சென்னை: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் யாரையும் பழிவாங்க மாட்டோம் என
சென்னை சிந்தாரிப்பேட்டையில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக
தலைவர் கருணாநிதி பேசினார்.
அவர் மேலும் பேசியதாவது: திராவிட இயக்கம் மக்களுக்காக உழைத்த இயக்கம். நல்லாட்சி அமைய வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். இதற்கென அனைவரும் பாடுபட வேண்டும் . நல்லாட்சி அமைய ஆதரவு அளிக்க வேண்டும். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும். >2001ல் அரசியல் பழிவாங்கும் படலம் நடந்தது. என்னை கைது செய்து எந்த அளவுக்கு கொடுமை செய்ய முடியுமோ அந்த அளவிற்கு என்னை கொடுமைப்படுத்தினர். ஆனால் தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் நாங்கள் யாரையும் பழிவாங்க மாட்டோம். பழிவாங்கும் எண்ணம் எனக்கு தெரியாது. எனக்கு அண்ணா துரை இதனை கற்று தரவில்லை.
சுயநலம் கடந்து வந்தது தான் திமுக. இந்த இயக்கத்திற்கு வெற்றியை தர வேண்டியது. மக்களின் கடமை. மக்களின் தன்மானம், சுய மரியாதையை காப்பாற்ற குரல் கொடுக்கிறோம். இந்த போராட்டத்தில் வெற்றி பெறுவோம். மனிதநேயத்தை காப்பாற்ற மக்கள் ஒத்துழைப்பு தாருங்கள் . இவ்வாறு கருணாநிதி பேசினார்.
ஸ்டாலின் பேச்சு : கொளத்தூரில் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் கூறியதாவது: தண்டனை பெற்று, விடுதலை வாங்கிய ஜெ, இன்னும் திருந்தவில்லை. வேளச்சேரி அருகே சினிமா தியேட்டர் வாங்கியிருக்கின்றனர். 900 ஆயிரம் ஏக்கர் பங்களாவில் உல்லாசமாக இருக்கும் ஜெ., தவ வாழ்வு குறித்து பேச அருகதை இல்லை. மக்கள் நலபணியாளர்ள் வீட்டுக்கு அனுப்பியது, செம்மொழி பூங்காவை முடக்கியது, 110 விதியின் கீழ் அறிவிக்கும் திட்டம் ஏதும் நிறைவேற்றபட்டதா , கொலை, கொள்ளைகள் பெருகியது. இது தான் கடந்த ஆட்சியின் சாதனை.
தமிழகம் தொழில் துறையில் பின்தங்கி போனது. இப்படிப்பட்ட ஆட்சி நமக்கு தேவையா என்பதற்கு பதில் சொல்லும் நாள் தான் வரும் 16 ம் தேதி. வேலைவாய்ப்பின்மை, தொழிற்சாலைகள் மூடல் என ஜெ., ஆட்சியில் நடந்தது. இளைஞர்களுக்காக வேலை வாய்ப்பை பெற்று தரும் கருணாநிதி ஆட்சி மலர வாய்ப்பு தாருங்கள். இவ்வாறு ஸ்டாலின் பேசினார். தினமலர்.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக