சனி, 14 மே, 2016

பத்திரிக்கையாளர்கள் சுட்டுக்கொலை:பீகார், ஜார்க்கன்ட்டில் அட்டூழியம்


பாட்னா:பீகார் மற்றும் ஜார்க்கன்ட் மாநிலங்களில் இரண்டு பத்திரிக்கையாளர்கள் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் ஷிவான் மாவட்டத்தில் ஆங்கில பத்திரிக்கை ஒன்றின் செய்தியாளராகப் பணியாற்றி வந்தவர் ராஜீவ் ரஞ்சன். இவர் ரயில் நிலையம் அருகே இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். துப்பாக்கிச் சூட்டில் கழுத்து மற்றும் தலையில் குண்டு பாய்ந்து ராஜீவ் ரஞ்சன் பலியானார். இது குறித்துத் தகவல் அறிந்த போலீசார் ராஜீவ் ரஞ்சன் உடலை பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.vikatan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக