சனி, 2 அக்டோபர், 2021

வரலாற்றிலேயே முதல் முறை.. ஸ்டாலின் பாப்பாபட்டியில் செய்திருப்பது 'செயல்' அல்ல.. தரமான சம்பவம்

 Velmurugan P  -  Oneindia Tamil  :   மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி கிராம சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். தமிழ்நாடு மாநில வரலாற்றிலேயே முதலமைச்சர் ஒருவர் கிராமசபை கூட்டத்தில் நேரடியாக கலந்துகொண்டு மக்களிடையே உரையாற்றி கிராம தீர்மானங்களை விவாதிப்பது இதுவே முதல் முறையாகும். வரலாற்று நிகழ்வு மட்டுமல்ல, இதுமிகவும் வரவேற்க வேண்டிய மாற்றம் ஆகும். மாநிலத்தின் முதல்வர் அதுவும் குக்கிராமத்திற்கு வந்து நேரடியாக வந்து, கிராம சபை கூட்டத்தில் பங்கேற்று அங்குள்ள மக்களிடம் குறைகேட்டு நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற அதிகாரிகளுக்கு உத்தரவிடுவது என்பது மிகவும் ஆச்சர்யமான மற்றும் அற்புதமான விஷயமாக சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது
ஏனெனில் தங்கள் குறைகளை மாநிலத்தின் முதல்வரே வந்து கேட்டு சென்றிருப்பதால் அந்த குறைகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்படும் என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்படும்.

பிளாஸ்டிக்கை ஒழிப்போம்-துணிப்பைக்கு மாறுவோம்!

பிளாஸ்டிக்கை ஒழிப்போம்-துணிப்பைக்கு மாறுவோம்!

மின்னம்பலம் : பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்த்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அனைவரும் முயற்சி செய்ய வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து, இன்று(அக்டோபர் 2)சென்னை கோயம்பேடு பழ அங்காடியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். அதில் கலந்து கொண்ட வியாபாரிகளுக்கு துணி பை மற்றும் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.

விசா பெறுவதற்காக தான் திருமணம் செய்தேன்- நடிகை திகா ஆப்தே

Radhika Apte Is Married To A World Famous Musician Benedict Taylor –  Celebrity Content Blog

தினத்தந்தி : தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள ராதிகா ஆப்தே, தனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை என தெரிவித்துள்ளார்.
தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கபாலி படத்தில் நடித்து பிரபலமானவர் ராதிகா ஆப்தே. ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன் உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருக்கிறார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
ராதிகா ஆப்தே அளித்துள்ள பேட்டியில், ‘‘நான் 8 வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்தை சேர்ந்த பெனட்டிக் டைலர் என்ற இசைக்கலைஞரை திருமணம் செய்து கொண்டேன்.
ஆனாலும் எனக்கு திருமண முறைகள் மீது நம்பிக்கையே இல்லை.

திமுக தேர்தல் பணிக்குழு மாநிலச் செயலாளர்களில் ஒருவருமான வீரபாண்டி ராஜா மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்

May be an image of ‎1 person and ‎text that says '‎புதிய தலைமுறை انسانماة BREAKING NEWS திமுகவின் தேர்தல் பணிக்குழு செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான எம். ஏவுமான வீரபாண்டி ஆ.ராஜா சேலத்தில் காலமானார் www.puthiyathalaimurai.com‎'‎‎

tamil.samayam.com : முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அவர்களின் மகனும், வீரபாண்டி சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினரும், திமுக தேர்தல் பணிக்குழு மாநிலச் செயலாளர்களில் ஒருவருமான வீரபாண்டி ராஜா சற்றுமுன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்
அவர் இன்று (அக்டோபர் 2) தனது பிறந்தநாள் கொண்டாட உள்ள நிலையில் , மாரடைப்பு காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார்.

 Jeyalakshmi C  -  Oneindia Tamil :  சேலம்: முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அவர்களின் மகனும், வீரபாண்டி சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினரும், திமுக தேர்தல் பணிக்குழு மாநிலச் செயலாளர்களில் ஒருவருமான வீரபாண்டி ராஜா சற்றுமுன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
முக்கிய பகுதியில் 2/3 பிஎச்கே பிளாட்கள் வெறும் ரூ.45 லட்சத்தில் இருந்து.
திமுகவின் மூத்த முன்னோடியான வீரபாண்டி ஆறுமுகத்தின் இரண்டாவது மகன் தான் ராஜா. வீரபாண்டி ஆறுமுகம் உயிருடன் இருந்தவரை சேலம் மாவட்டத்தில் பரபரப்பாக செயல்பட்டு வந்தார்.

வைகோ, திருமாவளவன் மீதான வழக்குகள் ரத்து!

வைகோ, திருமாவளவன் மீதான வழக்குகள் ரத்து!

மின்னம்பலம் : வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, எழும்பூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது சட்டவிரோதமாகக் கூடுதல், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பா.ஜனதாவுடன் கைகோர்ப்பு- சிவசேனா சொல்கிறது

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பா.ஜனதாவுடன் கைகோர்ப்பு- சிவசேனா சொல்கிறது

தினத்தந்தி :  காங்கிரஸ் கட்சியை வீழ்த்த அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பா.ஜனதாவுடன் கைகோர்த்து இருப்பதாக சிவசேனா தெரிவித்துள்ளது.
 மும்பை,  காங்கிரஸ் கட்சி ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் முதல்-மந்திரியாக இருந்த அமரிந்தர் சிங் உள்கட்சி பூசல் காரணமாக சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து மந்திரி சரண்ஜித் சிங் சன்னியை காங்கிரஸ் மேலிடம் முதல்-மந்தியாக நியமித்தது.
இந்தநிலையில் உட்கட்சி பூசலுக்கு முக்கிய காரணமாக கருதப்படும் நவ்ஜோத் சிங் சித்து கட்சியுடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக தனது மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.அதேபோல பதவி விலகிய அமரிந்தர் சிங்கும் காங்கிரசில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால் பஞ்சாப் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இது குறித்து சிவசேனா அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் நேற்று வெளிவந்த தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-
காங்கிரஸ் கட்சிக்கு ஒரு முழுநேர தலைவர் தேவை. தலையில்லாத உடலால் என்ன பயன்? காங்கிரஸ் நோய்வாய்ப்பட்டுள்ளது. அதற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் அந்த சிகிச்சை சரியானதா, இல்லையா என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

கோவையில் நிர்வாணமாக திருடுறது ஏன் தெரியுமா?” - கோவை போலிஸாரை அதிரவைத்த ஷோரூம் கொள்ளையனின் வாக்குமூலம்!

“நிர்வாணமா திருடுறது ஏன் தெரியுமா?” - கோவை போலிஸாரை அதிரவைத்த ஷோரூம் கொள்ளையனின் வாக்குமூலம்!

கலைஞர் செய்திகள் : கோவையில் வாகன ஷோரும்களில் நிர்வாண கோலத்தில் திருடிய கொள்ளையனை போலிஸார் கைது செய்தனர். விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோவையில் சிங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களில் வாகன ஷோரும்களில் அடுத்தடுத்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன.
குறிப்பாக, சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஒரு வாகன விற்பனை மையத்தில் மூன்று லட்ச ரூபாய் பணம் திருடுபோனதாகவும் போலிஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
வாகன ஷோரும்களில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் நிர்வாண கோலத்தில் வந்து ஒருவர் திருடும் காட்சிகள் பதிவாகி இருந்ததைக் கண்டு போலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.
இதுதொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில், நிர்வாணமாகச் சென்று ஷோரூம்களில் திருட்டில் ஈடுபட்டபவர் சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் தெருவை சேர்ந்த கோச்சடை பாண்டியன் என்பது தெரியவந்தது. பழனி பகுதியில் பதுங்கியிருந்த அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

வெள்ளி, 1 அக்டோபர், 2021

துனிசியா பிரதமராக திருமதி நஜ்லா பவுடன் ரோம்தனே பதவியேற்கிறார் (இஸ்லாமிய நாடு) Tunisia’s first female prime ministe

 thesamnet.co.uk அருண்மொழி  : வட ஆப்பிரிக்காவில் உள்ள துனிசியா நாட்டிற்கு முதல்முறையாக நஜ்லா பவுடன் ரோம்தனே என்ற பெண் பிரதமராக பதவி ஏற்க உள்ளார். உயர் கல்வி அமைச்சகத்தின் இயக்குனரான இவர், ஏற்கனவே உலக வங்கியில் பணிபுரிந்தவர்.
கடந்த ஜூலை மாதம் நாட்டின் அதிபர் கயிஸ் சயித் முந்தைய அரசை கலைத்து உத்தரவிட்டதை அடுத்து 2 மாதங்களாக பாராளுமன்றம் முடங்கிப் போய் இருந்தது.
இந்தநிலையில் கடந்த வாரம் புதிய அரசை அமைப்பது தொடர்பாக நஜ்லாவுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
நாட்டில் நிலவி வரும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நஜ்லா 10-வது பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.
துனிசியாவின் ஜனாதிபதி புதன்கிழமை நாட்டின் முதல் பெண் பிரதமரை நியமித்தார், 

கள்ளக்குறிச்சி இளம்பெண் டெல்லியில் மரணம்... மகளிர் ஆணையம் நோட்டீஸ்!

 incident in Delhi ... Women's Commission notice!

நக்கீரன் : டெல்லியில் அழகு நிலையத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இளம்பெண் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் காவல் துறைக்கு மகளிர் தேசிய ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது  கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் லட்சுமி டெல்லி லஜ்பத் நகரில் உள்ள  பெண்கள் அழகு நிலையத்தில் தூய்மை பணியாளர் வேலைக்குச் சென்றுவந்த நிலையில் இன்று காலை வேலைக்குச் சென்ற அந்த இளம்பெண் சந்தேகத்திற்கும் இடம்தரும்வகையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.
மின்சார விபத்தில் இளம்பெண் உயிரிழந்ததாக அழகு நிலையம் தரப்பில் சொல்லப்பட்ட நிலையில் பெண் இறந்து கிடந்த இடத்தில் மண்ணெண்ணெய் கேன் மற்றும் தீப்பெட்டி இருந்ததாக அப்பெண்ணின் தாய் அங்கம்மாள் புகார் தெரிவித்தார்.
இந்த சம்பவம் டெல்லி வாழ் தமிழர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்த மக்கள் அந்த அழகு நிலையம் முன்பு குவிந்து இந்த மரணத்தில் மர்மம் உள்ளது எனவே போலீசார் அழகு நிலைய உரிமையாளர்களை முறையாக விசாரிக்க வேண்டும்  என  முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏர் இந்தியாவை டாடா நிறுவனம் வாங்க ஒப்புதல்.. Tata Sons Win Air India Bid

பிந்திய செய்தி . டாடா சன்ஸ் நிறுவனம் ஏர் இந்தியாவை வாங்கியது உறுதியானது

 .hindutamil.in : ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா சன்ஸ் வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக ஊடகங்களில் வெளியான தகவல் தவறானது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
மத்திய அரசு நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து வருவாய் இழப்பில் இயங்கி வந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே அந்நிறுவனத்தை விற்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது.
எனினும் கடன் சிக்கலால் அந்நிறுவனத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. மேலும் கரோனா பொதுமுடக்கக் காலத்தில் ஏற்பட்ட விமான சேவை பாதிப்பில் ஏர் இந்தியா நிறுவனத்தின் வருவாய் மேலும் சிக்கலுக்குள்ளானது.
கோவிட் தொற்று சூழலுக்கு பின்பு கடந்த ஏப்ரல் மாதம் ஏர் இந்தியாவை விற்பனை செய்யும் முயற்சியை மத்திய அரசு தீவிரப்படுத்தியது. ஏர் இந்தியாவை வாங்கும் நிறுவனம் ஏல விவரங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தியது.

"கவலைப்படாதீங்க".. தைரியம் தந்த முதல்வர்.. பிடிஆர் எடுத்த திடீர் முடிவு.. புது கொள்கை என்ன?

 நிதித்துறை

Hemavandhana -  Oneindia Tamil:  சென்னை: "நான் யாருடன் நேரத்தை செலவிட வேண்டும் என்பதை முடிவுசெய்ய வேண்டும்.
இனி நான், எளிய மக்களின் கேள்விகளுக்கு பதில் தருவேன்" என்று நிலவி வரும் தன் மீதான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிடிஆர் ஒரு அதிரடி முடிவை அறித்துள்ளார்.
ஜிஎஸ்டி கூட்டத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பங்கேற்காதது குறித்த விவாதங்கள் சமீபகாலமாக சோஷியல் மீடியாவை ஆக்கிரமித்துள்ளன..
இதற்கு பதிலடியாக பழனிவேல் தியாகராஜன் ட்விட்டரில் ஒரு கருத்தை வெளியிட்டார்..
ஆனால் அதற்கும் சலசலப்பு கிளம்பியது..
ஒருபக்கம் பாஜகவின் அண்ணாமலையும் அதிமுகவில் மாஜி அமைச்சர் ஜெயக்குமாரும் பிடிஆரை விமர்சித்து மாறி மாறி பேட்டிகளை தந்து வந்தனர்.
'அவர் அமைச்சர் மட்டுமல்ல..அதுக்கும் மேல.

பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்,தனிக்கட்சி? காங்.,கில் இருந்து விலகுவதாக அறிவிப்பு

 தினமலர் : புதுடில்லி :பஞ்சாப் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அமரீந்தர் சிங் பா.ஜ.,வில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ''நான் காங்.,கில் இருந்து விலக உள்ளேன்; ஆனால் பா.ஜ.,வில் இணையும் எண்ணமில்லை,'' எனக்கூறியுள்ளார்.
அதே நேரத்தில் அவர் தனிக்கட்சி துவங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பஞ்சாபில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இம்மாநில முதல்வராக பதவி வகித்து வந்த அமரீந்தர் சிங்குக்கு எதிராக, எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி துாக்கியதை அடுத்து, முதல்வர் பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார்.இதையடுத்து சரண்ஜித் சிங் சன்னி முதல்வராக பதவி ஏற்றார். புதிய அமைச்சரவையில் பொறுப்பேற்றுள்ள 18 அமைச்சர்களின் இலாகாக்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன.

சவுகார்பேட்டைகளில் துரத்தப்படும் தமிழ் கல்வி

Racism in Sowkarpet.. ?? No seats for Tamil children . !! Dravidar kazagam warns .. !!

Abdul Nasar  : சவுகார்பேட்டைகள் -    சென்னை சவுகார்பேட்டையில் தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளிகள் 28க்கும் மேல் உள்ளன. அந்தப் பள்ளிகள் வடநாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே உள்ளதல்ல. அந்த வட்டாரத்தில் இருக்கும் அனைத்துத் தரப்பு மாணவர்களுக்குமானது.
ஆனால் நடைமுறையில் அப்பள்ளிகள் முழுக்க முழுக்க வடநாட்டுக்காரர்களுக்கு மட்டுமே இயங்கும் தனியார்ப் பள்ளிகள் போல் இயங்குகின்றன என்பது அதிர்ச்சியானதாகும்.
1. AG JAIN Higher secondary school
2. Gujarathi Kendal Higher secondary school
3. SKPD TELUGU Higher secondary school
4. Ramdev Higher secondary school
5. MFSB Higher secondary school
6. Ganesh Bhai Kannada Higher secondary school
7. Sugni Bhai girls Higher secondary school
8. Moonbei Bhai girls Higher secondary school
9. Manilal Mehta higher secondary school
உள்ளிட்ட 28-க்கும் மேற்பட்ட தமிழக அரசு உதவி பெறும் பள்ளிகள் சென்னை சவுகார்பேட்டையில் மட்டுமே உள்ளன. இப்பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் வடநாட்டினர். 20 ஆண்டுகளுக்கும் முன்  பணியமர்த்தப்பட்ட ஓரிரு தமிழக ஆசிரியர்கள் அங்கு உள்ளனர். அவர்கள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அங்கே எந்தப் பள்ளியிலும் தமிழ் பயிற்றுவிப்பது இல்லை. தமிழ் மாணவர்களைச் சேர்ப்பதில்லை.

வியாழன், 30 செப்டம்பர், 2021

கேரள பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் பெரியார்..! சங் பரிவர்களின் வரலாறுகள் நீக்கம்! கேரளா அதிரடி

 Arsath Kan -  Oneindia Tamil : திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் கன்னூர் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் பெரியாரின் சமூக தொண்டு குறித்து சேர்க்கப்பட்டுள்ளது.
பெண்ணுரிமைக்காகவும், சாதி பேதமில்லா சமத்துவ சமுதாயத்துக்காவும் தன் வாழ்நாளின் இறுதிமூச்சு வரை உழைத்தவர் பெரியார். முற்போக்கான கருத்துக்கள் மூலம் பகுத்தறிவை வளர்த்தெடுத்தார்.
மூடப்பழக்க வழங்கங்களை வாழ்நாள் முழுவதும் எதிர்த்த பெரியார் , சுயமரியாதையை போதித்து வந்தார். குழந்தை திருமணம் எதிர்ப்பு, விதவை மறுமணம், பெண்களுக்கு கல்வி, என பெண்களுக்காகவும், ஒடுக்கப்பட்டோருக்காகவும் ஓயாது குரல் கொடுத்து வந்தார் பெரியார்.
இதனிடையே கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் கோயில் உள்ள தெருக்களில் பட்டியலின பிரிவை சேர்ந்தவர்கள் நடக்க கூடாது என தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கிருந்த சமூக நல ஆர்வலர்களின் அழைப்பை ஏற்று போராட புறப்பட்டுச் சென்றார் பெரியார்.

ராம்குமார் மின்சாரம் தாக்கி இறக்கவில்லை! கிளறப்படும் ராம்குமார் கொலை விவகாரம்! உடற்கூராய்வு செய்த மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்-என்ன நடந்தது?

“ராம்குமார் மின்சாரம் தாக்கி இறக்கவில்லை”: உடற்கூராய்வு செய்த மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்-என்ன நடந்தது?

கலைஞர் செய்திகள் ராம்குமார் மின்சாரம் தாக்கி இறக்கவில்லை”: உடற்கூராய்வு செய்த மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்-என்ன நடந்தது?
ராம்குமாரின் உடலில் மின்சாரம் பாய்ந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று மனித உரிமைகள் ஆணையம் முன் உடற்கூராய்வு செய்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அ.தி.மு.க ஆட்சியின்போது கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி அடையாளம் தெரியாத மர்ம நபரால் படுகொலை செய்யப்பட்டார்.
தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்தப் படுகொலை குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அடுத்த சில நாட்களில் திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தில் ராம்குமார் (22) என்ற இளைஞரைக் கைது செய்தனர்.
ராம்குமார் ஸ்வாதியை ஒரு தலையாக காதலித்ததாகவும், காதலை ஏற்காததால் வெட்டிக் கொன்றதாகவும் போலிஸ் தரப்பில் கூறப்பட்டது. காவல்துறையினர் கைது செய்ய வருவது தெரிந்து உடன் ராம்குமார் தன் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொள்ள முயன்றதாக போலிஸார் தெரிவித்தனர்.

பாஜகவில் சேரமாட்டேன்; காங்கிரஸிலும் தொடரமாட்டேன் - பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் இந்தியா

 .puthiyathalaimurai.com -  கலிலுல்லா :  பாஜகவில் சேரமாட்டேன்; அதேபோல காங்கிரஸ் கட்சியிலும் நீடிக்க மாட்டேன் என பஞ்சாப் மாநில முன்னாள் முதல் அமைச்சர் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த அமரிந்தர் சிங் அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இது கட்சிக்குள் மட்டுமின்றி, அம்மாநில அரசியலிலும் குழப்பத்தை ஏற்படுத்தியது. தன்னுடைய ராஜினாமாவுக்கு நவ்ஜோத் சிங் சித்துதான் காரணம் என அவர் தெரிவித்திருந்தார். இதனிடையே நவ்ஜோத் சிங் சித்து, அம்மாநில அமைச்சர் ஒருவர் என தொடர்ந்து ராஜினாமாக்கள் அரங்கேறின. இது காங்கிரஸில் இருக்கும் அதிருப்தியை வெளிப்படுத்தியது.

சிங்கள மொழியின் வத்துரு என்ற சொல் வற்றாத ஊற்று என்ற தமிழ் சொல்லின் சங்கேத சொல்?

 செல்லபுரம் வள்ளியம்மை  : சிங்கள மொழியின் ஆதி அடையாளமாக கடம்ப கிரந்த  எழுத்துக்களில் சில குறிப்புக்கள்  இருப்பதாக (கி மு இரண்டாம் நூற்றாண்டில்) சிலர்  கூறுகிறார்கள்
ஆனால் மேலும் சிலர்  அந்த எழுத்துக்களை தமிழ் / சிங்கள /  தமிழி (பிராமி) எழுத்துக்கள் என்பதாகவும் கூறுகிறார்கள்.
கடம்ப அரசர்களின் காலம் கிமு  மூன்றாம் நூற்றாண்டுகளில் இருந்து கிமு இரண்டாம் நூற்றாண்டுகள் வரையினாலாவை.
    Sinhala Prakrit (until 3rd century CE)
    Proto-Sinhala (3rd–7th century CE)
    Medieval Sinhala (7th–12th century CE)
    Modern Sinhala (12th century – present)
  இப்படி பல ஆண்டுகளின் பரிணாம வளர்ச்சி என்று குறிப்பிட்டாலும்   12 ஆம் நூற்றாண்டில் இருந்த நிசங்கமல்லா அரசரின் காலத்தில்தான் சிங்கள மொழியில் ஒரு இலக்கியம் உருவானதாக கூறப்படுகிறது
எனவே நிசங்கமல்லா ஆட்சிக்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்து இன்றைய  சிங்கள மொழியின் உருவாக்கம் நடந்திருக்கலாம் என்று கருத இடமுண்டு .
ஏராளமான சிங்கள சொற்களை சமஸ்கிருத மூலத்தில் முடிச்சு போடும் காரியமே பெரிதும் நடந்திருக்கிறது
பல தமிழ் சொற்களை சம்ஸ்கிருத சொற்களில் இருந்து உருவானவை என்று இப்போதும் கூட எக்கச்சக்கமான வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்
சமஸ்கிருதம் என்பது எல்லா உபகண்ட மொழிகளுக்கும் தாய் மொழி என்ற அண்டப்புளுகு ஆகாச புழுகுணிகளின்  பிரசாரங்கள் மீண்டும் மீண்டும் அவிழ்த்து விடப்பட்டதால் அந்த கருத்தே பலரின் மனதில் இன்றும் கூட நிலை பெற்றிருக்கிறது
உதாரணமாக ஜலம் என்ற சம்ஸ்கிருத சொல் நீரை குறிக்கிறது
இந்த ஜலம் என்ற சம்ஸ்கிருத சொல்லின் ஆதாரம் சலம் என்ற தமிழ் சொல்லேயாகும்
குடிநீருக்கு நதிகளையே பெரிதும் சார்ந்திருந்த மக்கள் சலசலத்து ஓடுவதால் அதை சலம் என்றழைத்தார்கள்
இது  போல ஏராளமான தமிழ் சொற்கள் உலகின் பல மொழிகளையும் மருவி உருமாறி உச்சரிக்க படுகிறது
நீர் ,ஜலம் அல்லது  சலம் என்பதை சிங்கள மொழியில் வத்துரு என்பதாகும் sinhala-language

ஆதி இந்தியர்கள் - நூலாசிரியர்: டோனி ஜோசஃப் - வாசிப்பும் விமர்சனமும்: முனைவர்.க.சுபாஷிணி பகுதி 4

May be a black-and-white image of 4 people, child and outdoors

நூல்: ஆதி இந்தியர்கள்   - நூலாசிரியர்: டோனி ஜோசஃப்  - வாசிப்பும் விமர்சனமும்: முனைவர்.க.சுபாஷிணி
பகுதி 4
இன்றைக்கு ஏறக்குறைய 65,000 ஆண்டுகள் காலகட்டத்தில் நவீன மனிதர்கள் இந்தியாவை அடைந்த போது அவர்கள் சிறு குழுக்களாக இந்தியாவின் கடற்கரையோர பகுதிகள் வழியாக இடம்பெயர்ந்து, சில பகுதிகளில் தங்கி வாழ்ந்து, மீண்டும் இடம்பெயர்ந்து, என்ற வகையில் கடந்து சென்றிருக்கக்கூடும்.  
முதன் முதலாக ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறிய நவீன மனிதர்களின் நேரடி வாரிசுகள் என்று  தேடினால் அந்தமான் தீவுகளில் இருக்கும் ஓங்கே பழங்குடியினரை நாம் குறிப்பிட்டுச் சொல்லலாம்.   இன்று நம் கண்முன்னே இருக்கும் முதன் முதலாக ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறிய நவீன மனிதர்களின் நேரடி வாரிசுகள் இவர்கள் என்று மரபணுவியல் ஆய்வுகள் உறுதி செய்திருக்கின்றன என்பதை நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.
ஓங்கே இனத்தவர்களைப் போல அந்தமான் தீவில் வசிக்கும் ஜரவா மக்களும் இன்றைக்கு ஏறக்குறைய 55,000 ஆண்டுகள் கால வாக்கில் இடம்பெயர்ந்தவர்கள்.  இவர்கள் தெற்கு மற்றும் மத்திய அந்தமான் பகுதியில் வசிக்கின்றனர். மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் தொகையே இன்று இருக்கின்றனர்.

புதன், 29 செப்டம்பர், 2021

மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் மீண்டும் உயிர் பெற்றது

மெத்தனம் காட்டிய அதிமுக; அதிரடி காட்டும் திமுக அரசு - மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை அசத்தல் அறிவிப்பு
இந்தியாவிலேயே முதல்முறையாக இரண்டு அடுக்கு சாலையாக அமையவுள்ளது மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை.
இந்தியாவிலேயே முதல்முறையாக இரண்டு அடுக்கு சாலையாக மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை அமையவுள்ளதாகவும், விரிவான திட்ட அறிக்கை (DPR) மூன்று மாதத்தில் நிறைவடைந்த பின், சாலைப்பணிகள் தொடங்கும் என நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் தீரஜ் குமார் தெரிவித்துள்ளார்.  கடந்த 2007ம் ஆண்டு தி.மு.க ஆட்சியின்போது பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும், சென்னை துறைமுகத்தில் இருந்து கண்டெய்னர் சரக்கு போக்குவரத்து தடையின்றி செல்லவும் ரூ. 1,815 கோடி ரூபாய் செலவில் மதுரவாயல்-சென்னை துறைமுகம் இடையே கூவம் ஆற்றின் வழியே மேல்மட்ட பறக்கும் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.

இலங்கையில் பல நூற்றாண்டு பழமையான தமிழ், தெலுங்கு செப்பேடு - யாழ். பல்கலை பேராசிரியர் கண்டுபிடிப்பு

இலங்கையில் கிடைத்த பல நூறாண்டு பழமையான தமிழ், தெலுங்கு செப்பேடு
பிபிசி தமிழுக்காக  - ரஞ்சன் அருண்பிரசாத்  : இலங்கையில் கிடைத்த பல நூறாண்டு பழமையான தமிழ், தெலுங்கு செப்பேடு
இலங்கையின் வடமத்திய மாகாணத்தையும், கிழக்கு மாகாணத்தையும் இணைக்கும் பகுதியில் அமைந்துள்ள பாரம்பரிய தமிழ் பிரதேசமொன்றுக்கான சான்றுகளை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தலைவர் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் கண்டுபிடித்துள்ளார்.
பொலநறுவை - மட்டக்களப்பு பிரதான வீதியுடன் இணைந்திருக்கும் மன்னம்பிட்டிப் பிரதேசம் ,வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓர் இடமாகும்.
வரலாற்றுத் தொடக்க காலத்தில் இருந்து கிழக்கிலங்கைக்கு உட்பட்டிருந்த இந்த பாரம்பரிய பிரதேசமானது, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்து நிர்வாக வசதிக்காக பொலநறுவை மாவட்டத்துடன் இணைந்து செயற்பட்டுள்ளது.
இந்த பிரதேச எல்லைக்குள் முக்துக்கல், சமணன்பிட்டி, தம்பன்கடவை, கருப்பளை கண்டக்காடு, சொரிவில், திரிகோணமடு, கல்லூர், பிள்ளையாரடி ஆகிய பழம்பெரும் தமிழ்க் கிராமங்கள் காணப்படுகின்றன.

அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை .. அறக்கட்டளை மோசடி வழக்கு

 மாலைமலர் : அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, அவரது கணவர் ஆகியோருக்கு தலா 5 ஆண்டு சிறை  தண்டனை விதித்து நீதிபதி அலிசியா தீர்ப்பு வழங்கினார்.
சென்னை:  ஜெயலலிதா முதல் முறையாக ஆட்சி அமைத்த போது 1991 முதல் 1996 வரை அ.தி.மு.க. அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக இந்திரகுமாரி இருந்து வந்தார்.
அவர் ஊழல் செய்ததாக புகார் கூறப்பட்டது. 1992- 96-ம் ஆண்டு அவரது கணவரும், வக்கீலுமான பாபு, “ மெர்சி மதர் இந்தியா” என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்று தொடங்கினார். மேலும் ‘பரணி சுவாதி’ என்ற பெயரிலும் அறக்கட்டளை தொடங்கப்பட்டது.
இவற்றின் மூலமாக காது கேளாதோர் பள்ளியும், ஊனமுற்றோர் பள்ளிகளும் தொடங்குவதாக கூறி அரசிடமிருந்து ரூ.15 லட்சத்து 45 ஆயிரம் பெற்றனர். ஆனால் அதன்படி அவர்கள் இந்த பள்ளிகளை தொடங்கவில்லை.

ஆப்கன் பெண் நீதிபதிகளை வேட்டையாடும் தாலிபான் கொலையாளிகள் - குற்றவாளிகளுக்கு பயந்து பெண் நீதிபதிகள் தலைமறைவு

ஆப்கானிஸ்தான்

BBC - கிளாயர் ப்ரெஸ்  -     பிபிசி உலக சேவை  :  ஆஃப்கானிஸ்தானில் பெண்ணுரிமையின் முன்னோடிகள் அவர்கள். நீதியின் காவலர்களாக, மிகவும் விளிம்பு நிலையில் இருப்பவர்களுக்கும் நியாயம் தேடித்தந்தவர்கள். ஆனால் இப்போது ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த சுமார் 200 பெண் நீதிபதிகள் தாலிபன் ஆட்சியின்கீழ் தண்டனைக்கு பயந்து தலைமறைவாகியிருக்கிறார்கள். ஆஃப்கானிஸ்தானில் ஆறு இரகசிய இடங்களிலிருந்து பெண் நீதிபதிகள் பிபிசியிடம் பேசினார்கள். பாதுகாப்புக் கருதி அவர்களது பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.
பாலியல் வன்புணர்வு, கொலை, சித்ரவதை போன்ற பெண்களுக்கு எதிரான வன்முறைச் செயல்களுக்காக் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களுக்கு எதிராகக் குற்றத்தீர்ப்பு வழங்கியிருக்கிறார் நீதிபதி மசூமா. ஆனால் அவர் வாழும் நகரம் தாலிபன்களால் கைப்பற்றப்பட்டு, ஆயிரக்கணக்கான குற்றவாளிகள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட சில நாட்களிலேயே அவருக்குக் கொலை மிரட்டல்கள் வரத் தொடங்கின. அவரது அலைபேசிக்குக் குறுஞ்செய்திகளும் குரல் செய்திகளும் தெரியாத எண்களிலிருந்து அழைப்புகளும் வந்தபடியே இருந்தன.
"தாலிபன்கள் சிறையில் இருந்த எல்லாரையும் விடுவித்துவிட்டார்கள் என்று ஒரு நள்ளிரவில் கேள்விப்பட்டோம். உடனே வீட்டை விட்டு வெளியேறினோம்" என்கிறார் மசூமா.

கனடா இரு தமிழ் தன்பால் ஈர்ப்பு பெண்கள் தாலி கட்டி திருமணம்

JVP news : Canada (Grafton) இல் நேற்று 26.09.2021 மாலை நடைபெற்ற திருமண நிகழ்வு சமூகவலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
இந்தியா உட்பட பல நாடுகளில் இன்று ஒரேபாலின திருமணங்கள் நடைபெற்றுவந்தாலும் தமிழர்கள் மத்தியில் அந்த கலாச்சாரம் இடம் பெற்றது இதுவே முதற் தடவை.
இவ்வாறான நிலையிலேயே குறித்த திருமணமும் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து நடைபெற்ற இரண்டு பெண்களின் திருமணத்தை ஓர் அந்தணரே முன்னின்று நடத்தி வைத்துள்ளார். 

நவ. 1 முதல் 1 - 8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு.. அக். 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு - முதலமைச்சர் உத்தரவு!

நவ. 1 முதல் 1 - 8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு.. அக். 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு - முதலமைச்சர் உத்தரவு!
கலைஞர் செய்திகள் : 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியருக்கான வகுப்புகள், நவம்பர் 1 முதல் நடத்த அனுமதிக்கப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கட்கிழமைகளில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் மற்றும் மாதாந்திர விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் நடத்த அனுமதி அளித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக சற்று முன்பு முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:

தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், 31.10.2021 காலை 6.00 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.

செவ்வாய், 28 செப்டம்பர், 2021

நாடார்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு ஏன் பார்ப்பனர்களை அழைப்பதில்லை ... அந்த காலத்தில்!!

 Sugumaran Ramasamy  :    நாடார்கள்   தங்கள் வீட்டு நல்ல கெட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏன் பார்ப்பனர்களை அழைப்பதில்லை தெரியுமா? அந்த காலத்தில்!!
நாடார்களின் ஆலய நுழைவுப் போராட்ட நிகழ்ச்சிகள் வைத்தியநாத அய்யருக்குத் துணைபோகும் தமிழர்களைத் தோலுரித்துக் காட்டுவதாக அமையும்.
திருச்செந்தூர் கோவிலில் நாடார்கள் உள்ளே நுழைய முடியாது. வெளியில் இருந்துதான் தேங்காய் உடைத்து சாமி கும்பிட வேண்டும். 1872இல் இதை மீறி ஏழு நாடார்கள் உள்ளே நுழைந்தனர். கோவில் நிர்வாகம் இவர்கள் மீது வழக்குத் தொடுத்தது. டோபி, பார்பர் போன்ற இதர கீழ்ஜாதியினர் கொடிமரம் வரை செல்ல அனுமதியிருக்கும்போது நாடார்கள் உள்ளே நுழைந்ததால் கோவில் புனிதம் கெட்டுவிடாது எனக்கூறி விடுதலை செய்தது. இதனால் நாடார்கள் கொடிமரம் வரை செல்ல முடிந்தது.
1874இல் மூக்க நாடார் மதுரை--- கோவிலுக்குள் கிளி மண்டபம்வரை சென்றுவிட்டார். அடையாளம் கண்டுகொண்ட கோவில் பணியாளர்கள் அவரைக் கொன்றுவிட்டனர். நாடார்கள் பணியாட்கள் மீது வழக்குத் தொடுத்தனர். கோவிலுக்குள் நுழைய நாடார்களுக்கு உரிமையில்லை என நீதிபதி தீர்ப்பளித்து விட்டார்.
1876_78இல் சிறீவில்லிபுத்தூர் தாலுகா திருத்தங்கலில் கோவில் உள்ளே நுழைய நாடார்கள் போராட்டம் நடந்தது. மாவட்ட நீதிபதி தடை உத்தரவு பிறப்பித்து கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் ஊர்வலம் செல்ல அனுமதி அளித்தார்.

வறண்டு போன நாகநதி ஆற்றை மீட்டெடுத்த வேலூர் பெண்கள்

வியர்வை சிந்தி நதியை உயிர்பெறவைத்த வேலூர் பெண்கள்

BBC :  பிரமிளா கிருஷ்ணன்/ நடராஜன் சுந்தர் -     பிபிசி தமிழ்   : வியர்வை சிந்தி நதியை உயிர்பெறவைத்த வேலூர் பெண்கள்
நதி ஓடும் பாதையில் புனரமைப்புப் பணியில் ஈடுபட்ட பெண்கள்
இந்திய பிரதமர் நரேந்திர மோதி தமது சமீபத்திய மன் கீ பாத் (மனதின் குரல்) வானொலி நிகழ்ச்சியில் ஆறுகளின் முக்கியத்துவம் குறித்து பேசும்போது, தமிழகத்தில் வறண்டு போன நாகநதி ஆற்றை அப்பகுதி பெண்கள் மீட்டுள்ளது பற்றி குறிப்பிட்டுள்ளார்.
உலக ஆறுகள் தினம் செப்டம்பர் 26ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்ட வேளையில், அந்த நாளின் பெருமை குறித்து மோதி தமது மன் கி பாத் உரையில் பேசியது பரவலான கவனத்தை ஈர்த்திருக்கிறது.
ஒவ்வொரு சொட்டு நீரையும் மதித்து, மாசுபாட்டிற்கு எதிராகப் போராட வேண்டும் என்று அழைப்பு விடுத்த நரேந்திர மோதி, ஆறுகளைப் போற்றும் வகையில் ஆண்டுக்குக் குறைந்தபட்சம் ஒரு முறை நதி திருவிழாவை கொண்டாட வேண்டும் என்றும் யோசனை தெரிவித்திருக்கிறார்.
"தமிழகத்தில் கமண்டல நாகநதி வறண்டு போனது, இருப்பினும் அப்பகுதி பெண்கள் எடுத்த முன்னெடுப்பால் மூலம் அந்த நதி மீட்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அப்பகுதியுள்ள பல ஆயிரம் மக்கள் பயன் பெற்றுள்ளனர். தமிழக சகோதர, சகோதரிகளின் முயற்சியைப் போன்று இந்தியா முழுவதும் பல்வேறு நதிகளை மீட்டெடுக்கப் பலரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களிலும் தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறது. தண்ணீர் பஞ்சம் ஏற்படுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும்" என்று மோதி வலியுறுத்தினார்.

பணி நிரந்தரம் செய்யக்கோரி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்!

 நக்கீரன் : சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில், தமிழகம் முழுவதும் பணியாற்றி வருகின்ற 500க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  
கரோனா பேரிடர் காலத்தில் 2019ஆம் ஆண்டு எம்.ஆர்.பி தேர்வின் மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட 3485 செவிலியர்களை நிரந்தரமாகப் பணி நியமனம் செய்ய வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது எம்.ஆர்.பி. தேர்வின் மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட செவிலியர்களை, திமுக தேர்தல் அறிக்கையில் கூறியவாறு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்

நடிகர் விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு: எஸ்.ஏ.சந்திரசேகர் நீதிமன்றத்தில் அறிவிப்பு

tamil.indianexpress.com : நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் கலைக்கப்படுவதாக கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் கூறியிருப்பது விஜய் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்களை ஒன்றினைத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.

Made In Tamilnadu: போயிங் உதிரி பாகங்களை தயாரிக்க சேலம் நிறுவனத்துடன் ஒப்பந்தம்!

 கலைஞர் செய்திகள் :  Made In Tamilnadu: போயிங் உதிரி பாகங்களை தயாரிக்க சேலம் நிறுவனத்துடன் ஒப்பந்தம்!
போயிங் விமான நிறுவனத்திற்கு உதிரி பாகங்களை தயாரிக்க சேலத்தை சேர்ந்த ஏரோ ஸ்பேஸ் இன்ஜினியரிங் நிறுவனத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
போயிங் நிறுவனத்திற்கு உதிரி பாகங்களை சப்ளை செய்ய சேலத்தைச் சேர்ந்த ஏரோ ஸ்பேஸ் என்ற எம்.எஸ்.எம்.இ நிறுவனத்துடன் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஏரோ ஸ்பேஸ் என்ஜினியரிங் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தரம், கடந்த 33 ஆண்டுகளாக தமிழகத்தில் விமானங்களுக்கு தேவையான உதிரி பாகங்களை தயாரித்து தரும் தொழிலை செய்து வருகிறோம். 

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 600 கிலோ கஞ்சா பறிமுதல்!

600 kg of cannabis seized in one day in Tamil Nadu

நக்கீரன் செய்திப்பிரிவு  :  கடந்த மூன்று நாட்களாகத் தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபுவின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாக் கத்திகள், அரிவாள்கள், ஏழுக்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இப்படி நாடு  முழுவதும் ரவுடிகள் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், ரவுடிகளிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இன்று ஒரே நாளில் 600 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை போரூர் சுங்கச்சாவடி அருகே காரில் ஒழித்து வைக்கப்பட்டிருந்த 300 கிலோ கஞ்சாவை இன்று காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

ராஜ்யசபா தேர்தல்: திமுகவின் கனிமொழி, ராஜேஷ் குமார், ம.பி.யிலிருந்து எல்.முருகன் போட்டியின்றி தேர்வு

கனிமொழி, ராஜேஷ் குமார் வெற்றி

Veerakumar  -  Oneindia Tamil   :  சென்னை: திமுகவை சேர்ந்த கனிமொழி சோமு மற்றும் ராஜேஷ் குமார் ஆகியோர் ராஜ்யசபா உறுப்பினர்களாக, தமிழகத்திலிருந்து போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
முக்கிய பகுதியில் 2/3 பிஎச்கே பிளாட்கள் வெறும் ரூ.45 லட்சத்தில் இருந்து. இங்கே கிளிக் செய்யவும்
இதேபோல, மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியின்றி ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் அதிமுக தரப்பும், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் தரப்பும் வேட்பாளர்களை களம் இறங்காத நிலையில், இவர்கள் போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினர்களாகியுள்ளனர்.

திங்கள், 27 செப்டம்பர், 2021

ரூ.5,000 கோடி மோசடி! கோவை வாலிபர் கைது.. பின்னணியில் உள்ள பெருந்தலைகள் தப்பிவிட்டனர்?

 ரூ.5,000 கோடி மோசடி: கோவை வாலிபர் கைது

தினமலர் சேலம்:தமிழகம், கேரளாவில் நிதி நிறுவனம் நடத்தி, 5,000 கோடி ரூபாய் அளவுக்கு மோசடியில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில், ஓராண்டுக்கு பின் கோவையைச் சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை, ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்தவர் கவுதம் ரமேஷ், 40. இவரது தலைமையில் 15 பேர், 'யுனிவர்சல் டிரேடிங் சொல்யூசன்' என்ற பெயரில் நிதி நிறுவனம் துவங்கினர். அதில், 25 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம், 10 சதவீத வட்டி, 10 மாதம் முடியும் நிலையில், முதலீட்டு தொகை இரட்டிப்பு என்பன உள்ளிட்ட கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டனர்.
இதை நம்பி, தமிழகம், கேரள மாநில மக்கள், தொழிலதிபர், அரசியல்வாதிகள் லட்சக்கணக்கில் டிபாசிட் செய்தனர்.

ஆண்கள் தாடியை ஷேவ், ட்ரிம் செய்ய தாலிபான்கள் தடை .. தாடி புனிதமாம்

கலைஞர் செய்திகள் :தாடியை ஷேவ், ட்ரிம் செய்ய தடை போட்ட தாலிபான்கள் : கடும் கட்டுப்பாடுகளால் அதிர்ச்சியில் ஆப்கன் ஆண்கள்!
ஆண்களின் தாடியை வெட்டவோ, ட்ரிம் செய்யவோ கூடாது என சலூன் கடைக்காரர்களுக்கு தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப்படை வெளியேறியதை அடுத்து தாலிபான்கள் அந்நாட்டைக் கைப்பற்றினர். இதையடுத்து பிரதமராக முல்லா முகமது ஹசனும், துணை பிரதமராக அப்துல் கனி பரதரும் பதவி ஏற்று ஆட்சி செய்து வருகின்றனர்.
தாலிபான்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே பொதுமக்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். ஆண் துணை இல்லாமல் பெண்கள் வெளியே வரக்கூடாது, கல்லூரிகளில் பெண்களும், ஆண்களும் தனித்தனியாக அமர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளைத் தாலிபான்கள் விதித்துள்ளனர்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் பாரத் பந்த் - வடமாநிலங்கள் முடங்கின

 மாலைமலர் : விவசாயிகள் போராட்டத்துக்கு காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி, ராஷ்ட்ரீய ஜனதாதளம், ஆம்ஆத்மி, கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து இருந்தன.
புதுடெல்லி: மத்திய அரசு விவசாயிகள் தொடர்பான 3 வேளாண்மை சட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றியது.
இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிராக இருப்பதாக கூறி அவற்றை வாபஸ் பெற வற்புறுத்தி விவசாயிகள் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினார்கள்.
இந்த தொடர் போராட்டம் ஓராண்டை எட்டியுள்ள நிலையில் இன்று விவசாயிகள் பாரத்பந்த் போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்தனர். 40 விவசாய சங்கங்களை உள்ளடக்கிய சம்யுக்தா கிஷான் மோர்ச்சா அமைப்பு சார்பில் பந்த் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

தலித்தா ? அப்போ பிளேட் நீயே கழுவு… உ.பி பள்ளியில் மாணவர்களுக்கு Separate Plates for Dalit Muslim Students in UP’s Primary Schoo

 tamil.indianexpress.com  : உத்தரப் பிரதேசத்தின் மைன்புரி மாவட்டத்தில் உள்ள தவுதபூர் அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் 80 மாணவர்களில் 60 பேர் பட்டியலின வகுப்பை சேர்ந்தவர்கள் ஆவர். ஆனால், இந்தப் பள்ளியில் மதிய உணவு திட்டத்தின் கீழ் பள்ளியில் சாப்பிடும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளின் பாத்திரங்கள் தனியாக வைக்கப்படுவதாகவும், அவற்றை அக்குழந்தைகளே கழுவுவதாகப் புகார் வந்தது அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதையடுத்து, பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், புகார் உண்மைதான் என உறுதியானதால், பள்ளியின் தலைமை ஆசிரியர் கரீம் ராஜ்புத் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
மேலும், எஸ்.சி சமூகத்தினர் உபயோகித்த பாத்திரங்களைத் தொட மாட்டோம் எனக் கூறிய இரண்டு சமையல்காரர்களும் வேலையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

ஞாயிறு, 26 செப்டம்பர், 2021

கேரளா சாமியார் கொடூரம் தாய், தம்பி முன்னிலையிலேயே ஒரு வருடமாகச் ‘சிறார் வதைக்கு’ ஆளான சிறுமி” :

 கலைஞர்  செய்திகள் : கேரள மாநிலத்தில் பெண் ஒருவர் மனநில பாதிக்கப்பட்ட நிலையில், தனது மூன்று குழந்தைகளை வைத்துக்கொண்டு சாலையில் திரிந்துள்ளார். இதனைக் கவணித்த சமூக ஆர்வலர் ஒருவர், கேரள பெண்கள் பாதுகாப்பு மைத்திற்கு தொடர்புக்கொண்டு உதவி கோரினார்.
இதனையடுத்து கேரள பெண்களுக்கான ஹெல்ப்லைன் ‘வனிதா செல்’லைச் சேர்ந்தவர்கள் அந்த பெண் மற்றும் குழந்தையை மீட்டு மனநல காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே அந்தப் பெண்ணிடம் மனநல மருத்துவர்கள் ஆலோசனை நடத்தியத்தில் சாமியார் ஒருவரால் அந்தப் பெண்ணுக்கு நடந்த அவலம் குறித்து தெரியவந்துள்ளது.
திருமணம் நடந்து மூன்று குழந்தைகள் ஆனபிறகு கணவனால் கைவிடப்பட்ட வருத்தத்தில் இருந்த அந்தபெண் பின்னர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சாமியார் ஒருவர் அந்த பெண்ணிற்கும் குழந்தைகளுக்கும் அடைக்கலம் கொடுப்பதாகக் கூறி, தனது ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு அந்தபெண் மற்றும் அந்தப் பெண்ணினுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தாகத் தெரியவந்தது. அதுமட்டுமல்லாது அந்த பெண்ணின் முதல் குழந்தையான பள்ளி சிறுமிக்கு சிறார் வதைக் கொடுமையைக் கொடுத்துள்ளார்.

திருவள்ளூர் கருவேலமரத்தில் துப்பட்டாவில் தொங்கிய இளம்பெண்.. கொலையா தற்கொலையா?

போலீசார்
காதல் விவகாரம்: கருவேலமரத்தில் துப்பட்டாவில் தொங்கிய இளம்பெண்.. கதறிய  உறவுகள், திருவள்ளூரில் பதற்றம் | women commits suicide near Tiruvallur -  Tamil Oneindia

Velmurugan P -  Oneindia Tamil  :  திருவள்ளூர் : ஏரிக்கரை ஓரத்தில் கருவேலமரத்தில் இளம்பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சாவுக்கு காரணமாக .காதலனை கைது செய்ய வலியுறுத்தி காவல் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டதால் திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக காதலனை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
முக்கிய பகுதியில் 2/3 பிஎச்கே பிளாட்கள் வெறும் ரூ.45 லட்சத்தில் இருந்து. இங்கே கிளிக் செய்யவும்
திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே நரசமங்கலம் காலனியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி,

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

மின்னம்பலம் : கடந்த செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி லக்னோவில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் தியாகராஜன் கலந்துகொள்ளாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பாஜக தலைவர் அண்ணாமலைதான் இதை தீவிரமாக எழுப்பினார்.
இதற்கு பிடிஆர் தொடர்ந்து கொடுத்த பதில்களையடுத்து, “தமிழ் நாட்டின் நிதி அமைச்சராக இருக்கக் கூடியவர் தன் தினசரி வேலைகளை திறம்பட செய்வதற்கும் சரியான முடிவுகளை எடுப்பதற்கும் ஒரு தெளிவான மனநிலையில் இருக்க வேண்டும்.
நிதியமைச்சர் உடன் வேலை செய்யும் நபர்களையும் நிதி அமைச்சகத்தையும் ஆபத்தான சூழ்நிலையில் விட்டுவிடாமல் தமிழக முதலமைச்சர் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று முதல்வருக்கு கோரிக்கை வைத்தார் அண்ணாமலை.

கோவை விமானப்படை பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக சக அதிகாரி மீது புகார்!

Indian airforce lieutenant arrested for sexual harresment of iaf officer

நக்கீரன் செய்திப்பிரிவு  :   கோவை மாவட்டத்தில் உள்ள விமானப்படைக் கல்லூரியில் பயிற்சிக்கு சென்ற பெண் அதிகாரியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் சக அதிகாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
டெல்லி, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 30 அதிகாரிகள் பயிற்சி பெறும் பொருட்டு கோவை மாவட்டத்தில் உள்ள விமானப்படை பயிற்சிக் கல்லூரிக்கு வந்துள்ளனர்.
இதில் டெல்லியைச் சேர்ந்த லெப்டினன்ட் பெண் அதிகாரி ஒருவரை சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சக விமானப்படை அதிகாரியான லெப்டினன்ட் அமிர்தேஷ் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி, இது தொடர்பாக, பயிற்சி கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

மோடிக்கு ஆதரவாக கார்த்தி சிதம்பரம் கருத்து... பாஜகவுக்கு .. ? காங்கிரஸ்காரர்கள் ஷாக்!

வருமான வரிவழக்கு: கார்த்தி சிதம்பரம் விடுவிப்பு- Dinamani

Giridharan N | Samayam Tamil : இந்தியாவில் இருக்கும் பிரதமரும், ,மத்திய அமைச்சர்களும் அடிக்கடி வெளிநாடு சென்றால்தான் உலகப் பார்வை வரும். அந்த வகையில் பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தை வரவேற்பதாக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கூறி அனைவரையும் வியப்படைய செய்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் கண்டனூரில் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறியது:
வெளிநாட்டு தலைவர்கள் இந்தியாவை பற்றி கூறும் கசப்பான உண்மைகளையும் பிரதமர் கேட்டு நடக்க வேண்டும் என்று கூறிய கார்த்தி சிதம்பரம், மத்திய அரசு எடுத்த தவறான பொருளாதார கொள்கையின் விளைவாக மோடியும், நிர்மலா சீதாராமனும் ஆட்சியில் இருக்கும்வரை பெட்ரோல், டீசல் விலை குறையவே குறையாது என்றும் உறுதிபடக் கூறினார்.
தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கொலை சம்பவங்கள் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தவர், முதல்வர் நேரடியாக தலையிட்டு, காவல் துறையின் மூலம் இரும்புக்கரம் கொண்டு குற்ற சம்பவங்களை தடுக்க வேண்டும் என்றும், குற்றவாளிகளை கண்டுபிடித்து குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

நடிகர் சித்தார்த் மருத்துவ தேவைக்காக லண்டன் சென்றுள்ளார் இயக்குநர் அஜய் பூபதி தெரிவிப்பு

கலைஞர் செய்திகள் நடிகர் சித்தார்த் லண்டன் சென்றது குறித்து ‘மகா சமுத்திரம்’ படத்தின் இயக்குனர் அஜய் பூபதி இதுகுறித்து விளக்கியுள்ளார்.
நடிகர் சித்தார்த் லண்டன் சென்றது குறித்து பல்வேறு யூகங்கள் நிலவி வந்த நிலையில், ‘மகா சமுத்திரம்’ படத்தின் இயக்குனர் அஜய் பூபதி இதுகுறித்து விளக்கியுள்ளார்.
நடிகர் சித்தார்த் நீண்ட இடைவெளிக்குப் பின் தெலுங்கில் ‘மகா சமுத்திரம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில், சர்வானந்த், அதிதி ராவ், அனு இமானுவேல் ஆகியோரும் நடித்துள்ளனர். அஜய் பூபதி இயக்கியுள்ளார்.
‘மகா சமுத்திரம்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் அடுத்த மாதம் வெளியாகிறது. சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சித்தார்த் கலந்து கொள்ளவில்லை.
பல வருடங்களுக்குப் பிறகு தெலுங்கில் வெளியாகும் எனது படம் என மகா சமுத்திரம் குறித்து பலமுறை சித்தார்த் பெருமிதமாக குறிப்பிட்டிருந்த நிலையில், அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது விவாதங்களைக் கிளப்பியது.

தமிழ்நாட்டில் இரண்டாவது நாளாக 219 ரவுடிகள் கைது

 hindutamil.in : சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று இரண்டாவது நாளாக போலீஸார் நடத்திய சோதனையில் 219 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டி கொலை, கொள்ளை, பலாத்காரம், ரவுடித்தனத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்ய, டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதன்படி, மாநிலம் முழுவதும் நேற்று இரண்டாவது நாளாக போலீஸார் ரவுடிகளை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்படி சேலம் மாநகரப் பகுதியில் 44 ரவுடிகளும், மாவட்ட பகுதியில் 139 ரவுடிகள் என மாவட்டம் முழுவதும் 183 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
ஈரோட்டில் 16 ரவுடிகள் கைது

இலங்கையின் வடமாகாணத்தில் கடந்த 24 நாட்களில் 8 ஆயிரத்து 401 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் – 310 கொரோனோ உயிரிழப்புகள்

 வீரகேசரி : வடக்கில் செப்டெம்பர் மாதத்தின் நேற்று வெள்ளிக்கிழமை வரையான காலப்பகுதியில் வடக்கில் 8 ஆயிரத்து 401 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதாரத் துறை இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின்படி, நேற்றைய தினம் வவுனியா மாவட்டத்தில் 38 தொற்றாளர்களும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 30 தொற்றாளர்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 28 தொற்றாளர்களும் மன்னாரில் 10 தொற்றாளர்களும் முல்லைத்தீவில் 2 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதேவேளை வடக்கில் கடந்த 24 நாட்களில் 310 பேர் கொரோனோ வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
நேற்று யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 5 பேரும் வவுனியா மாவட்டத்தில் 2 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவரும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.