சனி, 14 மே, 2016

விடிய விடிய பணப்பட்டுவாடா..!... பறக்கும் படை? அப்படீனா என்னாங்க?

திருநெல்வேலி : நெல்லை மாவட்டத்தில் அ.தி.மு.க.,வினர் நேற்று இரவில் வீடு தோறும் பணப்பட்டுவாடாவை முடித்துக்கொண்டனர். ஆங்காங்கே தள்ளு முள்ளு, புகார் சம்பவங்கள் நடந்தாலும் தேர்தல் ஆணையமோ, பறக்கும்படை அதிகாரிகளோ கையாலாக நிலையில் இருந்தனர்.திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பத்து சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த இரண்டு
தினங்களாக ஓட்டுக்கு பணப்பட்டுவாடா நடக்கிறது. 12ம் தேதி பகலில் நெல்லையில்
முதல்வர் ஜெ.,பங்கேற்ற பொதுக்கூட்டத்திற்கு பிறகு கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுக்கு
மேலிடத்தில் இருந்து பணம் பட்டுவாடா குறித்த சமிக்ஞைகள் வந்துவிட்டன.
12ம் தேதி இரவிலேயே அனேக இடங்களில் பணப்புழக்கம் வந்துவிட்டது. தி.மு.க.,வினர் 200 ரூபாய் கொடுத்தார்கள் என்றால்,
அ.தி.மு.க.,வினர் தாராளமான 500 ரூபாய் கொடுத்தனர்.

திருமாவளவன் : வைகோ எஸ்கேப் முத்தரசன் எஸ்கேப் வாசன் எஸ்கேப் ஜி.ரா எஸ்கேப் .........

அண்ணன் வைகோ எஸ்கேப்பாகிவிட்டார்... அண்ணன் ஜி.ஆர். எஸ்கேப்.. அண்ணன் முத்தரசன் எஸ்கேப்ட்... அண்ணன் ஜி.கே.வாசன் அவரும் நிற்கலை.. தப்பிச்சுகிட்டார்
காட்டுமன்னார்கோவில்: சட்டசபை தேர்தலில் வைகோ. ஜி. ராமகிருஷ்ணன், முத்தரசன், ஜி.கே.வாசன் ஆகியோர் தேர்தலில் போட்டியிடாமல் "எஸ்கேப்" ஆகிவிட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். காட்டுமன்னார்கோவில் தொகுதியில் தொல். திருமாவளவன் போட்டியிடுகிறார். தேர்தல் தொடர்பான கருத்து கணிப்பு முடிவுகளில் திருமாவளவனுக்கு கடும் போட்டி இருப்பதாகவும் அவர் தோல்வியைத் தழுவக் கூடும் என்றும் ஊடகங்கள் பல்வேறு கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. Vaiko 'escape' from Assembly elections, says Thiruma  திருமாவளவன் அவர்களே இப்போது புரிந்ததா அவர்கள் நால்வரும் அதிமுக,திமுகவில் இடம் கிடைக்காமல் வந்தவர்கள் ...விஜயகாந்த் வைகோ சதியால் வந்து சேர்ந்தவர்ர்..  நீங்கள் மட்டும்தான் கொள்கைக்காக நிற்பவர்   

அழகிரியின் அதிமுக ஆதரவு ..... அதிர்ச்சியில் அறிவாலையம்

விகடன்: மதுரை: சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி அழகிரி தனது ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக வந்த தகவலால் பரபரத்துக்கிடக்கிறது திமுக தலைமை. திமுக - அழகிரி முட்டல் மோதல்கள் முடிவுக்கு வராதநிலையில் சட்டமன்றத் தேர்தல் அறிவித்ததும் அழகிரியை மீண்டும் கட்சிக்குள் கொண்டுவர அழகிரியின் துாதுவராக நின்று அவரது சகோதரி செல்வி முயன்றார். மீண்டும் அழகிரியை கட்சிக்குள் இணைக்கும் பேச்சு வார்த்தை நீண்டுக்கொண்டே வந்தது. அதற்கேற்றவாறு அழகிரியும் நெடு நாட்களுக்கு பிறகு கடந்த மாதத்தில் கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.

பத்திரிக்கையாளர்கள் சுட்டுக்கொலை:பீகார், ஜார்க்கன்ட்டில் அட்டூழியம்


பாட்னா:பீகார் மற்றும் ஜார்க்கன்ட் மாநிலங்களில் இரண்டு பத்திரிக்கையாளர்கள் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் ஷிவான் மாவட்டத்தில் ஆங்கில பத்திரிக்கை ஒன்றின் செய்தியாளராகப் பணியாற்றி வந்தவர் ராஜீவ் ரஞ்சன். இவர் ரயில் நிலையம் அருகே இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். துப்பாக்கிச் சூட்டில் கழுத்து மற்றும் தலையில் குண்டு பாய்ந்து ராஜீவ் ரஞ்சன் பலியானார். இது குறித்துத் தகவல் அறிந்த போலீசார் ராஜீவ் ரஞ்சன் உடலை பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.vikatan.com

தேர்தல் ஆணையமா அம்மா ஆணையமா ?

EC_1சட்டம், விதிமுறைகள், மரபுகள் ஆகியவற்றைப் பற்றிக் கவலைப்படாதது மட்டு மல்ல, மான, ரோசம் அனைத்தையும் உதிர்த்து விட்டு நிற்கிறது தேர்தல் ஆணையம்.
vinavu :அரசியல் சாசனம் தொடங்கி நீதிமன்றங்கள் ஈறாக முதலாளித்துவ அறிவுஜீவிகளால் புனிதமானதாக விதந்தோதப்படுகின்ற நிறுவனங்களின் டவுசரைக் கழட்டுவதில் புர்ரட்ச்சித்தலைவிக்கு ஈடு இணையாக வேறொருவரைக் குறிப்பிடவே முடியாது. ஜெயா, தனது முதல் ஆட்சிக் காலத்தில், சட்டமன்ற நாற்காலிகளிலேயே பெரும் புனிதமாகக் கூறப்படும் சபாநாயகர் இருக்கையில் தான் அமர்ந்தும், சட்டமன்ற உறுப்பினராகக்கூட இல்லாத தனது தோழி சசிகலாவைத் துணை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தும், பீற்றிக் கொள்ளப்பட்ட சட்டமன்றத்தின் மாண்பு, நெறிகளை உடைத்துப் போட்டார்.
2001-இல் நடந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தகுதியைக்கூட இழந்து நின்ற அவர், அத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, அப்பொழுது ஆளுநராக இருந்த உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதி பாத்திமாபிவியைச் சரிக்கட்டி, ஊழல் கிரிமினல் வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் முதலமைச்சராகப் பதவியேற்க முடியும் என்ற சரித்திர சாதனையை நிகழ்த்திக் காட்டி, இந்திய அரசியல் சாசனத்தையே ஆட்டங்கான வைத்தார்.

கலைஞர்:பழிவாங்கும் எண்ணம் எனக்கு தெரியாது... அண்ணா அதை எனக்கு கற்று தரவில்லை

சென்னை: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் யாரையும் பழிவாங்க மாட்டோம் என சென்னை சிந்தாரிப்பேட்டையில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் கருணாநிதி பேசினார்.
அவர் மேலும் பேசியதாவது: திராவிட இயக்கம் மக்களுக்காக உழைத்த இயக்கம். நல்லாட்சி அமைய வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். இதற்கென அனைவரும் பாடுபட வேண்டும் . நல்லாட்சி அமைய ஆதரவு அளிக்க வேண்டும். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும். >2001ல் அரசியல் பழிவாங்கும் படலம் நடந்தது. என்னை கைது செய்து எந்த அளவுக்கு கொடுமை செய்ய முடியுமோ அந்த அளவிற்கு என்னை கொடுமைப்படுத்தினர். ஆனால் தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் நாங்கள் யாரையும் பழிவாங்க மாட்டோம். பழிவாங்கும் எண்ணம் எனக்கு தெரியாது. எனக்கு அண்ணா துரை இதனை கற்று தரவில்லை.

ஜெயலலிதா ஜாதக அப்டேட்

இவருக்கு 22-08- 2012  இல் இருந்து குரு திசை ஆரம்பம் இது 2028 வரை இருக்கும்.  மூலம் நட்சத்திரத்தில் அமைந்து உள்ள குருவானவர் அதீத பலத்தை கொடுத்து திடீரென்று பிரச்சனைகளையும் கொடுத்து விடுவார்.  அவற்றில் இருந்து மீள்வதற்குள் போதும் போதுமென்றாகிவிடும்.அதிலும் குரு திசையில் நடப்பதோ சனி புத்தி. குருவுக்கு சனி அமைந்திருப்பது அதன் எட்டாவது ஸ்தானத்தில். சனிக்கு குரு அமைந்திருப்பது ஆறாவது ஸ்தானம். சஷ்டாஷ்மமம்  என்று சொல்வார்கள். இதில் ஏராளமான தோல்விகள் தொல்லைகள் எல்லாம் ஏற்படும். உயரத்தில் இருப்பது போல் தோன்றினாலும் இருப்பது என்னவோ படுகுழியில்தான். தர்ம வழியில் நடந்தால் மட்டுமே மீள முடியும். ஆனால் எதிலும் குறுக்கு வழியை நாடும் கிரிமினல் தனம் இவரிடம் நிறையவே உண்டு. கோவில் பராமரிப்பு கிரகசாந்தி ஒன்றுமே கைகொடுக்காது. விழுங்கியது கடப்பாரை .. சுக்கு கஷாயம் என்ன செய்யும்? 

பிடிபட்ட கன்டெய்னர் 3; தப்பவிட்டது 5..! -அதிரும் 'ஐதராபாத் ரகசியம்'

விகடன்.com திருப்பூரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பிடிபட்ட 'கன்டெய்னர் கரன்ஸிகள்' குறித்து சில அதிரடித் தகவல்கள் அம்பலமாகியுள்ளன. ' கோவையில் இருந்து ஐதராபாத்துக்கு கடத்தப்பட்ட எட்டு கன்டெய்னர்களில் மூன்று மட்டுமே பிடிபட்டது' என அதிர வைக்கின்றனர் அதிகாரிகள்.

நேற்று நள்ளிரவில் கோவையில் இருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், நள்ளிரவு ஒரு மணியளவில் மூன்று கன்டெய்னர் லாரிகளும், சில இன்னோவா கார்களும் அடுத்தடுத்து வந்துள்ளன.

மேலும் ஒரு பாமக வேட்பாளர் அதிமுகவில் சேர்ந்தார்

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியதில் இருந்தே ஒவ்வொரு கட்சியிலும் அதிருப்தி கோஷ்டியினர் மாற்று கட்சிகளில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக தலைவர்களின் பிரச்சாரக் கூட்டங்களின்போது இந்த இணைப்பு நடைபெறுவது வழக்கமாக உள்ளது. தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. எனவே, இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் குப்புசாமி அ.தி.மு.க.வில் இணைந்தார். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் கட்சியில் இணைந்துள்ளார். இதேபோல், நாங்குநேரி பா.ம.க. வேட்பாளர் திருப்பதி நேற்று அ.தி.மு.க.வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.மாலைமலர்.com

திருப்பூர் 3 கண்டெய்னர் லாரிகளில் ரூ.570 கோடி..இன்னும் உரிமை கோரப்படவில்லை...To ஹைதராபாத் ?

திருப்பூர் அருகே உரிய ஆவணங்கள் இல்லாமல் 3 கண்டெய்னர் லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.570 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தினர்.
திருப்பூர் - ஊத்துக்குளி சாலையில் செங்கப்பள்ளி என்ற இடத்தின் அருகே அதிகாலை 1 மணி அளவில் தேர்தல் பறக்கும் படையினர் வழக்கமான வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த கண்டெய்னர் லாரிகளை மடக்கி சோதனையிட்டர். 3 கண்டெய்னர் லாரிகளிலும் கட்டு கட்டாக பணம் இருந்தது. அந்த வாகனங்களில் போலீஸார் இருவர் மஃப்டியில் இருந்தனர்.

தலித் பெண் கல்பனா வெட்டி கொலை... மீண்டும் சாதி ஆணவ கொலை... நெல்லையில் கொடுரம்

நெல்லையில் காதல் விவகாரத்தில் பெண் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதை கண்டித்து பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.< காதல் ஜோடி< நெல்லை வண்ணார்பேட்டை இளங்கோ நகரை சேர்ந்த சண்முகவேல் மகன் விசுவநாதன்(வயது 24). இவர் நெல்லை-நாகர்கோவில் ரெயில் தண்டவாளத்தில் உள்ள ஒரு ரெயில்வே கேட்டில் ‘கேட் கீப்பராக‘ வேலை செய்து வருகிறார். இவருக்கும் தச்சநல்லூர் மங்களா குடியிருப்பை சேர்ந்த தலையாரி சங்கரநாராயணன் மகள் காவேரிக்கும் காதல் மலர்ந்தது. காவேரி பள்ளிக்கூடத்தில் படிக்கும் போதே இந்த காதல் மலர்ந்துள்ளது. தற்போது என்ஜினீயரிங் படிப்பை முடித்து விட்டு காவேரி வீட்டில் இருந்து வந்தார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த காதலுக்கு காவேரியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஈரான் பெண் எம்பி ஆணுடன் கைகுலிக்கியதால் பதவி காலி.... இஸ்லாமிய சட்டமாம்

ஈரான் பெண் எம்பி மினோ கலேகி தலையை மறைக்கும் கெட்ஸ்கார்ப் இல்லாத இவரது புகைப்படங்கள் இணைய தளங்களில் வெளியானது.>மேலும், ஐரோப்பா மற்றும் சீனா நாடுகளுக்கு சென்ற போது, அவர் வெளிநபர்களுடன் கைகுலுக்கிய போட்டோகளும் வெளியானது.>இந்த நிலையில், தலையை மறைக்க துணி அணியவில்லை என்றும், முகம் தெரியாத வெளிநபர்களுடன் கைகுலுக்கியதற்காகவும் இஸ்லாமிய சட்டபடி பெண் எம்பி மினோ கலேகி மீது விசாரணை நடைபெற்றது.>இதில், அவர் அந்தப்புகைப்படங்கள் போலி என வாதிட்டார். இதனை ஏற்காத தீப்பாயம், அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதாக தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து, மினோ கலேகியின் எம்பி பதவி  பறிக்கப்பட்டுள்ளது வெப்துனியா.com

கடற்படை அதிகாரிகள் மனைவிகள் பரிமாற்றமா?


Supreme Court has directed Kerala Police DIG to constitute an SIT to probe the ... Trending | Kalam was no great man: Don't let news of death confuse you Read ... Indian Navy has dismissed the allegations of wife-swapping.
கேரள மாநிலம் கொச்சியில் கடற்படை தளத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவரின் 26 வயது மனைவி, பதவி உயர்வு பெறுவதற்காக தனது கணவர் தன்னை உயர் அதிகாரிகளின் ஆசைக்கு விருந்தளித்ததாக பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக அவர் அளித்த புகாரில், கடற்படை அதிகாரிகள் மற்றவர்களின் மனைவிகளுடன் உறவு கொள்ளும் செயல் கடற்படையில் வழக்கமான ஒன்றாக உள்ளது. எனது கனவரின் அனுமதியோடு பல கடற்படை அதிகாரிகள் என்னை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் வேறு ஒருவரின் மனைவியுடன் எனது கனவர் உறவு கொண்டதை நான் பார்த்தேன் என அந்த பெண் கூறியுள்ளார்.

'ச.ம.க-ன்னா சமந்தா கட்சினு சொல்றது இளைஞர்கள் குற்றமில்லை!' - ஆதங்க ஆர்.ஜே பாலாஜி


விகடன்.com தொகுதின்னா என்ன மீனிங்?’, ‘தமிழ்நாட்ல ஒரு 40-50 தொகுதி இருக்கும்’, ‘234 தொகுதில 233 தொகுதில ஜெயிச்சவங்கதான் சிஎம் ஆகமுடியும்’, ‘சமக-ன்னா தி.மு.க. இல்லல்ல.. சமகன்னா சமந்தாவோட கட்சி’, ‘எம்ஜியார், ஜெயலலிதா இவங்களைத் தவிர சி.எம்மா இருந்தவங்க ஓ.பன்னீர்செல்வம், விஷால், ஆர்.ஜே.பாலாஜி’, ‘இந்தியாவோட ப்ரெசிடெண்ட் மோடி அல்லது ப்ரணாப் முகர்ஜி’, ‘மோடியின் கட்சி காங்கிரஸ் கட்சி’, ‘சென்னை மேயர் விஜயகாந்த்’, ‘எலெக்‌ஷன் முடிஞ்சு ரெண்டு வாரம் கழிச்சு ரிசல்ட் வரும்’,‘சட்டமன்றம்னா பார்லிமெண்ட்’,‘ஓட்டு போட்டா கைல மார்க் வரும். ஜாலியா இருக்கும். ஃபோட்டோ எடுக்கலாம்.’- ‘என்னங்க இது…?’ என்று டென்ஷனாக வேண்டாம். கொஞ்சம் பொறுங்கள்….
ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்ட வீடியோ ஒன்றில், வினாடி வினா ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு டாக்டர், என்ஜினியர் படிக்கிற 4 இளைஞர்கள் அளித்த பதில்கள்தான் நீங்கள் மேலே படித்தது.

வெள்ளி, 13 மே, 2016

அழகிரி : இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் ...நீ எந்த தொகுதி.... ..சொல்றத செய்யுங்கம்மா’’

இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்’’ ஆதரவாளர்கள் கூட்டத்தில் பேசிய அழகிரி மதுரை சத்ய சாய் நகரில் உள்ள தனக்கு சொந்தமான தயா மஹாலுக்கு மு.க.அழகிரி இன்று காலை 9.30 மணிக்கு வந்தார்.   இதையடுத்து, மதுரை தெற்கு, மேற்கு, கிழக்கு, மத்திய தொகுதி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் இருந்து ஆதரவாளர்கள் 10.30 மணிக்கு திரண்டனர்.ஆதரவாளர்கள் ஆஜர் ஆனபிறகு கடைசியில் வருகை தருவதுதான் அழகிரியின் வழக்கம். இந்த முறை முதல் ஆளாக வந்து அமர்ந்துகொண்டார்.
ஒவ்வொருவரையும் பார்த்து, ’’நீ எந்த தொகுதி, நீ எந்த தொகுதி’’ என்று கேட்டுக்கொண்டார். பின்பு, எல்லோரையும் பார்த்து, ‘’நீங்கள் எல்லோரும் மறவாமல் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்’’ என்று கேட்டுக்கொண்டார்.அப்போது ஒரு பெண்மணி, ‘’ஐயா, நீங்க வழக்கமாக திமுகவுக்குத்தானே ஓட்டு போடச் சொல்லுவீங்க’’ என்று தயங்கியபடியே கேட்டதும்,  ‘’நான் சொல்றத செய்யுங்கம்மா’’ என்று அழுத்தமாக கூறினார்.

சாதனைகளைச் சொல்ல நூதன முறை: அதிமுக தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் ராமச்சந்திரன் பேட்டி



tamil.thehindu.com அதிமுக பொதுக்கூட்டங்கள், பிரச்சாரக்கூட்டங்கள் ஆகியவற்றின் நேரலைகள், உங்களுக்குத் தெரியுமா, சிந்திப்பீர் வாக்களிப்பீர் உள்ளிட்ட பேரணிகள், கடந்த ஆட்சிக்காலத்துக்கும், இப்போதைய ஆட்சிக்குமான வித்தியாசங்கள் என ஒளிர்ந்து மிளிர்கிறது அதிமுக வலைதளமும், அக்கட்சியின் சமூக ஊடகங்களும். இவை அனைத்துக்கும் பின்னால் அடக்கமாக நிற்கிறார் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் ராமச்சந்திரன்.அவர் தி இந்து தமிழ் இணையதளத்துக்கு அளித்த சிறப்புப் பேட்டி.ஐஐஎம் பட்டதாரி அரசியலில் நுழைந்தது எப்படி?
நான் அங்கு படித்ததற்குக் காரணமே முதல்வர்தான். எனக்குப் பெயர் வைத்ததே அவர்தான்.

பொதுச்சொத்துக்கள் விற்பனைக்கு : Airports,Roads,Habors,நிலங்கள், உருக்கு - சிமென்ட் ஆலைகள், எரிஎண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள்…

இந்திய முதலாளிகள் இரண்டு பத்தாண்டுகளாக ஆட்டையைப் போட்ட பொதுச்சொத்துக்களை எல்லாம் விற்று காசாக்க வேண்டிய கட்டாயத்தில் சிக்கியிருக்கிறார்கள், இப்போது. “பொதுத்துறையில் நிர்வாகம் சரியில்லை, நஷ்டம் அதிகம், தனியார் துறையில்தான் திறமை” என்று உதார் விட்டு பொதுத்துறை நிறுவனங்களையும், பொதுச்சொத்துக்களையும், இயற்கை வளங்களையும் கைப்பற்றிய இந்தத் தரகர்களில் பலர் இன்று மஞ்சள் கடிதாசி கொடுக்கும் நிலையில் இருக்கிறார்கள். லண்டனுக்கு ஓடிப் போன விஜய் மல்லையாவும், திஹார் சிறையில் வசிக்கும் சஹாரா சுப்ரதா ராயும் இந்த மோசடி பேர்வழிகளில் சிக்கிக் கொண்ட இரண்டு பேர் மட்டுமே. “ஓ, விஜய் மல்லையாதானே” என்று நினைக்காதீர்கள்?

கனிமொழி Crowd Puller... தருமபுரியில் கூடிய கூட்டம்...அதிர்ந்த அதிமுகவினர்

விகடன்.com தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் இருக்கும் கனிமொழி, செல்லும் இடங்களில் எல்லாம் சாதிச் சங்க தலைவர்களை சந்தித்து
விவாதிக்கிறார். 'அ.தி.மு.கவுக்கு எதிரான வாக்குகள் மட்டுமல்ல, மொத்த வாக்குகளும் தி.மு.க பக்கம் திரும்ப வேண்டும்' என அவர் பேசுவதைப் பார்த்து அதிர்ந்து கிடக்கிறார்கள் அ.தி.மு.கவினர். கனிமொழியின் பிரசார வியூகம் பற்றி நம்மிடம் விரிவாகப் பேசிய தி.மு.கவின் முக்கிய நிர்வாகி ஒருவர், " கலைஞரும் ஸ்டாலினும் வாக்காளர்கள் மத்தியில் தீவிரமாகப் பிரசாரம் செய்து வருகின்றனர். இதுதவிர, கனிமொழிக்கென்று தனியாக பிரசார வாகனம் ஒதுக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களை ஆதரித்துப் பேசுவது என்ற பொதுவான விஷயத்தையும் தாண்டி, சில விஷயங்களை அவர் செய்கிறார். பிரசாரத்தில் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் சாதி சங்க பிரமுகர்களிடம் பேசுகிறார். 

திருவண்ணாமலையில் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகளைப் புறக்கணித்த பிரேமலதா

கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் பிரச்சாரம் செய்யாமல் பிரேமலதா விஜயகாந்த் சென்றதால் தொண்டர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக, மக்கள் நலக்கூட் டணி, தமாகா இணைந்து போட்டியிடுகிறது. இந்தக் கூட்டணி தங்களுடைய கட்சி போட்டியிடும் தொகுதிகளில் மட்டுமே பிரச்சாரம் செய்வதில் கவனம் செலுத்துவதாக குற்றச்சாட்டு இருந்து வந்தது.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் நேற்று முன்தினம் மாலையில் இருந்து இரவு வரை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், தேமுதிக போட்டியிடும் திருவண்ணாமலை, செங்கம், கலசப்பாக்கம், ஆரணி மற்றும் செய்யாறு ஆகிய 5 வேட்பாளர்களை மட்டுமே ஆதரித்து பிரச்சாரம் செய்துள்ளார்.

6 மணிக்கு மேல் பிரசாரம் செய்தால் 2 ஆண்டு சிறை; தேர்தல் கமிஷன்

* ஓட்டுச்சாவடிக்குள் செல்போன் பேச தடை
 * 1 6ம் தேதி வரை மின் தடை செய்யக்கூடாது 
 * நாளை மாலை 6 மணிக்கு மேல் பிரசாரம் செய்தால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரம் நாளை (14 ம் தேதி ) மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இதற்கு மேல் பிரசாரத்தில் யாரும் ஈடுபட்டால் வழக்கு பதிவு செய்து 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி எச்சரித்துள்ளார். >தமிழக தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் தயாராகி வருகின்றன. அரசியல் கட்சியினர் பிரசாரம் முடியும் தரவாயில் உள்ளன. இன்றைய நாளை பொறுத்தவரை முக்கிய தலைவர்கள் பிரசாரம் ஏதுமில்லை. தமிழக முதல்வர் ஜெ., நேற்றே தனது பிரசாரத்தை முடித்து கொண்டார். தூத்துக்குடியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தங்கியிருந்த விடுதியில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

120 இடங்களில் திமுக வெற்றி..மக்கள் ஆய்வு அமைப்பின் கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 120 தொகுதிகளில் வெற்றி பெற்று, திமுக ஆட்சி அமைக்கும் என, மக்கள் ஆய்வு அமைப்பின் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.< சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, லயோலா கல்லூரி முன்னாள் பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான மக்கள் ஆய்வு அமைப்பினர், 177 தொகுதிகளில் கருத்துக்கணிப்புகளை நடத்தி, அதன் முடிவுகளை சென்னையில் இன்று வெளியிட்டனர்.< அதன்படி, திமுக 118 முதல் 120 தொகுதிகளிலும், அதிமுக 94 முதல் 96 இடங்கள் வரையிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிக-மக்கள் நலக்கூட்டணி 8 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. திமுக கூட்டணிக்கு வாக்களிக்க 40.7 சதவீதம் பேரும், அதிமுகவிற்கு 31.8 சதவீதம் பேரும், தேமுதிக கூட்டணிக்கு 10.4 சதவீதம் பேரும், நோட்டாவிற்கு 5.5 சதவீதம் பேரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

Gender Neutral Bathrooms கனடா அமெரிக்காவில் இருபாலின கழிப்பறைகள்

BBC:அமெரிக்காவில் மாற்றுப் பாலின பள்ளி மாணவர்கள், தாங்கள் தேர்ந்தெடுத்துள்ள பாலின அடையாளத்துக்கு ஏற்ப கழிப்பறைகளை பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று அதிபர் ஒபாமாவின் நிர்வாகம் பள்ளிக்கூடங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவுறுத்தலுக்கு இசைந்துநடக்காத பள்ளிக்கூடங்கள் நீதிமன்ற வழக்குகளை சந்திக்க நேரிடும் அல்லது மத்திய அரசின் உதவிகளை இழக்க நேரிடும் என்று கல்வி மற்றும் நீதி துறைகளிடமிருந்து வந்துள்ள உத்தரவு கூறுகின்றது. கனடாவில் ஏற்கனவே பல மாநிலங்களில் ஆண் பெண் இருபாலாரும் பயன்படுத்தும் கழிப்பறைகள் நடைமுறையில் உள்ளன

தஞ்சாவூரில் 500 போலி வாக்குப்பதிவு இயந்திரங்கள்.....

தஞ்சையை அடுத்த பாபநாசத்தின் பூண்டி என்ற பகுதியில் நடந்த சோதனையில் 500 போலி வாக்குப்பதிவு இயந்திரங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவற்றை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். சேலத்தில் இருந்து வந்து கொண்டிருந்த வாகனத்தை பாபநாசத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்திய போது, வாகனத்தில் ஏராளமான போலி வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருந்ததைப் பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவை பறிமுதல் செய்யப் பட்டு, பாபநாசம் தாலுகா அலுவலகத்தில் போலி வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒப்படைக் கப்பட்டுள்ளன. இது தொடர்பாக முருகேசன் (45) ஓட்டுநர், ரமேஷ் க்ளீனர் ஆகியோரை கைது செய்து, வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.nakkheeran,in

தேர்தல் அதிகாரிகள் அதிமுகவின் ஏஜெண்டுகள் .....ஒப்புக்கொண்ட பிறகும் பணியில் தொடர்வது ஏன்?

கோவையை  குளிர்விக்கும் கோடை மழையைவிட, வாக்காளர்களைக் கரன்சி மழையில் நனைய வைக்கும் அ.தி.மு.க,  தி.மு.கவுக்கு எதிராகப் பொங்கிக் கொண்டிருக்கிறார்கள் பா.ஜ.க, மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்கள். கோவை வடக்கு, தெற்கு, தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர் உள்ளிட்ட பத்து தொகுதிகளிலும் பணப் பரிமாற்றம் வேகமாக நடந்து வருகிறது.
'வெள்ளிக்கிழமைக்குள் அனைத்து வாக்காளர்களுக்கும் பணத்தைக் கொடுத்துவிட வேண்டும்' என்பதற்காக, ஆளுங்கட்சியும், தி.மு.கவும் செய்யும் வேலைகளால் கலங்கிப் போயிருக்கிறது மக்கள் நலக் கூட்டணி. ' நள்ளிரவு 1 மணி முதல் நான்கு மணிக்குள் பணப் பரிமாற்றம் நடந்து கொண்டிருக்கிறது.
அதிகாலையில் போடப்படும் பால் பாக்கெட், நாளிதழ் விநியோகம் என கிடைக்கும் சந்து பொந்துகளில் எல்லாம் பணத்தைத் திணிக்கும் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.

இலங்கை கஞ்சா உற்பத்தி ஏற்றுமதி...ஆயுர்வேத உபயோகம்..

Sri Lanka's Health Minister plans to cultivate cannabis for export.Health, nutritious and indigenous medicine minister Dr. Rajitha Senarathna said the government is ready to grow cannabis as an export crop. The minister said this addressing a function held at the water’s edge Battaramulla while introducing a new Ayurvedic medicine produced by the Ayurvedic Corporation.
இலங்கையில் பயிரிடப்படும் கஞ்சாவை மருந்து உற்பத்திக்காக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நாட்டில் பாரம்பரியமாக முன்னெடுக்கப்பட்டுவந்த ஆயுர்வேத மருத்துவத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆயுர்வேத மருந்து உற்பத்திக்காக கடந்த காலங்களில், அபினை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டதாகவும், மருந்து உற்பத்திக்கு கஞ்சாவும் தேவைப்படுவதால் அதனை முறையாக இலங்கையில் உற்பத்தி செய்யவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அதிமுகவினரின் பணப்பட்டுவாடா செய்யப்பட்ட பட்டியல் ஒன்று லீக்கானது

தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஆர்.ஆர்.முருகன் போட்டியிடுகிறார். இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு திடீரென அத்தொகுதியில் உள்ள சில பஞ்சாயத்துக்களை குறிப்பிட்டு ஊர்களின் பெயர்களும் அதற்கு நேராக தொகைகளும் எழுதப்பட்டிருந்தது. இதுகுறித்து விசாரித்தபோது, ஓட்டுக்கு 250 ரூபாய் அதிமுகவினர் கொடுத்ததாக தெரிவிக்கின்றனர் அத்தொகுதி மக்கள். இந்த பட்டியல் விவகாரத்தை தலைமை தேர்தல் அதிகாரியிடம் கொண்டு செல்ல தயாராகி வருகிறது எதிர்க்கட்சிகள். -வடிவேல்
பணப்பட்டுவாடா செய்யப்பட்ட பட்டியல் இதோ நீங்களே படித்து பாருங்கள்

அதிமுகவுக்கு உதவும் அரசு அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள்: ஸ்டாலின் எச்சரிக்கை

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு உதவும் அரசு அதிகாரிகள் 19-ம் தேதிக்கு பிறகு தண்டிக்கப்படுவார்கள் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார்.
வேலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கார்த்திகேயனை ஆதரித்து, வேலூர் கிருபானந்த வாரியார் சாலையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

கேரளா ஆதிவாசிகளின் நிலத்தை பறித்த நாயர் நம்பூதிரி +கேரளா அரசாங்கங்கள் ... மோடியின் குஜராத்திலும் இதேதான்


கேரளாவில் ஆதிவாசிகளில் நிலை கவலைக்கிடம் தான். மறுக்கவே முடியாது.
அதை யார் பேசுவது? மோடியா? அவருக்கென்ன தகுதி இருக்கிறது?
அவரிடம் ஆதிவாசிகளைக் காக்கும் திட்டம் ஏதும் இருக்கிறதா? பாஜகவிடம் ஏதும் திட்டம் இருக்கிறதா?
அவரது ஆட்சியில் குஜராத்தில் ஆதிவாசிகள் கடுமையாக ஒடுக்கப்பட்டார்கள். அவர் மட்டுமல்ல, இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் ஆதிவாசிகளில் நிலை படு பரிதாபம்.
யாரிடமும் அதற்கான கொள்கை இல்லை.
இடது, வலது, மத்திய என எந்தக் கட்சியிடமும் இல்லை.
எல்லோரும் ஆதிவாசியை விலக்கிய ஒரு வளர்ச்சிக் கொள்கையையே கடைபிடிக்கின்றனர்.

மதுரவாயில் பறக்கும் சாலை திட்ட முடக்கம்...கிரிமினல் குற்றம் ...மக்களின் வரிப்பணம் கோவிந்தா!

 

The Chennai Port– Maduravoyal Expressway is an 19 km long elevated expressway under construction in the city of Chennai, along the bank of the Cooum River and reaches Maduravoyal. Maduravoyal elevated expressway road project connecting the port with Maduravoyal.
மதுரவாயில்  பறக்கும்  சாலை  திட்டத்தை  அந்த திட்டம் திமுக கொண்டு வந்த திட்டம் என்ற ஒரே காரணத்துக்காகவே  முடக்கப்பட்டது என்பது முழு உலகும் அறிந்தது. மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பது மிகப்பெரிய கிரிமினல் குற்றம். அமேரிக்கா போன்ற நாடுகளென்றால் பல ஆண்டு சிறைவாசம் அனுபவிக்க வேண்டி வரும். ஜெயாவின் அதிஷ்டம் அவர் இந்தியாவில் பிறந்து விட்டார். கம்யுனிஸ்டு நாடென்றால் ஆயுள் தண்டனைதான். 

அதிமுக - திமுக இடையே கடும் போட்டி: இது தந்தி டிவி!

சென்னை: சட்டசபை தேர்தலில் வெல்லப்போவது யார் என்பது பற்றி தந்தி டிவி நடத்திய கருத்துக்கணிப்பில் அதிமுக, திமுக இடையே கடுமையான போட்டி நிலவுவது தெரியவந்துள்ளது. இதுவரை வெளியிடப்பட்ட 206 தொகுதிகளுக்கான கருத்துக் கணிப்புகளின்படி அதிமுக 96 தொகுதிகளிலும் திமுக 80 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளன. மீதமுள்ள 30 தொகுதிகளிலும் கடுமையான போட்டி நிலவுகிறது. வட மாவட்டங்களில் பல தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி கடுமையான நெருக்கடியை கொடுக்கிறது என்பதால் வெற்றி வாய்ப்பில் இழுபறி நிலையே நீடிக்கிறது. கடந்த ஏப்ரல் 25ம் தேதி முதல் திருநெல்வேலி குமரி மாவட்ட தொகுதிகளுக்கான கருத்துக்கணிப்பை வெளியிட்டது தந்தி டிவி.

வியாழன், 12 மே, 2016

அம்மாவின் கூட்டத்தில் மேலும் ஒருவர் மரணம்...ஏழாவது இறப்பு... காசுக்கு கூட்டிவந்து வெய்யிலில் கருக வைத்து...இதுதான் ஜெயாவின் வசந்த ஆட்சி.

திருநெல்வேலி:நெல்லையில் நடந்த அ.தி.மு.க.,பிரசார கூட்டத்தில் பங்கேற்ற முதியவர் ராஜாமணி,மயங்கி விழுந்து இறந்துபோனார்.திருநெல்வேலியில் முதல்வர் ஜெ.,பங்கேற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று பாளை.,பெல் மைதானத்தில் நடந்தது. இதில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி
மாவட்டங்களில் இருந்து 20 தொகுதிகளை சேர்ந்த கட்சியினர் வந்திருந்தனர். நெல்லை மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த தேவநாடார் மகன் ராஜாமணி 70, உள்ளூர் கட்சியினருடன் ஒரு வாகனத்தில் வந்திருந்தார். நேற்று
ஜெ.,பங்கேற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்க வந்தவர், சதக்கத்துல்லா மைதானத்தின் அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக நெல்லை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தது தெரிய வந்தது. ஜெ.,கூட்டங்களில் பங்கேற்பவர்கள், மதியம் வெயில் காரணமாக மயங்கிவிழுந்து இறப்பது தொடர்கிறது.

ஜெயலிதா ஜாதகம்....குரு திசை சனி புத்தி...

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஜாதகம் உண்மையிலேயே   மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய ஒரு சாதகமாகும். மிகப்பலம் வாய்ந்தவர் என்று கருதப்படும் இவர் உண்மையில் மிகவும் பலம் குறைந்தவர். இவரது இயலாமையை இவர் மறைக்க போடும் வேஷங்களில் பல. அதில் ஒன்றுதான் சதா பிறரை தன்காலில் விழவைக்கும் வியாதி.  . ஒரு விபரீத பலவீன அசுர ஜாதகம் என்பது இவரது ஜாதகம்தான். எவ்வளவுக்கு எவ்வளவு அதீத
அதிஷ்டம் இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு துரதிஷ்டமும் இவருக்கு இருக்கிறது.எவ்வளவு பிரமாண்டமான வெற்றிகளை சினிமாவிலும் அரசியலிலும் பெற்றிருந்தாலும் சதா நீதிமன்றம் சிறை வாசம் விசாரணை போன்ற துரதிஷ்டங்கள் இவரை தூங்க விடாமல் செய்யும். 
எவ்வளவு பெரிய பெரிய வெற்றிகளை இவர் அடைந்தாலும் இவர் ஒரு போதும் திருப்தி அடைவதே இல்லை . அதுதான் இவரது ஜாதகம்.
மூன்றாவது வீட்டில் அமைந்துள்ள  செவ்வாயும்  சந்திரனும்  மிக மோசமான   சசிமங்கள யோகத்தை கொடுக்கிறார்கள். இது ஒரு வகையான சண்டாள யோகம் என்று சாஸ்திரம் கூறுகிறது. அதுவும் சிங்கராசியில்... இது இவருக்குள் ஒழிந்து கொண்டிருக்கும் சர்வாதிகார ஆசைக்கு காரணம்.

புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி பிரமாண்ட வெற்றியை......15 தொகுதிகளை கைப்பற்றுகிறது N.R cong 6, Admk 5..

புதுச்சேரியில், காங்கிரஸ் கூட்டணி 15 தொகுதிகளை கைப்பற்றும் என நக்கீரன் கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. புதுச்சேரியில், சட்ட மன்றத் தேர்தல் மே 16 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், புதுச்சேரி முழுக்க உள்ள தொகுதிகளிலும் வெற்றிபெறப் போகும் வேட்பாளர் யார் என்பது குறித்தும், அடுத்து ஆட்சி அமைக்கப்போவது யார் என்றும் நக்கீரன் வாரம் இருமுறை வெளியாகும் இதழ் மாபெரும் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. இதில், காங்கிரஸ் கூட்டணிக்கு 15 தொகுதிகளும், என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகளும், அதிமுகவுக்கு 5 தொகுதிகளும், கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் ஒரு தொகுதியில் கூட திமுக வெற்றி பெறாது: மு.க.அழகிரி

சென்னை: நடைபெறவிருக்கும் தேர்தலில் மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில் கூட திமுக வெற்றி பெறாது, முன்னாள் அமைச்சரும் திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகனுமான மு.க.அழகிரி கூறினார்.
தில்லியிலிருந்து வெளியாகும் ஆங்கில பத்திரிக்கைக்கு அவர் தொலைபேசி மூலம் அளித்த பேட்டியில், திமுகவுக்கு என்னை எப்படி பயன்படுத்த வேண்டும் என தெரியவில்லை என்றார்.
மே 16 ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலில் தான் யாருக்கும் வாக்களிக்க போவதில்லை என்றும் அவர் கூறினார்.

TVS அய்யங்காருக்கு தேர்தல் வாக்குறுதி அளித்த ஜெயலலிதா ..டிவிஎஸ் ஸ்கூட்டி என்று தேர்தல் வாக்குறுதி...டெண்டர் கிடையாதோ? ராஜேஷ் லக்கானிக்கும் கமிசனா?


வே.மதிமாறன்:scooty திட்டம் மக்களுக்கு அல்ல. tvs அய்யங்காருக்கு  ‘வெற்றி பெற்றால் பெண்களுக்கு tvs scooty’ என்று கம்பெனி பெயரோடு அறிவிக்கிறது அதிமுக தேர்தல் அறிக்கை.
டெண்டர் முறையெல்லாம் கிடையாதோ.
தேர்தல் வாக்குறுதியிலேயே ஊழல்.  இதுவரை உலக வரலாற்றில் இதுபோன்ற  சட்டவிரோத அறிவிப்பை எந்த கட்சியும் செய்யவில்லை. அதென்னா டிவிஎஸ் என்று கிளியர் கட்டாக அறிவிப்பு.. அவிங்க கிட்ட ஏற்கனவே கமிஷன் வாங்கியாச்சா. ஏன் யமகா ஹோண்டா எல்லாம்
கூடாதோ?     

ஒரு யூனிட் மின்சாரத்தில் 3.5 ரூபாய் கொள்ளை! அதானியுடன் கூட்டு வேட்டை... ஷாக் இளங்கோவன்...vikatan.காம்

திண்டுக்கல்: வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு மின்சாரத்தை வாங்கியதன் மூலம் ஒவ்வொரு யூனிட் மின்சார கொள்முதலிலும் ஜெயலலிதாவுக்கு 3.5 ரூபாய் கமிஷன் கிடைத்துள்ளது என்று ஈ.வி.கே.எஸ்,இளங்கோவன் குற்றஞ்சாட்டி உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், உதகை காங்கிரஸ் வேட்பாளர் கணேசை ஆதரித்து பிரசாரம் செய்தபோது, ''தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு தமிழக மக்கள் மீது அக்கறை கிடையாது. அவர், மிருகங்களுக்கு உதவுவது போல்கூட மக்களுக்கு உதவுவது இல்லை. தமிழகத்திற்கு தேவையான மின்சாரத்தை வெளிமாநிலங்களிலிருந்து 3 ரூபாய் 50 காசுகளுக்கு வாங்க முடியும். ஆனால், அதற்கு பதிலாக அதானி குழுமத்திடமிருந்து 7 ரூபாய் கொடுத்து மின்சாரத்தை தமிழக அரசு வாங்குகிறது. இதன் மூலம், ஒரு யூனிட்டிற்கு 3 ரூபாய் 50 காசுகளை கமிஷனாக ஜெயலலிதா பெறுகிறார்" என்று குற்றம் சாட்டினார்.

திமுக காங்கிரஸ் 133 தொகுதிகள் , அதிமுக 75 தொகுதிகள், பாமக 1 தொகுதி... பிந்திய நக்கீரன் கருத்து கணிப்பு

தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கட்சி கூட்டணி 133 தொகுதிகளை கைப்பற்றும் என  நக்கீரன் கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.தமிழகத்தில் சட்ட மன்றத் தேர்தல் மே 16 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், தமிழகம் முழுக்க உள்ள 234 தொகுதிகளிலும் வெற்றிபெறப் போகும் வேட்பாளர் யார்? என்பது குறித்தும், அடுத்து ஆட்சி அமைக்கப்போவது யார்? என்றும் நக்கீரன் வாரம் இருமுறை வெளியாகும் இதழ் தமிழகம் முழுக்க கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது.
இதில்,
திமுக -  காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு 133 தொகுதிகளும்,
;அதிமுக  கூட்டணிக்கு 75 தொகுதிகளும்,
பாமகவுக்கு ஒரு தொகுதியும் கிடைக்கும் என தெரிவித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் சுமார் 24 தொகுதிகள் இழுபறி நிலையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த கருத்துக்கணிப்பால் அதிமுக கடும் அதிர்ச்சியும், திமுக - காங்கிரஸ் கட்சி கூட்டணி மகிழ்ச்சியும் அடைந்துள்ளது. நக்கீரன்.இன்

மக்கள் அனைவரும் கோபத்தில் இருக்கிறார்கள்.: தங்கம் தென்னரசு பேட்டி

தங்கம் தென்னரசு | கோப்புப் படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்திtamil.thehindu.comதங்கம் தென்னரசு | கோப்புப் படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி வேட்பாளருக்கு சில கேள்விகள் "ஆளுங்கட்சியின் அதிகார பலமும், பண பலமும் வெளிப்படையாகவே தெரிகிறது. அதை மீறி இம்முறை நிச்சயம் திமுக ஆட்சியைப் பிடிக்கும்; கருணாநிதி முதல்வராவார்" என்கிறார் திருச்சுழி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தங்கம் தென்னரசு.
2006-ல் நடந்த தொகுதி மறுசீரமைப்பில் தனியாக பிரிக்கப்பட்டது விருதுநகர் மாவட்டத்தின் திருச்சுழி தொகுதி. இரண்டு முறை நடந்த தேர்தல்களிலும் வெற்றி வாகை சூடி இருக்கிறார் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு.
அவர் தி இந்து (தமிழ்) இணையதளத்துக்கு அளித்த சிறப்புப் பேட்டி.
தொகுதி மக்களின் மனநிலை எவ்வாறு இருக்கிறது?
திமுக ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும், அதிமுக அரசு கிடப்பில் போட்டுவிட்டது. இதனால் மக்கள் அனைவரும் கோபத்தில் இருக்கிறார்கள். அரசு கலை அறிவியல் கல்லூரிக்கான அரசாணையைத் திமுக ஆட்சியில் பெற்றிருந்தோம். அது நிறுத்தப்பட்டு, வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுவிட்டது. தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படாததால், மக்கள் தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள்.

பிற்படுத்தப்பட்டோர் பாமகவுக்கு எதிராக அணிதிரண்டுள்ளதாக...

சென்னை: பிற்படுத்தப்பட்ட ஜாதி கூட்டமைப்பினர், பாமகவுக்கு எதிராக அணி திரண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வன்னியர் தவிர்த்த பிற பிறப்படுத்தப்பட்ட ஜாதியினரை பாமக வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்துகிறது என்ற ஆதங்கமே இதற்கு காரணமாகும். தலித் இளைஞர்கள் பிற பிற்படுத்தப்பட்ட ஜாதியின பெண்களுடன், கலப்பு திருமணம் செய்வதை முன்வைத்து, 'நாடக காதலை எதிர்ப்போம்..' என்று கூறி, பாமக சார்பில், வெள்ளாளர், கவுர நாயுடு, முதலியார், உடையார், கிராமணி உள்ளிட்ட பிற நடு வர்க்க ஜாதியினர் மத்தியில் தீவிர பிரசாரம் செய்யப்பட்டது. Backward class people organization decide to go against PMK in up coming assembly election

விவசாயி பெருமாள் மனைவியுடன் தற்கொலை... விவசாயிகளை கைவிட்ட ஜெயலலிதா அரசு .. வைகோ கண்டனம்

இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பெருமாள் தனது மனைவியுடன் தற்கொலை செய்து சம்பவம் குறித்து மதிமுக பொதுச்செயலாள வைகோ அறிக்கையில்,விழுப்புரம் மாவட்டம் - திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பெருமாள் மற்றும் அவரது மனைவி பழனியம்மாள் இருவரும் பூச்சி மருந்து குடித்து தங்கள் வயலிலேயே போய்ப் படுத்து தற்கொலை செய்துகொண்ட செய்தி நெஞ்சைப் பிளக்கிறது.விவசாயம் செய்ய செலவழித்த பணத்தில் ஒரு பகுதிகூட லாபம் பெற முடியாமலும், விளைப்பொருளுக்கு சரியான விலை கிடைக்காமலும் விவசாயத் தொழிலில் நட்டம் ஏற்பட்டு, வங்கிக் கடன், கந்து வட்டிக் கடனைக் கட்ட முடியாமல், தனது தந்தையும், தாயும் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாக அவர்களது மகன் அன்பரசன் கூறி உள்ளார்.

உடுமலை கௌசல்யா தற்கொலை முயற்சி... மருத்துவமனையில்

நக்கீரன்:கவுசல்யா தற்கொலை முயற்சி : உடுமலையில் பரபரப்பு திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் வெட்டிக்கொல்லப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யா தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பழனியைசேர்ந்த வேறு சாதிப்பெண் கவுசல்யாவை காதல் திருமணம் செய்துகொண்ட சங்கர், கடந்த ஏப்ரல் மாதம் 13ம் தேதி கவுசல்யாவின் பெற்றோர் அனுப்பிய கூலிப்படையினரால் பட்டப்பகலில் நடுரோட்டில் வெட்டிக்கொல்லப்பட்டார். இதையடுத்து போலீசில் சரணடைந்த கவுசல்யாவின் பெற்றோருக்கு ஜாமீன் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சங்கரின் பெற்றோருடன் வசித்து வந்த கவுசல்யா இன்று விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவத்தால் உடுமலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மாயன் காலத்து நகரம் கண்டுபிடிப்பு... 15 வயது சிறுவன் சாதனை


மெக்சிகோசிட்டி, அமெரிக்க கண்டங்களில் மாயன் நாகரிகம் அமெரிக்காவில் வசித்த செவ்விந்தியர்களிடையே நிலவிய நாகரிகம். இவர்கள் வாழ்ந்த பிரதேசங்களில் காலத்தின் போக்கு மற்றும் அரசியல் மாற்றங்களால் இன்று மத்திய அமெரிக்காவில் ஐந்து நாடுகளாக இருக்கின்றன .அவை மெக்ஸிகோ,கவுதமாலா ,பெலீஸ் ஹொண்டுரஸ் எல்சல்வடோர் என்பனவாகும் வெள்ளைக்காரர்கள் குடியேறுவதற்கு முன்பாக அங்கு பழங்குடியின மக்கள் வசித்து வந்தனர். அதிலும் மாயன் இன மக்கள் மிகுந்த நாகரீகத்துடன் இருந்து வந்தனர். கட்டிட கலைகளிலும் அவர்கள் சிறப்புற்று இருந்தார்கள். பழங்குடியின மக்கள் பெரும்பாலானோரை அழித்துவிட்டுதான் அங்கு ஐரோப்பியர்கள் குடியேறினார்கள்..15 ஆம் நுற்றாண்டில் படையெடுத்த ஸ்பானியர்கள் 90 % மாயன் மக்களை கொன்றொழித்தனர் .எஞ்சியவர்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு தொலைவிலுள்ள பேரு நாட்டுக்கு உயிர் தப்பிச் சென்றனர்.மாயன் மக்கள் அழிந்ததனாலும் சொந்த இடத்தைவிட்டு ஓடியதன் காரணமாகவும் மாயன் நாகரிகமும் கலாச்சாரமும் காலப்போக்கில் மறைநது போயின 

மக்கள்நலக் கூட்டணி – பாமக மீது ஜெயலலிதா பாய்ச்சல்!

தனக்கு எதிரி திமுக தலைவர் கருணாநிதி மட்டும் தான்; தன் கட்சிக்கு எதிரி திமுக – காங்கிரஸ் கூட்டணி மட்டும் தான்; கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வேறு கட்சியோ, அணியோ இல்லை என்பதுபோல் பாசாங்கு செய்துவந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தனக்கு ஆதரவான வாக்குகளை மக்கள் நலக் கூட்டணி, பாமக போன்றவையும் கைப்பற்றி வருகின்றன என்பதை காலதாமதமாகப் புரிந்துகொண்டு, அவற்றின்மீதும் முதல்முறையாக பாய்ந்துள்ளார்.
அரக்கோணத்தில் செவ்வாயன்று நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா பேசுகையில் கூறியதாவது: