வியாழன், 19 டிசம்பர், 2024

இந்தியாவும் ,இலங்கையும் செய்த ஒப்பந்தங்கள் வலிமையானவை அல்ல!

May be an image of 1 person and map
Annesley Ratnasingham : சர்வதேச( International agreements அல்லது இருநாட்டு (Bilateral agreements ) செய்த பின் சில காலத்தின் பின் ஒப்பந்தத்தில் இருந்து   நாடுகள்..
 அல்லது நாடு தனித்தனியாக வெளியேற முடியுமா ??.....( Vienna Convention on the Law of Treaties (1969)..
Can countries or states individually withdraw from international agreements or bilateral agreements after some time? (Vienna Convention on the Law of Treaties (1969)..
ஆம் வெளியேற முடியும்
ஆனால் அந்த ஒப்பந்தங்களை பொறுத்து வரும் consequences ஐ அதாவது விளைவுகளை ஏற்றுக்கொண்டு சமாளிக்க வேண்டும் ..
சில ஒப்பந்தங்களில் இருந்து வெளியேறும் போது பக்கவிளைவுகள் இருக்காது ..
சில ஒப்பந்தங்களில் இருநாடுகள் அல்லது பல நாடுகள் என்னென்ன விடயத்தை விட்டு கொடுத்து அல்லது பேசி தீர்த்து இருந்தார்களோ ஆனால் வரும் consequences ஐ எதிர்சொல்லவேண்டும் .

ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற காரணம் ஒன்று ஒப்பந்தத்தில் செய்துகொள்ளப்பட்ட விடயங்களை கடை பிடிக்காமை மற்றது ஒப்பந்தம் செய்தவர்கள் தாமாகவே உடன்பட்டு விலகி கொள்ளுதல் -..
நான் வாசித்த அளவில் சில ஒப்பந்தகளில் இருந்து வெளியேறும்போது சர்வதேச நீதிமன்றத்துக்கு ஒரு பங்காளர் செல்லலாம் .உதாரணம் - கச்சத்தீவு ஒப்பந்தம் ...

அந்த இருநாட்டு  ஒப்பந்தத்துடன் சர்வதேச கடல் எல்லை நிர்ணயம் என்ற United Nations Convention on the Law of the Sea அல்லது Maritime Boundary Delimitation என்ற ஐக்கியநாடுகள் விதிமுறை ( Regulations ) இற்கு கீழ் கைச்சாத்து இடப்பட்டிருந்தால் அது வேறு ஒரு கடுமையான consequences ஐ கொண்டுவரும் ..
.ஆகவே அதில் கைவைப்பது கடும் விளைவுகளை கொடுக்கும் ....
.
ஐரோப்பிய யூனிய ஒப்பந்தத்தில்  இருந்து பிரித்தானிய 2016 இல் வெளியேறி இருந்தது ..
பிரித்தானியா ஐரோப்பிய யூனியனில் மற்றைய நாடுகளை போலவே ஒப்பந்தம் செய்து 1 November 1993 இல் ( The Treaty on European Union, commonly known as the Maastricht Treaty )   
இணைந்துகொண்டாலும் 2016 இல் மக்கள் ஆணையை கேட்டு 51.89 % மக்கள் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும்படி வாக்களித்து Maastricht Treaty இல் இருந்து வெளியேறினார்கள் ...
.
அதே போன்று  Donald Trump அவர்களும் 5 சர்வதேச உடன்படிக்கைகளில் இருந்து வெளியேறினார் ...
( Trump's top five withdrawals from international agreements )..
1,Withdrawal from Paris Climate Agreement ...2 , Withdrawal from Trans-Pacific Partnership....3, Withdrawal from UNESCO ...4 , Leaving Iran nuclear deal....5 , Withdrawal from UN Human Rights Council...
.
.நேற்று இந்தியாவும் ,இலங்கையும் செய்த ஒப்பந்தங்கள் பெரிய வலிமையானவை அல்ல .
அது ஒரு புறம் இருக்கட்டும் .
.
IMF உடன் ரணில் செய்த ஒப்பந்தத்தை மாற்றுவோம் என்று NPP ம் ,சஜித் கட்சியும் கூறின ...
ஆனால் தேர்தலின் பின் எந்த மாற்றமும் இன்றி தொடர்கிறது காரணம் அதனால் வரும் consequences ஐ அதாவது விளைவுகளை சந்திக்க இந்த அரசு தயார் இல்லை என்பதே ..
.
( இந்த முகநூலை பாவித்து பல விடயங்களை நான் எழுதுவது என்னை போல அறியவேண்டும் என்ற அவா உள்ளவர்களுக்கும் அதைவிட இதை பற்றி இன்னும் விடயங்கள் அறிந்தவர்கள் மூலம் இன்னும் அறிந்து கொள்வதற்கே )..
நன்றிகள் ...( உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன் ...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக