரின் கருத்தை அப்படியே எடுத்துப்போடுகிறேன்...முரணான கருத்தை பூசி மொழுகி புது விளக்கமா தர முடியும்?
இது அம்பேத்கரை விமர்சிக்கும் காலம் இல்லை. இப்போது இந்து துவா சூழலில் அம்பேத்கரை விமர்சிக்க வேண்டாம்.அம்பேத்கரின் முரணான கருத்துக்களை நீக்கி விட்டு அம்பேத்கரை எடுத்துக்கலாம். என்று மிக சாதரணமாக சொல்லி விட்டு கடந்து விடுகிறார்கள்.

தாலிபன்களின் எதிர்ப்பை மீறி காபுல் தெருக்களில் புத்தகம் விற்கும் பெண்- ஆப்கானிஸ்தான்:

 BBC ஆப்கானிஸ்தான்: தாலிபன்களின் எதிர்ப்பை மீறி காபுல் தெருக்களில் புத்தகம் விற்கும் பெண்
டெல்ஜன் என்ற மூதாட்டி தாலிபன்களின் கண்டிப்புகளையும் மீறி காபுல் தெருக்களில் புத்தகம் விற்கும் தொழில் செய்து வருகிறார்.
கடந்த 1996இல் தாலிபன்களின் முதல் ஆட்சியின்போது டெல்ஜன் ஒரு பள்ளி மாணவியாக இருந்தார். பல லட்சம் அகதிகளைப் போல் அவரும் பள்ளிப் படிப்பை முடிக்கவில்லை.

கடைசி கண்டி அரசன் ஆங்கில படையினரால் கைப்பற்றப்பட்டு விசாரிக்கப்படும் தருணம்

May be an image of 1 person

 Sinnakuddy Thasan   :   றொபேட் நொக்ஸ் என்ற ஜரோப்பியன்  கண்டியில்  இரண்டாம் ராஜசிங்கன் அரசாண்ட காலத்தில் 16 வருசம் திறந்த வெளி கைதியாக இருந்தான்
பின்னர் ஒரு வழியாக தப்பி ஒல்லாந்தர் கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்து ஜரோப்பா வந்து சேர்ந்தான்
அவன் எழுதிய நூலிலிருந்து  கண்டி அரசனின் ஆட்சி முறை ,வாழ்க்கை முறை பற்றிய சில குறிப்புகள் கீழே
றொபேட் நொக்ஸின் நூலிலிருந்து
 இரண்டாம் இராசசிங்கன்; ஆட்சிமுறை; வாழ்க்கைமுறை:
இராசசிங்கன் என்ற பெயர் சிங்க அரசன் எனப் பொருள் படும்: இவன் முறையான வம்சவாரிசு அல்லது இரத்த உரிமையுடையவனல்லன். உயரமான தோற்றம் உடையவனல்லன், கறுப்பு நிறத்தவன், எந்த நேரமும் கண்களை அங்குமிங்கும் நோட்டம் விட்டபடியிருப்பான். பெருத்த வயிறினை யுடையவன்.

விவசாயிகள் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் மட்டும்தான் இனி விதை வாங்க முடியும் -- அரசு ஆணை?

 RS Prabu  :  தமிழ்நாட்டு விவசாயிகள் பன்னாட்டு நிறுவனங்களிடமும், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் மட்டும்தான் இனி வரும் காலத்தில் விதை வாங்கி  விவசாயம் செய்ய வேண்டும் என்பது அரசு ஆணையாக வெளியிடப்பட்டுள்ளது.
வேளாண்மைத்துறை கடந்த மாதம் வெளியிட்ட அரசாணை எண் 249 இதை உறுதி செய்துள்ளது.
இந்த அரசாணை பெரும் கார்ப்பரேட்  நிறுவனங்கள் போட்டியின்றி ஏகபோகமாக விதை வியாபாரம்  செய்வதற்கும், தமிழ்நாட்டு விவசாயிகள் கலப்பின விதைகளுக்காக அவர்களை  நிரந்தரமாகச் சார்ந்திருக்கச் செய்வதோடு மட்டுமல்லாது சிறுகுறு நிறுவனங்களை மொத்தமாக விதை வணிகத்தில் இருந்து வெளியேறவும்  கட்டாயப்படுத்துகிறது.
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் நூலுக்கு case study ஆக இது அமைவது துயரம் என்பதோடு திமுக ஆட்சியில் இப்படி ஒரு அரசாணை  வெளியிடப்பட்டுள்ளது ஆகப்பெரும் அவலம்.
இதன் பின்னணியையும் இந்த அரசாணையின் நோக்கத்தையும் கொஞ்சம் விலாவரியாக அலசுவோம்.

சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தல் முடிவுகள்... முழு விவரம்!

 minnambalam.com - Selvam  : சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தலில் நீதிக்கான கூட்டணி சார்பில் போட்டியிட்ட 11 வேட்பாளர்களில் 10 வேட்பாளர்கள் இன்று (டிசம்பர் 15) வெற்றி பெற்றுள்ளனர்.
பத்திரிகையாளர் நலனை காப்பதை நோக்கமாகக் கொண்டு கடந்த 1972-ஆம் ஆண்டு சென்னை பத்திரிகையாளர் மன்றம் உருவாக்கப்பட்டது.  சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு கடைசியாக கடந்த 1999-ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது.
கடந்த 25 ஆண்டுகளாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு தேர்தல் நடைபெறாமல் இருந்த நிலையில், பதிவுத்துறை சட்டத்தின்படி தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்த தேர்தலில் நீதிக்கான கூட்டணி, ஒற்றுமை அணி, மாற்றத்திற்கான அணி என மூன்று அணிகள் களத்தில் இருந்தனர்.

ஞாயிறு, 15 டிசம்பர், 2024

ஆதவ் அர்ஜூனா விசிக்காவில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார்.

 தினமலர் : அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜூனா பேசிய பேச்சுகளால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அவரின் பேச்சு விடுதலை சிறுத்தைகள், தி.மு.க., இடையே பெரும் உரசலை ஏற்படுத்தியதாகவும் கூறப்பட்டது.
விடுதலை சிறுத்தைகள் முன்னணி நிர்வாகிகள் இடையேயும் கருத்து முரண்கள் எழுந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து ஆதவ் அர்ஜூனாவை ஆறு மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

தாயை கைம்பெண் என்று ஒதுக்கியதால் ஜெயலலிதா மீது கோபம் கொண்ட இவிகேஸ் இளங்கோவன்

May be an image of 2 people

Karuppu Neelakandan :   நாவலர் நெடுஞ்செழியன் இறந்த பிறகு நடந்த அதிமுக பொதுக்குழுவொன்றில் முன்வரிசையில் அமர்ந்திருந்த விசாலாட்சி அம்மையாரும் இளங்கோவனின் தாயாருமான  சுலோச்சனா சம்பத் அவர்களும் 'விதவைகள் முகத்தில் நேரடியாக விழிப்பதை தவிருங்கள்' என ஜோசியக்காரனின் ஆலோசனையின் அவசரமாக ஜெயலலிதா பார்வைக்கு தெரியாத அளவிற்கு மூத்த உறுப்பினர்கள் என்றும் பாராமல் இருவரும்  பின்னிருக்கைக்கு விரட்டியடிக்கப்பட்டனர் என்ற செய்தியை தாயின் வாயிலாகத்தான் அறிந்திருப்பார் என்று நினைக்கிறேன் அதற்கடுத்த வாரங்களில்  காங்கிரஸ் பொதுக்கூட்டங்களிலும் பத்திரிகையாளர் கூட்டங்களில் ஜெயலலிதாவை வைத்து வெளுவெளுவென வெளுத்துக்கட்டினார்.

தமிழ்நாட்டில் 5,000 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாகும்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Kalaignar Seithigal - Prem Kumar :  தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (14.12.2024) தாம்பரம் சென்னைக் கிறித்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் 45,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள எம்.சி.சி - எம்.ஆர்.ஃஎப் புத்தாக்க (இன்னோவேசன்) பூங்காவை திறந்து வைத்து பார்வையிட்டார்.  
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு :- “இந்த வளாகம் என்னால் மறக்கமுடியாத ஒரு வளாகமாகும். இந்த வளாகம் என் மனதிற்கு மிக நெருக்கமானதாகும். நான் அமெரிக்கா செல்வதற்காக 1996 இல் இந்த வளாகத்தில்தான்  எனது TOEFL நுழைவுத் தேர்வுகளை எழுதினேன். எனவே இந்த வளாகத்தை இன்னும் நினைவில் வைத்திருக்கின்றேன்.

இளங்கோவன் மறைவு... அஞ்சலி செலுத்த தமிழகம் வரும் ராகுல்

minnambalam.com - Selvam  :  இளங்கோவன் மறைவு… அஞ்சலி செலுத்த தமிழகம் வரும் ராகுல்
காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று (டிசம்பர் 14) காலமானார்.
சென்னை மணப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.