சனி, 5 அக்டோபர், 2013

Herbalife மதம் மாற்றுபவர்களை விட மோசடி பிரசாரகர்கள்


04-herbalife-1சுமார் ஒன்றரை
ஆண்டுகளாக நடந்த துரத்தல் அது. நான் தினசரி காலையில் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் பூங்காவில் நடைபயிற்சி செய்வது வழக்கம். பூங்காவின் நுழைவாயில் அருகே அந்தப் பெண்ணையும் டிப்டாப் இளைஞரையும் பார்க்க முடியும். வெள்ளைக் கோடுகளும் நீலக் கோடுகளும் போட்ட ஒரு சிறிய நிழற்குடையை பக்கத்திலேயே வைத்திருப்பார்கள். அதன் கீழே ஒரு எடை பார்க்கும் கருவி இருக்கும். கையில் ஒரு சிறிய கருவியை வைத்திருப்பார்கள். முகத்தில் மாறாத புன்னகை.
“சார் வாங்க சார், இலவசமா உடல் எடை பாருங்க, உங்க கொழுப்பு அளவு என்னானு சொல்றோம் சார். இலவசம் தான் வாங்க சார்” தேனில் சர்க்கரையைக் கலந்தது போன்ற இனிமை.
எனக்கு இவர்களது தோற்றமும் அணுமுறையுமே கொஞ்சம் மனக்கிலேசத்தை உண்டாக்கியது. பல ஆண்டுகளுக்கு முன் கல்லூரியில் படித்த காலத்தில் இது போன்ற டிப்டாப் பெந்தேகொஸ்தே ஆசாமி ஒருவரிடம் ‘நற்செய்தி’ கேட்கச் சென்று கிடைத்த அனுபவம் வேறு அச்சுறுத்தியது. அன்று காதில் ரத்தம் வழிய ஓடிவந்த எனக்கு தொடர்ந்து பத்து நாட்களாக ஆவி, சாத்தான், இயேசு, பரமண்டலம், நரகம், கொதிக்கும் வென்னீர், உருகும் எலும்பு, சாவு என்று ஒரே கெட்ட சொப்பனமாக வந்து கொண்டிருந்தது. வீட்டில் பயந்து போய் தாயத்து மந்திரிப்பவரிடம் அழைத்துச் சென்றனர். அதற்கடுத்த பத்து நாட்கள் எனது கனவுக்குள் முண்டக்கண் மாரியும், சுடுகாட்டு மாடனும், ஒண்டி முனியும், பிடாரியும் ஊடுருவி கும்மியடித்தனர். அந்த எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆயுளுக்கும் மறக்கவே முடியாது.
என்றாலும் தொடர்ந்த இவர்களின் நச்சரிப்புத் தாளாமல், என்னதான் சொல்கிறார்கள் பார்ப்போமே என்று முடிவு செய்தேன். எடையையும் உயரத்தையும் அளந்தவர்கள், ஒரு சிறு கருவியை என்னிடம் கொடுத்து இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளச் சொன்னார்கள்.
“ஐயையோ சார்…..” எப்போதும் சிரிப்பைக் காட்டும் அப்பெண்ணின் முகத்தில் அதிர்ச்சி. அந்த இளைஞரின் முகமும் இருண்டது.
“ஐயையோ என்னாங்க எதுனா கேன்சாரா…?” சமீப நாட்களாக சளிக் காய்ச்சல் வருவது போல் எல்லோருக்கும் கேன்சர் வரப்போவதாக பத்திரிகைகளில் பீதியைக் கிளப்பி வருகிறார்களே.
“உங்க உடம்பில் நிறைய கொழுப்பு சேர்ந்திருக்கு சார். இப்படியே விட்டீங்கன்னா கொலஸ்ட்ரால் கூடும், ரத்த அழுத்தம் அதிகரிக்கும், சர்க்கரை நோய் வரலாம், அப்புறம் மாரடைப்பு வரும். எடை அதிகமா இருக்கிறதாலே ஆர்த்ரிடிஸ் வரும், முதுகு வலி, மூட்டு வலி, கழுத்தெலும்பு தேய்மானம், தோள்பட்டை வலி… கேன்சரே கூட வந்தாலும் வரலாம் சார்.”

Qatar கொத்தடிமைகள் 50 டிகிரியில் 12 மணி முதல் 16 மணி நேரம் வரை வேலை ! சூடு தாங்காமல் சாகும் வெளிநாட்டு தொழிலாளிகள்

கொத்தடிமை உழைப்புகத்தார் : உலகக் கோப்பைக்காக உயிரை விடும் தொழிலாளிகள் கட்டிடப் பணிகள் 50 டிகிரி சூட்டில் 12 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை, ஓய்வு நாட்களோ விடுமுறை நாட்களோ இல்லை. இந்த மோசமான சூழலில் பல தொழிலாளர்கள் விரைவில் இறந்து விடுகிறார்கள் Qatar
2022-ம் ஆண்டு கத்தார் நாட்டில் நடக்கவிருக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்கான கட்டிட வேலைகள் சுமார் 4,000 புலம் பெயர் ஏழை கட்டிடத் தொழிலாளர்களின் உயிரை பலி வாங்கி விடும் என அச்சம் தெரிவித்திருக்கிறது சர்வதேசிய தொழிற்சங்க கூட்டமைப்பு. இங்கிலாந்தை சேர்ந்த கார்டியன் பத்திரிக்கை அம்பலப்படுத்தியுள்ள கத்தாரின் நவீன கொத்தடிமைத்தனத்தை பற்றிய இந்த செய்தி நம்மை குலை நடுங்கச் செய்கிறது.
கத்தார் : புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சம்பளமில்லாமல் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

ஜெயபால் ரெட்டி தெலுங்கானா முதல்வராகிறார் ?

ஹைதராபாத்: தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திராவில் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. அதே நேரத்தில் தெலுங்கானாவிலோ யார் புதிய மாநில முதல்வர் என்ற விறுவிறு விவாதம் நடைபெற்று வருகிறது. தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துவிட்டது. இதற்கான மசோதா வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படக் கூடும். இதனால் தெலுங்கானா உருவாவது தவிர்க்க முடியாதது.
அப்படி உருவாகும் தெலுங்கானா மாநிலத்தின் முதல்வர் யார் என்ற விறுவிறுப்பான விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது. மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டிக்கு கூடுதல் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
அதேபோல் மாநில அமைச்சர்கள் ஜனா ரெட்டி, உத்தம்குமார் ரெட்டி, அருணா ஆகியோரது பெயரும் அடிபடுகிறது. துணை முதல்வரான தாமோதர் ராஜநரசிம்மாவின் பெயரும் அடிபடுகிறது. அத்துடன் மாநில காங்கிரஸ் தலைவர் சீனிவாச, அமைச்சர் பொன்னால லக்ஸ்மையா பெயரும் அடிபடுகிறது

கால்நடைத்தீவன ஊழல் வழக்கில் நிதீஷ்குமாரும் சிக்குகிறார்?

 ராஞ்சி: பீகார் மாநிலத்தில் ரூ.950 கோடி கால்நடைத்தீவன ஊழல் வழக்கில் அம்மாநில முதல்வர் நிதீஷ்குமாரும் சிக்குகிறார். தீவன ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கால்நடைத் தீவன ஊழலில் தற்போதைய பீகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. 1995-ம் ஆண்டு தேர்தலின் போது அவர் கால்நடைத்துறை அதிகாரி சின்கா என்பவரிடம் இருந்து ரூ.1.40 கோடி லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. தகவல் அறியும் உரிமை சட்டப்படி மிதிலேஷ்குமார் சிங் என்பவர் இதை கண்டு பிடித்தார். நிதீஷ்குமாருக்கு எதிரான தகவலின் அடிப்படையில் மிதிலேஷ்குமார் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கு வரும் 22-ந்தேதிக்குள் பதில் அளிக்கும்படி சி.பி.ஐ.க்கு நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. இதன் மூலம் நிதீஷ்குமாரும் கால்நடைத் தீவன ஊழலில் சிக்குவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
  tamil.oneindia.in

15 தொகுதிகளில் பா.ம.க. தனித்து போட்டி! பா.ம.க. அறிவித்து விட்டது.

தென்சென்னை, திருவள்ளூர், ஸ்ரீபெரும் புதூர், திருவண்ணாமலை, கடலூர், சிதம்பரம், திண்டிவனம், காஞ்சீபுரம், சேலம், தர்மபுரி, விழுப்புரம், ஆரணி, கிருஷ்ணகிரி, அரக்கோணம், கள்ளக்குறிச்சி 
பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக பா.ம.க. அறிவித்து விட்டது. இதையடுத்து வடமாவட்டங்களில் தங்களுக்கு சாதகமான தொகுதிகளை பா.ம.க தேர்வு செய்துள்ளது.
அதில் தென்சென்னை, திருவள்ளூர், ஸ்ரீபெரும் புதூர், திருவண்ணாமலை, கடலூர், சிதம்பரம், திண்டிவனம், காஞ்சீபுரம், சேலம், தர்மபுரி, விழுப்புரம், ஆரணி, கிருஷ்ணகிரி, அரக்கோணம், கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகள் அடங்கி உள்ளன.
கடந்த தேர்தல்களில் இந்த தொகுதிகளில் பா.ம.க. பெற்ற ஓட்டுகள் மற்றும் சமுதாய அமைப்பு வாரியாக இருக்கும் ஆதரவு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த தொகுதிகளை தேர்வு செய்துள்ளனர்.
இந்த தொகுதிகளில் தகுதியான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளை பா.ம.க. தீவிரப்படுத்தி இருக்கிறது.

பாரதிராஜாவின் 16 வயதினிலே மீண்டும் வருகிறது ! என்றும் பதினாறு !

"16 வயதினிலே' படத்தின் டிரெய்லரை சென்னையில் வெள்ளிக்கிழமை
வெளியிடும் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன். உடன் (இடமிருந்து) நடிகர் சத்யஜித், தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு, இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், பார்த்திபன். பணம் அதிகமாக இருந்தாலும், சுயமரியாதையுடன் சினிமாவில் இருப்பது சிரமம் என்றார் நடிகர் ரஜினிகாந்த். 1977-ஆம் ஆண்டு வெளியான "16 வயதினிலே' திரைப்படம் டிஜிட்டல் மற்றும் சினிமாஸ்கோப் தொழில்நுட்பத்தில் மீண்டும் திரைக்கு வரவுள்ளது. நவீன தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னையில் வெள்ளிக்கிழமை நடந்தது.
விழாவில் நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சத்யஜித், இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், பார்த்திபன், தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வெள்ளி, 4 அக்டோபர், 2013

கூவத்தை விட அழுக்கான தமிழருவியின் கடைசி புகலிடம் ,,, வேறு என்ன? வைகோவின் காவிதான் !

தமிழருவி மணியன்

நாவைச் சுழட்டும் காவிப்பூனை!

ன்னதான் தனி ‘ரூட்டு’ போட்டு நடை நடந்து காண்பித்தாலும், காந்தியத்தின் கடைசி ரவுண்டு காவிதான் என்பதற்கு சமீபத்திய உதாரணம் தமிழருவி மணியன்.  ”தமிழக முதல்வர் வைகோ, இந்தியப் பிரதமர் மோடி” என்ற தனது காந்தி கணக்கின் மூலம் பிழைப்புவாத புலவர் மரபின் ‘ஆழ்வார்’ வேலையில் தன்னை அடித்துக்கொள்ள ஆளில்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.
தமிழருவி மணியன்
ஆசிட் அடிப்பது,
மனைவியையே தந்தூரி அடுப்பில் வறுத்தெடுப்பது
என்ற  கலாச்சாரத்தில்,
‘தமிழருவி’ கல்லா கட்ட தகுந்த வாய்ப்பற்று போனதால்,
ச்..சீ..சீ… இந்தக் காங்கிரசே மோசம்,
உழைப்பவர்களுக்கு மதிப்பில்லை என்று
கவுச்சி வெறுத்த பூனையாய் பேசிப் பிழைத்து,
கருணாநிதியின் கண் ஜாடைக்கும் சொறிந்து
கழக ஆட்சியிலும் சில பழங்களைத் தின்று பசியாறி,
ஆள்பவர்களை நேருக்கு நேர் எதிர்க்க திராணியற்று
அரசியல் ஒழுக்கம், ஊழல் எதிர்ப்பு, மது ஒழிப்பு என
வயித்துக்கு பங்கமில்லாமல் வாய்ஜாலம் காட்டி,
மொன்னையான அறிக்கைகள் வாயிலாக ஆளும் வர்க்க
தொண்ணை நக்கி உயிர்வாழ்ந்து,
திடீரென!
“ஆகா ஈழத்தமிழனுக்கு ஒரே எதிரி கருணாநிதிதான்” என்று எகிறிக் குதித்து
போயசின் ஈழத்தாய்க்கு எலி பிடித்ததன் மூலம்,
ஜெயா டி.வி.யில், பார்ப்பன ஊடகங்களில்
கஞ்சி குடித்து வயிறு வளர்த்து சமர்த்தான அக்கிரகாரத்து பூனை
இப்போது இன்னும் ஒரு படி தாவி
காவிப் பயங்கரவாதிகளின்
காலை நக்கவும் தயாராகிவிட்டது.

ஒரே குஷிதான் போங்கள் ? தொண்டர்கள் வேலை செய்ய! மக்கள் ஒட்டு போட! மாறன் பிறதேர்ஸ் பதவியும் பணமும் பெற ?

தயாநிதி திருட்டை அம்பலம் ஆக்கிய  அதிகாரி மதிவாணனின் ஒய்வுதியத்தை  நிறுத்திய BSLN , தி.மு.க. முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் சட்டவிரோதமாக தனது சென்னை வீட்டில் 323 தொலைபேசி இணைப்புகளை வைத்திருந்தது குறித்து சி.பி.ஐ. செய்யும் விசாரணை எதுவரை போகும்? தற்போதைய மத்திய அரசில் அதிக தூரம் போகாது என்பதற்கு ஆதாரமாக, இந்த ஊழலை அம்பலப்படுத்திய பி.எஸ்.என்.எல். அதிகாரியின் ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது மக்கள் பணத்தில் கம்பனி நடத்திய மாறன் சகோதரர்களின் சட்டவிரோத இணைப்பு பற்றிய தகவலை வெளியிட்டதற்காக அந்த அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல்.
இந்திய மக்கள் ஒரு பக்கத்திலும், மாறன் குடும்பமும் மத்திய அரசும் எதிர் பக்கத்திலும் நிற்கும் இந்தப் போராட்டத்தில், ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ள அதிகாரியின் பெயர் மதிவாணன். இவர் துணைக் கோட்டப் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
தி.மு.க.வுக்கு தமிழக மக்கள் ஆதரவு கொடுத்ததில், அக்கட்சி தமிழகத்தில் பெற்ற எம்.பி.க்களை வைத்து மத்திய அரசுக்கு ஆதரவு கொடுக்கப்பட்டது. மத்தியில் ஆட்சி கவிழாமல் இருப்பதற்கு தி.மு.க. தயவு தேவைப்பட்டது. அதையடுத்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி குடும்பத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அமைச்சர் பதவிகளை கொண்டு ‘எதுவும் செய்யலாம்’ என்ற நிலை ஏற்பட்டது.

தலைக்கு10 லட்சம் அறிவிக்கப்பட்ட பக்ருதீன் சென்னையில் பிடிபட்டான்

போலீஸ் பக்ருதீன் பிடிபட்டது எப்படி? பரபரப்பு தகவல்கள் மதுரையில் பாஜக மூத்த தலைவர் அத்வானி வரும் பாதையில் பைப் வெடிகுண்டு வைத்ததாக பதியப்பட்ட வழக்கில் போலீஸ் பக்ருதீன் உட்பட 4 பேரை முக்கிய குற்றவாளிகளாக சிபிசிஐடி போலீசார் அறிவித்திருந்தனர். மேலும் இவர்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு தலா ரூபாய் 10 லட்சம் பரிசு என்றும் தமிழ்நாடு முழுவதும் போஸ்டர் ஒட்டினர் போலீசார்.
இந்த சூழ்நிலையில் சென்னை புறநகர் பகுதியில் திருவள்ளூர் மாவட்ட எல்லையில் முக்கிய குற்றவாளியான போலீஸ் பக்ருதீன் பதுங்கியிருக்கும் தகவல் சிபிசிஐடி போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
உயர்மட்ட அளவிலேயே இந்த தகவல்களை பரிமாறிக்கொண்டு குறிப்பிட்ட அந்த பகுதியை சுற்றி வளைத்தனர் போலீசார். அந்த அதிரடி வளைப்பில் போலீஸ் பக்ருதீன் வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணி அளவில் போலீசாரிடம் சிக்கி கொண்டான்.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், டெல்லி, சட்டீஸ்கர் சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிப்பு

டெல்லி: ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், டெல்லி, சட்டீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத், தேர்தல் ஆணையர்கள் பிரம்மா, நசீம் சைதி ஆகியோர் இன்று காலை டெல்லியில் கூடி தேர்தல் தேதிகளை முடிவு செய்தனர். பின்னர் மாலையில் தேர்தல் தேதிகளை சம்பத் அறிவித்தார். 90 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட சட்டீஸ்கரில் நவம்பர் 11, 19 ஆகிய இரு தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், டெல்லி, சட்டீஸ்கர் சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிப்பு 230 தொகுதிகள் கொண்ட மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 25ம் தேதியும், 200 தொகுதிகள் கொண்ட ராஜஸ்தானில் டிசம்பர் 1ம் தேதியும் தேர்தல் நடைபெறும். 70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டசபைக்கு டிசம்பர் 4ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.

Amway மற்றவர்களை ஏமாற்றக் கற்றுக்கொடுத்தல்

ஆம்வே இந்த பல் அடுக்கு விற்பனை திட்டங்கள் சீட்டுக் கம்பெனி, ஈமு கோழி வளர்ப்பு, தேக்கு மரப் பண்ணைத் திட்டங்கள் போல மக்களை ஏமாற்றுவதோடு மட்டும் நில்லாமல் ஒரு படி மேலே போய் தமது உறுப்பினர்கள் மற்றவர்களை ஏமாற்றவும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. அதைச் செய்வதற்கான சிறப்புப் பயிற்சிகளை அளிக்கின்றன. அடுத்த சுற்றில் ஏமாறுவதற்கு புதியவர்களை ஈர்க்க ஒவ்வொரு உறுப்பினருக்கும் தமது நட்பு, உறவினர் வட்டத்தில் இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தவும், அவர்களது பலவீனத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவும் பயிற்சியளிக்கின்றன. பாதிக்கப்பட்ட பலரும் திட்டத்தின் கவர்ச்சியை விட நட்பு, உறவு அளித்த நம்பிக்கை தான் இத்திட்டத்தில் சேர அடிப்படையான காரணமாக இருப்பதாகக் கூறுகிறார்கள்.
புரட்சிகரமான திட்டம் ஒண்ணு இருக்குங்க. நாம வாங்குற எந்தப் பொருளா இருந்தாலும், அது விநியோகஸ்தர், சில்லறை விற்பனையாளர் இப்படி விற்பனை சங்கிலியில பல கைகளைத் தாண்டி தானுங்க வருது. அதுனால பொருளோட விலை அடக்க விலைய விட ரொம்ப ஏறிடுதுங்க. நான் இப்ப சொல்லப் போற திட்டத்தில, பயன்படுத்தக்கூடிய பொருளை நேரடியாக நிறுவனத்திடமிருந்தே வாங்குறீங்க. அதனால் ’தரமான’ பொருள் மலிவா கிடைக்குது. அடுத்ததா அந்தப் பொருளை உங்க நண்பர்களிடம் அறிமுகப்படுத்தி அவர்களை வாங்க சொல்றீங்க. அவங்க வாங்குனா உங்களுக்கு அதுல ஒரு கமிசன் கிடைக்கும். உங்களுக்கு கீழே இருக்கிற விற்பனையாளர்கள் செய்யுற வியாபாரத்துல உங்களுக்கும் ஒரு கமிசன் வரும்.
உங்களுக்கு கீழே இருக்கிறவங்க, அவங்களுக்கு கீழே இப்படி அந்த வியாபார வலைப்பின்னல் வளர்ந்துச்சுன்னா சில்வர், கோல்டு, பிளாட்டினம் அப்புறம் ‘டைமண்ட்’ இப்படி உங்க தரமும் ஏறிக்கிட்டே போகும். எனக்கு தெரிஞ்ச டைமண்ட் தர உறுப்பினர் ஒருத்தர் மாசத்துக்கு ஒன்றரை லட்சம் சம்பாதிக்கிறார்.

ஜெகனின் சுனாமி அலை ஆந்திராவை கலக்குகிறது ! காலவரையற்ற உண்ணாவிரதமும் ஆரமபமாம் !

தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காலவரையற்ற உண்ணாவிரதம்:
ஜெகன்மோகன் ரெட்டி தனி தெலுங்கானாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆந்திராவில் வெள்ளிக்கிழமை முதல் 72 மணி நேர முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஜெகன்மோகன் ரெட்டியின் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. மாத காலம் சிறையில் இருந்ததைக் காட்டிலும், இன்றைய மத்திய அமைச்சரவையின் ஒப்புதலால் காயமடைந்திருப்பதாக ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், தனி தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சனிக்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க போவதாக தெரிவித்துள்ளார். வாக்கு வங்கி அரசியலுக்காக ஆந்திராவை மத்திய அரசு பிரிப்பதாகவும், தமது காலவரையற்ற உண்ணாவிரத்தத்தில் பிறகட்சிகளும் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்<

ஒபாமா: அரசாங்க நிறுவனங்கள் மூடப்படு வதை தடுப்பதற்கு குடியரசுக் கட்சி கப்பம் கோருகிறது

மூடப்­பட்ட அர­சாங்க நிறு­வ­னங்­களை மீள ஆரம்­பிப்­ப­தற்­கான ஒரு நிபந்­த­
னை­யாக தன்னால் கைச்­சாத்­தி­டப்­பட்ட சுகா­தார கவ­னிப்பு சீர்­தி­ருத்­தத்தை குழி­தோண்டிப் புதைக்க தான் அனு­ம­திக்கப் போவ­தில்லை என அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா சூளு­ரைத்­துள்ளார்.
புதிய வர­வு-­செ­ல­வுத்­திட்­ட­மொன்­றுக்கு இணக்கம் தெரி­விக்க அமெ­ரிக்கப் பாரா­ளு­மன்­றத்தின் இரு சபை­களும் தவ­றி­ய­தை­ய­டுத்து அர­சாங்க நிறு­வ­னங்­களை பகு­தி­யாக மூடும் நிர்ப்­பந்­தத்­திற்கு அமெ­ரிக்கா உள்­ளா­னது.பராக் ஒபாமா தனது சுகா­தார சட்­டத்தை பிற்­போ­டாத வரை புதிய வர­வு-­செ­ல­வுத்­திட்­டத்­திற்கு அங்­கீ­காரம் வழங்க முடி­யாது என குடி­ய­ரசுக் கட்­சி­யினர் வலி­யு­றுத்­தி­யி­ருந்­தனர்.
அமெ­ரிக்க அர­சாங்க நிறு­வ­னங்­கள் மூடப்படுவதை முடிவுக்கு கொண்டு வரு­வ­தற்கு குடி­ய­ரசுக் கட்­சி­யினர் கப்பம் கோரு­வ­தாக பராக் ஒபாமா தெரி­வித்தார்.மேற்­படி அர­சாங்க நிறு­வ­னங்கள் மூடப்­பட்­டதால் 700,000க்கு மேற்­பட்ட அர­சாங்க ஊழி­யர்கள் சம்­பளம் இல்­லாத விடு­மு­றையை எதிர்­கொண்­டுள்­ளனர்.அத்­துடன் தேசிய பூங்­காக்கள், அருங்­காட்­சி­ய­கங்கள் மற்றும் பல அர­சாங்கக் கட்­ட­டங்கள் மூடப்­பட்­டுள்­ளன.

சீனா : கழிப்பிடங்களை அசுத்தம் செய்யாதீர் ! பொது இடங்களில் மூக்கை நோண்டாதீர் !


பீஜிங்:சீனாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏராளமானோர் சுற்றுலா செல்கின்றனர். அப்போது, நீச்சல் குளங்கள், ஓட்டல்கள், பொது இடங்களில் அநாகரிகமாக நடந்து கொள்வதாக பல புகார்கள் எழுந்தன. இதனால் சீனாவுக்கும், மக்களுக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது என்று பல்வேறு தரப்பில் இருந்தும் சீன சுற்றுலா துறைக்கு புகார்கள் வந்தன. சமீபத்தில் எகிப்து நாட்டுக்கு சென்ற சீன பயணி ஒருவர், அந்நாட்டின் புராதன சிலை ஒன்றை சிதைத்து விட்டதாக பரபரப்பாக புகார் வந்தது. இதற்கு சீன உயர் அதிகாரி வாங் யாங் தனது வருத்தத்தையும் கண்டனத்தையும் சமீபத்தில் வெளியிட்டார். ‘சீன சுற்றுலா பயணிகளின் விரும்பத்தகாத நடத்தையால், சீன மக்களின் மதிப்பு உலக நாடுகளின் மத்தியில் குறைகிறது. எனவே, வெளிநாடுகளில் சீன மக்கள் நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும் என்று கூறி சமீபத்தில் சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை சீன அரசு அறிவித்தது. பேசாம சீனா பயலுவளை நம்ப போலீசில் சேர்த்தாநாமளும் உருப்பட்டுவோம்ல 

மம்தா பானர்ஜி : வேலை இல்லாத இளைஞர்களுக்கு ரூ.1,500 மாத உதவித்தொகை:

மேற்கு வங்காள மாநில அரசு, வேலை தேடும் இளைஞர்களுக்கு மாத உதவித்
தொகையாக ரூ.1,500 அறிவித்து உள்ளது. இதுகுறித்து முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியதாவது:- மேற்கு வங்காள மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 8 கோடி பேர். இதில் ஒரு கோடி இளைஞர்கள் வேலை தேடி வருகின்றனர். இவர்களுக்கு மாத செலவுக்காக ரூ.1,500 வழங்க முடிவு செய்யப்பட்டது. 'யுவஸ்ரீ' என்ற பெயரில் முதல் கட்டமாக ஒரு லட்சம் பேருக்கு இந்த திட்டம் அமல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்maalaimalar.com

தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு: சிரஞ்சீவி உட்பட 4 அமைச்சர்கள் ராஜினாமா

புதுடில்லி: தனி தெலுங்கானா அமைப்பதற்கு, மத்திய அமைச்சரவை, நேற்று ஒப்புதல் அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து. ஆந்திராவை சேர்ந்த, சிரஞ்சீவி உட்பட மத்திய அமைச்சர்கள் 4 பேர், பதவியை ராஜினாமா செய்தனர். பதவி விலகியவர்கள் விபரம்:சிரஞ்சீவி: ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் 1955 ஆக., 22ல் பிறந்த இவர், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகராக உயர்ந்தார். தமிழ், கன்னடம், இந்தி படங்களிலும் நடித்துள்ளார். சிறந்த நடிப்புக்காக தேசிய விருதும் பெற்றுள்ளார். நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான, பத்ம பூஷன் விருதையும் பெற்றுள்ளார். 2008ல், பிரஜ்ஜா ராஜ்ஜியம் என்ற தனிக்கட்சி தொடங்கினார். 18 எம்.எல்.ஏ.,க்களை இக்கட்சி பெற்றது. 2011 பிப்., 6 ல்,தனது கட்சியை காங்., கட்சியுடன் இணைத்தார். 2012 அக்., 28ம் தேதி தனிப்பொறுப்புன் கூடிய, சுற்றுலாத்துறை அமைச்சராக பதவியேற்றார். நேற்று ராஜினாமா செய்தார்.

வியாழன், 3 அக்டோபர், 2013

சீமாந்த்ராவுக்கு விஜயவாடா தலைநகராகிறது ! தெலுங்கானவுக்கு ஹைதராபாத் தலைநகராகிறது ! தற்காலிக பொது நகராக ஐதராபாத்தே நீடிக்கும் !

புதுடெல்லி: தெலங்கானா தனி மாநிலம் உருவாக்க ஆந்திராவில் கடும்
எதிர்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் தெலங்கானாவுக்கு ஐதராபாத்தையும், சீமாந்திராவுக்கு விஜயவாடாவையும் தலைநகராக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான தீர்மானத்தை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்றிரவு தயாரித்துள்ளது. இந்த குறிப்பு அமைச்சரவை குழுவுக்கு அனுப்பப்படும் என்றும் விரைவில் அமைச்சரவை ஒப்புதல் வழங்கும் என்றும் டெல்லி வட்டாரங்கள் தெரிகின்றன. தெலங்கானா மாநிலம் அமைப்பதற்கான நடைமுறைகளை பரிசீலிக்க அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கும் என்று கூறப்படுகிறது.தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. ஆந்திராவில் இருந்து 10 மாவட்டங்களை பிரித்து தெலுங்கானா அமைக்கப்படுகிறது. மேலும்  தெலுங்கானா உருவாக்கும் நடைமுறையை வகுக்க அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்ள்ளது. புதிய தெலுங்கானா மற்றும் சீமாந்திராவின் பொது தலைநகராக ஐதராபாத் இருக்கும். பொது தலைநகராக ஐதராபாத் 10 ஆண்டுக்கு இருக்கும் என அமைச்சர் ஷிண்டே தகவல் dinakaran.com

ஆர்யாவும் நயன்தாராவை ஏமாற்றி விட்டானா ? சினிமாக்காரன் தன்புத்தியை காட்டிவிட்டான் ?


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper


சென்னை:மன இறுக்கம், முகத்தில் சுருக்கம். மீண்டும் அதே கலக்கம்.நயன்தாராவை பற்றி கோலிவுட்டார் திரும்ப பேச ஆரம்பித்துவிட்டார்கள். பிரபு தேவாவுடன் காதல் முறிந்தபோது எப்படி இருந்தாரோ அப்படித்தான் இப்போது இருக்கிறார். ஆனால் பிரபுதேவாவுடன் உறவு முறிந்து, சில மாதங்கள் சோகமாக இருந்தாலும் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பியிருந்தார். ஆனால் இப்போது நயன்தாராவுக்கு என்ன ஆனது என தெரியவில்லை. பழையபடியே யாருடனும் அதிகம் பேசுவதில்லை. மீடியாவை தவிர்க்கிறார். ஷாட் முடிந்ததும் அரட்டை அடிக்காமல் தனியாக இருக்கவே விரும்புகிறார் என்கிறது ஸ்டுடியோ சரவுண்டிங்.

பொறுக்கி கதாநாயகன்! கிரிமினல் சினிமாகாரன் ! சமூகத்தின் பயங்கர வீழ்ச்சி ! எல்லோரும் அனுபவிக்கபோகும் விளைவுகள் !

கும்பலாக உட்கார்ந்து குடிப்பவனாக (மூடர் கூடம்)>வேலை வெட்டி
இல்லாமல், அதைத் தேடும் முயற்சி கூட இல்லாமல், பெண்களைத் துரத்திக்கொண்டு அலைபவனாக (கேடி ரங்கா கில்லாடி பில்லா, வருத்தப்படாத வாலிபர் சங்கம்)சாஃப்ட்வேர் வேலையை விட்டுவிட்டு ஆள் கடத்துபவனாக (மங்காத்தா, ‘சூது கவ்வும்)தன் தீய வழக்கங்களைத் திருத்த முயலும் பெற்றோர்களை ஒருமையில் பேசி அவமதிப்பவனாக (தீயா வேலை செய்யணும் குமாரு)இப்படித்தான் நம் தமிழக இளைஞர்கள் குடிகாரர்களாக, பொறுக்கிகளாக, பொறுப்பில்லாதவர்களாக, பெண்கள் பின்னால் அலைபவர்களாக, அதற்காக எந்த அவமானத்தையும் பொறுத்துக் கொள்ளும் சோரணையற்றவர்களாக இருக்கிறார்களா? உங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்?</

மோடி – வாலிப வயோதிக அன்பர்களே. மோடியின் வளர்ச்சி ! சேலம் சிவராஜ் வைத்தியரின் எழுச்சி

மோடிசேலம் சிவராஜ் சிவகுமார் வைத்தியர்;முன் குறிப்பு – இந்த பதிவினால் லாட்ஜ் டாக்டர்கள் மனம் புண்பட்டாலோ அல்லது மோடி பக்தர்கள் மனம் புண்படாமல் போனாலோ அது எங்களை அறியாமல் செய்த பிழையாக கருதி மன்னிக்கவும்.
சில நாட்களாக நாம் வாசிக்கும் பெரும்பாலான பத்திரிக்கைகள் மோடி புகழ்பாடுவதையே வேலையாக வைத்திருக்கின்றன. தமிழ்நாட்டில் மோடி அலை வீசுவதாக தந்தி டிவியில் ஒருவர் செய்தி சொல்கிறார். பஸ் ஸ்டாண்டு கக்கூசில் நாற்றம் வீசுகிறது என்பதை அந்தப் பக்கம் போன உடனே கண்டுபிடிக்கிறோம் அல்லவா. அதுபோல மோடியை திருச்சியில் பார்த்தவுடன் அந்த செய்தியாளர் மோடி அலை வீசுவதை கண்டுணர்ந்துவிட்டார்.

மோடியாரிடமும் எழுச்சிக்கான வழியை நீங்கள் கேட்கக்கூடாது
மோடி திருச்சிக்கு வந்த அன்று நான் தஞ்சைக்கு கிளம்பியிருக்க வேண்டும். அன்றைய தந்தி டிவி செய்தியில் மூன்று லட்சம் பேர் திருச்சிக்கு வந்திருப்பதாக சொல்லிவிட்டார்கள். அத்தனை பேர் திருச்சிக்கு வந்திருந்தால் அவர்கள் சிறுநீர் கழிக்கக் கூட அங்கு வழி கிடையாது. அதனால் ஊர் நாறியிருக்குமோ எனும் அச்சத்தில் பயணத்தை ரத்துசெய்ய வேண்டியதாகிவிட்டது. இல்லாவிட்டால் மோடி போனாலும் நாற்றம் போகவில்லை என ஃபேஸ்புக்கில் எழுதி தெய்வ நிந்தனை குற்றத்துக்கு ஆளாகியிருப்பேன்.
மோடியை உங்களுக்கு ஏன் பிடிக்கிறது என அவரது ஆதரவாளர்களிடம் கேட்பதை ஒரு வழக்கமாகவே வைத்திருக்கின்றன சில துர்சக்திகள் (ஷக்தி என உச்சரித்தல் ஷேமகரமானது). வோடஃபோன் நாயைக் கூடத்தான் பலருக்கு பிடிக்கிறது, அவர்களிடத்தில் போய் உங்களுக்கு ஏன் பிடிக்கிறது என கேட்பீர்களா?
லாட்ஜ் டாக்டர்களை எதற்காக நோயாளிகள் அணுகுகிறார்கள்? வளர்ச்சி, எழுச்சி மற்றும் சக்தி ஆகியவற்றைப் பெறுவதற்காகவே. அது போலவே மோடியையும் வளர்ச்சி, எழுச்சி மற்றும் சக்தி ஆகிய காரணங்களுக்காவே நோயாளிகள் ச்சீசீ… பக்தர்கள் ஆதரிக்கிறார்கள். லாட்ஜ் டாக்டர்கள் வளர்ச்சியை சாதிப்போம் என கிடைக்கும் ஊடகங்களில் எல்லாம் சொந்தக் காசில் ஓயாமல் கூவுகிறார்கள். மோடியாருக்காக வைத்தியசாலையில் முதலாளிகள் கூவ வைக்கிறார்கள்.
எழுச்சியையும் சக்தியையும் எங்ஙனம் சாத்தியமாக்குவோம் என லாட்ஜ் டாக்டர்கள் ஒருபோதும் சொல்வதில்லை, அது ரகசியம். உங்களுக்கு சக்தி வேண்டுமென்றால் வைத்தியத்துக்கு போவதுதான் வழி. அதுபோலவே மோடியாரிடமும் எழுச்சிக்கான வழியை நீங்கள் கேட்கக்கூடாது. ஒன்று அவர் முக்திக்கு வழிகாட்டும் சாமியாராவார் அல்லது சக்திக்கு வழிகாட்டும் டாக்டராவார் என மறுபடியும் ஒரு ச்சீசீ.. தலைவராவார் என அவரது ஜாதகத்திலேயே இருக்கிறது (நன்றி – தினகரன் வசந்தம்). ஆகவே மோடியாராலும் சக்தியை மீட்டுத் தர முடியும், என்ன பாதிப்புக்கு தக்கவாறு மூன்று மாதத்தில் இருந்து ஒரு வருடம் வரை ஆகலாம் (ஒரே மாதத்தில் குணமாக்குவதாக சொல்லும் போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்).

அச்சடிக்கப்படும் பெருவாரியான டாலர்கள் இறுதியில் பங்குச்சந்தை சூதிற்கே செலவாகிறது !

usd-100_dollars-100_USD

தோற்றுப் போன அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் டாலர் அச்சடிப்பு

ஃபெடரல் ரிசர்வ் என்பது அமெரிக்காவின் மத்திய வங்கி. அமெரிக்க டாலர்கள் அச்சிடுவதும் இன்னும் பல பொறுப்புகளும் அதற்கு உண்டு. விலைவாசியை சீராக பராமரிப்பதும், அதிகபட்ச வேலை வாய்ப்புகளை உத்தரவாதப்படுத்துவதும் ஃபெடரல் ரிசர்வின் செயல்பாட்டு நோக்கங்கள் ஆகும்.
usd-10000_dollars-10,000_USDசமீப ஆண்டுகளில் ஃபெடரல் ரிசர்வும் (மற்ற மத்திய வங்கிகளும்) பண அளவை அதிகரித்தல் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் (QE 1, 2, & 3), எல்டிஆர்ஓ, எஸ்எம்பி, டுவிஸ்ட், டார்ப், டிஏஎல்எஃப், என்று பல்வேறு பெயர்களில் பணத்தை அச்சிட்டுக் கொண்டிருக்கின்றன. அதன் மூலம் வேலை இல்லாமையை குறைத்து, பொருளாதாரத்தை வேகப்படுத்த முயற்சிப்பதாக கூறுகின்றன.  இந்த பணம் அச்சிடும் திட்டத்தின் தோல்வியையும், அந்த பணம் மக்களுக்கு கிடைக்காமல் வங்கிகளிடம் போய்ச் சேருவதையும் இந்த கட்டுரை விளக்குகிறது.
நூறு அமெரிக்க டாலர்கள்

ஜெயலலிதா நேரில் ஆஜராக உத்தரவு ! சொத்துக்குவிப்பு வழக்கின் புதிய நீதிபதி முடிகவுடர் !

சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா அக்டோபர் 30ம் தேதி பெங்களூர் கோர்ட்டில் நேரில் ஆஜராகவேண்டும் என்று புதிய நீதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட முடிகவுடர் உத்தரவிட்டார். இந்த வழக்கின் விசாரணைக்காக சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் ஆகியோரும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.ஜெ.வின் சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்கும் நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணா வருகிற கடந்த 30ம் தேதி ஓய்வு பெற்றார்.  அவருக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரான ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்துகொண்டிருந்த நிலையில்,  கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் நீதிபதி கே.எல்.மஞ்சுநாத், எம்.எஸ். பாலகிருஷ்ணாவுக்கு பதிலாக தமிழகத்தைச்சார்ந்த முத்திரைத்தாள் மோசடி மன்னன் முகமது அலி ஐபிஎஸ் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் முடிகவுடர் என்பவரை அக்டோபர் 1ம் தேதி முதல் ஜெ.,வின் சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்கும் நீதிபதியாக நியமித்தார்.  இதன் மூலம்  கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடியாக நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணாவுக்கு பதவி நீட்டிப்பு இல்லை என ஜெ.,வின் கோரிக்கையை நிராகரித்தது.ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் புதிய நீதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டதும் இந்த வழக்கு விசார ணைக்கு ஜெ., நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்</

லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு சிறை! எம்.பி. பதவியை இழந்தார்!

ராஞ்சி: கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் லாலு பிரசாத் தமது எம்.பி. பதவியை இழந்துள்ளார். 1990களில் லாலு பிரசாத் முதல்வராக பதவி வகித்த காலத்தில் ரூ37.7 கோடிக்கு தீவன கொள்முதலில் முறைகேடு நடந்தது என்பது வழக்கு. கடந்த 17 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த ஊழல் வழக்கில் ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 30ந் தேதி பீகார் முன்னாள் முதலமைச்சர்கள் லாலுபிரசாத், ஜெகநாத் மிஸ்ரா உள்ளிட்ட 45 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு வெளியானதும் லாலுபிரசாத் ராஞ்சி பிர்சா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அத்துடன் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோருக்கு எத்தனை ஆண்டு சிறை தண்டனை விதிப்பது என்பது குறித்து இன்று அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார்.

ITFA சர்வதேச திரைப்பட விழா சென்னையில் ! அமெரிக்கா, ஆஸ்ட்ரியா, அல்ஜீரியா, ஈரான், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பல நாட்டு படங்கள்

சென்னையில் 3 நாட்கள் சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. இதில்
அமெரிக்கா, ஆஸ்ட்ரியா, அல்ஜீரியா, ஈரான், பிரான்ஸ், ஜெர்மனி, மலேசியா, குரோவேஷியா, பெல்ஜியம், லாட்சியா நாடுகளை சேர்ந்த படங்கள் திரையிடப்படுகிறது. மொத்தம் 16 படங்கள் திரையிடப்படுகிறது. குறும்படங்கள், ஆவணப் படங்களும் திரையிடப்படுகின்றன. தினமும் பகல் 12 மணிக்கும் மதியம் 3 மணிக்கும், மாலை 6 மணிக்கும் 3 காட்சிகளாக படங்கள் திரையிடப்படுகிறது. 16 படங்களும் ஆழ்வார்பேட்டையில் உள்ள சோவியத் கலாசார மையத்தில் திரையிடப்படுகிறது. 16 படங்களில் சிறந்த படம் சிறந்த டைரக்டர் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது. செவன்த் சேனல் கம்யூனிகேஷனும் தமிழ் திரைப்பட அகடமியும் இணைந்து இதை நடத்துகின்றன. சர்வதேச திரைப்பட விழா துவக்க நிகழ்ச்சி சோவியத் கலாசார மையத்தில் இன்று நடந்தது. மாணிக்கம் நாராயணன் தலைமை தாங்கினார். டைரக்டர் வெற்றி மாறன் இதில் கலந்து கொண்டு திரைப்பட விழாவை தொடங்கி வைத்தார். திரைப்பட விழா இன்று முதல் 4–ந்தேதிவரை 3 நாட்கள் நடக்கிறது.

இந்தியாவில் முதன் முதலாக மனச்சோர்வு நீக்கும் ஆபரேஷன் வெற்றி


Dr Paresh Doshi performing complicated surgery
Mumbai: An Australian youth became the first patient in India to undergo a brain surgery to control depression.
Although the surgery took place on September 25 at Jaslok Hospital, a leading healthcare institution in Mumbai, the world came to know about it when the patient spoke to the media on Tuesday.
“I found out about this surgery two years back. It’s an amazing gift (that India has) given to me,” Benjamin Walt from Sydney told journalists.
இந்தியாவில் முதன் முதலாக மனச்சோர்வு நீக்கும் ஆபரேஷன் வெற்றி மும்பை : மனச்சோர்வை நீக்கும் ஆபத்தான மூளை ஆபரேஷன், இந்தியாவில் முதன்  முதலாக மும்பை தனியார் மருத்துவமனையில் வெற்றிகரமாக செய்யப்பட்டது. இந்த ஆபரேஷனை செய்து கொண்டு குணமானவர்  ஒரு ஆஸ்திரேலியர்.  டிப்ரஷன் எனப்படும் மனச்சோர்வு நீக்கும்  ஆபரேஷன் பெயர் ‘டீப் ப்ரெயின் ஸ்டிமுலேஷன் சர்ஜரி’ (டிபிஎஸ்) என்று பெயர். அமெரிக்கா, கனடா, பிரிட்டன் போன்ற நாடுகளில் இந்த ஆபத்தான ஆபரேஷனை மருத்துவமனைகள் செய்கின்றன. ஆனால், செலவு அதிகம். 15 ஆண்டாகவே, பர்கின்சன், பக்க வாதம் போன்ற மூளை சம்பந்தப்பட்ட நோய்களை தீர்க்க இந்த ஆபரேஷன் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இந்த நாடுகள் வெளிநாட்டு நோயாளிகளுக்கு இந்த அறுவை சிகிச்சை செய்வதில்லை.

தயாநிதியின் பெயரை ஏன் கின்னசுக்கு சிபார்சு செய்யகூடாது ? 323 இலவச இணைப்பாச்சே!

தயாநிதிக்கு வருகிறது சி.பி.ஐ. சம்மன்: ஒன்றா, ரெண்டா, 323 இலவச இணைப்பாச்சே! தி.மு.க. முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மீது, 323 தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்திய குற்றம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள சி.பி.ஐ., அவருக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளது. தயாநிதி இந்த தொலைபேசி இணைப்புகளை இனாமாக பெற்று, தமது சகோதரர் கலாநிதியின் சன் டி.வி. உபயோகத்துக்கு கொடுத்திருந்தார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பேரனும், முன்னாள் மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சருமான தயாநிதி செய்த இந்தக் குற்றம் தொடர்பாக, தமிழகத்தை சேர்ந்த பத்திரிகையாளர் குருமூர்த்தி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது.

மோடி: கோவில்களை விட கழிப்பறைகள்தான் தற்போதைய தேவை ! அடடா இதைத்தானே பெரியார் சொன்னார் ! ஆரியகூத்து ஆடும் காரிய மோடி

கோவில்களை விட கழிவறைகளே முன்னுரிமை கொடுத்து கட்டப்பட
வேண்டியவை என பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
புது தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற இளைஞர் விழாவில் அவர் பேசியதாவது:
"ஹிந்துத்துவா' தலைவராக நான் அறியப்படுகிறேன். எனது இந்தத் தோற்றம் இவ்வாறு சொல்வதற்கு அனுமதிக்காவிட்டாலும், என்னுடைய உண்மையான எண்ணத்தை தைரியமாக சொல்கிறேன்: முதலில் கழிவறைகளை கட்டிவிட்டு பின்னர் கோவில்களை கட்டுவோம்.
கிராமங்களில் கோவில்களை கட்டுவதற்கு பல லட்சம் ரூபாய் செலவழிக்கப்படுகிறது. ஆனால் அங்கு போதிய கழிவறை வசதிகள் இல்லாததால், பெண்கள் திறந்த வெளிகளைக் கழிவறைகளாக பயன்படுத்தும் அவலம் நீடிக்கிறது என்றார் நரேந்திர மோடி. என்னே இவரது ஞானோதயம் ? ஆண்டாண்டு காலமாக அம்பேத்காரும் பெரியாரும் உரக்க சொன்னதை வெறும் தேர்தல் ஸ்டாண்டுக்கு மட்டும் உபயோக்கும் மோடியின் கபட நாடகம் படு கேலமானது ,

பாங்காக்கில் இருந்து சென்னைவரை தரைவழி பாதை ! அது தனுஷ்கோடி வரை நீளும் !

பாங்காக் முதல் தனுஷ்கோடி வரையிலான ஆசிய மற்றும் பசிபிக் பகுதிகளைச் சேர்ந்த நாடுகளை தரைவழியாக ஒன்றிணைக்கும் வகையில் 4-வழிச் சாலைகள் அமைக்கப்பட உள்ளதாக மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை இணை அமைச்சர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார்.
சிவகங்கை, 21ஆம் நூற்றாண்டு மேல்நிலைப் பள்ளியில், புதன்கிழமை 21ஆம் நூற்றாண்டு இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தைத் துவக்கி வைத்து அமைச்சர் பேசியது: சுமார் 120 கோடி மக்களைக் கொண்ட இந்திய நாட்டை 5,250 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளே ஆட்சிசெய்து வருகின்றனர். இத்தகைய அதிகார வர்க்கத்தின் மூலம் நாட்டுக்கு வளர்ச்சியும், தடையும்கூட ஏற்படுவது உண்டு. எல்லோரிடமும் திறமை உள்ளது. நாம் உள்வாங்கிக் கொள்ளும் விதம், வாங்கிக் கொண்ட விஷயத்தை எவ்வாறு வெளிப்படுத்துவது என்பதுதான் திறமை. அந்தத் திறமையைக் கற்றுத் தருவதற்காகத் தான் இதுபோன்ற பயிற்சி மையங்கள். ஆசிய, பசிபிக் பகுதிகளில் உள்ள நாடுகளை சாலைகள் மூலம் இணைக்கும் வகையில் வரும் டிச.16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை ஐ.நா. சபையில் உள்ள நாடுகளின் கூட்டம் இந்தியாவில் நடைபெற உள்ளது. வரும் டிச.3 ஆம் தேதி நடைபெற உள்ள முதல்கட்டப் பேச்சுவார்த்தையின்போது பாங்காக்கில் தொடங்கி, சென்னை வழியாக வரும் சாலையில் புதுக்கோட்டை-சிவகங்கை-ராமநாதபுரம் வழியாக தனுஷ்கோடி வரை 4-வழிச் சாலை அமைக்க வலியுறுத்தும் திட்ட வரைவு அளிக்கப்பட உள்ளது என்றார் அவர். dinamani.com

BJP யுடன் தேர்தலை சந்திக்க சந்திரபாபு நாயுடு தீர்மானம் ! பாபுகாரு மோடி சந்திப்பு

நரேந்திர மோடியுடன் சந்திரபாபு நாயுடு; பா.ஜனதா கூட்டணியில் தெலுங்கு தேசம் சேர வாய்ப்பு?
பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் சூழ்நிலையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியும், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் தங்கள் கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவை பிரிக்கும் முடிவுக்கு தெலுங்கு தேசம் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு, பா.ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார்.

புதன், 2 அக்டோபர், 2013

Aparna Sen ! சதி ! ஒரு ஒரிஜினல் இந்திய திரைப்பட இயக்குனர்

அபர்ணா சென்னின் சதி  திரைப்படம், ஒரு
ஊமைப்பெண்ணின் கதை, 1828 ம் ஆண்டு வங்காள கிராமம் ஒன்றில் கதை நடக்கிறது
படத்தின் துவக்கமே வயதான கணவன் இறந்து போனதற்காக ஒரு இளம்பெண்ணை உயிரோடு தீயில் வைத்து எரிக்கும் சதியில் துவங்குகிறது, வங்காளத்தில் சதிக்கொடுமை மிகவும் மோசமாக பரவியிருந்தது,
ராஜாராம் மோகன்ராயின் தொடர் போராட்டங்களே இதனை முடிவிற்குக் கொண்டுவந்தன, கதையின் மையம் கணவனுக்காக ஒரு பெண் தன் வாழ்வை அழித்துக் கொள்ள எப்படி நிர்பந்திக்கப்படுகிறாள் என்பதே.
உமா, கிராமத்து இளம் பெண், ஜாதகதோஷம் உள்ளவள், அவளை யாருக்குத் திருமணம் செய்து வைத்தாலும் கணவன் சில மாதங்களிலே இறந்து போய்விடுவான், விதவையாகவே அவள் வாழ நேரிடும் என்று ஜோசியர் சொல்கிறார்,

லல்லு பிரசாத் யாதவ் தண்டிக்கப்பட்டது ஏன் ? லல்லுவுக்கு லலிதாவின் திறமை இல்லேயே ?

லாலு பிரசாத் யாதவ்முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 45 பேரை (இதில் 4 ஐஏஎஸ் அதிகாரிகளும், காங்கிரசு, ஆர்.ஜே.டி, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 6 அரசியல்வாதிகளும் அடக்கம்) கால்நடை தீவன ஊழல் வழக்கில் குற்றவாளிகள் என அறிவித்துள்ளது ராஞ்சி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம். ராஞ்சியிலுள்ள பிர்சா முண்டா மத்திய சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ள அவர்களுக்கு விதிக்கப்படவுள்ள தண்டனை பற்றிய விபரங்கள் வரும் அக்டோபர் 3-ம் தேதி வீடியோ கான்பரன்ஸ் மூலம் சிறையிலேயே அறிவிக்கப்படும். குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவரான காங்கிரசை சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜெகன்னாத் மிஸ்ரா உடல்நலமில்லாத காரணத்தால் பாட்னா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராஜா ராணி ! ஒரு கலர்புல் தமிழ் படம்

இளம் வயது இயக்குனருடன் இளைய தலைமுறை நடிகர் நடிகைகள் இணைந்திருக்கும் ஒரு திரைப்படம் எப்படி இருக்கும்...? ‘ராஜா ராணி’ திரைப்படம் மாதிரி கலர்ஃபுல்லாக இருக்கும். பிரபல நட்சத்திரங்கள் பலர் இருந்தாலும் புதிதாக வந்திருக்கும் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர்
ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் அனைத்துப் பாராட்டுக்களையும் வாரிக்கொள்கிறார் விருப்பமே இல்லாமல் கடமைக்காக திருமணம் செய்துகொள்கின்றனர் ஜான் என்கிற ஆர்யாவும், ரெஜீனா என்கிற நயன்தாராவும். திருமணத்திற்குப் பிறகு இரவில் ஆர்யா குடித்துவிட்டு வீட்டிற்கு வருவது, நயன்தாரா அழுதுகொண்டே உறங்குவது என சண்டைகளுடன் நகர்கிறது இவர்கள் வாழ்க்கை. திடீரென நயன்தாராவுக்கு ஸ்ட்ரோக் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கும்போது தான் தன் மனைவியைப் பற்றிய தகவல்கள் எதுவுமே அறிந்துவைத்திருக்கவில்லை என ஜான் உணர்கிறார். ட்ரீட்மெண்ட் முடிந்ததும் ‘அட்லீஸ்ட் பொண்டாட்டியோட மெடிகல் டீடெயில்ஸாவது தெரிஞ்சு வெச்சுக்கோங்க’ என மருத்துவர் சொல்வது பல கணவர்களுக்கு பளார்.

mike hussey: குருநாத் மெய்யப்பன்தான் சென்னை சூப்பர் கிங்ஸை நடத்தினார் ! சீனியின் லீலைகள் அம்பலம்

குருநாத் மெய்யப்பன் வெறுமனே ஒரு கிரிக்கெட் ஆர்வலர் அவ்வளவுதான்
என்றெல்லாம் இந்தியா சிமெண்ட்ஸ் தலைவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளருமான ஸ்ரீனிவாசன் கூறினாலும் உண்மை வெளிப்படத்தான் செய்கிறது. சென்னை அணிக்கு விளையாடும் மைக் ஹஸ்ஸி தனது புதிய புத்தகத்தில் சூதாட்டப்புகார் சாற்றப்பட்டுள்ள குருநாத் மெய்யப்பன்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகித்தார் என்று எழுதியுள்ளாரஅண்டர்நீத் தி சதர்ன் க்ராஸ்' ( Underneath the Southern Cross) என்ற அந்த நூலில் மைக் ஹஸ்ஸி குறிப்பிட்டுள்ளதாவது:எங்கள் உரிமையாளர் இந்தியா சிமெண்ட்ஸ்தான்! அதன் தலைவர் ஸ்ரீனிவாசன். அவர் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியப்பொறுப்பிலும் இருந்ததால் குருநாத் மெய்யப்பனிடம் அணியின் அனைத்துப் பொறுப்புகளும் கொடுக்கப்பட்டன. மெய்யப்பனும், பயிற்சியாளர் கெப்ளர் வெசல்சும் இணைந்தே அணியை நடத்தினர். என்று எழுதியுள்ளார் ஹஸ்ஸி.ஐபிஎல். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக 21 பேர்களுடன் குருநாத் மெய்யப்பனும் சூதாட்டம், ஏமாற்றுவேலை, கிரிமினல் குற்றம் உட்பட குற்றப்பன் பெயரும் சார்ஜ் ஷீட்டில் சேர்க்கப்பட்டது.

டெல்லியில் வேலைக்கார சிறுமியை சித்ரவதை செய்து கொடுமைப்படுத்திய எஜமானி கைது

டெல்லியில் வேலைக்கார சிறுமியை சித்ரவதை செய்து கொடுமைப்படுத்திய எஜமானி கைதுவேலைக்கார சிறுமியை வீட்டுக்குள் அடைத்து வைத்து சூடு போட்டும் கத்தியால் தாக்கியும் சித்ரவதை செய்து கொடுமைப்படுத்திய எஜமானியை போலீசார் கைது செய்தனர். தெற்கு டெல்லியின் வசந்த்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு மாடி வீட்டின் பால்கனியில் இருந்து ஒரு சிறுமி உடல் முழுக்க தீ மற்றும் வெட்டுக்காயங்களுடன் தன்னை காப்பாற்றும்படி கதறி அழுதபடி கூச்சலிட்டால். சிறுமியின் கூக்குரலை கேட்ட அக்கம் பக்கத்தினர் இதுதொடர்பாக மனித உரிமை ஆர்வலர்களுக்கும், போலீசாருக்கும் தகவல் அளித்தனர். அவர்கள் விரைந்து வந்து உடல் முழுக்க காயங்களுடன் மிக மோசமான நிலையில் இருந்த அந்த பரிதாபத்திற்குரிய சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அந்த சிறுமி போலீசாருக்கு அளித்த வாக்குமூலத்தில் என்னை வெளியே போக விடாமல் அடைத்து வைத்திருந்த முதலாளி அம்மா, சற்று நேரம் கூட ஓய்வு தராமல் தொடர்ந்து என்னிடம் வேலை வாங்கி வந்தார்.

தயாநிதி மாறன் மீது வழக்கு ! வீட்டிலிருந்து ஒரே மாதத்தில் 48 லட்சம் தொலைபேசி அழைப்புகள்: இலக்கம் 24371515

சென்னையில் சட்டவிரோதமாக 323 தொலைபேசி இணைப்புகளை
வைத்திருந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் பிஎஸ்என்எல் உயரதிகாரிகள் இருவர் மீது சிபிஐ (மத்திய புலனாய்வுத் துறை) முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளது.
குருமூர்த்தி வழக்கு: இது குறித்து சிபிஐக்கு 2007-இல் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர் குருமூர்த்தி உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்குத் தொடர்ந்திருந்தார். அதைக் கடந்த ஜனவரி மாதம் விசாரித்த உச்ச நீதிமன்றம், குருமூர்த்தி மனுவுக்குப் பதில் அளிக்கும்படி சிபிஐக்கும், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கும் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், சட்டவிரோதமாக 323 இணைப்புகள் வைத்திருந்ததாக ஆரம்பநிலை விசாரணை மேற்கொண்டு வந்த சிபிஐ, தயாநிதி மாறன், 2007-இல் பிஎஸ்என்எல் பொது மேலாளராக இருந்த பிரம்மானந்தன், அந் நிறுவனத்தின் முன்னாள் துணைப் பொது மேலாளர் எம்.பி. வேலுசாமி ஆகியோர் மீது செவ்வாய்க்கிழமை முறைப்படி முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது. திமுகவின் பெரும் பிரச்சனைகளுக்கு எல்லாம் இந்த மருமகன் தான் காரணம்

ஒரு பார்பன தேர்தல் கருத்து கணிப்பு ! மோடி அமோக வெற்றி பெறுவாராம் ! சொல்வது சோ

மோடியை முன்னிறுத்தியுள்ளதால், இந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு,
200 சீட்டு களுக்கு மேல் கிடைக்கும். காங்கிரஸ் நான்காவது இடத்துக்கு தள்ளப்படும்’ என, பத்திரிகையாளர் சோ தெரிவித்தார்.அதிரடி சந்திப்புகள் மூலம், தமிழக அரசியலில் திடீர் திருப்பங்களுக்கு காரணகர்த்தாவாக இருப்பவர் சோ. சமீபத்திய அவரது சந்திப்பு, முதல்வர் ஜெயலலிதாவுடன் நடந்தது.
அது ஏற்படுத்திய விவாதமும், பரபரப்பும் ஓயாத நிலையில், `தினமலர்' நாளிதழுக்கு நேற்று அவர் அளித்த சிறப்பு பேட்டி:
மோடி, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது, பா.ஜ.,வுக்கு சாதகமாக அமையும் என்று கருதுகிறீர்களா?
நிச்சயமாக, 2009ல் இருந்தே நான் இதை வற்புறுத்தி வருகிறேன். பல முறை எழுதியும், பேசியும் இருக்கிறேன். ‘எலக்சன் இஷ்யூ, எலக்சன் இஷ்யூ... என்று சொல்கின்றனர்.மோடி வந்தால், அவர் தான் இஷ்யூ’ என, எழுதினேன்.போலி மதச்சார்பின்மை பற்றி பேசி, ஓட்டு வாங்குவதற்காக, மதச்சார்பற்றவர் என்ற வேஷம் போடுபவர்கள் தான், மோடி வரக்கூடாது என, பிரச்னையை பெரிதாக்குகின்றனர்.ஏன் மோடி வரக் கூடாது என்று இவர்கள் சொல்கின்றனர் என்ற கேள்வி எழும். அது பா.ஜ.,வுக்கு மிகவும் சாதகமாக அமையும். இந்த கருத்தை நான், எங்கள் பத்திரிகையின், இரண்டு ஆண்டு விழாக்களில் பேசியிருக்கிறேன்.தமிழர்களின் சினிமா பைத்தியத்தால் வளர்ந்த ஆபத்தான அரைகுறை அறிவாளிகளில் இவரும் ஒருவர் இவரு பெரிய தியாகியோ? (அடுத்தவர் முதலீட்டில் ) துக்ளக் துவக்கியபோது இவரது சொத்து என்ன? இப்போது எத்தனை கோடி? நாடு தேய்ந்தபோது தன்னை வளர்த்துக் கொண்டவர் இவர். இவர் எழுத்தை வேதவாக்காகக் கருதி விழுந்து விழுந்தது படிக்கும் முட்டாள்களை என்ன சொல்ல? தமிழர்களின், ஒட்டு மொத்த தமிழ் சமுதாயத்தின் முக்கிய எதிரிகளில் முதன்மையானவர் இந்த ஆளே .இந்த ஆளின் பேச்சைக் கேட்டு ஜெயா உருப்படாமல் போனால் பரவாயில்லை மோடியும் பாதிக்கப்படப்போவதுதான் வருத்தமளிக்கிறது.சந்தேகமே இல்லாமல் இவரும் ஒரு போலி மதசார்பின்மைவாதி தான்

செவ்வாய், 1 அக்டோபர், 2013

BBC :இந்தியாவில் ஊழல் : ஒரு பார்வை

இந்தியா விடுதலை பெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பாகவே 1947 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஊழல் தடுப்புச் சட்டம் அமலுக்கு வந்தது. உண்மையான மக்கள் பிரதிநிதிகள் ஆட்சிக்கு வரும்போது காலனீய ஆட்சிக்காலத்தில் காணப்படும் அனைத்துவித லஞ்ச லாவண்யங்களும் காணாமல் போகும் என அன்றைய காங்கிரஸ் தலைவர்கள் கூறிவந்தனர்.
காந்தியின் கோரிக்கைக்கும் மதிப்பில்லைசரியாகச் சொல்லவேண்டுமானால் அரசுத்துறைகளில் ஊழலை ஒழிக்கும் வகையில் 1941லேயே The Special Police Establishment என்ற ஓர் அமைப்பு கூட ஏற்படுத்தப்பட்டது.
ஆனால் சட்டங்கள், அமைப்புக்கள் எதுவும் அரசியல் ஊழலைக் கட்டுப்படுத்தவில்லை.
காந்தியின் கோரிக்கைக்கும் மதிப்பில்லை
ஆனால் மக்களுடன் மக்களாக ஆட்சியாளர்கள் கலந்து பணியாற்றவேண்டுமானால் ஆடம்பர பங்களாக்கள் கூடாது, எளிய இல்லங்களிலேயே வாழவேண்டும் என்ற மகாத்மா காந்தியின் அறிவுரை புறக்கணிக்கப்பட்டது.
1952 தேர்தல்களில் போட்டியிட்ட பலர் மீது ஊழல் புகார்கள் குவிந்தன. அவை மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இரண்டாம் உலகப்போரின் போது ஊழல்
இரண்டாம் உலகப் போரின் போது பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாட்டால் நாடு தவித்தபோது அத்தகையவற்றை விநியோகத்ததில் பெரும் ஊழல், அதிகாரத்திலிருந்தவர்கள் பயன்பெற்றனர். பின்னர் தொழிற்சாலை துவங்குவதும் நடத்துவதும் மத்திய மாநில அரசுகளின் அனுமதியினை, விருப்பத்தினைப் பொறுத்தே என்ற நிலையில்தான் மறைந்த இராஜாஜி சாடிய பெர்மிட்.லைசென்ஸ் கோட்டா ராஜ் அங்கிங்கெனாதபடி தலைவிரித்தாடத் துவங்கியது.

மம்மூட்டியின் அடாவடி ! திலகனை கவிழ்த்தது போல சுரேஷ் கோபியையும் கவிழ்க்க முயற்சி

சென்னை:மம்மூட்டியிடம் சுரேஷ் கோபி மோதியதால் பரபரப்பு
ஏற்பட்டது.தினா,சமஸ்தானம் படங்களில் நடித்ததுடன் தற்போது ஷங்கரின் இயக்கத்தில் ‘ஐ படத்திலும் நடித்து வருபவர் மலையாள நடிகர் சுரேஷ் கோபி. சமீபத்தில் கேரளாவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சுரேஷ் கோபி கலந்துகொண்டார். அப்போது மம்மூட்டியை சரமாரியாக தாக்கி பேசினார். அவரை தாக்கி பேசுவது ஏன் என்று சுரேஷ் கோபியிடம் கேட்டபோது பதில் சொல்ல மறுத்துவிட்டார். சமீபகாலமாக இருவருக்கும் மோதல் போக்கு நிலவுவதால் இப்படி தாக்கி பேசியதாக தெரிகிறது.இதுகுறித்து மல்லுவுட் திரையுலகினர் கூறும்போது,‘சமீபத்தில் கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி மம்மூட்டி, மோகன்லால் உள்ளிட்ட நடிகர்கள் நடித்த படங்கள் ரிலீஸ் ஆனது. அப்போது மம்மூட்டி, தனது படத்தை வெளியிடுவதற்காக ஏற்கனவே வசூலுடன் ஓடிக்கொண்டிருந்த சிறுபட்ஜெட் படமான ‘ஆர்ட்டிஸ்ட் என்ற படத்தை தியேட்டர்களிலிருந்து தூக்கிவிட்டு தான் நடித்த ‘தெய்வத்தின்டே சுவாதம் கிளிடஸ்‘ படத்தை ரிலீஸ் செய்ய ஆர்வம் காட்டியதாக தெரிகிறது. இதையறிந்து சுரேஷ் கோபி கோபம் அடைந்தார். அதை வெளிப்படுத்தும் விதமாகவே அவர் மம்மூட்டியை தாக்கி பேட்டி அளித்தார் என்றனர்.tamilmurasu.org

கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லையாம் ! தமன்னாவின் ரொம்ப நல்ல ஒரு கருத்து

நடிகை தமன்னா கவர்ச்சிக்கு மாறியுள்ளார். சமீபத்தில் அவர் நடித்த தெலுங்கு
படங்களில் தாராளமாக ஆடை குறைப்பு செய்து கவர்ச்சியை அள்ளி இறைத்துள்ளார். பாடல் காட்சிகளிலும் அரைகுறை ஆடைகளில் குத்தாட்டம் போட்டுள்ளார்.> இவர் கவர்ச்சியாக நடித்த படங்கள் இன்டர்நெட்டில் பரவி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது. தமன்னா தற்போது இரண்டு இந்தி படங்களுக்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார். தமிழில் வீரம் படத்தில் அஜீத் ஜோடியாக நடிக்கிறார். கவர்ச்சியாக நடிப்பது குறித்து தமன்னாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:– கவர்ச்சியாக நடிப்பது தவறல்ல. கதைக்கு தேவையென்றால் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறேன். ரசிகர்கள் கவர்ச்சியை
விரும்புகிறார்கள். எனவே கவர்ச்சி வேடங்களில் நடிக்க நான் மறுப்பது இல்லை. தொடர்ந்து கவர்ச்சியாக நடிப்பேன். கவர்ச்சி மட்டும்தான் இருக்கும். ஆபாசமாக ஒருபோதும் நடிக்கமாட்டேன். எனது உடம்புக்கு கவர்ச்சி ஆடைகள் பொருத்தமாக இருக்கின்றன என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.> இவ்வாறு தமன்னா தெரிவித்தார்.

ஊழல் வழக்கில் Ex அமைச்சர் ரஷீத் மசூத்துக்கு 4 ஆண்டு சிறை! எம்.பி. பதவி இழந்தார்!

டெல்லி: ஊழல் வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி.யுமான ரஷீத் மசூத்துக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தமது எம்.பி. பதவியை இழந்திருக்கிறார் ரஷீத் மசூத். மருத்துவ படிப்பு இடம் ஒதுக்கீடு ஊழல் வி.பி.சிங் தலைமையிலான மத்திய அரசில் சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்த ரஷத் மசூத் மீது 1990-91 ஆம் ஆண்டில் தகுதி இல்லாதவர்களுக்கு திரிபுரா மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்புக்கான இடங்களை வழங்கியதாக வழக்கு தொடரப்பட்டது. குற்றவாளி என தீர்ப்பு இந்த வழக்கில் ரஷித் மசூத் குற்றவாளி என கடந்த 19-ந் தேதி சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் இன்று தண்டனை விவரங்களை அறிவிக்கப்படும் என்றும் கூறியிருந்தது. இன்று காலை தண்டனை குறித்து இருதரப்பினரும் வாதங்களை முன்வைத்தனர். இதைத் தொடர்ந்து பிற்பகல் 2.30க்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார். பிற்பகல் 2.30 மணிக்கு தீர்ப்பு விவரம் அறிவிக்கப்பட்டது. இதன்படி ரஷீத் மசூத்துக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும் ஆதாயம் அடைந்த மாணவர்கள் அனைவருக்கும் தலா 1 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

ஸ்பெக்ட்ரம் உரிமம் ரத்து- மத்திய அரசிடம் 1 பில்லியன் டாலர் கோரும் லூப் டெலிகாம் !

டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு உரிமம் ரத்து செய்யப்பட்டிருப்பதால் 1 பில்லியன் அமெரிக்க டாலரை நஷ்ட ஈடாக மத்திய அரசு தர வேண்டும் என்று லூப் டெலிகாமின் முதலீட்டாளரான மொரீஷியஸை சேர்ந்த கெய்தான் ஹோல்டிங்ஸ் லிமிடெட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கெய்தான் ஹோல்டிங், லூப் டெலிகாம் நிறுவனத்தில் 26.95% பங்குகளை வைத்துள்ளது. இந்த நிறுவனத்துக்கு 21 ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை உரிமங்கள் வழங்கப்பட்டன. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் லூப் டெலிகாமின் 21 உரிமங்களையும் ரத்து செய்து உத்தரவிட்டது. லூப் நிறுவனத்துக்கு ரூ1,454.94 கோடி செலுத்தியிருப்பதால் தங்களுக்கு இந்த தொகையைத் திருப்பி தர வேண்டும் என்று மத்திய அரசுடன் கெய்தான் நிறுவனத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். மூன்று கட்ட பேச்சுவார்த்தையில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் சர்வதேச வர்த்தக விதிகளின் அந்நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. தங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்காக இந்திய மத்திய அரசு 1 பில்லியன் டாலர் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று கோரி அந்த நிறுவனத்தின் சார்பில் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
tamil.oneindia.in

அமெரிக்கவில் மாணவர்களின் கல்விக்கு இனி கடன் கிடைக்காது The student loan bubble is starting to burst

அமெரிக்க மாணவர்கள்மெரிக்காவின் பிரபல நிதி மேலாண்மை வங்கியான ஜே.பி மார்கன், மாணவர்களுக்கான கல்விக் கடனை இனிமேல் வழங்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, அமெரிக்காவின் அடுத்த பொருளாதார நெருக்கடிக்கான முன்னறிவிப்பாக இருக்கலாம் என்பதால் அனைவரின் வயிற்றிலும் புளியைக் கரைத்துள்ளது.
அமெரிக்காவில் உயர் கல்வி பயிலும் 20 லட்சம் மாணவர்களில் 60 சதவீதம் பேர் கல்விக் கடனை நம்பித் தான் கல்லூரிகளில் சேருகின்றனர். தனியார் கல்வி நிறுவனங்கள் அதிகரித்து விட்ட நிலையில், கல்விக் கட்டணம், பரீட்சை கட்டணம், உணவு, தங்கும் விடுதி, புத்தகம், கணிப்பொறிக்கான செலவுகள் என்று அனைத்தையும் சமாளிக்க கல்விக் கடன் ஒன்று தான் தீர்வு. அமெரிக்க மக்களைப் பொறுத்த வரை பட்டப்படிப்பு என்பதும் ஒரு முதலீடு தான்.

வாசன் மீண்டும் தமிழ் மாநில காங்கிரசை ஆரம்பிக்கிறார் ? ராகுல் பெயர் தமிழ்நாட்டில் போணியாகாது ?

வாசன் காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி? அதன் பைனான்ஸூக்கும் ஆள் ரெடி?

Viruvirupu,தமிழக காங்கிரஸ் வட்டாரங்களில் தற்போது அதி பரபரப்பாக அடிபடும் சமாச்சாரம், “மத்திய அமைச்சர் வாசன் தனிக் கட்சி தொடங்குகிறாராமே..” என்பதாக உள்ளது. அவரது கட்சி, அடுத்த மாதமேகூட தொடங்கப்படலாம் என கூறும் ஆட்களும் அக் கட்சியில் உள்ளார்கள்.
சமீப காலமாக மத்திய அரசை லேசாக எதிர்க்கும் கருத்துக்களை வாசன் கூறிவருகிறார். முக்கியமாக இலங்கை தொடர்பாக மத்திய அரசு எடுத்துள்ள நிலைப்பாடு குறித்து, அந்த மத்திய அரசில் அமைச்சராக இருந்துகொண்டே அதிரடியான கருத்துக்களை கூறி வருகிறார், வாசன்.
சமீபத்தில் வாசன் கூறிய காரசாரமான கருத்து ஒன்று குறித்து ராகுல் கோபம் கொண்டதாகவும், அந்த தகவல் வாசனுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், டில்லியில் ஒரு பேச்சு உள்ளது. ராகுலின் கோபத்தை பற்றி வாசன் கண்டுகொள்ளவில்லை எனவும், ஆச்சரியத்துடன் கூறுகிறார்கள்.

பூஜா இலங்கையில் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார் !


ஜே.ஜே. திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பூஜா. தொடர்ந்து ‘உள்ளம் கேட்குமே’, ‘அட்டகாசம்’, ‘நான் கடவுள்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அதன்பிறகு தமிழில் சரியாக படவாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் தெலுங்கு பக்கம் போனார். பின்னர் இலங்கைக்கு சென்று தனது தாய் மொழியான சிங்கள மொழி படங்களில் நடித்தார். தற்போது மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்து தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்நிலையில், இலங்கையில் தெரண லக்ஸ் சினிமா விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறந்த நடிகைக்கான விருது பூஜாவுக்கு வழங்கப்பட்டது. பூஜா தற்போது தமிழில் ‘விடியும் முன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பாலாஜி.கே.குமார் இயக்கி வருகிறார்.

நீதிபதிக்கு சிபாரிசு கோரிய ஜெயலலிதா ! நாணல் போல வளைப்பது தான் சட்டமாகுமா ? அதற்கு பாபாக்களின் உதவி தேவையா ?

கர்நாடகாவில் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்கும்
நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணா  ஓய்வு பெறுகிறார்.  அவருக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என இந்த வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவரான ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் நிதிபதிகள் தீர்ப்பளித்தான்ர்.  அவர்கள்,  ‘’நீதிபதி பாலகிருஷ் ணாவுக்கு பணி நீட்டிப்பு பற்றி கர்நாடகம் தான் முடிவு செய்ய வேண்டும்.  வழக்கு விசாரணை முடியும் தருவாயில் உள்ளதால் அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.  ஐகோர்ட்  தலைமை நீதிபதியுடன் ஆலோசித்து கர்நாடக அரசு முடிவு செய்ய வேண்டும்’’என்று உத்தரவிட்டனர் ஏற்கனவே அரசு வழக்கறிஞர் பவானி சிங்குக்கும் பதவி நீடிப்பு வேணும் என்று கேட்டார், எடியுரப்பா முதலைமச்சராக இருந்த போது நடந்தவை அவை nakkheeran.in

தலைவாவுக்கு தலைவி கொடுத்த அடியில் இருந்து இன்னும் மீளவில்லையாம் ! வேறென்ன பெரிய லாஸ்ட் !


;

விஜய் இயக்கத்தில் விஜய் நடித்த தலைவா திரைபப்டத்திற்குப் பிறகு விஜய் நடித்துவரும் திரைப்படம் ஜில்லா. நேசன் இயக்கத்தில் காஜல் அகர்வாலுடன் ஜில்லா திரைப்படத்தில் நடித்துவரும் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார்.ஒருபுறம் துப்பாக்கி திரைப்படம் இந்தியில் ‘Holiday' என்ற பெயரில் வேகமாக உருவாகிக்கொண்டிருக்க, மறுபுறம் விஜய்யுடன் இணையும் திரைப்படத்தில் சமந்தாவை ஹீரோயினாக செலக்ட் செய்வது என இரு படங்களிலும் ஒருசேர பணியாற்றிவருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். நேசன் இயக்கும் ஜில்லா திரைப்படத்தை விஜய்யும்,  Holiday திரைப்படத்தை முருகதாஸும் இந்த வருட இறுதிக்குள் முடித்துவிட்டு ஜனவரியிலிருந்து தாங்கள் இணையும் திரைப்படத்தை துவங்கவிருக்கிறார்களாம் இந்நிலையில் பாலச்சந்தரின் கவிதாலயா புரொடக்‌ஷனுக்கு விஜய் கால்ஷீட் கொடுக்கவிருக்கிறார் என்ற செய்தி திரையுலகத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்பு விஜய் கவிதாலயா புரொடக்‌ஷனில் ரமணா இயக்கிய திருமலை திரைப்படத்தில் நடித்திருக்கிறார். தன் படங்களுக்கு தொடர்ந்து ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க காதலை மையமாகக் கொண்ட சில திரைப்படங்களில் நடிக்கலாம் என்று விஜய் முடிவெடுத்திருப்பதாக பேசப்படுகிறது.

வரலாறு படைத்த தமிழ் திரைப்பட கலைஞர்கள் : கட்டுரை 7





முதல் ‘ஏ’ சர்டிபிகேட்- முதல் தடை- 
சவால்களைக் கண்ட இயக்குநர்கள்

கே.சுப்ரமணியம்

மவுனப்பட காலத்தில் புதுமைகள் செய்த இயக்குநர் ராஜா சாண்டோவிடம் பயிற்சி பெற்ற கே.சுப்ரமணியம் இயக்கிய முதல் படம் ‘பவளக்கொடி’(1934). ஏழிசை மன்னர் என பெயர்பெற்ற தமிழின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே.தியாகராஜ பாகவதர் அறிமுகமானது இந்தப் படத்தில்தான்.


அதன்பின் கே.சுப்ரமணியம் இயக்கிய படங்களில் சமூகப் பார்வையுடன் கூடிய கதைகள் அமைந்திருந்தன. சாதி ஏற்றத்தாழ்வு-விதவைகள்படும் துயரம் இவற்றை அடிப்படையாகக் கொண்ட ‘பாலயோகினி’, பெண்களின் உரிமையை வலியுறுத்தும் ‘சேவாசதனம்’, தீண்டாமை கொடுமையை சுட்டிக்காட்டும் ‘பக்த சேதா’ போன்ற படங்களை கே.சுப்ரமணியம் இயக்கினார்.

பாரதிராஜா : முதுகெலும்பில்லாத நடிகர்கள் சினிமாவில் மட்டும்தான் ஹீரோக்கள்

தமிழ் சினிமாவிற்காக எவ்வளவோ செய்தும்
அவமானப்படுத்தப்பட்டுவிட்டோமே என கோபத்தில் இருக்கும் கலைஞர்கள் மேடை ஏறும்போதெல்லாம் தங்கள் ஆதங்கத்தை கொட்டிவிடுகின்றனர். டேனியல் பாலாஜி நடித்துள்ள ஞானக் கிறுக்கன் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இயக்குனர்கள் பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி, பார்த்திபன் என மனதில் பட்டதை பேசும் கலைஞர்களுடன் விழா இனிதே துவங்கியது.பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய பாரதிராஜா “ ஹீரோக்கள் சினிமாவில் மட்டும் தான் வீரர்கள். உண்மையில் முதுகெலும்பில்லாதவர்களாக இருக்கிறார்கள். இது செய்யலாம் வேண்டாம் என்று சொல்லும் துணிச்சல் உஆருக்கும் இல்லை. நமக்கென்று ஒரு வர்த்தக சபை இருந்தால் நம் குரலும் ஓங்கி ஒலிக்கும்” என்று கோபமாகவே பேசினார்.;தமிழ் சினிமாவில் பல மாற்றங்களை நிகழ்த்திய பாரதிராஜா, பாலு மகேந்திரா போன்ற இயக்குனர் இமயங்கள் நூற்றாண்டு விழாவில் புறக்கணிக்கப்பட்டது குறித்து பலரும் மனக்கசப்புடன் இருந்துவரும் நிலையில், ஞானக் கிறுக்கன் பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பார்த்திபன் பாரதிராஜாவுக்கு நினைவுப் பரிசு ஒன்றைக் கொடுத்து பெருமைப் படுத்தினார்<

வறுமைக் கோடு : வாய்க்கொழுப்பு வர்க்கத்தின் வக்கிர வியாக்கியானம் !

வறுமைக்கோடு சாமானியனுக்கு நாளொன்றுக்கு ரூ.35 போதுமெனில் எதற்காக அமைச்சர்களுக்கு ஆயிரங்களில் கொட்டி அழ வேண்டும்.‘ஏ
ழைகள் யார்?” என்ற கேள்விக்கு, நகைக்கத்தக்கதும், வக்கிரம் நிறைந்ததுமான வருமான வரையறையொன்றைப் புதிதாக அறிவித்திருக்கிறது, மைய அரசின் திட்ட கமிசன்.  இதன்படி, நாளொன்றுக்கு கிராமப்புறங்களில் ரூ.27.20-க்கு மேலும், நகர்ப்புறங்களில் ரூ.33.40-க்கு மேலும் தமது அத்தியாவசியத் தேவைகளுக்குச் செலவு செய்யக் கூடிய தனிநபர்களை ஏழைகளாகக் கருத முடியாது என வறுமைக் கோட்டை வரையறுத்து, நகர்ப்புறங்களில் ஐந்து பேர் கொண்ட குடும்பமொன்று சௌக்கியமாக வாழ்வதற்கு மாதமொன்றுக்கு 5,000/- ரூபாயும்,  அதே எண்ணிக்கை கொண்ட குடும்பமொன்று கிராமப்புறத்தில் வாழ்வதற்கு மாதமொன்றுக்கு 4,080/- ரூபாயும் போதும் என்று தெரிவித்திருக்கிறது.