வெள்ளி, 28 டிசம்பர், 2018

"the accidental prime minister" மன்மோகன் சிங் பற்றிய பாஜகவின் பிரசாரப்படம்


Shalin Maria Lawrence : அமித் ஷாவின் தந்திரங்கள் எல்லாம் காலியாகி
கொண்டிருக்கும் வேளையில் பாஜகவின் காலனியை தினமும் நக்கி பிழைப்பு நடத்தும் அனுபம் கேரை மன்மோகன்சிங் ஆக்கி "the accidental prime minister" என்கிற படத்தை வெளியிட்டிருக்கிறார்கள். அனுபம் கேரின்  மனைவி கிரன் கேர் ஒரு பாஜக எம்பி என்பது கூடுதல் தகவல்.
படத்தில் கிட்ட தட்ட சோனியா ஜாடையில் ஆனால் வில்லத்தனமான முகத்துடன் ஒரு பெண்மணியை உலவ விட்டிருக்கிறார்கள்.
குடும்ப ஆட்சியை விமர்சனம் செய்வது போல் பொய்களை பரப்பும் முயற்சியை கடைசி அஸ்திரமாக பாஜக கையில் எடுத்துள்ளது.
இந்த படத்தை தடை செய்ய கோரியோ இல்லை அதற்கு எதிராக போராட்டம் செய்யவோ போவதில்லை என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
மன்மோகன் சிங்காவது accidental பிரதமர் ஆனார் .ஆனால் முடிந்தவரை நல்லாட்சி புரிந்தார். ஆனால் மோடி சார் இன்றுவரை "absconding " பிரதமராக இருக்கிறார்.
இந்த படத்தை பார்ப்பதற்காகதான் சினிமா டிக்கெட்டுகள் மீதான GST வரியை அவசர அவசரமாக குறைத்தார்கள் போல.

ஆனால் இதையெல்லாம் செய்தால் கூட நாட்டின் மக்கள்தொகையில் இருக்கும் 84% ஏழை மக்கள் இந்த படத்தை பார்க்க மாட்டார்கள்.
வண்டிக்கு பெட்ரோல் போடவே காசில்லாத நிலையில் இந்த படத்திற்கு எவனும் டிக்கெட் வாங்கி போய் பார்க்க மாட்டான்.
கடைசியில் இந்த படத்தை பக்தாள்கள் மட்டுமே பார்த்து சுய இன்பம் கண்டுகொள்வார்கள்.
பிகு : இது பக்தாள் படம் என்று கண்டுபிடிக்க ஒரே ஒரு க்ளு தான்...இந்த படத்தில் அப்துல் கலாம் வெள்ளை நிறம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக