வியாழன், 5 ஜூலை, 2018

வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கைது , வீடு, அலுவலகத்தில் போலீஸ்,, வழக்கறிஞர்களை குறிவைக்கிறது போலீஸ்..

tamithehindu :தூத்துக்குடி சம்பவத்தையொட்டி கைது செய்யப்பட்ட மதுரை
வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வீடு, அலுவலகத்தில் தூத்துக்குடி போலீஸார் 1 மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனர். புகைப்படம் உட்பட ஆவணங்களை கைப்பற்றினர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி மே 22ல் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். இக்கலவரத்தை சில அமைப்புகள் தூண்டிவிட்டதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக மக்கள் அதிகாரம் உட்பட சில அமைப்பினர் மீது போலீ ஸார் வழக்கு பதிவு செய்தனர். கலவரக்காரர்களை தூண்டியதாக மதுரை கேகே. நகரை சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீதும் தூத்துக்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதே சம்பவத்திற்கென அவர் மீது 40க்கும் மேற் பட்ட வழக்குகள் பதிவாகின.

இந்நிலையில் கடந்த சில நாளுக்கு முன், சென்னை விமான நிலையத்தில் வைத்து, வாஞ்சிநாதன் கைது செய்யப்பட்டார். மேலும், அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தூத்துக்குடி போலீஸார் திட்டமிட்டனர். இதற்கிடையில் தூத் துக்குடி 3-வது மாஜிஸ்திரேட் உத்தரவின்பேரில், அவர் மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகி என்பதை உறுதி செய்வதற்கான சோதனை மதுரையில் நடந்தது.
கேகே.நகரில் திருவள்ளுவர் தெருவிலுள்ள வாஞ்சிநாதனின் வீடு, அலுவல கத்தில் சிறப்பு விசாரணை அதிகாரியான சுரேஷ் குமார்(காவல் ஆய்வாளர்) தலைமையில் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அவரது ஜூனியர் வழக்கறிஞர்கள் முன்னிலையில் அலுவலகத்தில் இருந்து துண்டு பிரசுரம் உட்பட பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர். சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக இச்சோதனை நடந்தது.
சோதனை செய்த போலீஸார் கூறியது: தூத்துக்குடி கலவரத்தை தூண்டியவர்களில் வாஞ்சிநாதன் முக்கிய நபர். மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், புரட்சிகர மாணவர், இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி உட்பட பல்வேறு அமைப்புக்களை கொண்டது மக்கள் அதிகாரம்.
இந்த அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளராக வாஞ்சிநாதன் உள்ளார். அதற்கான ஆதாரங்களை திரட்டும் வகையில் மதுரை அண்ணாநகர் போலீஸாரின் உதவியுடன் இந்த சோதனை நடந்தது.
இதில் திருச்சியில் 2014ல் மக்கள் அதிகாரம் சார்பில், நடந்த மாநாடு துண்டு பிரசுரங்கள், பிரதமருக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய நோட்டீஸ்கள் மற்றும் பல்வேறு புகைப்படங்களை கைப்பற்றி உள்ளோம். தூத்துக்குடி கலவரத்தையொட்டி வாஞ்சிநாதன் மீது 50 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸ் காவல் விசாரணைக்கு அவர் ஒத்துழைக்க மறுத்ததால் வேறு வழியின்றி நீதிமன்ற உத் தரவை பெற்று அவரது வீடு, அலுவலகங்களில் சோதனை செய்தோம், என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக