வெள்ளி, 13 மே, 2016

6 மணிக்கு மேல் பிரசாரம் செய்தால் 2 ஆண்டு சிறை; தேர்தல் கமிஷன்

* ஓட்டுச்சாவடிக்குள் செல்போன் பேச தடை
 * 1 6ம் தேதி வரை மின் தடை செய்யக்கூடாது 
 * நாளை மாலை 6 மணிக்கு மேல் பிரசாரம் செய்தால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரம் நாளை (14 ம் தேதி ) மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இதற்கு மேல் பிரசாரத்தில் யாரும் ஈடுபட்டால் வழக்கு பதிவு செய்து 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி எச்சரித்துள்ளார். >தமிழக தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் தயாராகி வருகின்றன. அரசியல் கட்சியினர் பிரசாரம் முடியும் தரவாயில் உள்ளன. இன்றைய நாளை பொறுத்தவரை முக்கிய தலைவர்கள் பிரசாரம் ஏதுமில்லை. தமிழக முதல்வர் ஜெ., நேற்றே தனது பிரசாரத்தை முடித்து கொண்டார். தூத்துக்குடியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தங்கியிருந்த விடுதியில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பணப்பட்டுவாடா: இதற்கிடையில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் அதிமுக பிரமுகர் ஒருவரையும், திருவாரூரில் அதிமுக பிரமுகர் ஒருவரையும், போலீசார் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மயிலம் பகுதியில் பணம் பட்டுவாடா நடந்தது.

திண்டுக்கல் கொடை ரோட்டில் அதிமுக நிர்வாகி ஒருவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த மது பாட்டல் பறிமுதல் செய்யப்பட்டது.

தேர்தல் அதிகாரி லக்கானி கூறுகையில்;

* ஓட்டுச்சாவடிக்குள் செல்போன் பேச தடை

* 1 6ம் தேதி வரை மின் தடை செய்யக்கூடாது

* நாளை மாலை 6 மணிக்கு மேல் பிரசாரம் செய்தால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்

* பணம் பட்டுவாடா குறித்து தகவல் கொடுத்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.  தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக