ஞாயிறு, 27 நவம்பர், 2022

சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர்; வாகன ஓட்டிகள் அவதி

nakkheeran.in  :  தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சியின் காரணமாகத் தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமானது வரையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 31 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பல இடங்களில் கன மழை பொழிந்தது. குறிப்பாக மையப்பகுதியான இளையரசனேந்தல் பகுதியில் பெய்த கனமழை காரணமாக அப்பகுதியில் இருந்த சுரங்கப்பாதையில் முட்டி அளவு தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
அந்த வழியாகச் செல்லக்கூடாது என காவல்துறையினர் அறிவுறுத்தினர்.
 இருப்பினும் அவர்களின் அறிவுறுத்தலையும் மீறி சிலர் சுரங்கப்பாதை வழியாக சென்றனர். இதனால் வாகனங்கள் சில பழுதுபட்டு நின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக