சனி, 14 மே, 2016

திருப்பூர் 3 கண்டெய்னர் லாரிகளில் ரூ.570 கோடி..இன்னும் உரிமை கோரப்படவில்லை...To ஹைதராபாத் ?

திருப்பூர் அருகே உரிய ஆவணங்கள் இல்லாமல் 3 கண்டெய்னர் லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.570 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தினர்.
திருப்பூர் - ஊத்துக்குளி சாலையில் செங்கப்பள்ளி என்ற இடத்தின் அருகே அதிகாலை 1 மணி அளவில் தேர்தல் பறக்கும் படையினர் வழக்கமான வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த கண்டெய்னர் லாரிகளை மடக்கி சோதனையிட்டர். 3 கண்டெய்னர் லாரிகளிலும் கட்டு கட்டாக பணம் இருந்தது. அந்த வாகனங்களில் போலீஸார் இருவர் மஃப்டியில் இருந்தனர்.
முதற்கட்ட விசாரணையில், கோவையில் இருந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கிளைக்கு பணத்தை எடுத்துச் செல்வதாக கூறினர்.
இருப்பினும் உரிய ஆவணங்கள் இல்லாததாலும், வாகனத்துக்கு முறையாக சீல் வைக்கப்படாததாலும் லாரிகளை தடுத்து நிறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.
அங்கு ஆயுதம் ஏந்திய அதிரடிப் படை போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
வங்கி அதிகாரிகள் ஆவணங்களை கொண்டு வந்து காட்டியபின்னர் லாரிகள் ஒப்படைக்கப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணைக் குழு:
இவ்விவகாரம் தொடர்பாக திருப்பூர் மாவட்ட செலவினப் பார்வையாளர் உதய் ஸ்ரீநிவாசன் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.tamil.thehindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக