வியாழன், 12 மே, 2016

ஒரு யூனிட் மின்சாரத்தில் 3.5 ரூபாய் கொள்ளை! அதானியுடன் கூட்டு வேட்டை... ஷாக் இளங்கோவன்...vikatan.காம்

திண்டுக்கல்: வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு மின்சாரத்தை வாங்கியதன் மூலம் ஒவ்வொரு யூனிட் மின்சார கொள்முதலிலும் ஜெயலலிதாவுக்கு 3.5 ரூபாய் கமிஷன் கிடைத்துள்ளது என்று ஈ.வி.கே.எஸ்,இளங்கோவன் குற்றஞ்சாட்டி உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், உதகை காங்கிரஸ் வேட்பாளர் கணேசை ஆதரித்து பிரசாரம் செய்தபோது, ''தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு தமிழக மக்கள் மீது அக்கறை கிடையாது. அவர், மிருகங்களுக்கு உதவுவது போல்கூட மக்களுக்கு உதவுவது இல்லை. தமிழகத்திற்கு தேவையான மின்சாரத்தை வெளிமாநிலங்களிலிருந்து 3 ரூபாய் 50 காசுகளுக்கு வாங்க முடியும். ஆனால், அதற்கு பதிலாக அதானி குழுமத்திடமிருந்து 7 ரூபாய் கொடுத்து மின்சாரத்தை தமிழக அரசு வாங்குகிறது. இதன் மூலம், ஒரு யூனிட்டிற்கு 3 ரூபாய் 50 காசுகளை கமிஷனாக ஜெயலலிதா பெறுகிறார்" என்று குற்றம் சாட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக