சனி, 2 அக்டோபர், 2021

வரலாற்றிலேயே முதல் முறை.. ஸ்டாலின் பாப்பாபட்டியில் செய்திருப்பது 'செயல்' அல்ல.. தரமான சம்பவம்

 Velmurugan P  -  Oneindia Tamil  :   மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி கிராம சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். தமிழ்நாடு மாநில வரலாற்றிலேயே முதலமைச்சர் ஒருவர் கிராமசபை கூட்டத்தில் நேரடியாக கலந்துகொண்டு மக்களிடையே உரையாற்றி கிராம தீர்மானங்களை விவாதிப்பது இதுவே முதல் முறையாகும். வரலாற்று நிகழ்வு மட்டுமல்ல, இதுமிகவும் வரவேற்க வேண்டிய மாற்றம் ஆகும். மாநிலத்தின் முதல்வர் அதுவும் குக்கிராமத்திற்கு வந்து நேரடியாக வந்து, கிராம சபை கூட்டத்தில் பங்கேற்று அங்குள்ள மக்களிடம் குறைகேட்டு நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற அதிகாரிகளுக்கு உத்தரவிடுவது என்பது மிகவும் ஆச்சர்யமான மற்றும் அற்புதமான விஷயமாக சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது
ஏனெனில் தங்கள் குறைகளை மாநிலத்தின் முதல்வரே வந்து கேட்டு சென்றிருப்பதால் அந்த குறைகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்படும் என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்படும்.


அத்துடன் அதிகாரிகளும் முதல்வரே கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றுள்ளார் என்பதால், அவர்களுக்கு வேண்டிய அடிப்படை விஷயங்களை கட்டாயம் செய்து தருவார்கள்.

இந்த இடத்தில் ஒரு உதாரணத்தை சொல்ல விரும்புகிறேன். என் ஊர் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள வடபுதுப்பட்டி கிராமம் ஆகும். மதுரையில் இருந்து தேனி புதிய மாவட்டமாக பிரிந்த சமயம், எங்கள் கிராமம் பேருந்து போக்குவரத்து வசதியோ அல்லது உள்கட்டமைப்பிலோ எந்த வகையிலும் பெரிய வளர்ச்சி இல்லை. தேனிக்கு மிக அருகில் உள்ள வடபுதுப்பட்டி என்ற எங்கள் கிராமத்தில் ஒரு கலை அறிவியல் கல்லூரி அப்போது தான் ஆரம்பிக்கப்பட்டு இருந்தது. அங்கு ஒரு கட்டிடத்தை திறந்து வைக்க அப்போது முதல்வராக இருந்த கலைஞர்  நேரில் வந்தார்.

முன்னதாக முதல்வர் கலைஞர்  வரப்போகிறார் என்ற உடன் அரசு நிர்வாகம் மிக அற்புதமாக வேலை செய்தது. அது வரையில் மோசமாக கிடந்த சாலைகள் உடனடியாக புதுப்பிக்கப்பட்டு புது சாலைகள் அமைக்கப்பட்டன. கிராமம் மிக சுத்தமாக மாறியது. குடிநீர் வசதிகள், தெரு விளக்கு வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டன. மொத்த கிராமமும் அற்புதமாக மாறியது. அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி வர வேண்டிய சாலை, கல்லூரிக்கு செல்வதற்கான சாலை மட்டுமல்ல, 8 கிராமங்கள் வந்து மருத்துவ சிகிச்சை பெறும் ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்திருந்த கரடு சாலையும் கூட அதுவும் சிறப்பாக அமைக்கப்பட்டது. இப்படி சிறப்பான பல வசதிகள் எங்கள் கிராமத்திற்கு கிடைத்தது.
இப்போது எங்கள் கிராமமான வடபுதுப்பட்டி, தேனி நகரம், மாவட்டமாக உருவான காரணத்தால் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துவிட்டது. அதுவேறு விஷயம். தூய்மை இந்தியா 2ஆம் கட்ட பணிகளை பிரதமர் தொடங்கி வைப்பதை வரவேற்கிறேன் -

முதல்வர் ஸ்டாலின்  இதை ஏன் சொல்கிறேன் என்றால், முதல்வரின் பாப்பாபட்டி கிராம வருகையிலும் நான் சொன்ன அத்தனை விசயங்களும் நடந்திருக்கும். அடிப்படை வசதிகள் அங்கு கிடைத்திருக்கும். குறைகள் அத்தனையும் நிறைவேற்றப்படும். மக்களின் முக்கிய பிரச்சனைகள் அனைத்து தீர்க்கப்படும். மேல்நிலை தண்ணீர் தொட்டி அமைப்பது, பள்ளியை தரம் உயர்த்துவது நியாய விலை கடை அமைப்பது, நூலகம் அமைப்பது, பூங்கா அமைப்பது, பாலம் அமைப்பது, சாலை அமைப்பது போன்ற எந்த அடிப்படை வேலைகளும் இனி உடனடியாக நிறைவேற்றப்படும். வரலாற்றில் முதல்முறை வரலாற்றில் முதல்முறை மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், பாப்பாபட்டி கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றது பெரும் வரவேற்புக்கு உரியது. வரலாற்றிலேயே முதலமைச்சர் ஒருவர் கிராமசபை கூட்டத்தில் நேரடியாக கலந்துகொண்டு மக்களிடையே உரையாற்றி கிராம தீர்மானங்களை விவாதிப்பது இதுவே முதல் முறையாகும்.

சமூக நீதி சமூக நீதி பாப்பாபட்டி ஊராட்சியை ஸ்டாலின் தேர்ந்தெடுக்க இன்னொரு காரணமும் இருக்கிறது. அதுவும் தரமான காரணம் என்று சொல்கிறார்கள் நெட்டிசன்கள். சரி விஷயத்துக்கு வருவோம். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாப்பாபட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். முதலமைச்சராக அவர் கலந்து கொண்ட முதல் கிராம சபை கூட்டம் இது. அந்த பாப்பாபட்டி வெறுமனே ஒரு ஊரல்ல.

வரலாறு  என்ன?  அதை என்ன என்பதை இப்போது பார்ப்போம். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ளது பாப்பாபட்டி. இதோடு சேர்ந்து மேலும் 3 கிராமங்களும் அந்தப் பகுதியில் உள்ளன. கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டாகாச்சியேந்தல். 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்த 4 கிராமங்களிலும் சட்டமன்றத் தேர்தல் நடக்கும். நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும். ஆனால் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்த முடியாது. காரணம் இந்த ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகள் தாழ்த்தப்பட்டோருக்கு என ஒதுக்கப்பட்டதே இதற்கு காரணம். தலைவர் பதவிக்கு தலித்துகள் போட்டியிட முடியாது. மிரட்டப்படுவார்கள். இன்னும் என்னவெல்லாமோ நடக்கும். மீறி யாராவது போட்டியிட்டால், எதிராக வேறொரு தலித் நிறுத்தப் படுவார். அவர் வெற்றி பெற்ற உடனே ராஜினாமா செய்து விடுவார்.

இது தான் 4 ஊர்களிலும் நிலைமை. ஓராண்டு, ஈராண்டு அல்ல. சுமார் 15 ஆண்டுகள். சர்வதேச ஊடகங்கள் சர்வதேச ஊடகங்கள் உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் தேர்தல் ஆணையத்துக்கு சவாலாக இருந்த கிராமங்கள் இவை. இங்கு எப்படியாவது தேர்தல் நடத்தி விட வேண்டும் என சி பிஎம் உள்ளிட்ட இடதுசாரி சக்திகளும்,. வி.சி.க. உள்ளிட்ட தலித் இயக்கங்களும் தொடர்ந்து போராடி வந்தன. அந்த போராட்டங்கள் சர்வதேச ஊடகங்களை கூட இந்த பிரச்சனையை எழுத வைத்தன.

ஆனாலும் உள்ளூர் ஆதிக்க சாதிகள் அசையவில்லை.
 2006 ஆம் ஆண்டு கலைஞர் தலைமையில் திமுக ஆட்சி அமைந்தது. மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சரானார். மதுரை மாவட்ட ஆட்சியராக உதய சந்திரன் நியமிக்கப் பட்டார். அவருக்கான முதல் உத்தரவே ஊராட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்பது தான். தேர்தலை நடத்த வேண்டும் எனப் போராடும் இடதுசாரி, தலித் இயக்கங்கள் உடன் அவர் கரம் கோர்த்தார். கருணாநிதி பாராட்டு கருணாநிதி பாராட்டு தேர்தல் நடைபெற்றது. 4 தலித்துகள் ஊராட்சி தலைவர்களாக பதவியேற்றனர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதவியேற்பு ஆக அது இருந்தது.
 ஊராட்சி தலைவருக்கு எந்திரத் துப்பாக்கி ஏந்திய காவலர் பாதுகாப்பாக நியமிக்கப்பட்டதை எல்லாம் உலகம் பார்த்தது. 4 பேருக்கும் சென்னையில் அரசு சார்பில், அன்றைய முதல்வர் கருணாநிதி தலைமையில் பிரமாண்ட பாராட்டு விழா நடைபெற்றது. தரமான சம்பவம் தரமான சம்பவம் மதுரை ரயில் நிலையத்தில் இருந்து 4 கிராம மக்களும், அப்போதைய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர், மார்க்சிஸ்ட் கட்சியின் மறைந்த தலைவர் பி. மோகன் தலைமையில் சென்னை நோக்கி புறப்பட்டனர்.
அந்த எளிய ஒடுக்கப்பட்ட மக்களை, அதிகாலை 4 மணிக்கு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் நின்று வரவேற்றவர் இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின். இப்போது முதலமைச்சர் ஆன பின் பாப்பாபட்டி கிராம சபை கூட்டத்துக்கு சென்றுள்ளார். அவர்களின் குறைகளை, கோரிக்கைகளை கேட்டுள்ளார். தி.மு.க அரசின் செயல்பாட்டில் குறையிருந்தால் சொல்லுங்கள்.. அப்பத்தான் சரி செய்ய முடியும் என்று அவர்களிம் பேசியிருக்கிறார். இது தான் ஒரு ஆரோக்கியமான மாற்றம். வரவேற்க வேண்டிய மாற்றமும் கூட என்று நெட்டிசன்கள் தெரிவிக்கிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக