வெள்ளி, 4 அக்டோபர், 2013

ஒபாமா: அரசாங்க நிறுவனங்கள் மூடப்படு வதை தடுப்பதற்கு குடியரசுக் கட்சி கப்பம் கோருகிறது

மூடப்­பட்ட அர­சாங்க நிறு­வ­னங்­களை மீள ஆரம்­பிப்­ப­தற்­கான ஒரு நிபந்­த­
னை­யாக தன்னால் கைச்­சாத்­தி­டப்­பட்ட சுகா­தார கவ­னிப்பு சீர்­தி­ருத்­தத்தை குழி­தோண்டிப் புதைக்க தான் அனு­ம­திக்கப் போவ­தில்லை என அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா சூளு­ரைத்­துள்ளார்.
புதிய வர­வு-­செ­ல­வுத்­திட்­ட­மொன்­றுக்கு இணக்கம் தெரி­விக்க அமெ­ரிக்கப் பாரா­ளு­மன்­றத்தின் இரு சபை­களும் தவ­றி­ய­தை­ய­டுத்து அர­சாங்க நிறு­வ­னங்­களை பகு­தி­யாக மூடும் நிர்ப்­பந்­தத்­திற்கு அமெ­ரிக்கா உள்­ளா­னது.பராக் ஒபாமா தனது சுகா­தார சட்­டத்தை பிற்­போ­டாத வரை புதிய வர­வு-­செ­ல­வுத்­திட்­டத்­திற்கு அங்­கீ­காரம் வழங்க முடி­யாது என குடி­ய­ரசுக் கட்­சி­யினர் வலி­யு­றுத்­தி­யி­ருந்­தனர்.
அமெ­ரிக்க அர­சாங்க நிறு­வ­னங்­கள் மூடப்படுவதை முடிவுக்கு கொண்டு வரு­வ­தற்கு குடி­ய­ரசுக் கட்­சி­யினர் கப்பம் கோரு­வ­தாக பராக் ஒபாமா தெரி­வித்தார்.மேற்­படி அர­சாங்க நிறு­வ­னங்கள் மூடப்­பட்­டதால் 700,000க்கு மேற்­பட்ட அர­சாங்க ஊழி­யர்கள் சம்­பளம் இல்­லாத விடு­மு­றையை எதிர்­கொண்­டுள்­ளனர்.அத்­துடன் தேசிய பூங்­காக்கள், அருங்­காட்­சி­ய­கங்கள் மற்றும் பல அர­சாங்கக் கட்­ட­டங்கள் மூடப்­பட்­டுள்­ளன.
மேற்­படி நிறு­வ­னங்கள் மூடப்­பட்­ட­மைக்கு பாரா­ளு­மன்ற பிர­தி­நி­திகள் சபையில் அங்கம் வகிக்கும் பழை­மை­வாத குடி­ய­ரசுக் கட்­சி­யி­னரே காரணம் என குற்­றஞ்­சாட்­டிய பராக் ஒபாமா, ”அந்தக் கட்­சியின் ஒரு பிரி­வி­னரே இதற்குக் காரணம். ஏனெனில் அவர்கள் ஒரு சட்­டத்தை விரும்­ப­வில்லை” என்று கூறினார்.அவர்கள் மில்­லியன்கணக்­கான அமெ­ரிக்­கர்­க­ளுக்­கான சுகா­தார காப்­பு­றுதித் திட்­டத்தை மறுப்­ப­தற்­கான தமது போராட்­டத்தில் அமெ­ரிக்க அர­சாங்­கத்தை மூடும் நிலைக்கு தள்­ளி­யுள்­ளனர்” என அவர் தெரி­வித்தார்.
வர­வு-­செ­லவு திட்­டத்தை நிறை­வேற்றி அர­சாங்க நிறு­வ­னங்­களின் மூடப்­பட்ட நிலையை முடி­வுக்கு கொண்டு வந்து பொரு­ளா­தார ஸ்தம்­பித நிலையை தடுக்­கு­மாறு பராக் ஒபாமா பாரா­ளு­மன்­றத்தை வலி­யு­றுத்­தி­யுள்ளார்.அத்­துடன் அர­சாங்­கத்­திற்கு பகு­தி­யாக நிதி அளிக்கும் எந்­த­வொரு சட்டமூலத்­திற்கு எதி­ரா­கவும் மறுப்­பாணை அதி­காரம் பிர­யோ­கிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக ஒபா­மாவின் பேச்­சாளர் அமி புருன்டேஜ் தெரி­வித்­துள்ளார்.இத்­த­கைய பகு­தி­யாக நிதி­ய­ளிக்கும் திட்­டங்கள் அரசாங்கத்தை செயற்படுத்த வழிவகை செய்யாது என அவர் கூறினார்.
பராக் ஒபாமா அரசாங்க நிறுவனங்கள் மூடப்பட்ட காலப் பகுதியில் இராணுவத்திற்கு ஊதியம் வழங்குவதை உறுதிப்படுத்தும் சட்டமூலம் ஒன்றில் ஏற்கனவே கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.அமெ­ரிக்க அர­சாங்க நிறு­வ­னங்­களை மூடும் பிரச்­சி­னைக்கு தீர்வு காணும் முக­மாக பராக் ஒபாமா மலே­சி­யா­வுக்கு தன்னால் மேற்­கொள்­ளப்­ப­ட­வி­ருந்த சுற்­று­லா­வொன்றை இரத்துச் செய்­துள்ளார்.
அவ­ருக்குப் பதி­லாக அமெ­ரிக்க இரா­ஜாங்கச் செய­லாளர் ஜோன் கெரி எதிர்­வரும் வாரம் 11 ஆம் திகதி மலேசியாவில் நடை­பெறும் மேற்படி வர்த்­தகக் கூட்­டத்தில் கலந்து கொள்­ள­வுள்­ள­தாக மலே­சிய பிர­தமர் நஜிப் ரஸாக்கின் அலு­வ­லகம் தெரி­வித்­துள்­ளது.ஒபாமா எதிர்­வரும் சனிக்­கி­ழமை பொரு­ளா­தார உற­வு­களை ஊக்­கு­விக்கும் முக­மாக மேற்­கொள்­ள­வி­ருந்த 4 ஆசிய நாடு­க­ளுக்­கான விஜ­யத்தில் இந்த மலே­சிய விஜ­யமும் உள்­ள­டங்­கு­கி­றது.
அந்த விஜயம் 1966 ஆம் ஆண்­டிற்கு பின் அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஒரு­வரால் மலே­சி­யா­வுக்கு மேற்­கொள்­ளப்­படும் முதல் விஜ­ய­மாக அமை­ய­வி­ருந்­தது.அவர் இதன்­போது இந்­தோ­னே­சியா, புரூணை மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடு­க­ளுக்கும் விஜ­யத்தை மேற்­கொள்­ள­வி­ருந்தார்.பராக் ஒபாமா ஆசிய சுற்றுப் பய­ணங்­களை இரத்துச் செய்­வது கடந்த 3 வருட காலப் பகு­தியில் இது மூன்­றா­வது தட­வை­யாகும்.
2010 ஆம் ஆண்டில் சுகா­தார கவ­னிப்பு தொடர்­பான வாக்­கெ­டுப்பு, மெக்­ஸிக்கோ வளை­கு­டாவில் எண்ணெய் சிந்­தி­யமை என்­ப­வற்றால் தனது ஆசிய பிராந்­திய பய­ணங்­களை அவர் இரத்துச் செய்­தி­ருந்தார்.அர­சாங்க நிறு­வ­னங்­களை மூடும் நட­வ­டிக்­கையால் விசா மற்றும் கட­வுச்­சீட்டு விண்­ணப்­பங்கள் பரி­சீ­ல­னைக்­குட்­ப­டுத்­தப்­ப­டாத நிலை தோன்றியுள்ளது.இந்நிலையில் அமெரிக்க குடியரசுக் கட்சியினருக்கு மேலும் பேச்சுவார் த்தைகளை நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. engaltheasam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக