வியாழன், 30 செப்டம்பர், 2021

சிங்கள மொழியின் வத்துரு என்ற சொல் வற்றாத ஊற்று என்ற தமிழ் சொல்லின் சங்கேத சொல்?

 செல்லபுரம் வள்ளியம்மை  : சிங்கள மொழியின் ஆதி அடையாளமாக கடம்ப கிரந்த  எழுத்துக்களில் சில குறிப்புக்கள்  இருப்பதாக (கி மு இரண்டாம் நூற்றாண்டில்) சிலர்  கூறுகிறார்கள்
ஆனால் மேலும் சிலர்  அந்த எழுத்துக்களை தமிழ் / சிங்கள /  தமிழி (பிராமி) எழுத்துக்கள் என்பதாகவும் கூறுகிறார்கள்.
கடம்ப அரசர்களின் காலம் கிமு  மூன்றாம் நூற்றாண்டுகளில் இருந்து கிமு இரண்டாம் நூற்றாண்டுகள் வரையினாலாவை.
    Sinhala Prakrit (until 3rd century CE)
    Proto-Sinhala (3rd–7th century CE)
    Medieval Sinhala (7th–12th century CE)
    Modern Sinhala (12th century – present)
  இப்படி பல ஆண்டுகளின் பரிணாம வளர்ச்சி என்று குறிப்பிட்டாலும்   12 ஆம் நூற்றாண்டில் இருந்த நிசங்கமல்லா அரசரின் காலத்தில்தான் சிங்கள மொழியில் ஒரு இலக்கியம் உருவானதாக கூறப்படுகிறது
எனவே நிசங்கமல்லா ஆட்சிக்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்து இன்றைய  சிங்கள மொழியின் உருவாக்கம் நடந்திருக்கலாம் என்று கருத இடமுண்டு .
ஏராளமான சிங்கள சொற்களை சமஸ்கிருத மூலத்தில் முடிச்சு போடும் காரியமே பெரிதும் நடந்திருக்கிறது
பல தமிழ் சொற்களை சம்ஸ்கிருத சொற்களில் இருந்து உருவானவை என்று இப்போதும் கூட எக்கச்சக்கமான வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்
சமஸ்கிருதம் என்பது எல்லா உபகண்ட மொழிகளுக்கும் தாய் மொழி என்ற அண்டப்புளுகு ஆகாச புழுகுணிகளின்  பிரசாரங்கள் மீண்டும் மீண்டும் அவிழ்த்து விடப்பட்டதால் அந்த கருத்தே பலரின் மனதில் இன்றும் கூட நிலை பெற்றிருக்கிறது
உதாரணமாக ஜலம் என்ற சம்ஸ்கிருத சொல் நீரை குறிக்கிறது
இந்த ஜலம் என்ற சம்ஸ்கிருத சொல்லின் ஆதாரம் சலம் என்ற தமிழ் சொல்லேயாகும்
குடிநீருக்கு நதிகளையே பெரிதும் சார்ந்திருந்த மக்கள் சலசலத்து ஓடுவதால் அதை சலம் என்றழைத்தார்கள்
இது  போல ஏராளமான தமிழ் சொற்கள் உலகின் பல மொழிகளையும் மருவி உருமாறி உச்சரிக்க படுகிறது
நீர் ,ஜலம் அல்லது  சலம் என்பதை சிங்கள மொழியில் வத்துரு என்பதாகும் sinhala-language

வத்துரு  என்ற சொல் அசல் தமிழ் சொல்லாகும் 

( ஆனால் இதையும் சம்ஸ்கிருத சொல்லில் இருந்து வந்ததாக இந்த சோ கோல்டு ஆய்வாளர்கள் கதை அளந்திருக்கிறார்கள்) 
ஒரு மொழியின் ஆதார சொற்களில் நீர் என்ற சொல்லுக்கு மிகவும் முக்கியத்துவம் இருக்கிறது
வத்துரு என்ற சொல் வற்றாத ஊற்று என்ற  சொல்லின் மருவலே ஆகும் என்றெண்ணுகிறேன்.

சிங்கள மொழியானது பௌத்தத்தை காப்பதற்கு உருவான மொழி என்ற எனது கருத்துக்கு வலு சேர்ப்பதாக ஏராளமான சிங்கள சொற்கள் உள்ளன

வத்துரு என்ற சொல் வற்றாத ஊற்று என்ற சொல்லின் சங்கேத சொல்லாகவும் இருக்க வாய்ப்புள்ளது

சிங்கள மொழியானது பௌத்த அறிவு கருவூலங்களை பார்பனீயத்திடம் இருந்து காப்பதற்காக உருவாக்கப்பட்ட மொழி என்ற கருத்திற்கு இவை ஏற்புடையதாக இருக்கிறது   
சுமார்4000 சொற்கள் தமிழுக்கும் சிங்களத்திற்கு பொதுவான சொற்கள் என்று டாக்டர் ராஜசிங்கம்  நரேந்திரன்  என்பவர் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறார்  
அதன் இணைப்பை இங்கு கொடுத்திருக்கிறேன்
The fact that the Sinhala and Tamil languages share in common 4000+ words (colombotelegraph.com/index.php/the-evolution-of-the-sinhala-language-an-important-reference/)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக