ஞாயிறு, 15 டிசம்பர், 2024

தாயை கைம்பெண் என்று ஒதுக்கியதால் ஜெயலலிதா மீது கோபம் கொண்ட இவிகேஸ் இளங்கோவன்

May be an image of 2 people

Karuppu Neelakandan :   நாவலர் நெடுஞ்செழியன் இறந்த பிறகு நடந்த அதிமுக பொதுக்குழுவொன்றில் முன்வரிசையில் அமர்ந்திருந்த விசாலாட்சி அம்மையாரும் இளங்கோவனின் தாயாருமான  சுலோச்சனா சம்பத் அவர்களும் 'விதவைகள் முகத்தில் நேரடியாக விழிப்பதை தவிருங்கள்' என ஜோசியக்காரனின் ஆலோசனையின் அவசரமாக ஜெயலலிதா பார்வைக்கு தெரியாத அளவிற்கு மூத்த உறுப்பினர்கள் என்றும் பாராமல் இருவரும்  பின்னிருக்கைக்கு விரட்டியடிக்கப்பட்டனர் என்ற செய்தியை தாயின் வாயிலாகத்தான் அறிந்திருப்பார் என்று நினைக்கிறேன் அதற்கடுத்த வாரங்களில்  காங்கிரஸ் பொதுக்கூட்டங்களிலும் பத்திரிகையாளர் கூட்டங்களில் ஜெயலலிதாவை வைத்து வெளுவெளுவென வெளுத்துக்கட்டினார்.

ஏன் இவ்வளவுக்கடுமையாகவும் கொஞ்சம் ஆபாசமாகவும் EVKS பேசுகிறாரே என  மிக மூத்த பத்திரிகையாளரைக்கேட்டேன்
விதவை தன்மையை சமூகத்திலிருந்தே அடியோடு  ஓழிக்கணும் பாடுபட்ட பெரியார் குடும்பத்திலிருந்து வந்தவருக்கு தன் தாயே அப்படி ஒரு அவமதிப்பிற்கு உள்ளாகும்போது தாங்கமுடியாத கோவத்தில் அப்படி பேசுகிறார் மற்றபடி எப்போதும் அப்படிப்பட்டவரல்ல பெண்பிள்ளைகள் பத்திரிகையாளராக அவரை செய்திக்காக அணுகும்போது
 மிகவும் வாஞ்சையோடும் நடத்துவார்.அவர்களின் குடும்பப்பின்னணிகள் குறித்தும் அக்கறையோடும் அன்போடும்
விசாரிப்பார் என அந்த மூத்தப்பத்திரிகையாளரும் சொன்னார்.அப்போது சன்டிவியில் வேலைப்பார்த்துக்கொண்டிருந்த அமுதாவும் சொன்னார்.
நாங்கள் முனைவர் .மு .வளர்மதி வெளியிட்டிருந்த "அன்னை நாகம்மையாரும் தோழர் கண்ணம்மாளும் நூல் வந்த புதிதில் அவராகவே அழைத்துப்பேசினார் கருப்புப்பிரதிகள் பெயரை வைத்துக்கொண்டதற்கு பாராட்டியதோடு அந்த ஆண்டு நடந்த சென்னை புத்ககண்காட்சிக்கு நேரிலும் வந்திருந்து  அந்த நூல்களைத்தவிரவும் நான் பரிந்துரைத்த நூல்களையும் வாங்கிக்கொண்டார்.
கோபத்தில்  கொஞ்சம் வார்த்தைகளில்
நிதானம் தவறுவார்தான் அதற்கான பலத்த எதிர்வினைகளையும் சந்தித்தவர்தான் EVKS..
ஆனால் சீமான் கட்சியின் பொறுக்கிகளில் சிலர்
இன்று கொட்டும் மழையிலும்
அவரது இறப்பை பட்டாசு வெடித்து பொதுவெளியில் கொண்டாடி மங்கலவாழ்த்து சொல்லும் கொடும் தமிழ்த்தேசிய போக்கெல்லாம்  தமிழ்நாட்டிற்கு உகந்ததல்ல
இது எங்கிருந்து  இறக்குமதி செய்யப்பட்ட நஞ்சு என்று பெரியாரியர்களுக்குத் தெரியும்
இந்த கழிசடைத்தமிழ்த்தேசிய வெறியை அப்புறப்படுத்தியேத் தீருவோம்!!
இளங்கோவனாரை
இழந்துவாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக