சனி, 14 மே, 2016

மேலும் ஒரு பாமக வேட்பாளர் அதிமுகவில் சேர்ந்தார்

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியதில் இருந்தே ஒவ்வொரு கட்சியிலும் அதிருப்தி கோஷ்டியினர் மாற்று கட்சிகளில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக தலைவர்களின் பிரச்சாரக் கூட்டங்களின்போது இந்த இணைப்பு நடைபெறுவது வழக்கமாக உள்ளது. தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. எனவே, இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் குப்புசாமி அ.தி.மு.க.வில் இணைந்தார். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் கட்சியில் இணைந்துள்ளார். இதேபோல், நாங்குநேரி பா.ம.க. வேட்பாளர் திருப்பதி நேற்று அ.தி.மு.க.வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.மாலைமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக