சனி, 21 டிசம்பர், 2024

அமலாக்கத் துறையை அனுப்பி தொழிலதிபர் மனோஜ் பார்மர் தம்பதிகளை கொன்ற பாஜக அரசு!

May be an image of 2 people and text

M Ponnusamy  :   அமலாக்கத் துறையை அனுப்பி இரண்டு பேரை கொன்ற பாஜக அரசு!
உங்கள் குழந்தைகள் ராகுல் காந்தியை சந்திக்கிறார்கள்…. ராகுல் காந்தி கூட உங்களை காப்பாற்ற முடியாது. விரைவில் அவரையும் நாங்கள் கைது செய்யப் போகிறோம்.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சிகோர் மாவட்டத்தில் வசித்துவந்த தொழிலதிபரான மனோஜ் பார்மர் தனது மனைவியுடன் டிசம்பர் 13ஆம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார்.
மனோஜ் பார்மர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தான் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணங்களை விளக்கி ஐந்து பக்க கடிதத்தை ஜனாதிபதிக்கும் பிரமர் மோடிக்கும் உள்துறை அமைச்சர் அமித்சாவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கும் இன்னும் சிலருக்கும் அனுப்பியுள்ளார்.


காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்ற ஒரே காரணத்திற்காக, அமலாக்கத்துறை, சோதனை என்ற பெயரில் பார்மரின் வீட்டில் புகுந்து பலவிதமான அராஜகங்களில் ஈடுபட்டது காரணமாக பார்மரரும் அவரது மனைவியும் தற்கொலை செய்து கொள்வதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பார்மரின் 18, 16, 12 வயதுடைய மூன்று குழந்தைகள், “பாரத் ஜோடோ” யாத்திரையின் போது, ராகுல் காந்தியை சந்தித்து தாங்கள் சேமித்து வைத்திருந்த உண்டியல் பணத்தை ராகுல் காந்தி இடம் கொடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து தான் அமலாக்கத்துறை 2022ல் இவரின் மீது வழக்கு பதிவு செய்ததுள்ளது. ஆனால் 2024 ல், இந்த ஆண்டில்தான் அமலாக்கத்துறை பார்மரின் குடும்பத்தினர் மீது பாய்ந்து குதறியுள்ளது.
சோதனையின்போது
“நீங்கள் காங்கிரசுக்கு பிரச்சாரம் செய்தது தான் அமலாக்கத் துறையின் இந்த சோதனைக்குக் காரணம்” என்றும் “உங்கள் குடும்பம் பிஜேபியுடன் இருக்குமானால் உங்களுக்கு எதிராக எந்த ஒரு வழக்கும் இருக்காது” என்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மிரட்டி உள்ளனர்.
‘ “உங்கள் குடும்பத்தை காப்பாற்ற விரும்பினால்”, உங்கள் வழக்குகளை “முடித்துவிட” விரும்பினால் உங்கள் குழந்தைகளை பிஜேபியுடன் இருக்கச் சொல்லுங்கள்; ராகுல் காந்திக்கு எதிராக ஒரு வீடியோவை வெளியிடச் சொல்லுங்கள்’ என்றும் “இல்லையென்றால் கூடுதலான குற்றச்சாட்டுகள் சேர்க்கப்படும்” என்றும் அமலாக்கத்துறை மிரட்டியுள்ளதாக பார்மர் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
“உங்கள் குழந்தைகள் ராகுல் காந்தியை சந்திக்கிறார்கள்…. ராகுல் காந்தி கூட உங்களை காப்பாற்ற முடியாது. விரைவில் அவரையும் நாங்கள் கைது செய்யப் போகிறோம். உங்கள் குழந்தைகளிடம் சொல்லுங்கள், அவர்கள் உயிருடன் இருக்க விரும்பினால், உங்கள் குடும்பத்தையும் மனைவியையும் காப்பாற்ற விரும்பினால் பிஜேபியில் சேர்ந்து விட வேண்டும் என்று. இல்லை என்றால் உங்கள் மொத்த குடும்பத்தின் மீதும் பொய்வழக்கை ஜோடித்து விடுவோம்” என்று அமலாக்கத்துறை மிரட்டியுள்ளது.
பார்மரின் இந்த வரிகளைப் படிக்கும் பொழுது தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்து, தனது கொட்டடியில் வைத்து, பாஜகவில் சேர்ந்து விடும்படி அமலாக்கத்துறை மிரட்டியது நினைவிற்கு வருகிறது.
“நீங்கள் சிபிஐ வழக்கில் ஜாமீன் பெற்று விடலாம். ஆனால் இந்த (அமலாக்கத்துறை) வழக்கில்? அரவிந்த் கேஜரிவால், ஹேமந்த்சோரன், D.சிவக்குமார் ஆகியோரிடம் போய் கேட்டுப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஜாமீனே பெற முடியாது” என்று மிரட்டையுள்ளனர்.
சோதனை என்ற பெயரில் வீட்டுக்குள் நுழைந்த அமலாக்கத்துறை பார்மரின் மனைவியையும் மூன்று குழந்தைகளையும் ஒரு தனி அறையில் போட்டு பூட்டி விட்டனர். செல்போன்களை பறித்துக் கொண்டனர். காலை ஐந்து மணியிலிருந்து இரவு 9 மணி வரை அவர்களை சாப்பிடவோ கழிவறைக்கு செல்லவோ அனுமதிக்கவில்லை.
பார்மரை தரையில் அமர வைத்து ஒரு அமலாக்கத் துறை அதிகாரி சோபாவின் மீது அமர்ந்து பார்மரின் தோள் மீது தனது கால்களை வைத்துக் கொண்டு “இதுதான் உங்களின் உண்மையான நிலைமை” என்று கூறியுள்ளார்.
சோதனை என்ற பெயரில் 70 கிராம் தங்க நகையையும் 10 லட்சம் ரூபாயையும் கைப்பற்றிக் கொண்ட அமலாக்கத்துறை, அது பற்றி கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் பொருட்களின் பட்டியலில் எதுவும் குறிப்பிட வில்லை.
இது பற்றிய கேள்விகளுக்கு ‘அவரது இறப்பு வருத்தத்துக்குரியது’ என்று பதிலளித்துள்ளது அமலாக்கத்துறை. மேலும் சட்டபூர்வ நடவடிக்கைகள் மட்டுமே எடுத்ததாக கூறியுள்ளது. இந்த அமலாக்கத்துறையின் யோக்கியதை என்ன என்பது நமக்கு தெரியும் என்பதால் இதை அப்படியே நம்ப முடியாது.
மேலும், அமலாக்கத்துறை விசாரணைக்கு அடிப்படையாக கூறப்படும் வழக்கு 2017 ஆம் ஆண்டு மனோஜ் பார்மர் மீது பதியப்பட்டுள்ளது. அந்த வழக்கில், மத்திய அரசின் திட்டங்களின் கீழ் ஆறு கோடி ரூபாய் கடன் பெற்று அதை முறைகேடாக பயன்படுத்தியதாக பார்மர் மீது சிபிஐ குற்றம் சாட்டியிருந்தது.
இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு 2022 ஆம் ஆண்டு ஒரு வழக்கை பதிவு செய்த அமலாக்கத்துறை, இப்பொழுது, 2024ல் பார்மரின் வீட்டில் சோதனையில் ஈடுபட்டது.
2017ல் நடைபெற்ற முறைகேட்டை கண்டுபிடிக்க அப்பொழுதே சோதனையில் ஈடுபடாமல் 2024 இல் சோதனை நடத்துவது எதற்காக?
2017 ல் செய்த முறை கேடு தொடர்பாக 2022 ஆம் ஆண்டில் அமலாக்கத்துறை பார்மரின் மீது வழக்குப் பதிவு செய்ததற்கும் பார்மரின் குழந்தைகள் ராகுல் காந்தியை சந்தித்தற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை நம்ப முடிகிறதா?
தவறு செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று தான் நாம் அனைவரும் கூறுகிறோம். ஆனால் அமலாக்கத்துறை எப்படி செயல்படுகிறது?
அமலாக்கத்துறை ஒருவர் மீது வழக்கு தொடுப்பதும் அவர்கள் பாஜகவிடம் சரணடைந்து விட்டால் அவர்கள் மீதான வழக்கை கைவிட்டு விடுவதும் உலகறிந்த உண்மை.
இதே மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் அஜித் பவார் ரூ.70,000 கோடி ஊழல் செய்தவர் என்று பிரதமர் மோடி பேசினாரே, அந்த அஜித் பவர் மீது இப்படிப்பட்ட வழக்குகள், அமலாக்கத் துறையின் சோதனைகள் ஏன் பாயவில்லை? ஏனென்றால், முன்பு பாஜகவின் எதிரணியில் இருந்த அஜித் பவார் பிறகு பாஜகவினருடன் கூட்டணியில் இருந்து கொண்டு மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வராகவும் ஆகியிருக்கிறார் என்பது தானே காரணம்?
தங்களுக்கு எதிரானவர்களை முடிந்தவரை மிரட்டி பணிய வைக்க முயற்சிப்பது; முடியாவிட்டால் சிறையில் அடைத்து வதைப்பது என்பது தான் காவிப் பாசிஸ்டுகளின் நடைமுறை. இதற்கும் மேலாக தேவைப்பட்டால் வழக்குகள், கைதுகள் என்றெல்லாம் போகாமல் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதையும் காவி பாசிஸ்டுகள் தங்கள் நடைமுறையாக கொண்டுள்ளனர். அதற்கான உதாரணங்கள் தான் கல்புர்கி, பன்சாரே, கௌரிலங்கேஸ் ஆகியோரின் படுகொலைகள்.
காவிகளின் இந்த பாசிச ஒடுக்குமுறைகளுக்கு எதிராக மக்கள் விழிப்புணர்வு பெற்று ஒன்று திரண்டு போராடாவிட்டால் வரும் காலங்களில் இது போன்ற நடைமுறைகள் தொடரவே, மேலும் அதிகரிக்கவே செய்யும்.
—தங்கசாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக