செவ்வாய், 1 அக்டோபர், 2013

BBC :இந்தியாவில் ஊழல் : ஒரு பார்வை

இந்தியா விடுதலை பெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பாகவே 1947 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஊழல் தடுப்புச் சட்டம் அமலுக்கு வந்தது. உண்மையான மக்கள் பிரதிநிதிகள் ஆட்சிக்கு வரும்போது காலனீய ஆட்சிக்காலத்தில் காணப்படும் அனைத்துவித லஞ்ச லாவண்யங்களும் காணாமல் போகும் என அன்றைய காங்கிரஸ் தலைவர்கள் கூறிவந்தனர்.
காந்தியின் கோரிக்கைக்கும் மதிப்பில்லைசரியாகச் சொல்லவேண்டுமானால் அரசுத்துறைகளில் ஊழலை ஒழிக்கும் வகையில் 1941லேயே The Special Police Establishment என்ற ஓர் அமைப்பு கூட ஏற்படுத்தப்பட்டது.
ஆனால் சட்டங்கள், அமைப்புக்கள் எதுவும் அரசியல் ஊழலைக் கட்டுப்படுத்தவில்லை.
காந்தியின் கோரிக்கைக்கும் மதிப்பில்லை
ஆனால் மக்களுடன் மக்களாக ஆட்சியாளர்கள் கலந்து பணியாற்றவேண்டுமானால் ஆடம்பர பங்களாக்கள் கூடாது, எளிய இல்லங்களிலேயே வாழவேண்டும் என்ற மகாத்மா காந்தியின் அறிவுரை புறக்கணிக்கப்பட்டது.
1952 தேர்தல்களில் போட்டியிட்ட பலர் மீது ஊழல் புகார்கள் குவிந்தன. அவை மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இரண்டாம் உலகப்போரின் போது ஊழல்
இரண்டாம் உலகப் போரின் போது பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாட்டால் நாடு தவித்தபோது அத்தகையவற்றை விநியோகத்ததில் பெரும் ஊழல், அதிகாரத்திலிருந்தவர்கள் பயன்பெற்றனர். பின்னர் தொழிற்சாலை துவங்குவதும் நடத்துவதும் மத்திய மாநில அரசுகளின் அனுமதியினை, விருப்பத்தினைப் பொறுத்தே என்ற நிலையில்தான் மறைந்த இராஜாஜி சாடிய பெர்மிட்.லைசென்ஸ் கோட்டா ராஜ் அங்கிங்கெனாதபடி தலைவிரித்தாடத் துவங்கியது.

1991 தாராளமயமாக்கலுக்குப் பிறகும் அரசியல்வாதிகள் அதிகாரிகளின் கரங்களில் ஏகப்பட்ட அதிகாரங்கள் குவிந்திருக்கின்றன. எனவேயே இன்னமும் ஊழல் தொடர்கிறது என்கின்றனர் வல்லுநர்கள். உலகின் 197 நாடுகளில் இலஞ்சத்தைப் பொறுத்தவரை இன்று இந்தியா 69வது இடத்தில் இருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது.
நேரு காலத்து ஊழல்
நேரு காலத்திலும் ஊழல்
நேரு காலத்திலும் ஊழல்
பண்டித ஜவஹர்லால் நேருவிற்கு நெருக்கமான விகே கிருஷ்ணமேனன் இந்தியாவின் ஹை கமிஷனராக இருந்தபோது 1948ஆம் ஆண்டு இராணுவத்திற்காக ஜீப்கள் இறக்குமதி செய்ததில் பலகோடி ரூபாய் ஊழல் என்பது ஏழாண்டுகள் கழித்துத் தெரியவந்தது. ஹரிதாஸ் முந்த்ரா என்பவர் ஆயுள் காப்பீட்டுக்கழக பங்குகளை விதிமுறைகளை மீறி விற்றதில் கழகத்திற்குப் பெரும் இழப்பு என்று தெரியவந்து முந்த்ரா சிறைத் தண்டனை பெற்றார், அப்பரிவர்த்தனை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகி அன்றைய நிதி அமைச்சர் டிடி கிருஷ்ணமாச்சாரி பதவி விலகினார்.
பின்னர் நேருவுக்கு நெருக்கமான பஞ்சாப் முதல்வர் பிரதாப் சிங் கெய்ரோன் மீது ஊழல் புகார்கள் எழ அவரும் பதவி விலக நேரிட்டது. அதே போல புகார்களின் பின்னணியில் மஹராஷ்டிர முதல்வர் பொறுப்பிலிருந்து ஏ.ஆர்.அந்துலே ராஜினாமா செய்தார், இவ்வாறு பதவி விலகல்கள் ஆனால் சிறைத் தண்டனை என்று எதுவும் விதிக்கப்படவில்லை.
இந்திரா காலம்
தனது மகன் சஞ்சய் காந்தி மாருதி கார் நிறுவனம் தொடங்க பல்வேறு சலுகைகள் முறைகேடாக வழங்கப்பட்டன என்ற புகார் வலுக்க பின்னர் 1975 நெருக்கடி நிலை பிரகடனத்திற்கு பிறகு புகார்கள் ஓய்ந்தன. 1987ல் ராஜீவ் ஆட்சியிலிருந்தபோது ஸ்வீடன் நாட்டு போஃபோர்ஸ் நிறுவனத்திடமிருந்து பீரங்கிகள் வாங்கியதில் பெரும் ஊழல் என்ற புகார் இந்தியாவையே உலுக்க காங்கிரஸ் 1989 தேர்தல்களில் தோல்வி கண்டதற்கு போஃபர்ஸ் ஊழலும் ஒரு காரணம் என கருதப்பட்டது.
இவ்வாறான பதவி விலகல், ஆட்சிமாற்றங்களுக்கப்பால் வழக்கு பதிவாகி, நீதிமன்றங்களில் முறையாக விசாரணை நடந்து தண்டிக்கப்பட்ட அரசியல்வாதிகள் மிகச் சிலரே.
காங்கிரசைச் சேர்ந்த சுக் ராம் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராயிருந்தபோது மூன்று இலட்ச ரூபாய் கையூட்டு பெற்றார் என்ற புகாரில் 15 ஆண்டுகள் கழித்து, 2011ல் அவருக்கு 85 வயதாகிவிட்ட நிலையில்ஐந்தாண்டு சிறைத் தண்டனை பெற்றார். 1996ஆம் ஆண்டில் மத்திய புலனாய்வுத்துறை சிபிஐ அவர் வீட்டில் சோதனை மேற்கொண்டபோது பெட்டிகளிலும்
தனது மகன்மாருடன் இந்திரா காந்தி
தனது மகன்மாருடன் இந்திரா காந்தி
சாக்குப்பைகளிலும் 1.16 கோடி ரூபாய் கத்தையாக கத்தையாக கரன்சி நோட்டுக்கள் மறைத்துவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கனிம வளம் மிகுந்த ஜார்கண்ட் மாநிலத்த்ன் முதல்வராக செப்டம்பர் 2006லிருந்து ஆககஸ்ட் 2008 வரை பணியாற்றிய மது கோடா 2500 கோடி ரூபாய் அளவு கறுப்புப் பண மோசடியில் ஈடுபட்டது உட்பல பல்வேறு ஊழல் புகார்களுக்காளாகி சிறையிடப்பட்டு ஏறத்தாழ நான்காண்டுகளுக்குப் பிறகு அண்மையில்தான் ஜாமீனில் வெளிவந்தார்.
1991-96 ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதா முறைகேடான பல்வேறு செயல்களில் ஈடுபட்டார் எனக் குற்றஞ்சாட்டி பின்வந்த திமுக அரசு அவர் மீது வழக்குக்கள் பலவற்றைத் தொடுத்தது. அவற்றில் சுற்றுச்சூழல் தொடர்பான சட்டங்களை மீறி ப்ளெசண்ட் ஸ்டே சொகுசு ஓட்டல் கட்ட அனுமதி அளித்தது மற்றும் டான்சி எனும் தமிழக அரசு நிறுவனத்தின் சொத்துக்களைத் தனியாருக்கு விற்றது இவை குறித்த மூன்று வழக்குக்களில் அவர் தண்டனையும் பெற்றார். ஆனால் மேல் முறையீட்டில் அனைத்திலும் விடுதலையானார்.
அவருக்கெதிரான அளவுக்கதிகமாக சொத்துகுவித்த வழக்கு இன்னமும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
பின்னர் 1957ல் எல் ஐ சி நிறுவன பங்குகளை முறைகேடாக முந்த்ரா என்பவர் விற்றது தொடர்பான பிரச்சினையில் அன்றைய நிதி அமைச்சர் டிடிகிருஷ்ணமாச்சாரி, ஊழல் புகாரில் பிரதமர் நேருவுக்கு நெருக்கமான பஞ்சாப் முதல்வர் பிரதாப் சிங் கெய்ரோன், பின்னாளில் மஹராஷ்டிர முதல்வர் ஏ.ஆர்.ஆந்துலே போன்றோர் பதவி விலக நேரிட்டது.
நெருக்கடி நிலைக்குப் பிறகு நடந்த தேர்தல்களில் பிரதமர் இந்திரா படுதோல்வி அடைந்ததற்கு அவர் மீதான ஊழல் புகார்களும் ஒரு காரணம் என கருதப்பட்டது. அவரது மகன் ராஜீவ் காந்தி 1989 தேர்தல்களில் தோல்வி அடைந்ததற்கும் 64 கோடி ரூபாய் போஃபர் பீரங்கி ஊழல் குற்றச்சட்டுக்கள் என நோக்கர்கள் கூறினர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக