வியாழன், 27 டிசம்பர், 2018

இலங்கையில் இருந்து சபரிமலைக்கு கட்டணச் சலுகை!

இலங்கை டூ சபரிமலை: கட்டணச் சலுகை!மின்னம்பலம் : சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இலங்கையில் இருந்து வரும் பக்தர்களுக்கு விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்துக்குக் கட்டணச் சலுகை அளித்துள்ளது அந்நாட்டு அரசு.
சபரிமலைக்குப் பல நாடுகளிலிருந்தும் பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக, இலங்கையிலிருந்து ஆண்டுதோறும் 3 லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வருகின்றனர். மட்டக்களப்பு மற்றும் மாதுலா பகுதியிலிருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்து, அங்கிருந்து காரில் சபரிமலைக்குச் செல்கின்றனர் ஐயப்ப பக்தர்கள்.

இந்நிலையில், ஐயப்ப பக்தர்களுக்காகப் புனித பயணம் என்ற பெயரில் சலுகைக் கட்டணம் வழங்கியிருக்கிறது இலங்கை அரசு. ஐயப்பன் கோயில் சென்று வர இலங்கை அரசே கப்பல் மற்றும் விமானச் சேவையை அளிக்கவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூஜை நிறைவு
சபரிமலை ஐயப்பன் கோயிலின் மண்டல பூஜைகள் இன்றுடன் (டிசம்பர் 27) நிறைவு பெறுகிறது. தந்திரியின் பூஜைக்கு பின்னர் இரவு 10 மணியளவில் சன்னிதானத்தின் நடை சாத்தப்படும். இதையடுத்து, டிசம்பர் 30ஆம் தேதி மகரவிளக்கு பூஜைக்காக மீண்டும் கோயில் நடை திறக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக