வியாழன், 5 ஜூலை, 2018

ஈழ அகதிகள் ஊர் ஊராக... புலம்பெயர் தமிழர் ஈழத்தில் கோவில்கள் கட்டுவதில் முனைப்பு

புலம்பெயர் நாடுகளில் ஏராளமான ஒய்வு பெற்ற முதியோர்கள் உள்ளனர்.அவர்களில் பலர் பல துறைகளிலும் பாண்டித்தியம் பெற்றவர்களாவர். மருத்துவம் , பொறியியல் . கணக்கியல் , கல்வியியல் , விஞ்ஞானம் , வர்த்தகம் போன்ற போன்ற துறைகளில் மிகவும் ஆழமான அனுபவமும் புலமையும் பெற்றவர்கள். இவர்களில் பலரும் நல்ல வசதியான நிலையில் உள்ளவர்கள். இந்த பெரியவர்கள் தாயகத்தில் உள்ள தங்கள் உறவுகளுக்கும் ஊர்களுக்கும் தங்கள் அறிவை அனுபவத்தை ஆற்றலை பொருளை பயன்படுத்தலாம். . இப்படியான ஆக்கபூர்வமான வழியில் செயல்படாவிட்டாலும் குற்றம் இல்லை. ஆனால் பலரின் செயல்பாடுகள் மிகவும் பிற்போக்கு தனமாக உள்ளது . 
பெரும்பான்மையோர் இந்து சமய பிரசாரகர்களாக மாறி மக்களை மேலும் மேலும் மத வெறி மாய வலையில் தள்ளுகின்றனர். இப்பெரியவர்கள் வாழும் மேற்கு நாடுகள் மதசாரபர்ர் சுதந்திர நாடுகள் . அந்த நாடுகளின் சுதந்திரத்தை அனுபவித்து கொண்டு தங்கள் தாய்நாட்டுக்கு மதவெறி குப்பையை கொட்டுவது என்ன நியாயம்? என்ன நேர்மை? இவர்கள் தப்பி தவறி கூட தங்கள் தாய்நாட்டு மக்கள் விஞ்ஞான அறிவோ கல்வி வளர்ச்சியோ பொருளாதார வளர்ச்சியோ பெற்று விடகூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பது போல் தோன்றுகிறது . எல்லோரும் எல்லாமும் பெற்றுவிட்டால் தங்களின் சமுக அந்தஸ்து என்பது தனித்துவம் அற்று போய்விடுமே என்ற சுயநலம் இருப்பதாக கருத இடமுண்டு.
ஏனெனில் அடிப்படையில் இவரகள் தாய்நாட்டை பற்றி பேசும் பொழுது அங்குள்ள அரசியல் போராட்டம் கோவில் குளம் போன்றவற்றை பற்றியே அதிக நேரம் செலவு செய்து விளாசி தள்ளுவார்கள் .


கடந்த யுத்த காலத்தில் இவர்களை போன்றவர்கள் இயக்கத்திற்கு பயத்தினாலோ அல்லது போலி பற்றினாலோ பணமும் ் கொடுத்தவர்கள்தான்.
அந்த யுத்தத்தால் பாதிப்படைந்து இன்று ஒருமாதிரி தட்டு தடுமாறி எழுந்து நிற்க முயலும் இந்த நேரத்தில் இந்த ஒய்வு பெற்ற தலைமுறை புலம் பெயர் நாடுகளில் என்ன செய்கிறது?
தமிழ் தொலைக்காட்சி நிகழ்சிகளை பார்க்கிறது .. கோவில் கட்டுகிறது .. தீர்த்த யாத்திரை போகிறது .. பழைய புராணங்களை தேடி பிடித்து தங்கள் மன உளைச்சல்களை போக்குகிறது . ஆனால் தங்களின் அறிவும் ஆற்றலும் நாட்டு மக்களுக்கு இனியாவது பயன் படட்டுமே என்று சிந்திக்கிறதா?
இல்லை.!
பெரும்பாலும் சுயநலமே உருவான யாழ்மையவாத ஏட்டு சுரைக்காய் வெற்று பிம்பங்கள் அவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக