சனி, 21 டிசம்பர், 2024

தமிழகத்தில் ஈழப்போராட்டம் ஏன் பெரிய அளவில் மாஸ் காட்டியது?

 LR Jagadheesan : மன்னராட்சிகளுக்குப்பின் தமிழ்நாட்டில் நடந்த ஆயுத போராட்டங்கள் எவை?     மாநில அளவில் கூட வேண்டாம் - மாவட்டம், மாநகரம், சிறுநகர அளவிலாவது?     அதில் ஈடுபட்டவர்கள் மொத்தமாய் மூன்றிலக்கத்தை தாண்டுவார்களா?
Uma Pa Se
ஆந்திரா ,ராயலசிமா, மாயுர்பஞ்ச் என அந்த corridor ல அதிகமே ஒழிய தமிழ்நாட்டில் இல்லை
அப்படியே இருந்தாலும் அவர்கள் முழுமையான மக்கள் விடுதலைக்கு எல்லாம் போராடிடவும் இல்லை. அவர்கட்கு இருந்த agenda மக்களுக்கானதாக இல்லை.
மருதையாற்று பாலம் வெடி வைத்து தகர்க்கப்பட்டதில் எப்படி பொருத்தினாலும் மக்கள்நலன் ஏதுமில்லை.
நல்வாய்ப்பாக வீரப்பன்- வி.பிரபா. கரன் குழுக்களை இணைக்கு முயன்று தோற்றார்கள்.இன்றேல் தமிழ்நாடு இன்னும்மோர் ஆயுத பூமியாய் இன்னும் பல அரசியல் படுகொலைகளை சந்தித்திருக்கும்.
அண்மைக் காலத்தில் தெற்கு சூடானைத் தாண்டி ஆயுதப் புரட்சியால் வென்ற நாடு என எதுவும் இல்லை. சூடானும் நன்றாக இல்லை



LR Jagadheesan : Uma Pa Se இவர்கள் இன்று பெரிதும் விதந்தோதும் ஐயா புலவர் கலியபெருமாளை நேரில் அவர் சொந்த ஊரில் போய் பேட்டி எடுத்திருக்கிறேன்.
சந்தையில் அவர் அப்போது வைத்திருந்த காய்கறிக்கடையில்.
அவர் அப்போது மருத்துவர் ராமதாஸ் முன்னெடுத்த “புரட்சியை” ஆதரித்துக்கொண்டிருந்தார்.

ஐயா ராமதாஸ் அப்போது முன்னெடுத்த புரட்சி கோஷம் “வன்னியர் ஓட்டு அந்நியருக்கில்லை”.
பிகு: Please don’t get me wrong. தமிழ்நாட்டின் ஆயுதக்குழுக்கள் இரண்டு ரகம் .
ஒன்று மார்க்சிய/லெனினிய பின்புலம் கொண்டவை.
மற்றவை தமிழ்தேசியத்தை முன்னிருத்தி பொது உடைமை பேசியவை.

அதில் இருந்த கொள்கையாளர்கள் சித்தாந்தவாதிகள் தமிழ்நாட்டின் தமிழ்சமூகத்தின் அடிப்படையையே புரிந்து கொள்ளாத கற்பனாவாதிகள்.
ஒருநாளும் களநிலவரம் பற்றி கவலையே படாதவர்கள்.

களத்தில் இருந்தவர்களோ வெற்று சாகசங்களில் தன்னிறைவடைந்த விடலை  தனத்திலேயே வாழ்வைத்தொலைத்தவர்கள்.
அதனால் தான் மொத்த குழுக்களின் உறுப்பினர்களையும் கூட்டினால் கூட அவர்களால் மூன்றிலக்கைக்கூட தாண்ட முடியவில்லை.

அதனால் தான் இவர்களின் போராட்டம் இறுதியில் “வனக்காவலர் வீரப்பனார்” தலைமையில் தமிழ்தேசியத்தை மீட்டெடுக்க இவர்கள் முயன்ற கேலிக்கூத்தில் போய் புடிந்தது.

“புரட்சிக்கலைஞர் விஜயகாந்தை” முதல்வராக்க முயன்ற தமிழ்நாட்டு கம்யூனிஸ்டுகளின் கூத்துக்கு இணையானது
இவர்களையெல்லாம் இப்போது தமிழ்சினிமாவின் முற்போக்குகள் கொண்டாடி விதந்தோதுவது.

Uma Pa Se :   அதே. ஏன் இத்தகைய புரட்சி நெய்வேலி ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, அணைக்கரையைத் தாண்டி திருச்சிவரைகூட செல்லவில்லை என்பதற்கான காரணம் நீங்கள் சொன்னது தான்.

Uma Pa Se :   நான் சொல்வது அபத்தமாக இருக்கலாம்.
ஆனால் பேசாத புரட்சி பேசிவிட்டு,
 பின்னர் காவி கும்பலோடு ஐக்கியமான சாரு மஜும்முதாரைப் போல்,
 அனேக முந்திரிக்காடு போராளிகள் அல்லது ஆதரவாளர்கள் ராமதாசோடும்,
வலது சாரிகளோடும் ஒன்றிப்போனார்கள்.

குறைந்தப்பட்சம் அவர்கள் ML இயக்கங்களிலாவது இணைந்திருக்கவேண்டும்.
ஆனால் நடந்தது நேரெதிர்.
போதாத குறைக்கு வால்ட்டர் தேவாரமும் அதிமுகவும் வேறு.

ஆக அத்தகைய ஆயுத எழுச்சி சாத்தியமற்றும் ( தேவையற்றும் போனது ) .
ஆயுதமேந்திய வீரப்பன் முழு ஜெயலலிதா வெறுப்பாளராய் இருந்தும் கலைஞர் ஆட்சி என்ற stable political environment மேல் மையல் கொண்டமை ஊர் அறிந்திருந்தது.அதுவும் ஒரு காரணம்.

சில ஆண்டுகள் முன்பு ப்ரெஞ்ச் புரட்சியை சிலாகித்துக்கொண்டிருந்த ஒரு தம்பியிடம் கவிஞர் இன்குலாப் தெரியுமா என்று கேட்டேன்.
உருதுக் கவிஞர் தானே என்றார். இனி அத்தகைய போராட்டம் எழுச்சிகள் நடக்காது என்ற எனது எண்ணம் திண்ணமானது

சுப.மோகன் ராஜ் ; இல்லை

சுப.மோகன் ராஜ் : புலவர் கலியபெருமாள் வகையறாக்களின் வேறொரு பரிணாமத்தை மருத்துவர் ஒருவர் பதிவிட பார்த்ததுண்டு அவரை தேடிப் பார்க்கிறேன்.

சுப.மோகன் ராஜ் :  ML ல் இருந்து பிரிந்து,
தமிழ்தேசிய இடதுசாரி புரட்சி பேசின தமிழரசனுக்கு பிறகு வந்தவர்கள் அவர்களுக்குள்ளாகவே வெட்டிக்கொண்டு செத்ததுதான் வரலாறு.
பலர் கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களாக மாறிப்போயினர்.
வனக் காவலர் மாட்டியதில் கூட தவிப சேர்ந்த சிலர் போலீசார் கைக்கூலிகளாக செயல்பட்டதாக பேச்சு உண்டு.
இன்னுமொரு தகவல் வனக் காவலர் பணத்தை பங்கு பிரிப்பதில் அவர்களுக்குள்ளாக அடித்துக் கொண்டார்கள்.

சுப.மோகன் ராஜ் :  Jawahar Kennedy A Psychiatrist இவருக்கு புலவர் கலியபெருமாள் போராட்டம் பற்றி தெரியும்.

Ramki J  ·: தென்னாற்காடு அரசியல், தமிழ் தேசிய அரசியலாக மாற்றப்பட்டது. விடுதலை சீரிஸ் படங்கள் வந்த பின்னர், அதுவே ஒரு பெரும் லட்சியப்போராட்டமாக கட்டமைத்துவிடுவார்கள்

Uma Pa Se
Ramki J ஓடாது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக