திங்கள், 28 நவம்பர், 2022

தி.மு.க.வில் மீண்டும் இணைந்த கு.க.செல்வத்திற்கு பதவி

 மாலை மலர் :  சென்னை:தி.மு.க.வில் தலைமை நிலைய அலுவலக செயலாளராக கு.க.செல்வம் இருந்தார். இவர் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்பட கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் நெருங்கி பழகியவர்.
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் கடந்த 2016-ல் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக இருந்தார்.
அதன்பின் கட்சி பதவி விவகாரத்தில் அதிருப்தியில் இருந்த அவர் திடீரென டெல்லி சென்று அப்போதைய தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் மூலம் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்தார். அப்போது தி.மு.க.வையும் விமர்சித்துப் பேசிவந்தார். இதனால் தி.மு.க.வின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அவரை நீக்கி உத்தரவிடப்பட்டது.


2020-ல் பாஜகவில் சேர்ந்து செயல்படத் தொடங்கிய அவர், பா.ஜ.க.வில் மாநில செயற்குழு உறுப்பினராக பணியாற்றி வந்தார். இருப்பினும், பாஜகவில் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதற்கிடையே, கடந்த பிப்ரவரி மாதம் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் மீண்டும் அவர் தி.மு.க.வில் இணைந்தார்.
இந்நிலையில், பா.ஜ.கவில் இருந்து விலகி மீண்டும் தி.மு.க.வில் இணைந்த கு.க.செல்வம் தி.மு.க.வின் தலைமை நிலைய அலுவலக செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக