வெள்ளி, 13 மே, 2016

அதிமுக - திமுக இடையே கடும் போட்டி: இது தந்தி டிவி!

சென்னை: சட்டசபை தேர்தலில் வெல்லப்போவது யார் என்பது பற்றி தந்தி டிவி நடத்திய கருத்துக்கணிப்பில் அதிமுக, திமுக இடையே கடுமையான போட்டி நிலவுவது தெரியவந்துள்ளது. இதுவரை வெளியிடப்பட்ட 206 தொகுதிகளுக்கான கருத்துக் கணிப்புகளின்படி அதிமுக 96 தொகுதிகளிலும் திமுக 80 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளன. மீதமுள்ள 30 தொகுதிகளிலும் கடுமையான போட்டி நிலவுகிறது. வட மாவட்டங்களில் பல தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி கடுமையான நெருக்கடியை கொடுக்கிறது என்பதால் வெற்றி வாய்ப்பில் இழுபறி நிலையே நீடிக்கிறது. கடந்த ஏப்ரல் 25ம் தேதி முதல் திருநெல்வேலி குமரி மாவட்ட தொகுதிகளுக்கான கருத்துக்கணிப்பை வெளியிட்டது தந்தி டிவி. தொடர்ந்து இருபது இருபது தொகுதிகளாக கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வரும் தந்தி டிவி நேற்று ( மே 11) திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 17 தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பது பற்றிய முடிவுகளை வெளியிட்டது. எந்த கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வருமா? இந்தமுறை திமுக ஆட்சியைப் பிடிக்கும் என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் மக்கள் முன் வைக்கப்பட்டது. மக்கள் யார் பக்கம் என்பதை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.
அதிமுக முன்னணி நேற்று வெளியான 17 தொகுதிகளுக்கான கருத்துக்கணிப்பில் காஞ்சிபுரம், திருப்போரூர், கும்மிடிப்பூண்டி, மதுரவாயல், பொன்னேரி(தனி), திருவள்ளூர், திருவொற்றியூர், அம்பத்தூர் ஆகிய தொகுதிகளில் முன்னணியில் உள்ளதாக தந்தி டிவி தெரிவித்துள்ளது.
திமுக முன்னணி செங்கல்பட்டு, மதுராந்தகம் ( தனி), ஸ்ரீபெரும்புதூர் (தனி), மாதவரம், பூந்தமல்லி ( தனி), செய்யூர் ( தனி) ஆகிய 6 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. அதே நேரத்தில் ஆவடி, உத்திரமேரூர், திருத்தணி ஆகிய தொகுதிகளில் இழுபறி நிலையே நீடிக்கிறது.
கடுமையான போட்டி இதுவரை 206 தொகுதிகளுக்கான கருத்துக்கணிப்புகளை தந்தி டிவி வெளியிட்டுள்ளது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் சனிக்கிழமை வரை தந்தி டிவி கருத்துக்கணிப்பு வெளியிடுகிறது. இதுவரை வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்புகளின்படி அதிமுக 96 தொகுதிகளிலும் திமுக 80 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளது மீதமுள்ள 30 தொகுதிகளிலும் கடுமையான போட்டி நிலவுகிறது. வட மாவட்டங்களில் பல தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி கடுமையான நெருக்கடியை கொடுக்கிறது என்பதால் வெற்றி வாய்ப்பில் இழுபறி நிலையே நீடிக்கிறது

Read more at:://tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக