திங்கள், 16 டிசம்பர், 2024

தாலிபன்களின் எதிர்ப்பை மீறி காபுல் தெருக்களில் புத்தகம் விற்கும் பெண்- ஆப்கானிஸ்தான்:

 BBC ஆப்கானிஸ்தான்: தாலிபன்களின் எதிர்ப்பை மீறி காபுல் தெருக்களில் புத்தகம் விற்கும் பெண்
டெல்ஜன் என்ற மூதாட்டி தாலிபன்களின் கண்டிப்புகளையும் மீறி காபுல் தெருக்களில் புத்தகம் விற்கும் தொழில் செய்து வருகிறார்.
கடந்த 1996இல் தாலிபன்களின் முதல் ஆட்சியின்போது டெல்ஜன் ஒரு பள்ளி மாணவியாக இருந்தார். பல லட்சம் அகதிகளைப் போல் அவரும் பள்ளிப் படிப்பை முடிக்கவில்லை.


கடந்த 2001இல் தாலிபன் வீழ்ந்தபோது அவர் வீடு திரும்பினார். அந்த நேரத்தில் சமூக நிலை சற்று முன்னேறியதாகக் கூறும் டெல்ஜன், 2021இல் தாலிபன்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது நிலைமை மீண்டும் மோசமானதாகக் கூறுகிறார்.

பெண்கள் கல்வி கற்க, வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்படாத மிகக் கடினமான சூழலிலும், அவர் புத்தகம் விற்கும் தொழிலில் ஈடுபடுவது ஏன்?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக