நக்கீரன் செய்திப்பிரிவு : கடந்த மூன்று நாட்களாகத் தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபுவின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாக் கத்திகள், அரிவாள்கள், ஏழுக்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இப்படி நாடு முழுவதும் ரவுடிகள் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், ரவுடிகளிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இன்று ஒரே நாளில் 600 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை போரூர் சுங்கச்சாவடி அருகே காரில் ஒழித்து வைக்கப்பட்டிருந்த 300 கிலோ கஞ்சாவை இன்று காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக