சனி, 29 டிசம்பர், 2018

சிந்தனை மொழியில் இருந்து விலகி வேற்று மொழியில் கற்பது அறிவை வளர்க்காது

Kanimozhi MV : முழுதும் ஆங்கில வழி கல்வியில் மட்டுமே படித்தேன் ; அதன்
குறைகளை நன்கு அறிவேன்; ஆழ்ந்த அறிவு ஆங்கில வழி படிப்பவர்களை விட தமிழ் வழி படித்தவர்களிடம் இருப்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்திருக்கின்றேன்;
அரசு பள்ளிகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் செயல்படுவதில் என்ன சிக்கல் என்று தெரியவில்லை;
முழுவதும் தமிழை எடுத்துவிட்டால் என்ன நன்மை என்று எனக்கு புரியவில்லை! தமிழ்வழி படித்தவர்கள் கிரின்கார்ட்டு வாங்கி இங்கு நல்ல பணியில் இருக்கின்றனர்; தமிழ் ஒரு மொழியாக வேண்டுமானால் இருக்கட்டும் என்று சொல்வது வேதனை;
உங்களுக்கு ஆராய்ச்சியாளர்கள் விஞ்ஞானிகள் தானே வேண்டும் ; அதற்கு அருமையான யோசனை
வீட்டிலும் ஆங்கிலம் பேச தொடங்கி விடுங்கள் , நிறைய மாற்றங்கள் வந்துவிடும் ;
எதற்கு தமிழை ஒரு மொழியாக வேண்டுமானால் வைத்துக்கொண்டு? அதை வீடுகளில் இருந்தும் ஒழித்துவிட்டால் சிந்தனை பேச்சு எழுத்து ஒரே மொழியில் அமையும் போது நன்மைகள் அதிகம் ;
உண்மையும் இது தான் !
தமிழை யாராவது வெளிநாட்டு அறிஞர் அருங்காட்சியிலாவது
காப்பாற்றிக் கொடுப்பார்கள்!
என் குழந்தைகள் வெளிநாட்டில் பிறக்கவில்லை என்றால் அரசு தமிழ் வழிக்கல்வியில் தான் சேர்த்திருப்பேன்;

நடிகை ராதிகா மக்கள் விரோத விளம்பரம் .... கீழ்வேளூர் காவல்நிலையத்தில் பொதுமக்கள் புகார்

rசெல்வகுமார் நக்கீரன் : கஜா புயல் பாதித்த பகுதிகளில் பொதுமக்கள் கடன் நிறுவனங்கள் மற்றும் வங்கி கடன்களை கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தனியார் கடன் நிறுவன விளம்பரத்தில் நடித்துள்ள நடிகை ராதிகா, அனைவரும் வாங்கிய கடன்களை உடனே கட்ட வேண்டும், அரசு எந்த கடன்களையும் தள்ளுபடி செய்யவில்லை என்று பேசியிருப்பதை கண்டித்து  கீழ்வேளூர் காவல்நிலையம் முன்பு 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அதோடு கீழ்வேளூர் காவல் நிலையத்தில் நடிகை ராதிகா மீது பொதுமக்கள் புகார் கொடுத்துள்ளனர்.

ரங்கராஜ் பாண்டேயின் தேசநலன்.. நடுநிலை.. தேசபக்தி.. எல்லாம் ஆரிய பார்ப்பன நலம் ...

ஆலஞ்சியார் : சின்னதம்பி பாட ஆரம்பிச்சுட்டான்.. 
பாண்டே "அண்ணன்"
மோடியை பற்றி புகழ்ந்து தள்ளியிருக்கிறார் .. இதில் வியக்க ஒன்றுமில்லை பார்பனர்கள் பாஜகவின் முகமாய்தான் எப்போதுமிருப்பார்கள் .. தேசநலன் நடுநிலை தேசபக்தி என்பதெல்லாம் அவர்களை பொறுத்தவரை ஆரியர்நலன் பச்சையாக சொல்ல வேண்டுமெனில் பார்பனர்நலன் .. அவ்வளவுதான் ..
இத்தனை ஆண்டுகள் காத்திருந்து நேரடியாக அதிகாரத்தில் தலையிடும் அல்லது நடத்துகிற வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள் ..அதை இழக்க அவர்களென்ன மடையர்களா என்ன..?
பொய்யை ஆயுதமாக கொண்டு செயல்படுவதும் அதை பெரியளவில் விளம்பரம் மார்கெட்டிங் செய்வதும் ...இல்லாத ஒன்றை இருப்பது போல் காட்டுவதும் நாம் பார்க்காததா.. ..
2ஜி என்ற ஒன்றை அது சட்டத்தின் முன் நிற்காதென அறிந்தும் ஒரு மாய எண்ணை மக்களிடம் சொல்லி தொடர்ந்து வலைப்பின்னி ..மார்கெட்டிங் செய்து ஆட்சிக்கு வந்தனர் .. இதோ குஜராத் போல இந்தியாவை மாற்றுவிடுவார் "அண்ணன் மோடி" என ஓயாமல் சொல்லி கடைசியில் குஜராத் பழைய வண்ணாரபேட்டை லெவலுக்கு இருப்பதை கண்டு நாம் அதிர்ச்சியடைந்ததுதான் மிச்சம் ..

கும்பகோணத்தில் கைத்தறி கண்காட்சி .. முழு விடியோ ..


மின்னம்பலம் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை நேற்று (டிசம்பர் 28) தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறையுடன் இணைந்து ஒன்றிய கைத்தறி ஜவுளி அமைச்சகம் இந்தக் கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையை ஒருங்கிணைத்துள்ளது. ஈரோடு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், நாமக்கல், சேலம் மற்றும் மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள 60க்கும் மேற்பட்ட கூட்டுறவுச் சங்கங்களிருந்து இக்கண்காட்சிக்குக் கைத்தறி ஆடைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தக் கண்காட்சி மற்றும் விற்பனையை கைத்தறிப் பிரிவின் மாநிலச் செயலாளர் கே.ஜே.லெனின் குத்துவிளக்கு ஏற்றித் தொடங்கி வைத்தார்.

மோடிக்கு கறுப்புக் கொடி காட்ட மாட்டேன்: சீமான்

மின்னம்பலம் : கஜா புயலால் பாதிக்கப்பட்ட
டெல்டா மக்களுக்கு, புயலடித்து ஒன்றரை மாதங்கள் ஆகியும் இன்னமும் மறுவாழ்வுக்கு உரிய உதவிகள் மத்திய, மாநில அரசுகளால் செய்யப்படவில்லை என்பதைக் கண்டித்து நாகப்பட்டினத்தில் இன்று ஆர்பாட்டம் நடந்தது.
தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன், தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், நடிகர் மன்சூர் அலிகான் மற்றும் விவசாய சங்கப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இன்று டிசம்பர் 29 காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர் முழக்கப் போராட்டமாக இது அமைந்தது.
மோடிக்கு கறுப்புக் கொடி காட்ட மாட்டேன்: சீமான்நாகை புதிய பேருந்து நிலையத்தை ஒட்டி அமைந்திருக்கும் அவுரித் திடலில் நடந்த இந்த ஆர்பாட்டம் நாகப்பட்டினம் வாசிகளையும் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லும் ஆயிரக்கணக்கான டெல்டா வாசிகளையும் ஈர்த்து உட்கார வைத்தது. காரணம் அவர்களின் வலி.
இந்த ஆர்பாட்டத்தின் இடையே செய்தியாளர்களிடம் பேசிய பெ.மணியரசன், “மாநில அரசு சொன்ன 27 பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொருட்கள் அடங்கிய பெட்டி வரவில்லை என்று இன்று வரை மக்கள் சாலை மறியல் செய்யும் அவலத்தில் இருக்கிறார்கள். அந்த பெட்டிகள் வந்த பகுதிகளில் கூட அதில் பொருட்கள் குறைகின்றன என்கிறார்கள்.

கச்சத்தீவு அருகே 3 ஆயிரம் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டி...

கச்சத்தீவு அருகே 3 ஆயிரம் தமிழக மீனவர்களை விரட்டியடித்து இலங்கை அராஜகம் கச்சத்தீவு  அருகே 3 ஆயிரம் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததுடன் 15 படகுகளில் இருந்த மீன்பிடி வலைகளையும் நாசப்படுத்தினர்.
 கொழும்பு: தமிழ்நாட்டை சேர்ந்த சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் கச்சத்தீவின்
அருகேயுள்ள இந்திய கடல் எல்லையில் 514 படகுகளில் இருந்தவாறு இன்று காலை மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது, இலங்கை கடற்படையை சேர்ந்த 15 ரோந்துப் படகுகள் அப்பகுதிக்கு விரைந்து வந்தன. அப்படகுகளில் இருந்த கடற்படையினர் அங்கு மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களை மிரட்டி, விரட்டியடித்தனர்.
மேலும் 15 படகுகளில் இருந்த மீன்பிடி வலைகளையும் நாசப்படுத்தியதாக ராமேஸ்வரத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக மீன்வளத்துறை துணை இயக்குநர் காத்தவராயன் தெரிவித்தார்.மாலைமலர்

சென்னை தனியார் மருத்துவமனை பாத்ரூமில் ரகசிய கேமரா!! உறைந்துபோன பெண்கள்

hostelவெப்துனியா :சென்னையில் தனியார் மருத்துவமனையில் பெண்கள் பாத்ரூமில் ரகசிய கேமரா வைக்கப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் சமீபத்தில் பெண்கள் விடுதியில் ரகசிய கேமரா வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு விடுதியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
இது தமிழகம் மட்டுமில்லாது நாடெங்கும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பெண்கள் துணி மாற்று அறைக்கு சென்ற பெண் ஒருவர் அங்கு ரகசிய கேமரா வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தார்.
இந்த நாச வேலையில் ஈடுபட்டது, அதே மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த 2 துப்புரவு தொழிலாளர்கள் என தெரியவந்தது. இதையடுத்து போலீஸாரிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸார் அந்த 2 அயோக்கியன்களை கைது செய்தனர். அவன்களிடம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் சென்னைவாசிகளை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.<

விஷம் குடித்துவிட்டேன்; புதுமனைவியோடு நீ சந்தோஷமாய் வாழு!'- தாயின் பேச்சால் உயிரைவிட்ட மகன், காதல் மனைவி

காதல் ஜோடி.vikatan.com -  சி.ய.ஆனந்தகுமார் - தே.தீட்ஷித் :
காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு வலுத்ததால், தற்கொலை செய்துகொண்ட காதல் கணவனின் மறைவைத் தாங்க முடியாமல், மனைவியும் உயிரை மாய்த்துக்கொண்ட செய்துகொண்ட சம்பவம் திருச்சி, புதுக்கோட்டையில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர் அடுத்துள்ளது வெண்ண முத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனியப்பன் மகன் பார்த்திபன். 24 வயதுடைய இவர், திருச்சி மாவட்டம், துவாக்குடியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கிரேன் ஆப்பரேட்டராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் பார்த்திபன், அதேபகுதியைச் சேர்ந்த சங்கிலிமுத்து என்பவரின் மகள் அனுப்பிரியாவை கடந்த 2 வருடங்களாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் மனைவி-மகளுடன் தி.மு.க. பிரமுகர் உயிரிழப்பு

தேசிய விருது பெற்ற தி.மு.க. பிரமுகர்
கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் மனைவி-மகளுடன் தி.மு.க. பிரமுகர் பலிமாலைமலர் : கொடைக்கானல் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் மனைவி-மகளுடன் தி.மு.க. ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
 திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பகுதியில் உள்ள மங்களம்கொம்பு கிராமத்தில் வீட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து, ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே, கொடைக்கானல் கீழ்மலை பகுதியில்  மங்களம்கொம்பு கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் வயது 50. தி.மு.க. பிரமுகரான இவர்  ஊராட்சி மன்ற  முன்னாள் தலைவர் ஆவார்.  இவரது வீட்டில் அதிகாலையில் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில், அவரும் அவரது மனைவி மஞ்சுளா ( 45)  மகள் விஷ்ணுப்ரியா(10)  ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர்.

இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு தோள் கொடுப்போம் !


இடைநிலை ஆசிரியர்களின்  போராட்டம் வாழ்வாதாரப் போராட்டம் மட்டுமல்ல, அரசுப்பள்ளிகளின் வாழ்வுக்குமான போராட்டம்!
இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு தோள்கொடுப்போம் ! வினவு :இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாநிலை போராட்டம் கடந்த 5 நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது. இது அனைவரும் அறிந்ததே. ஆனால் பலர், 40,000/- ரூபாய் அல்லது 50,000 சம்பாதிக்கிற ஆசிரியர்கள் ஏன் போராடணும்? கொழுப்பெடுத்து உண்ணா விரதம் இருக்காங்க-என்று நினைக்கிறார்கள். அதனாலேயே இந்த போராட்டத்தையும் அவர்கள் கண்டு கொள்வதில்லை.>உண்மை நிலை என்ன ? 2009-க்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு மட்டுமே இந்த அளவிற்கு சம்பளம் வழங்கப்படுகிறது. அதற்குப்பின் சேர்ந்த ஆசிரியர்கள் அடிப்படை ஊதியமாக வெறும் ரூபாய் 5,200 மட்டுமே பெறுகின்றனர். 10 ஆண்டுகளாக வேலை செய்யும் ஆசிரியர்களே இப்போதுதான் 23,000 ரூபாய் சம்பளம் பெறுகின்றனர். அதற்கும் குறைவான வருடங்கள் வேலை பார்க்கும் ஆசிரியர்கள், இதைவிடக் குறைவாகவே ஊதியம் பெறுகின்றனர். இவர்களின் ஊதியம் மத்திய அரசு துப்புரவு தொழிலாளிகளின் ஊதியத்துக்கு இணையானது மட்டுமே.
ஏன் இந்த நிலை ? ஒரே வேலை செய்யும் இடைநிலை ஆசிரியர்கள் அனைவருக்கும் ஒரே சம்பளம் தராமல், 2009-க்கு முன், 2009-க்குப் பின் என பிரிப்பதற்கு என்ன காரணம்? 2009-இல் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதியை 10-ஆம் வகுப்பு என கெசட்டில் வெளியிட்டு அவர்களுக்கு அடிப்படை சம்பளம் 8,370-லிருந்து, 5,200 ஆக குறைக்கப்பட்டதுதான் பிரச்சினைக்கு காரணம்.

சமத்துவ நெறி நோக்கி சமூகநீதிப் பயணம்

உள்ளிருந்து எழும் எதிர்ப்புக் குரல்! - அ.குமரேசன்மின்னம்பலம் : சமத்துவ நெறி நோக்கி சமூகநீதிப் பயணம் - 2
இந்து என்று இன்று சொல்லப்படுகிற மதத்தின் அன்றைய வடிவமாகிய வைதீக சமயத்தில் நிலவிய இரக்கமற்ற பாகுபாடுகளை எதிர்த்துதான் சித்தார்த்தன் அரண்மனையிலிருந்து மட்டுமல்லாமல், சமயத்திலிருந்தும் வெளியேறி தனி இயக்கமாகப் புறப்பட்டார், கௌதம புத்தரானார். சமயத்திற்குள் நிலவிய பாகுபாடுகளை, உள்ளிருந்தே சரி செய்ய முடியாமல் சமண இயக்கத்தைத் தொடங்கினார்கள் தீர்த்தங்கரர்கள்.
“சாதியாவதேதடா சலந்திரண்ட நீரெலோ
பூதவாசலொன்றலோ பூதமைந்தும் ஒன்றலோ…“
பறைச்சியாவ தேதடா பணத்தியாவ தேதடா
இறைச்சி தோலெலும்பினும் இலக்கமிட்டிருக்கிதோ…”
என்று சிவவாக்கியச் சித்தர் வாடா போடாவென வம்புக்கிழுத்தது அப்போது சாதிய அநீதிகளை உயர்த்திப் பிடித்தவர்களைத்தான் என்று ஊகிப்பது கடினமல்ல.
ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து ஆதிக்குடிகளின் மண்ணைக் காப்பதற்காகப் போராடியதற்காகக் கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட நரகன் கதை, பின்னர் கொடுமைக்கார நரகாசுர வதம் என்ற புராணமாக்கப்பட்டது. மண்ணுரிமைக்காகப் போராடித் தோற்கடிக்கப்பட்ட அந்த ஆதிக்குடிகளுக்கெல்லாம் அசுரர்கள், அரக்கர்கள் என்ற பெயர் சூட்டப்பட்டதே ஒரு சமூக அநீதிதான். இந்தப் புரிதல் ஏற்பட்ட பிறகு நான் எனது பேச்சிலும் எழுத்திலும் ஏதேனுமொரு கொடுஞ்செயலைக் குறிப்பிடுகையில் “அரக்கத்தனமான” என்ற சொல்லைக் கையாளுவதில்லை.

சென்னை கர்ப்பிணிக்கும் ஹெச்.ஐ.வி. ரத்தம்? மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம்

tamil.indianexpress.com : சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி. பாதித்த நபரிடம் இருந்து பெறப்பட்ட ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்குள்ளாக சென்னையிலும் ஒரு பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி. பாதித்த ரத்தம் ஏற்றப்பட்டதாக புகார் கிளம்பியிருக்கிறது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி. பாதித்த ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தப் பெண்ணுக்கு தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அதேபோன்ற ஒரு கொடூரம் சென்னையிலும் அரங்கேறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சென்னையை அடுத்த மாங்காடு, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஒரு தம்பதியர் கீரை வியாபாரம் செய்து வருகிறார்கள். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் இருக்கிறான். அந்தப் பெண்மணி மீண்டும் கர்ப்பம் அடைந்தார்.

சிலோன் ரேடியோ .. இந்திய அரசின் திரையிசை தடையை உடைத்த வரலாறு... மயில்வாகனனும் இலங்கை வானொலியும்

1950- 70 கள்வரை  ஒவ்வொரு திரைப்படமும்
வெளியாகும் வேளையில் தயாரிப்பாளர்கள்
மயில்வாகனனின் தயவை நாடினார்கள். காலை 8 மணிக்கு கொழும்பிலிருந்து விமானத்தில் புறப்பட்டு சென்னைவந்து, பாட்டுக்களைப் பெற்றுக்கொண்டு, சென்னையில் மதிய போசனத்தை முடித்து, மாலை 4 மணிக்கு மீண்டும்
கொழும்பு திரும்புவார் மயில்வாகனன். மாலை 6 மணிக்கு அந்த புதிய பாடல்கள் அன்றைய தினம் ஒலிபரப்பாகும். இது, அந்தக் காலத்தில் மயில்வாகனனின் மாமூலான
செயல்பாடாகவிருந்தது. விளைவு, புதிய திரைப்படத்துக்கு கூட்டம் அலைமோதும். பாடல்கள் மூலமாகமட்டுமல்லாமல், நடிகர்கள், பின்னணி கலைஞர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள் போன்றவர்களுடன் பல்வேறுவிதமான நேரடி நிகழ்ச்சிகளை ஏற்படுத்தியும் இலங்கை வானொலி தன் செல்வாக்கைப் பெருக்கியது.
உலகில் எந்த வானொலி நிலையத்திலுமே இல்லாத அளவில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான சிங்கள, தமிழ், ஆங்கில பாடல்களின் இசைத்தட்டுக்களை இலங்கை வானொலி பொக்கிஷமாகக்கொண்டுள்ளது. 1920-30களில் வெளியான, மிகவும் அரிதான 78 rpm இசைத்தட்டுக்கள் உள்பட! ,
Subramaniam Mahalingasivam :   திருமதி ஞானம் இரத்தினம், இலங்கை வானொலியிலே நீண்டகாலம் அதன் கல்விச் சேவையில் பணியாற்றி, பின்னர் தமிழ் நிகழ்ச்சிகள் தயாரிப்பாளராகவும், தமிழ் சேவையின் உதவிப் பணிப்பாளராகவும் பணியாற்றியவர்.
`Green Light' என்று, அவர் தன்னுடைய வானொலி அநுபவங்களை - அக்காலத்து நினைவுகளை, நூலாக வெளியிட்டிருக்கிறார்.
1957ஆம் ஆண்டு இந்தியா வந்தபோது, அகில இந்திய வானொலியின் சென்னை நிலையத்துக்கு தாம் சென்றதை அவர் அந்த நூலிலே குறிப்பிடுகிறார்.

வெள்ளி, 28 டிசம்பர், 2018

பி பி சி : உத்தர பிரதேசம் . உயிரோடு எரிக்கப்பட்ட மாணவி சஞ்சாலி .. ..

BBC : `வரலாற்றில் முதன்முதலாக எரிக்கப்பட்ட பெண் யார்?
எனக்குத் தெரியாது
ஆனால் கடைசியாக எரிக்கப்பட்ட பெண்ணாக யாராக இருப்பார் என்பது தான் என்னுடைய கவலை
கடைசியாக எரிக்கப்பட்டது யாராக இருக்கும்?' - சஞ்சாலியின் தாயார் அனிதாவின் அழுகுரலைக் கேட்டபோது, ராமசங்கர் `வித்ரோஹி'யின் வரிகள் என் மனதில் தோன்றின. என் காதுகள் வெடித்துவிடுவதைப் போல உணர்ந்தேன்.
15 வயது சஞ்சாலியின் மரணச் செய்திகைக் கேட்டு டிசம்பர் மாதத்தின் கடைசி வாரமும், வட இந்தியாவின் குளிர்ந்த காற்றும் கூட அழுவதைப் போல இருக்கிறது.
ஆக்ரா அருகே மல்புரா மார்க் பகுதியில் டிசம்பர் 18 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை உயிரோடு எரிக்கப்பட்ட சிறுமி சஞ்சாலி.

`சாவதற்கு முன் என் மகள், எனக்குப் பசிக்கிறது, அம்மா சாப்பிட ஏதாவது கொடு என திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருந்தாள். எனக்குத் தாகமாக இருக்கிறது, குடிப்பதற்கு தண்ணீர் கொடு என்று கேட்டாள். ஆனால் எதுவும் தரக் கூடாது என டாக்டர்கள் மறுத்துவிட்டார்கள். அவளுக்கு என்னால் எதுவும் தர முடியாமல் போய்விட்டது.''

அதிமுக பாமக கூட்டணி ? தயாராகும் கட்சிகள்

வெப்துனியா: பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் முதல்கட்டமாக கூட்டணியை வலுவாக்க தீவிர முயற்சிகள் எடுத்து வருகின்றன.
அதிமுக, திமுக உள்பட எந்த கட்சியும் வரும் பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட விரும்பவில்லை என்பதால் கூட்டணி அமைப்பதில் இரு கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. கருணாநிதி சிலை திறப்பு விழாவின் மூலம் திமுக-காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில் இந்த கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
அதேபோல் தமிழக அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர் டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்தித்து பேசியுள்ளதை அடுத்து அதிமுக-பாஜக கூட்டணியும் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

திமுகவைப் பிடிக்கவில்லை: முதல்வரை சந்தித்த சரத்

திமுகவைப் பிடிக்கவில்லை: முதல்வரை சந்தித்த சரத்மின்னம்பலம் : முதல்வரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், திமுகவை தனக்குப் பிடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
சென்னைத் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் இன்று (டிசம்பர் 28) நேரில் சந்தித்துப் பேசினார். சந்திப்பின்போது அக்கட்சியின் துணைச் செயலாளர் சேவியரும் உடனிருந்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், “கஜா புயல் விவகாரம், பட்டாசுத் தொழிலாளர்கள் பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து வலியுறுத்தினேன். பிளாஸ்டிக்கிற்கு தடை விதிப்பதற்கு அவகாசம் வழங்க வேண்டும் எனவும், மறுசுழற்சி முறையில் பிளாஸ்டிக்கை பயன்படுத்தலாம் எனவும் முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். கஜா புயலால் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டிருப்பதால், அவர்களுக்கு மேலும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளேன்” எனத் தெரிவித்தார்.

பூட்டானுக்கு ரூ.4500 கோடி.. தமிழகத்திற்கு ரூ.173 கோடி.. மத்திய அரசின் தமிழக வெறுப்பு?

குறைந்த தொகை பூட்டான் பிரதமர் tamil.oneindia.com - veerakumaran: டெல்லி: பூட்டான் நாட்டின் 12வது ஐந்தாண்டு திட்டத்திற்கு நிதி உதவியாக, இந்தியா சார்பில் ரூ.4,500 கோடி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்துள்ளார்.
கஜா புயல் பாதிப்புக்காக மத்திய வேளாண் துறை ரூ.173 கோடி மட்டுமே அறிவித்துள்ள இன்றைய தினத்தில்தான், பூட்டான் நாட்டுக்கான இந்த நிதி உதவியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பூட்டான் நாட்டுக்கு ரூ.4,500 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்றும், அந்த நாட்டுடனான நீர் மின்சார ஒத்துழைப்பு இரு நாட்டு உறவுக்கான முக்கிய அங்கம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடிகை வனிதா விஜயகுமார் தகராறை ரஜனியும் எடப்பாடியும் பஞ்சாயத்து செய்து வைத்தனர்?

டிஜிட்டல் திண்ணை: நடிகை விவகாரம் - பஞ்சாயத்து செய்த எடப்பாடியும், ரஜினியும்!
மின்னம்பலம்:
“நடிகர் விஜயகுமாருக்கும் அவரது மகள் வனிதா விஜயகுமாருக்கும் தொடர்ந்து பிரச்னை நடந்து வரும் சூழ்நிலையில் காவல் நிலையம், நீதிமன்றம் என அப்பாவுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறார் வனிதா. இந்த நிலையில்தான் தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகை வனிதா தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, அவரது
தந்தையும், நடிகருமான விஜயகுமாருக்கும், மதுரவாயல் போலீசாருக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டின் அனுபவத்தில் தலையிட தன் தந்தையும், நடிகருமான விஜயகுமாருக்கு தடை விதிக்க கோரி, நடிகை வனிதா , பூந்தமல்லி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி நடிகர் விஜயகுமாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையில், நடிகர் விஜயகுமார் அளித்த புகாரின் அடிப்படையில், நடிகை வனிதாவுக்கு எதிராக மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், தனக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரியும் நடிகை வனிதாசென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

"the accidental prime minister" மன்மோகன் சிங் பற்றிய பாஜகவின் பிரசாரப்படம்


Shalin Maria Lawrence : அமித் ஷாவின் தந்திரங்கள் எல்லாம் காலியாகி
கொண்டிருக்கும் வேளையில் பாஜகவின் காலனியை தினமும் நக்கி பிழைப்பு நடத்தும் அனுபம் கேரை மன்மோகன்சிங் ஆக்கி "the accidental prime minister" என்கிற படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். அனுபம் கேரின்  மனைவி கிரன் கேர் ஒரு பாஜக எம்பி என்பது கூடுதல் தகவல்.
படத்தில் கிட்ட தட்ட சோனியா ஜாடையில் ஆனால் வில்லத்தனமான முகத்துடன் ஒரு பெண்மணியை உலவ விட்டிருக்கிறார்கள்.
குடும்ப ஆட்சியை விமர்சனம் செய்வது போல் பொய்களை பரப்பும் முயற்சியை கடைசி அஸ்திரமாக பாஜக கையில் எடுத்துள்ளது.
இந்த படத்தை தடை செய்ய கோரியோ இல்லை அதற்கு எதிராக போராட்டம் செய்யவோ போவதில்லை என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
மன்மோகன் சிங்காவது accidental பிரதமர் ஆனார் .ஆனால் முடிந்தவரை நல்லாட்சி புரிந்தார். ஆனால் மோடி சார் இன்றுவரை "absconding " பிரதமராக இருக்கிறார்.
இந்த படத்தை பார்ப்பதற்காகதான் சினிமா டிக்கெட்டுகள் மீதான GST வரியை அவசர அவசரமாக குறைத்தார்கள் போல.

பாலியல் வன்கொடுமையால் இறந்த கேரள சிறுமி! - தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ-வுக்கு 10 ஆண்டு சிறை

முன்னாள் திமுக எம்.எல்.ஏ
விகடன் : பெரம்பலூர் முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார் பிறந்தநாள் பார்ட்டி கொண்டாடியபோது கேரளாவைச் சேர்ந்த சிறுமியைக் கூட்டுப் பாலியல் செய்த குற்றத்துக்காக 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், துரைமங்கலத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். முன்னாள் எம்.எல்.ஏ-வான இவர், 2012-ம் ஆண்டு தனது வீட்டில் வேலைக்கு ஆள் தேவை என்று விளம்பரம் கொடுத்துள்ளார். அதன் பேரில் அவரின் நண்பர்கள் உதவியோடு கேரளாவிலிருந்து 15 வயது சிறுமியை ராஜ்குமாரின் வீட்டில் வேலைக்கு அமர்த்தியுள்ளனர். இரண்டு நாள்கள் கழித்து அந்தப் பெண் அவரின் அப்பாவுக்கு, `என்னால் இங்கு இருக்க முடியவில்லை. இரவு நேரத்தில் என்னைத் துன்புறுத்துகிறார்கள். உடனே அழைத்துச்செல்லுங்கள்' என்று போனில் தகவல் சொல்லியிருக்கிறார். அவர்கள் வறுமை கருதி அச்சிறுமியை சமாதானப்படுத்தி தங்க வைத்துள்ளனர். 2012 ஜூன் 27-ம் தேதி ராஜ்குமாரின் நண்பர் சிறுமியின் தந்தையிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு, உடனே அழைத்துச் செல்லுங்கள். அழுதுகொண்டே இருக்கிறார். சரியாக வேலை செய்வதில்லை என்று புகார் அளித்திருக்கிறார்.

பேராசிரியர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி... அப்போலோவில் ...

திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிமாலைமலர் : திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை: திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளராக பதவி வகித்து வருபவர் பேராசிரியர் க. அன்பழகன். உடல்நிலை ஒத்துழைக்காத காரணத்தால் கட்சியின் முக்கிய கூட்டங்க்ளை தவிர மற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறார்.< இந்நிலையில், திமுக பொதுச் செயலாளர் அன்பழகனுக்கு திடீரென இன்று இரவு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை அண்ணாசாலையில் உள்ள கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தகவல் அறிந்த திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் உள்ளிட்ட தலைவர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று, அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்

நியுசிலாந்து கப்பல் தமிழ் மணி 600 ஆண்டு பழமை .. ஆங்கிலேயருக்கு முன்பே தமிழர்! 600 Years Old Tamil Bell in New Zealand

William Colenso வில்லியம் கோலென்சோ
The bell was photographed and copies sent to England and various people in India. Tamils in
Southern India immediately recognised the writing on the bell.The bell has been identified as a type of ship's bell. Some of the characters in the inscription are of an archaic form no longer seen in modern Tamil script suggesting that the bell could be about 500 years old. The bell is believed to have been cast about the year 1450. Archaic Tamil script on the bell has been translated as meaning, "Bell of the Ship of Mohaideen Bakhsh".
Tamil Bell New Zealand Translationமுகைதீன் வக்குசுடைய கப்பல் உடைய மணி’" 
என்ற தமிழ் வாசங்கள் பொறிக்கப்பட்ட இந்த மணி
நியூஸிலாந்து தலைநகர் வெலிங்டன் அருங்காட்சியத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது
இது 15 ஆம் நூற்றாண்டுக்கு முன்னையதாக கருதப்படுகின்றது. ஆனால் நவீன உலகை பொறுத்தவரை இங்கிலாந்தின் ஜேம்ஸ் குக் எனும் கடல் ஆய்வாளர் 1769-ம் ஆண்டு தான் நியூஸிலாந்தை கண்டுபிடித்தார்.
நியூஸிலாந்து நாட்டில் வெங்கேரி என்னுமிடத்திடத்தருகே 1836ம் ஆண்டில் இந்த மணியை வில்லியம் கோல்ன்ஸோ கண்டுபிடிப்பதற்கு முன்னர் இதில் உருளைக் கிழங்கை சமைத்துக் கொண்டிருந்தனர் நியூஸிலாந்து மௌரி இனப் பழங்குடியினர். வில்லியம் கோல்ன்ஸோ மௌரி இனப் பழங்குடியினரிடம் ஒரு இரும்பிலான சமையல் பாத்திரத்திற்கு இந்த மணியை பண்டமாற்று செய்து கொண்டார். 
The English navigator Captain James Cook sighted New Zealand on 6 October 1769, and landed at Poverty Bay two days later. He drew detailed and accurate maps of the country, and wrote about the Māori people. His first encounter with Māori was not successful

பெரிய பெருமாள் சிலைப் பாறையின் பயணமும், பொதுமக்கள் எதிர்ப்பும்!

Sugumaran Govindarasu : விழுப்புரம் மாவட்டம், செஞ்சி
அருகில் பெரிய
அளவிலான பெருமாள் சிலை செய்ய மலையை உடைத்துப் பெரிய பாறையை வாகனத்தில் எடுத்துச் செல்வது பற்றி ஊடகங்களில் செய்தி வெளியாயின. இதனால்,
பொதுமக்களுக்குப் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன.
சென்ற 25.12.2018 அன்று இதுகுறித்து ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பொ.இரத்தினம் செஞ்சி வந்திருந்தார். அவருடன் நானும், சேலம் வழக்கறிஞர் யுவராஜ், சுதாகர் ஆகியோரும் சென்றோம். விரிவாக ஆய்வு செய்த பின்னர் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்களுக்கு வழக்கறிஞர் பொ.இரத்தினம் தயாரித்த நான்கு பக்கங்கள் கொண்ட விரிவான மனுவினை மின்னஞ்சல் மூலம் அனுப்பினோம். அம்மனுவில் கூடுதல் தகவல்களைச் சேர்த்து வழக்கறிஞர் பொ.இரத்தினம் தமிழக தலைமைச் செயலரை நேரில் சந்தித்து அளிக்க உள்ளார்.
பெங்களூரில் உள்ள கோயில் ஒன்றுக்குப் பெருமாள் சிலை செய்ய திட்டமிட்டு திருவண்ணாமலை மாவட்டம், செட்டிக்குளம் கிராமத்தில் உள்ள ஒரு மலையை செயற்கைகோள் மூலம் கண்டறிந்துள்ளனர். 108 அடி உயரம், 420 டன் எடையுடைய பெருமாள் சிலை செய்ய மலையை உடைத்துப் பெரும் பாறையைப் பெங்களூருக்கு எடுத்துச் செல்கின்றனர். இதற்கு 250 டயர்கள் கொண்ட பெரிய வாகனத்தைப் புனேயில் இருந்து கொண்டு வந்துள்ளனர்.

தாமதமாக வந்த மாணவர்களுக்கு நிர்வாணமாக நிற்கும் தண்டனை!! ஒரு சித்ரவதை பள்ளி!!


தினமணி :“தாமதமாக பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு, ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள பள்ளி ஒன்று நிர்வாணமாக நிற்கும் தண்டனை வழங்கியுள்ள அதிர்ச்சி சம்பவம் தெரியாய்வந்துள்ளது. “, சித்தூர்:தாமதமாக பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு, ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள பள்ளி ஒன்று நிர்வாணமாக நிற்கும் தண்டனை வழங்கியுள்ள அதிர்ச்சி சம்பவம் தெரியாய்வந்துள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள புங்கனூரில் சைதன்யா பாரதி பள்ளி இயங்கி வருகிறது.
இந்த பள்ளியில் கடந்த புதன்கிழமையன்று காலதாமதாக வந்த நான்காவது மற்றும் ஐந்தாவது வகுப்பு மாணவர்களை நிர்வாணப்படுத்தி வகுப்பறைக்கு வெளியே ஆசிரியர்கள் முட்டிப் போட வைத்துள்ளனர்.
இந்த தண்டனை குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

மூன்றாவது அணி ... சிறிய கட்சிகள் பெரிய மீனை .. அல்லது பாஜகவுக்கே உதவி செய்வது?

மத்தியபிரதேசத்தில் 50  தொகுதிகளிலும், ராஜஸ்தானில் 29 தொகுதிகளிலும்
வென்றவருக்கும் தோற்றவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசத்தை விட அதிகம் பெற்றது மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி. கர்நாடக குமாரசாமி பாணியில் 2019  இல் அமையவிருக்கும் புதிய மத்திய அரசையும் காவு கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இந்த மூன்றாவது கோஷ்டி செயல்படுகிறதோ என்ற ஐயம் எழுவது இயல்பே.
ஆலஞ்சியார் : மூன்றாவது அணி..
முட்டாள்தனமான செயல் அதற்கு பாஜகவோடு கூட்டணி வைத்து போட்டியிட்டுவிடலாம் .. மோடியை வீழ்த்தவேண்டுமென்று எண்ணுகிறவர்கள் இந்த நாட்டை பின்னோட்டு இழுத்து செல்லும் பாசிச பாஜகவை அப்புறபடுத்த வேண்டுமெனில் சில விட்டுவீழ்ச்சைகளை ஏற்கவேண்டும் ..
உ.பி.யில் அகிலேஷ் மாயவதியும் இணைந்து போட்டியிட்டாலும் சிறிய வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கும் தொகுதிகளின் எண்ணிக்கை கணிசமாக இருக்கும்  அதன் பலனை பாஜக கொண்டுபோகும் .. அதேவேளை காங்கிரஸோடு இணைந்து போட்டியிட்டால் பாஜகவை ஏறக்குறைய துடைததெறியலாமென அரசியல் விமர்சகர்களும் உன்னிப்பாக கவனிப்பவர்களும் சொல்கிறார்கள் .. தெலுங்கானா முதல்வர் பாஜகவின் சிலிப்பராக செயல்பட துவங்கியிருக்கிறார் அவர் மம்தா மாயவதி அகிலேஷ் என அந்தந்த மாநில செல்வாக்குள்ளவர்களை .. காங்கிரஸோடு இணையாமல் தடுக்கும் முயற்சியாக செயல்படுகிறார் .. மோடிக்கு பாலில் பழம் விழுந்த கதையாக போகும்.

சிகிச்சை உபகரணங்களை பிடுங்கி எறிந்த ரத்ததான வாலிபர் .. வாழ விரும்பலை.. சாக விடுங்க..!

கெஞ்சி செய்தியாளர்கள் tamil.oneindia.com - lakshmi-priya.: சிகிச்சை உபகரணங்களை பிடுங்கி எறிந்த ரத்ததான வாலிபரால் பரபரப்பு!-வீடியோ ராமநாதபுரம்: எச்ஐவி ரத்தம் கொடுத்ததால் கர்ப்பிணி பாதிக்கப்பட்டதை அறிந்த இளைஞர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் அவர் சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த கூலி தொழிலாளியின் மனைவி (24) 8 மாத கர்ப்பிணி. இவருக்கு எச்ஐவி தொற்றுள்ள ரத்தம் சிவகங்கை அரசு மருத்துவமனையிலிருந்து தானமாக பெறப்பட்டு சாத்தூரில் கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்டது.
இதனிடையே சிவகங்கை மருத்துவமனையில் ரத்தத்தை தானமாக கொடுத்த வாலிபர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்தவர். இவர் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல மதுரையில் ரத்தப் பரிசோதனை செய்துள்ளார். அப்போது அவருக்கு எச்ஐவி தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

Transformation of a Scoundrel into a Saint, due to judicial overreach.


Pon Manickavel blowing his own trumpet about fake seizure of Chozha idols
by · 27/12/2018

நாடளுமன்ற தேர்தல் : தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் தயார்? 32 தொகுதிகளில் திமுக?

பாராளுமன்ற தேர்தல்: தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் தயார் மாலைமலர் : பாராளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ளதால் தமிழகத்தில் 32 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. சென்னை:
பாராளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அட்டவணை பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் மத்தியில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே இருப்பதால் அனைத்து கட்சிகளும் கூட்டணி அமைக்கவும், தொகுதிகளை அடையாளம் காணவும், வேட்பாளர்களை தேர்வு செய்யவும் இப்போதே பணிகளை தொடங்கிவிட்டன.
மத்தியில் ஆளும் கட்சியான பா.ஜனதா பாராளுமன்ற தேர்தலை சந்திக்க பிரதமர் நரேந்திர மோடி, கட்சி தலைவர் அமித்ஷா ஆகியோர் கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளனர். பிரதமர் மோடி தொகுதி வாரியாக வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொண்டர்களிடம் பேசி அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

வியாழன், 27 டிசம்பர், 2018

ஆண்டுக்கு 2,000 பேருக்கு எச்.ஐ.வி. ரத்தம்! தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு அறிவிப்பு!

ஆண்டுக்கு 2,000 பேருக்கு எச்.ஐ.வி. ரத்தம்!மின்னம்பலம் : ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2,000 பேருக்கு எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவரின் ரத்தம் ஏற்றப்படுவதாகத் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் தகவல்களிலிருந்து தெரியவந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் 8 மாதக் கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட நபரின் ரத்தம் செலுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசியைச் சேர்ந்த எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவரின் ரத்தம் ஏற்றப்பட்டதால் அக்கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், பணியின்போது மெத்தனப் போக்காகச் செயல்பட்டதாகக் கூறி ரத்த வங்கி ஊழியர்கள் 3 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் பெரும் அச்சத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ள இதுபோன்ற சம்பவத்தை தமிழக மக்கள் அறிவது இதுவே முதல்முறையாக இருக்கக்கூடும்.

மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் சந்திரசேகர் ராவ் முழு மூச்சில்?

மூன்றாவது அணி: கேசிஆர் பயணத்தில் ஸ்பீடு பிரேக்!
மின்னம்பலம்:  வர இருக்கிற 2019 நாடாளுமன்ற
மக்களவைத் தேர்தலுக்காக காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாவது அணி அமைக்கும் நோக்கில் தெலங்கானா முதல்வர் கே.சி.சந்திரசேகர ராவ், தனி விமானம் அமர்த்தி நாடு முழுதும் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இதில் 23 ஆம் தேதி ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், 24 ஆம் தேதி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரை சந்தித்துவிட்டு டெல்லி சென்ற கேசிஆர் இந்த வாரம் தான் சந்திப்பதாக இருந்த சமாஜ்வாதி கட்சித் தலைவரான அகிலேஷ் யாதவ்வையும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரான மாயாவதியையும் சந்திப்பதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.
மம்தா பானர்ஜியை சந்தித்துவிட்டு டெல்லி திரும்பிய கேசிஆர் 25, 26 தேதிகளில் அகிலேஷ், மாயாவதி ஆகியோரை சந்திப்பதாகத் திட்டம் இருந்தது. நேற்று பிரதமர் மோடியை தெலங்கானாவின் புதிய முதல்வர் என்ற முறையில் சந்தித்து தனது மாநில நலன்கள் பற்றிய கோரிக்கையை முன் வைத்தார் கேசிஆர்.

இலங்கையில் இருந்து சபரிமலைக்கு கட்டணச் சலுகை!

இலங்கை டூ சபரிமலை: கட்டணச் சலுகை!மின்னம்பலம் : சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இலங்கையில் இருந்து வரும் பக்தர்களுக்கு விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்துக்குக் கட்டணச் சலுகை அளித்துள்ளது அந்நாட்டு அரசு.
சபரிமலைக்குப் பல நாடுகளிலிருந்தும் பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக, இலங்கையிலிருந்து ஆண்டுதோறும் 3 லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வருகின்றனர். மட்டக்களப்பு மற்றும் மாதுலா பகுதியிலிருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்து, அங்கிருந்து காரில் சபரிமலைக்குச் செல்கின்றனர் ஐயப்ப பக்தர்கள்.

2018 இல் தமிழ் சினிமாவின் 70% வசூலை பெற்ற 18 படங்கள்

மின்னம்பலம் : 2018: வசூல் நாயகன் யார்?தமிழ் சினிமாவில் 2018ஆம் ஆண்டு வெளியான நேரடி தமிழ் படங்களில் ஒரு கோடி ரூபாய் மற்றும் அதற்கும் அதிகமாக சம்பளம் கேட்கும், வாங்கும் நடிகர்கள்,
 1. ரஜினிகாந்த்,
2. கமல்,
3. விஜய்,
4. அஜித்,
5.விக்ரம்,
6. சூர்யா,
7. கார்த்தி
 8. தனுஷ்,
9. சிம்பு,
10. சிவகார்த்திகேயன்,
11. ஆர்யா,
12. விஐய்சேதுபதி,
13. விக்ரம் பிரபு
14. கெளதம் கார்த்திக்
 15.அதர்வா,
16. அருண் விஜய்,
 17. அருள்நிதி,
18. உதயநிதி ஸ்டாலின் ஆகியோர். இவர்களில்அதிக படங்களில் நடித்த நடிகர் விஐய் சேதுபதி.
இந்த ஆண்டு வெளியான வியாபார முக்கியத்துவம் மிக்க அதிகப் படங்களில் நடித்திருப்பது யார் எனப் பார்ப்போம்.
விஜய் சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டு மட்டும் ஆறு படங்கள் வெளிவந்துள்ளன. ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், ஜுங்கா, 96, செக்கச் சிவந்த வானம், சீதக்காதி ஆகிய ஐந்து படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இமைக்கா நொடிகள் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

தோழர் நல்லகண்ணும் பூச்சி அல்ல ... போராட்ட களத்தில் புலி!

Shalin Maria Lawrence : தமிழ்நாட்டின் சாபக்கேடு என்று இரண்டு விஷயங்களை
சொல்லலாம்.
ஒன்று அரசியல் வரலாறு தெரியாதவர்கள் முழுநீள கட்டுரைகள் எழுதுவது.
இரண்டு ஒருவரை எளிமையானவர் என்று சொல்லிவிட்டால் அவர் நிச்சயம் வேலைக்காகாதவர் என்று கற்பனை செய்து கொள்ளுவது.
இரண்டாம் விஷயத்தை பற்றி பேசுவோம்.
பொதுவாக பொது சமூகம் ஒருவரை எளிமையானவர் என்று சொல்லும்போது அவரின் உடை முதலில் கருத்தில் வரும் ,இரண்டாவது அவரின் வாழ்வியல்.
அப்துல் கலாமும் எளிமையானவர்தான். தோழர் நல்லகண்ணும்
எளிமையானவர்தான்.
ஆக எளிமையானவர்கள் என்று மேல் சொன்ன காரணங்களுக்காக யாரை குறிப்பிட்டாலும் உடனே நம் ஆழ்மனது வேறு விதமாக யோசிக்க துவங்கும்.
அவர் எளிமையானவர் என்றால் காசு இருக்காது ,நேர்மையாக இருப்பார் ,ஊழல் செய்திருக்க மாட்டார் ,எல்லோரிடமும் நன்றாக பழகுவார் ,பாவம் மனிதர் ,பூச்சி.
இதுதான் எல்லோர் மனதிலும் தோன்றும் விஷயம்.
பூச்சி...ஒன்றுக்கும் உதவாதவர்.
எளிமையானவர் என்பதற்கு சமூகம் கொடுக்கும் இன்னொரு அர்த்தம் "வேலைக்கு ஆகாதவர்".
இங்கே தான் அப்துல் கலாமும் ,தோழர் நல்லகண்ணுவும் பொது புத்தியில் இருந்து மாறுபடுகின்றனர்.