திங்கள், 28 நவம்பர், 2022

திமுகவின் புதிய உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்களின் பெயர் பட்டியல்

minnambalam.com  - christopher : திமுக உயர்நிலை செயல் திட்டக்குழுவில் இடம்பெறும் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று (நவம்பர் 27) வெளியிட்டுள்ளார்.
கழக சட்டத்திட்ட விதி 26 பிரிவு 1ன் படி திமுக உயர்நிலை செயல் திட்டக்குழுவில் இடம்பெறும் உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி திமுக தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு
துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, ப.செல்வராஜ், கனிமொழி கருணாநிதி மற்றும் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் திட்டக்குழு உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுடன், ஆற்காடு வீராசாமி, டி.கே.எஸ் இளங்கோவன், தயாநிதிமாறன், தங்கவேலன், பழநிமாணிக்கம், கேசி பழனிசாமி, கண்ணப்பன். எல்.கணேசன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், திருச்சி சிவா, எ.வ.வேலு, ஜெகத்ரட்சகன், சாமிநாதன், மூக்கையா, குழந்தை வேலு, பி.கல்யாணம் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
திமுக சட்ட விதி 18,19 பிரிவுகளின்படி தலைமைக் கழக நிர்வாகிகளாகவும், குழுத் தலைவர்களாகவும், செயலாளர்களாகவும், இணை மற்றும் துணை செயலாளர்களாகவும், குழு உறுப்பினர்களாகவும் இடம்பெறுவோரின் பட்டியலும் வெளியாகியுள்ளது.

அமைப்புச் செயலாளர் – ஆர்.எஸ்.பாரதி

இணை அமைப்புச் செயலாளர் – அன்பகம் கலை

துணை அமைப்புச் செயலாளர்கள் – எஸ் ஆஸ்டின், ப.தாயகம் கவி

தலைமைக் கழக சட்ட தலைமை ஆலோசகர் – வழக்கறிஞர் பி.வில்சன்

கழக சட்டத்துறை தலைவர் – ஆர்.விடுதலை

சட்டத்துறைச் செயலாளர் – என்.ஆர். இளங்கோ

சட்டத்துறை இணைச்‌ செயலாளர்கள்‌ – இ.பரந்தாமன்‌, வீ. கண்ணதாசன்‌, என்‌.மணிராஜ்‌, கரூர்‌ கே.எஸ்‌.இரவிச்சந்திரன்‌, கே.எம்‌.தண்டபாணி, சு.ராதாகிருஷ்ணன்‌ (கண்ணன்‌), அருள்மொழி.

சட்டத்‌ துறை துணைச்‌ செயலாளர்கள்‌ – ஜெ.பச்சையப்பன்‌, கே. சந்துரு, பட்டி ஜெகன்னாதன்‌, வி. வைத்தியலிங்கம்‌, எஸ்‌. தினேஷ்‌,

தலைமைக்‌ கழக வழக்கறிஞர்கள்‌ – ப.கணேசன்‌, சூர்யா வெற்றிகொண்டான்‌, கே.ஜெ. சரவணன்‌, வீ. கவிகணேசன்‌, எம்‌.எல்‌. ஜெகன், ஏ.என்‌. லிவிங்ஸ்டன்‌, கே.மறைமலை

கொள்கை பரப்பு செயலாளர்கள் – திருச்சி சிவா, திண்டுக்கல் ஐ.லியோனி, எஸ்.ஜெகத்ரட்சகன், முனைவர் சபாபதிமோகன்

கொள்கை பரப்பு இணைச்‌ செயலாளர்கள்‌ – நெல்லிக்குப்பம்‌ புகழேந்தி, வி.சி.சந்திரகுமார்‌
dmk high committee members list announced

கொள்கை பரப்பு துணைச்‌ செயலாளர்கள் – வேலூர்‌ டாக்டர்‌ விஜய்‌, பி.ஆர்‌. சுந்தரம்‌, கம்பம்‌ இரா.பாண்டியன்‌, குத்தாலம்‌ அன்பழகன்‌, கரூர்‌ முரளி, வி.பி.ஆர்‌.இளம்பரிதி, ச.அ.பெருநற்கிள்ளி, குடியாத்தம்‌ குமரன்‌, ஆரணி வெ.அன்புவாணன்‌, வேலூர்‌ ரமேஷ்‌, சேர்க்காடு கென்னடி.

தலைமை நிலைய அலுவலகச் செயலாளர்கள் – துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன், கு.க.செல்வம்

தொழிலாளர் அணிச் செயலாளர் – பிடிசி ஜி.செல்வராஜ்

தொழிலாளர்‌ அணி துணைச்‌ செயலாளர்கள்‌ – பிடிசி வெ.பாலு, இராஜா குப்புசாமி, கொல்லாபுரம்‌ இராஜேந்திரன்‌

கழக சட்டத்திட்டத்தில், கழக துணை அமைப்புகள், சார்பு மன்றங்கள் தலைப்பிலான விதி 31 – பிரிவு 21ன் படி அமைப்புச் சாரா ஓட்டுநர்களின் நலன்கருதி ”திமுக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி” என்ற புதிய துணை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

அமைப்புச் சாரா ஓட்டுநர் அணித் தலைவர் – டி.எம்.கதிர் ஆனந்த்

அமைப்புச் சாரா ஓட்டுநர் அணிச் செயலாளர் – டி.செங்குட்டுவன்

அமைப்புச்‌ சாரா ஒட்டுநர்‌ அணித்‌ துணைச்‌ செயலாளர்கள் – டாக்டர்‌ முத்துராஜா, பணப்பட்டி கே.தினகரன்‌, நாகர்கோவில்‌ எம்‌. சிவராஜ்‌, பொன்னேரி ஏ.ஆர்‌.டி. உதயசூரியன்‌, விஷ்ணு பிரபு.

விதி 31 பிரிவு 22ன் படி, தமிழகத்தில் உள்ள விளையாட்டுத் துறையை மேம்படுத்திட “திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி” என்ற புதிய அணியும் உருவாக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலாளர் – தயாநிதி மாறன்

விளையாட்டு மேம்பாட்டு அணித்‌ துணைச்‌ செயலாளர்கள்‌ – கெளதம சிகாமணி, எஸ்‌.ஆர்.பார்த்திபன்‌, ஈஸ்வரப்பன்‌, பைந்தமிழ்‌ பாரி, வே.நம்பி.

கிறிஸ்டோபர் ஜெமா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக