வெள்ளி, 13 மே, 2016

Gender Neutral Bathrooms கனடா அமெரிக்காவில் இருபாலின கழிப்பறைகள்

BBC:அமெரிக்காவில் மாற்றுப் பாலின பள்ளி மாணவர்கள், தாங்கள் தேர்ந்தெடுத்துள்ள பாலின அடையாளத்துக்கு ஏற்ப கழிப்பறைகளை பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று அதிபர் ஒபாமாவின் நிர்வாகம் பள்ளிக்கூடங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவுறுத்தலுக்கு இசைந்துநடக்காத பள்ளிக்கூடங்கள் நீதிமன்ற வழக்குகளை சந்திக்க நேரிடும் அல்லது மத்திய அரசின் உதவிகளை இழக்க நேரிடும் என்று கல்வி மற்றும் நீதி துறைகளிடமிருந்து வந்துள்ள உத்தரவு கூறுகின்றது. கனடாவில் ஏற்கனவே பல மாநிலங்களில் ஆண் பெண் இருபாலாரும் பயன்படுத்தும் கழிப்பறைகள் நடைமுறையில் உள்ளன


மாற்றுப் பாலின மாணவர்களை பாரபட்சமான நடவடிக்கைகளிலிருந்தும் உடல்-உள ரீதியான துன்புறுத்தல்களிலிருந்தும் பாதுகாப்பதற்காக இந்த உத்தரவு வந்துள்ளதாக அமெரிக்காவின் அட்டார்னி ஜெனரல் லோரேட்டா லின்ச் தெரிவித்தார்.
பிறப்புச் சான்றிதழில் குறிக்கப்பட்டுள்ள பாலினத்துக்கு ஏற்ற விதத்திலேயே மக்கள் கழிப்பறைகளை பயன்படுத்த வேண்டும் என்று கூறும் மாநில சட்டம் ஒன்று தொடர்பில் வட கரோலினா
மாநிலத்துக்கும் மத்திய அரசுக்கும் இடையே நீதிமன்றத்தில் இழுபறி இருந்துவரும் நிலையில், இந்த அறிவுறுத்தல் மத்திய அரசிடமிருந்து வந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக