வெள்ளி, 2 டிசம்பர், 2022

அரவக்குறிச்சி திடீர் சித்தராக மாற்றப்பட்ட நிர்வாண மனநோய் சாமியார்: போலீசார் மீட்டனர்

கரூர் எக்ஸ்பிரஸ்  : டிச.2.கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா நாகம்பள்ளி கிராம பகுதியில் தகர கொட்டாய் எனும் இடத்தில் சுப்பிரமணி என்பவர் திடீர் சித்தராக மாறினார்.
ஆடையின்றி காணப்படும் திடீர் சித்தரை காண பொதுமக்கள் கூடினர்.
விசேஷ தினங்களில் அன்னதானம் வழங்கியும் பணம் வசூலிக்கும் நடவடிக்கைகளும் நடைபெற்றது.
திடீர் சாமியாரை பற்றி சமூக வலைத்தலங்களில் பரப்பி வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து வழிபட்டனர்.
அதேசமயம் திடீர் சித்தரை புகழ் பரப்பி பணம் வசூலிக்கும் கும்பல் குறித்தும் புகார்கள் வந்தன.
தோழர் களம் -தமிழ்நாடு அமைப்பின் நிறுவனர் & தலைவர் தி.க.சண்முகம் தலைமையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து சரவணன் உள்ளிட்டோர் மீது கரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் தமிழ் கவி என்பவர் புகார் அளித்தார்.
இந்நிலையில் தமிழ் கவியை, சரவணன் மற்றும் சிலர் வழிமறித்து தாக்கினர் .
இது குறித்து அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் இது குறித்து கரூர் மாவட்ட எஸ்பி யிடம் தமிழ்புலிகள் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, அகில இந்திய பட்டியல் இன இளைஞர் பேரவை, தலித் விடுதலை இயக்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, சாமானிய மக்கள் நல கட்சி, திராவிடர் கழகம், மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மனு கொடுத்தனர்.

இந்நிலையில் இன்று அரவக்குறிச்சி போலீஸ் தகர கொட்டாய் என்ற இடத்தில் உள்ள திடீர் சித்தரை மீட்டனர். மனநலம் பாதிக்கப்பட்ட நபரை நிர்வாணமாக்கி சாமியார் என ஜோடித்து பணம் வசூலித்தது குறித்த புகார் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனநலம் பாதிக்கப்பட்ட நபரை மீட்டு நடவடிக்கை எடுத்ததற்காக தோழர் களம் -தமிழ்நாடு அமைப்பின் தலைமை நிலைய செயலாளர் முனைவர்.தமிழன்..கவின்குமார் கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையினருக்கு தோழர் களம் மற்றும் தோழமை இயக்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக