சனி, 7 ஜூலை, 2018

இலங்கை விமான நிலையத்தை இந்தியா பொறுப்பேற்கிறது ... மகிந்தா ராஜபக்சா சர்வதேச விமான நிலையம்

இலங்கை, இந்தியா, விமான நிலையம்தினமலர்:   "கொழும்பு: : ; இலங்கையில், நஷ்டத்தில் செயல்படும் விமானநிலையம் ஒன்றை, ஏற்று நடத்த இந்தியா முடிவு செய்துள்ளது.
;இலங்கை தலைநகர் கொழும்புவிலிருந்து 241 கி.மீ., ஹம்பந்தோட்டா நகரில் உள்ளது மட்டல ராஜபக்சா சர்வதேச விமானநிலையம். கடந்த 2013ல், சீனா வழங்கிய கடன் மூலம் கட்டப்பட்ட இந்த விமான நிலையம், போதிய விமானங்கள் இயக்கப்படாததால், உலகிலேயே 'காலியான விமான நிலையம்' என அழைக்கப்படுகிறது.>இந்நிலையில், இந்த விமான நிலையத்தை குத்தகைக்கு எடுத்து நடத்த இந்தியா முடிவு செய்துள்ளதாக இலங்கை விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலா டி சில்வா, பார்லிமென்டில் கூறியுள்ளார்.

மேலும் அவர், இறந்து கொண்டிருக்கும் இந்த விமானநிலையத்தை மறு ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. இந்தியா இலங்கை கூட்டு ஒப்பந்தம் அடிப்படையில், இந்த விமான நிலையத்தை இந்தியா எடுத்து நடத்தும். இது தொடர்பாக சர்வதேச அளவில் வெளியிடப்பட்ட ஒப்பந்தத்திற்கு இந்தியா மட்டுமே பதிலளித்தது என்றார்.ஹம்பந்ததோட்டா துறைமுகத்தை சீனா குத்தகைக்கு எடுத்து மேம்படுத்தி வருகிறது. இதனால், அங்கு சீன நடமாட்டம் உள்ளதால், இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனக்கூறப்பட்டது. இந்நிலையில், அந்த நகரில் உள்ள விமான நிலையத்தை எடுத்து நடத்த இந்தியா முடிவு செய்துள்ளது.
இதற்கு இலங்கை சம்மதம் தெரிவித்துள்ளது, இந்தியாவின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி என நிபுணர்கள் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக