வெள்ளி, 4 அக்டோபர், 2013

தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு: சிரஞ்சீவி உட்பட 4 அமைச்சர்கள் ராஜினாமா

புதுடில்லி: தனி தெலுங்கானா அமைப்பதற்கு, மத்திய அமைச்சரவை, நேற்று ஒப்புதல் அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து. ஆந்திராவை சேர்ந்த, சிரஞ்சீவி உட்பட மத்திய அமைச்சர்கள் 4 பேர், பதவியை ராஜினாமா செய்தனர். பதவி விலகியவர்கள் விபரம்:சிரஞ்சீவி: ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் 1955 ஆக., 22ல் பிறந்த இவர், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகராக உயர்ந்தார். தமிழ், கன்னடம், இந்தி படங்களிலும் நடித்துள்ளார். சிறந்த நடிப்புக்காக தேசிய விருதும் பெற்றுள்ளார். நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான, பத்ம பூஷன் விருதையும் பெற்றுள்ளார். 2008ல், பிரஜ்ஜா ராஜ்ஜியம் என்ற தனிக்கட்சி தொடங்கினார். 18 எம்.எல்.ஏ.,க்களை இக்கட்சி பெற்றது. 2011 பிப்., 6 ல்,தனது கட்சியை காங்., கட்சியுடன் இணைத்தார். 2012 அக்., 28ம் தேதி தனிப்பொறுப்புன் கூடிய, சுற்றுலாத்துறை அமைச்சராக பதவியேற்றார். நேற்று ராஜினாமா செய்தார்.



பல்லம் ராஜூ:
மத்திய மனிதவளத்துறை அமைச்சராக இருந்தவர் பல்லம் ராஜூ. இவர் 1962 ஜன., 24ல் பிறந்தார். பி.இ., பட்டம் பெற்றவர். காக்கிநாடா தொகுதியில் இருந்து, எம்.பி., ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 2009 - 2012 வரை பாதுகாப்புத்துறை இணை அமைச்சராக பதவி வகித்தார். 2012 அக்., 28 ல், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.


சூர்ய பிரகாஷ் ரெட்டி:
ரயில்வே துறை இணை அமைச்சராக இருந்தவர் சூர்ய பிரகாஷ் ரெட்டி. கடந்த 2012 அக்., 28 ல், அமைச்சராக பதவியேற்றார். கர்னூல் தொகுதியில் இருந்து எம்.பி., ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஏற்கனவே இரண்டு முறை எம்.பி., ஆக இருந்தார்.


கே.எஸ்.சிவராவ்:
மத்திய ஜவுளித் துறை அமைச்சர் இருந்தவர் கே.எஸ்.ராவ். எலுரு தொகுதியில் இருந்து எம்.பி., ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 2013 ஜூன் 17ல், அமைச்சராக பொறுப்பேற்றார். ஐந்து முறை எம்.பி., ஆக இருந்தார். dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக