Kalaignar Seithigal - Praveen : அதிகபட்சம் தனது கட்சியை படுதோல்வி அடையாமல் காப்பதுதான் ரிஷி சுனக் செய்யும் மிகப்பெறும் பணியாக இருக்கும் என அக்கட்சியின் மூத்த தலைவர் கூறியுள்ளார்.
இங்கிலாந்தின் பழமைவாத ( கன்சர்வேடிவ் ) கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் 2019ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே உலகளவில் பல விமர்சனங்களுக்கு உள்ளானார். அவரது அமைச்சரவை சகாக்களே அவர் மீது கடும் விமர்சனத்தை வைத்தனர்.
இதன் காரணமாக அவர் பதவி விலகினார். அதைத் தொடர்ந்து இந்த பதவிக்கு பலர் போட்டியிட்ட நிலையில், நிதித்துறை அமைச்சராக இருந்த ரிஷி சுனக் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த லிஸ் ட்ரஸ் ஆகியோர் இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றனர். இறுதிச்சுற்றில் வென்று லிஸ் ட்ரஸ் இங்கிலாந்தின் மூன்றாவது பெண் பிரதமராக தேர்வாகினார்.
சனி, 3 டிசம்பர், 2022
இடைத்தேர்தலில் ரிஷி சுனக் கட்சி படுதோல்வி.. புதிய பிரதமரை நிராகரித்துள்ள பிரிட்டன் பொதுமக்கள்
குஜராத் தேர்தலை உற்று நோக்கும் திமுக தலைவர்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயார்?
தி.மு.க. தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் குஜராத் தேர்தலை பற்றியும், வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலை பற்றியுமே அதிக நேரம் விவாதித்து இருக்கிறார்கள்.
இந்த கூட்டத்தில் மறைந்த பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா தொடர்பான தீர்மானம் மட்டுமே வெளியிடப்பட்டது.
குஜராத்தில் 27 ஆண்டுகளாக பா.ஜனதா ஆட்சியில் இருக்கிறது. பிரதமர் மோடியின் தலைமையில் மத்தியிலும் ஆட்சி நடக்கிறது. மீண்டும் குஜராத்தில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும் பட்சத்தில் அது பாராளுமன்ற தேர்தலிலும் நிச்சயம் எதிரொலிக்கும்.
ஆறாம் வகுப்பு பாடத்தில் சீட்டுக்கட்டு பகுதியை நீக்கிவது பெரிய முட்டாள்தனம்... Probability theory, complex systems என்றால் பகடை காய்கள், சீட்டுக்கட்டு ..
Karthikeyan Fastura : ஆறாம் வகுப்பு பாடத்தில் சீட்டுக்கட்டு பற்றிய பகுதியை எதிர்ப்புகள் எழுந்ததால் நீக்கி இருக்கிறார்களாம்.
இதை நீக்குவதை விட பெரிய முட்டாள்தனம் சமீபத்தில் நான் பார்த்ததில்லை.
இதற்கு இவர்கள் கூறும் காரணம் சீட்டுக்கட்டு பிள்ளைகளை கெடுத்து விடும்,
ஆன்லைன் ரம்மி விளையாட்டை ஊக்குவிக்கும் என்று. ஆனால் இந்த பாடத்திட்டத்தை மிகச் சரியாக மாணவர்களிடம் கொண்டு சேர்த்தால் அவர்கள் இந்த விளையாட்டிற்குள் வராமல் இருக்கவே செய்வார்கள்.
காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் மலிவான சினிமா ..அரசியல் இலாபத்திற்காக எடுக்கப்பட்ட குப்பை .. காய்ச்சி எடுத்த நடுவர்
ராதா மனோகர் : ஆம் இந்த படம் முழுக்க முழுக்க சினிமாத்தனமான கருத்து திணிப்புக்கள் நிறைந்தது
வரும் காட்சிகள் ஓசைகள் காட்சிகள் அமைக்கப்பட்ட விதம் , கெட்டவற்றையும் நல்லவற்றையும் காட்சிக்கு வைக்கும் விதம் . ...
இப்படிப்பட்ட அவலமான கொடுமையான நிகழ்வுகளை படமாக்கும் பொழுது மிக கவனமாக கையாளவேண்டும்
ஆனால் இந்த படம் இவற்றிற்கு எல்லாம் நேரெதிரான முறையில் படமாக்கப்பட்டுள்ளது
இந்த படம் என்னை பொறுத்தவரை மிகவும் தரம் குறைந்த சினிமா திணிப்பு என்றே கூறுவேன் ....
இந்த படம் ஒரு செக்கன் கூட காஷ்மீரின் உண்மையான பிரச்னையை பேசவே இல்லை ....
வெறும் அரசியல் இலாபத்திற்காக தயாரிக்கப்பட்ட படம் இது
மிக தெளிவான நீண்ட பேட்டி இது .. முழுவதும் மொழிமாற்றம் செய்வது கொஞ்சம் சிரமம்
ஷாக் கொடுத்த குஜராத் மக்கள்: வாக்குப்பதிவு குறைவுக்கு என்ன காரணம்?
minnambalam.com - Kavi : 27 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இருக்கும் குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.
ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜகவும், ஆட்சியைப் பிடிக்கக் காங்கிரஸும், பஞ்சாப்பை கைப்பற்றியது போல் குஜராத்தை கைப்பற்ற ஆம் ஆத்மியும் போட்டியிட்டுள்ளன.
விறுவிறுப்பாக நடந்த தேர்தல் பிரச்சாரம் முடிந்து நேற்று (டிசம்பர் 1) தெற்கு பகுதியில் 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. தொடக்கம் முதலே மந்தமான நிலையே நீடித்தது. தேர்தல் ஆணையம் காலை 9, 11,1,3, 5 மணி நிலவரங்களை அறிவித்துக் கொண்டே இருந்தது.
இதில், 3 மணி வரை 48 சதவிகித வாக்குகளே பதிவாகியிருந்தன. இது அரசியல் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், 2012 தேர்தல் போல் இறுதி நேரத்தில் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று காத்திருந்தனர்.
வெள்ளி, 2 டிசம்பர், 2022
அரவக்குறிச்சி திடீர் சித்தராக மாற்றப்பட்ட நிர்வாண மனநோய் சாமியார்: போலீசார் மீட்டனர்
ஆடையின்றி காணப்படும் திடீர் சித்தரை காண பொதுமக்கள் கூடினர்.
விசேஷ தினங்களில் அன்னதானம் வழங்கியும் பணம் வசூலிக்கும் நடவடிக்கைகளும் நடைபெற்றது.
திடீர் சாமியாரை பற்றி சமூக வலைத்தலங்களில் பரப்பி வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து வழிபட்டனர்.
அதேசமயம் திடீர் சித்தரை புகழ் பரப்பி பணம் வசூலிக்கும் கும்பல் குறித்தும் புகார்கள் வந்தன.
தோழர் களம் -தமிழ்நாடு அமைப்பின் நிறுவனர் & தலைவர் தி.க.சண்முகம் தலைமையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
சித்ரா சுப்பிரமணியம் (ஆர் எஸ் எஸ்) இந்த பெண்மணியை பற்றி பொதுவெளியில் அதிகம் பேசப்படுவதில்லை.
ராதா மனோகர் : Mrs .chitra subramaniam duella சித்ரா சுப்பிரமணியம் ஒரு இந்திய பத்திரிகையாளர்.
ஆர் எஸ் எஸ் இன் எடுபிடியாக செயல்பட்ட இந்த பெண்மணியை பற்றி பொதுவெளியில் அதிகம் பேசப்படுவதில்லை.
இவர் சுவிஸ்லாந்தை சேர்ந்த டாக்டர் கியான்கார்லோ டூல்லா என்பவரை வாழ்க்கை துணையாக்கி கொண்டார்.
இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் இருக்கிறார்கள் . இவர்கள் சுவிஸ்லாந்தில்தான் வசிக்கிறார்கள்
இவர் முன்பு இந்தியா டு டேயில் ( india today) வெளிநாட்டு செய்தியாளராக பணியாற்றினார்.
2017 ஆம் ஆண்டில் அர்னாப் கோஸ்வாமி தொடங்கிய ரிபப்ளிக் செய்தி சேனலில் அவரோடு சேர்ந்து கடும் பணியாற்றி வருகிறார்.
இன்றும் இதே பாணியில் ஆர் எஸ் எஸ் நோக்கங்களை நிறைவேற்றி கொண்டே இருக்கிறார்.
3200 கி.மீ நடுக்கடலில் 11 நாட்கள் கப்பலின் சுக்கான் பகுதியில் அமர்ந்து உயிர் பிழைத்த 3 அகதிகள்!
கலைஞர் செய்திகள் - lenin : வறுமை, போர் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து தங்கள் சொந்த மன்னை விட்டு மக்கள் அகதிகளாக வெளியேறி வருகின்றனர். இப்படி வரும்போது ஆபத்தான வழிகளில் பயணம் மேற்கொள்கின்றனர்.
குறிப்பாக படகுகளை எடுத்துக் கொண்டு கடல் கடந்து செல்லும் போது படகுகள் கவிழ்ந்து பலர் உயிரிழந்து விடுகின்றனர். உயிர் பிழைப்பவர்களே அகதிகளாக ஏதாவது ஒரு நாட்டில் தஞ்சம் அடைகின்றனர். இது ஆபத்தான பயணம் என்று தெரிந்தும் பலர் கடல் வழியாகவே தங்கள் நாட்டைவிட்டு செய்கின்றனர்.
இந்நிலையில் 3 அகதிகள் 11 நாட்கள் கப்பலின் சுக்கான் பகுதியில் அமர்ந்து சோறு, தண்ணீர் இல்லாமல் உயிருடன் ஸ்பெயின் நாட்டிற்கு சென்று சேர்ந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்காவின் மேற்குப் பகுதியிலிருந்து வறுமை காரணமாக ஸ்பெயின் நாட்டிற்குப் பலர் அகதிகளாகத் தினந்தோறும் இடம் பெயர்ந்து செல்கின்றனர். இப்படிச் செல்பவர்கள் கடல்களில் ஆபத்தான வழிகளில் பயணம் செய்கின்றனர்.
குட்கா தயாரிப்பாளர்களிடம் இருந்து விஜயபாஸ்கர் பணம் பெற்றார்- வருமான வரித்துறை குற்றச்சாட்டு
மாலைமலர் : சென்னை அ.தி.மு.க. ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் வீட்டில் கடந்த 2017-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் விஜயபாஸ்கரின் 4 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.
2011-2012-ம் நிதி அண்டு முதல், 2018- 2019-ம் நிதி ஆண்டு வரையிலான கால கட்டத்தை கணக்கில் எடுத்து விஜயபாஸ்கரின் வருமானத்தை நிர்ணயம் செய்த அதிகாரிகள் அவருக்கு ரூ.206.42 கோடி அளவுக்கு வருமான வரியை விதித்தனர். இந்த பணத்தை விஜயபாஸ்கர் செலுத்தாததால் அவருக்கு சொந்தமான 17.46 ஏக்கர் நிலம் மற்றும் 4 வங்கி கணக்குகளை வருமான வரித்துறையினர் முடக்கி வைத்தனர்.
இதை எதிர்த்து விஜயபாஸ்கர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் தனது தொகுதி பணிகளை மேற்கொள்வதற்கு வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது தடையாக உள்ளது என்றார். எனவே அதனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி இருந்தார்.
சீனாவுடன் உடன்படிக்கைக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மறுப்பு!
.hirunews.lk : சீனாவுடன் விவசாயம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மறுத்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் ஊடாக பீய்ஜிங்கின் மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் இருப்பதாகக் கருதியே இந்த மறுப்பை யாழ்ப்பாண பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான விரிசல் தீவிரமாகியுள்ளதாக இந்தியச் செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.
சீனா நேரடியாகவும், மறைமுகமாகவும் கடல் வெள்ளரியின் ஊடாக வடக்கின் கடல் பகுதிகளை ஆக்கிரமித்து, அங்குள்ள மீனவர்களிடையே பிளவை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோன்று வடக்கின் வளமான நிலங்களை அபகரிக்கும் வகையில் சீனாவின் இந்த திட்டம் அமையலாம் என்று கருதுகோளின் அடிப்படையிலேயே யாழ்ப்பாண பல்கலைக்கழகம், இந்த ஒப்பந்தத்துக்கு உடன்பட மறுத்துள்ளது.
திராவிட இயக்க தமிழர் பேரவையின் கரூர் மாவட்ட செயலாளர் தமிழ் கவிமீது கொலைவெறி தாக்குதல்! நடவடிக்கை எடுக்க தயங்கும் காவல்துறை .
கருவூர் லெனின் : சென்ற இரண்டு நாட்களில் சமூக விரோதிகள் தாக்கப்பட்ட நான். மருத்துவ மனையில் இருந்த பொழுது, இந்த அரசு அதிகாரிகளை புரிந்து கொண்ட தருணங்களில் இந்த பதிவு
சட்டம் சமூகநீதி மனித உரிமை சமூக சனநாயகம் என்னும் மக்களுக்கும் ,மண்ணுக்குமான சமூக,பொருளாதார, அரசியல் மேம்பாட்டிற்கான பொருள் புரிந்த சொற்களையும்,செயல்களையும்
இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் தங்களின் செருப்புக் காலால் போட்டு மிதித்து நசுக்குவதும்,
பிறகு அதைத் துடைத்தெடுத்து நாட்டு மக்களிடம் காட்டுவதுமாக ஒரே மனிதர்கள் இரட்டைத் தன்மையில் செயல்படுகிறார்கள் என்பதை இப்போதாவது இநத மண்ணின் மீதும், மக்களின் மீதும் பற்றுகொண்டோர்கள் விளங்கிக்கொள்வோம் !
வியாழன், 1 டிசம்பர், 2022
இலங்கை தமிழரசு கட்சியின் திராவிட இருட்டடிப்பும் அதன் விளைவுகளும்!
ராதா மனோகர் : இலங்கை சுதந்திரம் அடைந்த காலக்கட்டத்தில் இலங்கை தமிழர்களிடையே ஒரு பொது அரசியல் மேடையே உருவாகி இருக்கவில்லை .
அப்போது நடந்த நாடாளுமன்ற தேர்தல்களில் வேட்பாளர்களின் தனிப்பட்ட குணங்கள் செல்வாக்கு போன்றவற்றின் அடிப்படையிலேயே அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.
குறிப்பாக தமிழ் சிங்களம் என்ற பிரிவு பேதம் வெறுப்பு எதிர்ப்பு போன்றவை இருக்கவே இல்லை.
சுதந்திர இலங்கையின் முதலாவது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி தமிழர்களின் நலன்களை முன்னிட்டு உருவான கட்சி .
அதன் தலைவராக திரு ஜி ஜி பொன்னம்பலம் இருந்தார் அவரால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்ட பலரில் எஸ் ஜெ வி செல்வநாயகம் ஜான் ஜெபரத்னம் நாகநாதன் போன்றவர்களும் அடங்குவர்.
தமிழ் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு தளம் என்பது பெரும்பாலும் நீண்ட பாரம்பரியம் கொண்ட சைவ கனவான்களின் ஆதிக்கத்திலே இருந்தது
திமுக அணிகளுக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்டவர்கள்... தகுதியானவர்களா?
Kandasamy Mariyappan : திமுகவில் சமீபத்தில் பல அணிகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டள்ளனர்.!
மகிழ்ச்சி, நல்ல செயல்.!
நிர்வாகிகளின் செயல்பாடுகள் ஆறு மாதத்திற்கு ஒருமுறை ஆய்வு செய்யப்பட வேண்டும்.!
இரண்டாண்டுகள் கழித்து அவரின் செயல்பாடுகளில் திருப்தி இருந்தால் மட்டுமே தொடர அனுமதிக்க வேண்டும்.!
பொதுவாக மேட்டிமை மக்கள், மருத்துவர்கள், பெரிய நிறுவன ஊழியர்கள், அரசு பணியாளர்கள் மத்தியில் திமுக ஒவ்வாமை நிறையவே உள்ளது.!
இந்த ஒவ்வாமை எண்ணத்தை மாற்ற வேண்டிய பொறுப்பு இந்த நிர்வாகிகளுக்கு நிறையவே உள்ளது.!
திமுக ஆட்சியின் செயல் திட்டங்களால் 80, 90களில் மருத்துவர்களாக வந்தவர்கள்,
இன்று தீவிர திமுக எதிர்ப்பாளர்களாக இருப்பது மட்டுமல்லாமல் பலர் வலதுசாரிகளாகவே மாறி விட்டனர்.
மீனவர்களுக்கு மின்சார படகுகள் – ஒரு நாள் செலவு 86 ரூபா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவிப்பு
hirunews.lk : மீனவர்களுக்கு, மின்சாரத்தில் இயங்கக் கூடிய மோட்டார் படகுகளை அடுத்த வருடம் முதல் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற கடற்றொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.
மீனவர்கள் எதிர்கொள்ளும் எரிபொருள் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் சிறிய அளவில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கு பற்றரியில் இயங்கக்கூடிய, மின்சார மோட்டார் படகை அறிமுகப்படுத்த எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்தார்.
உதயநிதி : நானும் விஷ்ணுவும் ஒரே சமயத்தில் தான் திரையுலகிற்கு வந்தோம்.
நக்கீரன் ; செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கட்டா குஸ்தி'. இப்படத்தை தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் ரவி தேஜாவும் விஷ்ணு விஷாலும் இணைந்து தயாரித்துள்ளார்கள்.
இப்படத்தை உதயநிதியின் 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனம் தமிழகத்தில் வெளியிடுகிறது.
காமெடி கலந்த ஸ்போர்ட்ஸ் ட்ராமாவாக உருவாகியுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நாளை (02.12.2022) வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று (30.11.2022) நடைபெற்றது.
அப்போது உதயநிதி பேசுகையில், "உண்மையைப் பேசுவதால் அது நிறைய பேருக்கு பிரச்சனையாகிறது. அதனால் நான் நிறைய பேசப்போவதில்லை.
கர்நாடகா-மகாராஷ்டிரா எல்லை தகராறு - கன்னட கொடியால் மாணவன் மீது தாக்குதல் .. பரவும் வீடியோ.
tamil.oneindia.com - Nantha Kumar R : கன்னட - மகாராஷ்டிரா இடையே எல்லை பிரச்சனை மீண்டும் வெடித்துள்ள நிலையில் இருமாநில முதலமைச்சர்களும் மோதிக்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே தான் பிரச்சனைக்கு காரணமாக உள்ள பெலகாவில் கன்னட கொடி வைத்திருந்த கல்லூரி மாணவரை, சில மாணவர்கள் தாக்கிய நிலையில் இருமாநிலங்கள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிற மக்கள் பேசும் மொழியின் அடிப்படையில் மாநிலங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டன. இவ்வாறு பிரிக்கப்பட்ட பல மாநிலங்களில் இன்றும் கூட இருமாநிலங்கள் இடையே எல்லை பிரச்சனை என்பது உள்ளது.
இந்த பிரச்சனையை தான் நமது அண்டை மாநிலமான கர்நாடகா சந்தித்து வருகிறது. அதாவது கர்நாடகாவுக்கும், மகாராஷ்டிரா மாநிலத்துக்கும் இடையே தான் எல்லை பிரச்சனை உள்ளது.
எல்லை பிரச்சனை
தமிழகத்தில் 892 எம்.பி.பி.எஸ். இடங்கள் இன்னும் காலியாக உள்ளன- மத்திய அரசின் கொள்கைகளால் சிக்கல்
maalaimalar.com : சென்னை தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு 2 கட்டமாக நடந்து முடிந்துள்ளது.
ஆனாலும் 892 எம்.பி.பி.எஸ். இடங்கள் இன்னும் நிரம்பாமல் காலியாக உள்ளன. அரசு மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் 7,378 உள்ளன. இவற்றில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு 15 சதவீதம் போல மீதமுள்ள இடங்கள் தமிழக அரசின் மூலம் நிரப்பப்படுகின்றன.
இந்திய மருத்துவ ஆணையத்தின் விதிமுறையை பின்பற்றி தான் அனைத்து மாநிலங்களிலும் கலந்தாய்வு நடத்தப்படுகின்றன.
தமிழகத்திலும் அதன்படி கலந்தாய்வு நடந்து வருகிறது. 2-வது கட்ட கலந்தாய்வு முடிந்து மாணவர்கள் சேர்ந்து வருகிறார்கள். அதன் பின்னர் ஏற்படும் காலி இடங்களும் அடுத்த கட்டமாக நிரப்பப்படும்.
இந்த நிலையில் மத்திய அரசின் தவறான கொள்கையால் நாடு முழுவதும் 5,931 மருத்துவ இடங்கள் காலியாக உள்ளன. 4,299 எம்.பி.பி.எஸ். இடங்களும் 1,280 பி.டி.எஸ். இடங்களும் 352 பி.எஸ்.சி. நர்சிங் இடங்களும் காலியாக கிடக்கின்றன.
பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து ஆளுநர் நீக்கம்; கேரள அமைச்சரவை அதிரடி.!
tamil.samayam.com : கேரள மாநிலத்தில், முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநில அரசுக்கும், மாநில ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே தொடக்கம் முதலே முட்டல் மோதல் போக்கு நிலவி வருகிறது.
இதற்கிடையே, கேரள மாநிலத்தில் உள்ள ஒன்பது பல்கலைக்கழக துணைவேந்தர்களும் பதவியில் இருந்து விலக வேண்டும் என அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், இதற்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆளுநர் ஆரிப் முகமது கானின் உத்தரவை ரத்து செய்தது. இதன் பிறகும் இரு தரப்புக்கும் இடையே மோதல் நிலவி வந்தது.
எஸ்.பி. வேலுமணியின் சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு
தன் மீதான சொத்து் குவிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அவர் மீதான டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது அமைச்சராக இருந்தவர் எஸ்.பி. வேலுமணி. இவர் சென்னை மாநகராட்சியிலும் கோவை மாநகராட்சியிலும் உள்ள பணிகளுக்கு முறைகேடாக டெண்டர்களை வெளியிட்டதாகவும் வருமானத்திற்கு அதிகமாக சுமார் ரூ. 58 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாகவும் அறப்போர் இயக்கமும் தி.மு.கவைச் சேர்ந்த ஆர்.எஸ். பாரதியும் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக வழக்குகளைப் பதிவுசெய்ய வேண்டுமென வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து எஸ்.பி. வேலுமணி மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
புதன், 30 நவம்பர், 2022
புதுச்சேரி கோவில் யானை லட்சுமி உடல் நல்லடக்கம்- ஆயிரக்கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி
மாலை மலர் ; புதுவையில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி இன்று மரணம் அடைந்தது. இன்று காலை 6.15 மணியளவில் வழக்கமான நடைபயிற்சிக்கு யானையை பாகன் அழைத்துச்சென்றார். கல்வே பள்ளி அருகே வந்தபோது திடீரென யானை லட்சுமி மயங்கி சரிந்தது. இதையடுத்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. அப்போது யானை லட்சுமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். யானைக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் இறந்திருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
யானை இறந்த தகவல் பொதுமக்களிடம் பரவ தொடங்கியது. அந்த சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். அங்கேயே யானைக்கு மாலை அணிவித்தும், பூக்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
இனப்பகைவர்களுக்கு இங்கே இடமில்லை” : கழக உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய மடல் !
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.
தமிழ்நாட்டு மக்கள் அளித்துள்ள மகத்தான பொறுப்பினைச் சுமந்துகொண்டு மாநிலத்தின் நிலை உயர்த்திடவும், உரிமை மீட்டிடவும், தொடர்ந்து ஓய்வின்றி உழைத்திட வேண்டியிருப்பதால், அன்பு உடன்பிறப்புகளாம் உங்களுடன் கடிதம் வாயிலாக அடிக்கடி உரையாட முடியவில்லை. எனினும், வாய்ப்பு வரும்போதெல்லாம் கண்ணான கழகத்தினரையும் கனிவான பொதுமக்களையும் நேரில் சந்தித்துக் களிப்புமிகக் கொள்கிறேன்.
உரத்தை போதைப்பொருள் என்ற பாஜக.. நம்பிய எடப்பாடி! கொக்கைன் கடத்தினாரா திமுக கவுன்சிலர்? வெளியான உண்மை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி வார்டு திமுக கவுன்சிலர் சர்பராஸ் நவாஸ் மற்றும் கீழக்கரை திமுக முன்னாள் கவுன்சிலர் ஜெய்னுதீன் என்பவரும் இலங்கைக்கு கடல் வழியாக கொக்கைன் கடத்தியதாக செய்திகள் வெளியாகின.
ஊடகங்கள், சமூக வலைதளங்களில் பரவிய இந்த செய்தியை பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து திமுகவை கடுமையாக விமர்சித்து வந்தனர்.
உ.பி: சரியாக வாய்ப்பாடு சொல்லவில்லை.. சிறுவனின் கையில் டிரில்லிங் மிஷின் மூலம் துளை போட்ட கொடூர ஆசிரியர்
கலைஞர் செய்திகள் - KL Reshma : சரியாக வாய்ப்பாடு சொல்லவில்லை என்பதற்காக 5-ம் வகுப்பு மாணவர் ஒருவர் கையில் டிரில்லிங் மிஷின் மூலம் துளை போட்டுள்ள கொடூர ஆசிரியரின் செயல் உத்தர பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பிரேம் நகரில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. பல்வேறு மாணவர்கள் படிக்கும் இந்த பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வரும் அனுஜ் என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வழக்கம்போல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துள்ளார்.
சீமானுடன் கைகோர்க்கும் சவுக்கு.. “விவசாயி சின்னத்தில் - உதயநிதி எங்கே போட்டி இட்டாலும் அங்கே நிற்க தயார்!
சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையான அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் அரசியலில் இறங்கி உதயநிதி நிற்கும் தொகுதியில் போட்டியிடப்போவதாகக் கூறியுள்ளார். இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை இன்று மாலை அவரது வீட்டில் சென்று சந்தித்தார்.
இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேட்டியளித்த சீமான், சவுக்கு சங்கர் தேர்தலில் போட்டியிட்டால், அவரை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்த மாட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு 1620 கோடி ரூபா பெறுமதியான கொக்கேய்னை கடத்த முயன்ற தமிழக அரசியல்வாதிகள் கைது!
hirunews.lk : தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்து சுமார் 1620 கோடி ரூபா பெறுமதியான கொக்கேய்ன் போதைப்பொருளுடன் தமிழக அரசியல்வாதிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை (26), ராமேஸ்வரம் அருகே மண்டபம் - வேதாளை வீதியில் கடலோர காவல்படையினர் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
செவ்வாய், 29 நவம்பர், 2022
இலங்கையர்கள் 10,000 டொலருக்கான இந்திய ரூபாயை வைத்திருக்கலாம்!
இந்திய ரூபாயை வெளிநாட்டு நாணயமாக அனுமதிக்குமாறு இலங்கை விடுத்த கோரிக்கைக்கு இந்திய அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆசிய நாடுகளில் இந்திய ரூபாயை பிரபலப்படுத்தவும், அமெரிக்க டொலரில் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் இந்திய அரசின் முயற்சிகளுக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் வசிப்பவர்கள் இப்போது இந்திய ரூபாயை மற்றொரு நாணயமாக மாற்றிப் பயன்படுத்த முடியும் என்றும், இதை செயல்படுத்துவதற்கு, இலங்கையில் உள்ள வங்கிகள் இந்திய வங்கியுடன் "INR நொஸ்ட்ரோ கணக்குகளை" ஆரம்பிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமைச்சர் பிடிஆர் செய்வது சரியல்ல.. அதிமுக அரசை விட மோசம்.. முதல்வருக்கு அரசு ஊழியர்கள் கடிதம்!
tamil.oneindia.com - Vignesh Selvaraj : சென்னை : இன்றைய தமிழக அரசு, தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுப்பதோடு, முந்தைய அதிமுக அரசை விட மோசமாக அரசு ஊழியர்களை அச்சுறுத்தும் நோக்குடனும் செயல்படுவதாகவும் நியாயமான கோரிக்கைகளை கூட உதாசீனப்படுத்துவதாகவும் அரசு ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கும் அதே கால இடைவெளிகளில் தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை வழங்கக் கோரி தமிழக அரசு ஊழியர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
அரசு ஊழியர், ஆசிரியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பாக நிதி அமைச்சர் தொடர்ந்து தவறான தகவல்களை ஊடகங்கள் வாயிலாக செய்திகளாக வெளியிட்டு வருவது ஏற்புடையதல்ல என்றும் அந்தக் கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அகவிலைப்படி
இந்திய பணக்காரர்களில் ரூ.12 லட்சம் கோடி சொத்துடன் கவுதம் அதானி முதலிடம்
அவரது சொத்து மதிப்பு 12 லட்சத்து 11 ஆயிரத்து 40 கோடி ரூபாயாகும். இதன் மூலம் அவர் உலகின் 2-வது மிகப்பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்தையும் பெற்றுள்ளார்.
இந்தியாவின் நம்பர்-1 பணக்காரராக திகழ்ந்த முகேஷ் அம்பானி கடந்த ஆண்டு 5 சதவீத இழப்பை சந்தித்ததால் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். டி-மார்ட் சூப்பர் மார்க்கெட் நிறுவனர் ராதாகிஷன் தாம்லனி 3-வது இடத்தில் உள்ளார்.
தி.மு.க. எம்.பி ஆ.ராசாவுக்கு சிபிஐ அழைப்பாணை... வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கு
இதற்கிடையே, ஆ.ராசா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கூட்டாளிகள் உள்பட 16 பேர் மீது கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு 18-ம் தேதி அன்று வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.
·தமிழ்நாடு அரசின் நிவாரணம் : நுவரெலியா மாவட்ட மக்களுக்கு முறையாக பகிரப்பட்டதா?
முறையாக பகிர்ந்தளிக்கப்பட்டதா?
🛑31,350 கிலோ அரிசி மாயம்
🛑 பால்மாவும் உரிய பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை
நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடிகள் காரணமாக மக்கள் எதிர்நோக்கிய உணவு, மருந்து பற்றாக்குறையினை கவனத்தில் கொண்டு தமிழ்நாடு அரசாங்கத்தினால் இலங்கைக்கு மூன்று கட்டங்களில் 903 கோடி ரூபாவுக்கும் அதிகமான அத்தியாவசிய உதவி பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. இவை உணவு ஆணையாளர் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டு மாவட்ட செயலகங்களின் ஊடாக விநியோகிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் தமிழ்நாடு அரசாங்கம் வழங்கிய அத்தியாவசிய பொருட்களை பகிர்ந்தளிக்கும் செயற்பாடுகளைகூட இலங்கை அரசாங்கம் முறையாக முன்னெடுக்கவில்லை. தமிழக மக்களின் உதவியுடன் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிவாரண பொருட்கள் முறைகேடாக வழங்கப்படுவதாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.
திமுகவின் சொத்து பாதுகாப்புக் குழுச் செயலாளராக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதில் சொத்துப் பாதுகாப்புக் குழு தலைவராக அறந்தாங்கி இராசன், சொத்துப் பாதுகாப்புக் குழு துணைத் தலைவர்களாக பொங்கலூர் நா. பழனிச்சாமி, இ.ஏ.பி.சிவாஜி, சொத்து பாதுகாப்பு வழக்கறிஞர் பிரிவு தலைவராக வெ.இரவி, சொத்து பாதுகாப்புக் குழு செயலாளராகத் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்
சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினர்களாக ஜெ.கே.கே.எஸ்.மாணிக்கம், குன்னூர் சீனிவாசன், இ.ஜி.சுகவனம், முன்னாள் எம்.பி. அஞ்சுகா மீனாட்சி சுந்தரம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிரியா
திமுக தலைமை கழக நிர்வாகிகள் பட்டியல்: யார் யாருக்கு என்ன பொறுப்பு?
minnambalam.com - monisha : திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை கழக நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சி பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று (நவம்பர் 28) வெளியிட்டார்.
அந்த அறிவிப்பில்,
தலைமை கழக செய்தித் தொடர்பு தலைவராக டி.கே.எஸ். இளங்கோவன்,
தலைமைக் கழக செய்தி தொடர்பு துணைத் தலைவர்களாக பி.டி. அரசகுமார், புதுக்கோட்டை ஆண்டாள் பிரியதர்ஷினி,
செய்தி தொடர்பு இணைச் செயலாளராகப் பேராசிரியர் கான்ஸ்டண்டைன் ரவீந்திரன், துணைச் செயலாளர்களாக வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா, வழக்கறிஞர் சிவ. ஜெயராஜ், கவிஞர் சல்மா, துணைச் செயலாளர்களாக சையத் ஹபீஸ் சித்திக்
கழக வெளியீட்டுச் செயலாளர்களாகத் திருச்சி என். செல்வேந்திரன், ச. விடுதலை விரும்பி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சட்டதிட்டத் திருத்தக்குழு
செயலாளராக வழக்கறிஞர் இரா. கிரிராஜன், இணைச் செயலாளர்களாக ஞானசேகரன் (வேலூர்), சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கழிவுநீர் தொட்டி மரணங்கள்: விழுப்புரத்தில் இருவர் உயிரிழப்பு - என்ன நடந்தது?
BBC Tamil : தமிழ்நாட்டின் விழுப்புரம் கண்டமங்கலம் அருகேயுள்ள கோண்டூரில் புதியதாக கட்டபட்ட செப்டிங்டேங்கில் பூச்சு வேலைக்காக உள்ளே இறங்கிய இருவர் உயிரிழந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகேயுள்ள கோண்டூர் கிராமத்தில் சேகர் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.
இவர் கடையில் புதியதாக அமைக்கப்பட்ட கழிவுநீர் தொட்டியில் பூச்சு வேலை பணி செய்வதற்காக இன்று பாக்கம் கிராமத்தை சார்ந்த மேஸ்திரி மணிகண்டன், அவரது உதவியாளர்கள் அய்யப்பன், அறிவழகன் ஆகியோருடன் உள்ளே இறங்கி உள்ளனர்.
அப்போது மணிகண்டன், அய்யப்பன் ஆகிய இருவரும் செப்டிக்டேங்கின் உள்ளே இறங்கிய சில நிமிடங்களில் மயங்கி விழுந்தனர். இதையடுத்து மேலே இருந்த அறிவழகன் உள்ளே இறங்கியுள்ளார்.
திங்கள், 28 நவம்பர், 2022
தமிழ் பேச்சுவழக்கில் மாற்றங்களை கொண்டுவந்த வடிவேலு .. Vadivelu Effects
Sivakumar Nagarajan : வடிவேலுவின் வருகைக்குப்பிறகு
நம் பேசுமொழி எத்தனை மாறியிருக்கிறது என்று
இந்த நீண்ட பட்டியலைக்கண்டால்
வியப்பாக இருக்கிறது...
_Oh shit_ -
*வட போச்சே*
_Is it so?_ -
*ஆஹாம்*
_Be careful_ -
*மண்ட பத்திரம்*
_Back to square one_ -
*மறுபடியும் முதல்லருந்தா?*
_I feel you, bro_ -
*வொய் ப்லெட்? சேம் ப்லெட்*
_You are useless_ -
*நீ புடுங்குனது பூராவுமே தேவயில்லாத ஆணிதான்*
குஜராத் தேர்தல் - பதவியை ராஜினாமா செய்த பாஜக மந்திரி காங்கிரசில் இணைந்தார்
தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றன. தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் பல்வேறு கட்சியினரும் மாற்றுக் கட்சிக்கு தாவி வருகின்றனர்.
இதற்கிடையே, குஜராத் மாநில பா.ஜ.க. ஆட்சியில் மந்திரியாக இருந்தவர் ஜெய்நாராயண் வியாஸ் (75). ஜெய்நாராயண் இம்மாத தொடக்கத்தில் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின், பா.ஜ.க.வில் இருந்தும் விலகினார்.
திமுகவின் புதிய உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்களின் பெயர் பட்டியல்
கழக சட்டத்திட்ட விதி 26 பிரிவு 1ன் படி திமுக உயர்நிலை செயல் திட்டக்குழுவில் இடம்பெறும் உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி திமுக தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு
துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, ப.செல்வராஜ், கனிமொழி கருணாநிதி மற்றும் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் திட்டக்குழு உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுடன், ஆற்காடு வீராசாமி, டி.கே.எஸ் இளங்கோவன், தயாநிதிமாறன், தங்கவேலன், பழநிமாணிக்கம், கேசி பழனிசாமி, கண்ணப்பன். எல்.கணேசன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், திருச்சி சிவா, எ.வ.வேலு, ஜெகத்ரட்சகன், சாமிநாதன், மூக்கையா, குழந்தை வேலு, பி.கல்யாணம் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
தி.மு.க.வில் மீண்டும் இணைந்த கு.க.செல்வத்திற்கு பதவி
மாலை மலர் : சென்னை:தி.மு.க.வில் தலைமை நிலைய அலுவலக செயலாளராக கு.க.செல்வம் இருந்தார். இவர் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்பட கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் நெருங்கி பழகியவர்.
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் கடந்த 2016-ல் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக இருந்தார்.
அதன்பின் கட்சி பதவி விவகாரத்தில் அதிருப்தியில் இருந்த அவர் திடீரென டெல்லி சென்று அப்போதைய தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் மூலம் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்தார். அப்போது தி.மு.க.வையும் விமர்சித்துப் பேசிவந்தார். இதனால் தி.மு.க.வின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அவரை நீக்கி உத்தரவிடப்பட்டது.
சீனாவில் கரோனா ஊரடங்கிற்கு எதிராக மக்கள் போராட்டம்; சிக்கலில் சீனா
கரோனா பெருந்தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளாகவே உலக அளவில் பெரும் பொருளாதார பின்னடைவுகள் ஏற்பட்டு தற்போது சீராகி வரும் நிலையில் கரோனா வைரஸ் முதன் முதலில் பரவிய நாடான சீனாவில் அண்மையில் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்து வருகின்றது.
30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கரோனா தொற்றிற்கு ஆளாகி வருகின்றனர்.
இதனால் நாடு முழுவதும் பல பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
ஈரான்: ஹிஜாப்புக்கு எதிராக வலுக்கும் போராட்டம்! ‣ மக்கள் அதிகாரம்
makkalathikaram.com நந்தன் : ஈரானில் கடந்த செப்டம்பர் 16 அன்று மஹ்சா அமினியின் மரணத்தை தொடர்ந்து ஹிஜாப்க்கு எதிரான போராட்டமானது இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
போராட்டத்தின் தொடக்கம்
ஈரானின் morality police அதாவது ஒழுக்கத்தை காப்பாற்றும் காவல்துறை, பணியில் ஈடுபட்டிருந்த போது 22 வயதான மஹ்சா அமினி ஹிஜாப் சரியாக அணியவில்லை என்றும், உடலோடு ஒட்டிய ஜீன்ஸ் அணிந்திருந்ததாகவும் கைது செய்யப்பட்டார்.
ஞாயிறு, 27 நவம்பர், 2022
மாநகர பஸ், மின்சார ரெயில்களிலும் பயன்படுத்தும் வகையில் மெட்ரோ ரெயிலில் பொது பயண அட்டை
மாலைமலர் : சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அடுத்த மாதம் இறுதியில் தேசிய பொது பயண அட்டையை வழங்க இருக்கிறது.
மெட்ரோ ரெயில், மாநகர பஸ், புறநகர் ரெயிலில் ஒரே பயண அட்டையில் பயணம் செய்ய முடியும். சென்னை: சென்னையில் பெருகி வரும் மக்கள் தொகைக்கும், நகர விரிவாக்கத்துக்கும் ஏற்ப போக்குவரத்து வசதிகள் திட்டமிடப்பட்டு வருகிறது.
தற்போது சென்னையில் மாநகர பஸ், மெட்ரோ ரெயில், புறநகர் மின்சார ரெயில் சேவையை பொது மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள்.
இதற்காக தனித்தனியாக பயணச் சீட்டு எடுத்து பயணம் செய்கிறார்கள்.
சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர்; வாகன ஓட்டிகள் அவதி
nakkheeran.in : தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சியின் காரணமாகத் தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமானது வரையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 31 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உதயநிதிக்கு கொடுக்கப்படும் முன்னுரிமை! பின்வரிசையில் திமுக மூத்த அமைச்சர்கள்
zeenews.india.com - S.Karthikeyan : திமுகவின் அடுத்த அரசியல் வாரிசாக கருதப்படும் உதயநிதி ஸ்டாலின், முதன்முறையாக கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக பொறுப்பேற்றதில் இருந்து தமிழக அரசியல் களத்தில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார்.
அமைச்சர் பதவி அவருக்கு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் இருந்தாலும், அதனை உடனே கொடுத்தால் அரசியல் வட்டாரத்தில் திமுக மீதான விமர்சனங்கள் அதிகரிக்க வாய்ப்பு என்பதை கருத்தில் கொண்டு இந்த விஷயத்தில் கட்சி தலைமை பொறுமை காத்துவருகிறது.
திருச்சி - 5 கொலைகள்...கள்ளக்காதல்.. சாமியார் கண்ணன்-கள்ளக்காதலி யமுனாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை
கண்ணன் -யமுனா |
tamil.news18.com : திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேசுவரர்- அகிலாண்டேஸ்வரி கோயில் அருகே அமைந்துள்ளது அகிலாண்டேஸ்வரி நகர். இந்த நகரின் முகப்பிலேயே, ஓணான் கொடிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கும் பாழடைந்த பங்களா வீட்டை பகல் வேளையிலும் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர் அப்பகுதி மக்கள். குழந்தைகள் கூட 'பேய் வீடு' என்று அந்த வீட்டிற்கு அருகே செல்லக் கூட அச்சப்படுகின்றனர்.
இந்த வீட்டில் பிள்ளைகள் வாழ்ந்தற்கு சாட்சியாக வீட்டு வாசலில் இரண்டு சைக்கிள்கள் உருக்குலைந்த நிலையில் கிடக்கின்றன. உண்மையிலேயே 'மயான' அமைதி மண்டிக் கிடக்கும் இந்த வீட்டில் தான், கடந்த, 2013ம் ஆண்டுக்கு முன்பு, ஆனந்தம் விளையாடும் வீடாக மகிழ்ச்சியான ஒரு குடும்பம் வசித்து வந்தது
திருச்சி மாநகரப் பகுதியை சேர்ந்தவர் தங்கவேலு. வைர வியாபாரியான இவர்,
வியாரத்தில் கொடிக் கட்டிப் பறந்தபோது, அவர் பார்த்து, பார்த்து கட்டியதுதான் இந்த பங்களா வீடு.
அழகான மனைவி யமுனா. ஆசைக்கொரு மகளாக சத்யாதேவி, ஆஸ்திக்கு ஒரு மகனாக செல்வக்குமார் என அளவான குடும்பம். நிறைவாக சென்றுக் கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில், தங்கவேலின் தொழிலில் ஏற்பட்ட திடீர் நஷ்டம் மூலமாக விதி தனது விளையாட்டை துவங்கியது.
30 ஆண்டுகளாக உறைய வைக்கப்பட்ட கருமுட்டை மூலம் இரட்டை குழந்தைகள் பிறப்பு- அமெரிக்காவில் சாதனை
மாலை மலர் : அமெரிக்காவின் மேற்கு பகுதியை சேர்ந்த ஒரேகான் மாகாணத்தில் வசிக்கும் பிலிப் - ரேச்சல் தம்பதியினருக்கு செயற்கை முறை கருத்தரித்தல் மூலம் கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதி இரட்டை குழந்தை பிறந்துள்ளது.
ஆனால் இதில் உள்ள அதிசயம், இந்த குழந்தைகள் 30 வருடங்களுக்கு முன்பு அதாவது 1992ம் ஆண்டில் கிரையோபிரிசர்வ் முறையில் உறைய வைக்கப்பட்ட கரு முட்டை மூலம் பிறந்துள்ளன.
பிலிப்- ரேச்சல் தம்பதியினருக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகளும், இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளன.
இந்த நிலையில் கரு மூட்டையை தானமாக பெற்று செயற்கை கருத்தரிப்பு மூலம் மேலும் குழந்தை பெற முடிவு செய்த அவர்கள், அதற்காக அமெரிக்காவில் உள்ள தேசிய கருமுட்டை மையத்தை நாடினர்.