திருநெல்வேலி:நெல்லையில் நடந்த அ.தி.மு.க.,பிரசார கூட்டத்தில் பங்கேற்ற
முதியவர் ராஜாமணி,மயங்கி விழுந்து இறந்துபோனார்.திருநெல்வேலியில் முதல்வர்
ஜெ.,பங்கேற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று பாளை.,பெல் மைதானத்தில்
நடந்தது. இதில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி
மாவட்டங்களில் இருந்து 20 தொகுதிகளை சேர்ந்த கட்சியினர் வந்திருந்தனர். நெல்லை மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த தேவநாடார் மகன் ராஜாமணி 70, உள்ளூர் கட்சியினருடன் ஒரு வாகனத்தில் வந்திருந்தார். நேற்று
ஜெ.,பங்கேற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்க வந்தவர், சதக்கத்துல்லா மைதானத்தின் அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக நெல்லை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தது தெரிய வந்தது. ஜெ.,கூட்டங்களில் பங்கேற்பவர்கள், மதியம் வெயில் காரணமாக மயங்கிவிழுந்து இறப்பது தொடர்கிறது.
நெல்லையில் கடந்த சில தினங்களாக பகலில் மழை பெய்தது. நேற்றும் வெயிலின் தாக்கம் குறைவாகவேஇருந்தது. நேற்றைய சம்பவத்தையும் சேர்த்து இறந்தவர்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது. தினமலர்.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக