வியாழன், 3 அக்டோபர், 2013

பாங்காக்கில் இருந்து சென்னைவரை தரைவழி பாதை ! அது தனுஷ்கோடி வரை நீளும் !

பாங்காக் முதல் தனுஷ்கோடி வரையிலான ஆசிய மற்றும் பசிபிக் பகுதிகளைச் சேர்ந்த நாடுகளை தரைவழியாக ஒன்றிணைக்கும் வகையில் 4-வழிச் சாலைகள் அமைக்கப்பட உள்ளதாக மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை இணை அமைச்சர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார்.
சிவகங்கை, 21ஆம் நூற்றாண்டு மேல்நிலைப் பள்ளியில், புதன்கிழமை 21ஆம் நூற்றாண்டு இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தைத் துவக்கி வைத்து அமைச்சர் பேசியது: சுமார் 120 கோடி மக்களைக் கொண்ட இந்திய நாட்டை 5,250 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளே ஆட்சிசெய்து வருகின்றனர். இத்தகைய அதிகார வர்க்கத்தின் மூலம் நாட்டுக்கு வளர்ச்சியும், தடையும்கூட ஏற்படுவது உண்டு. எல்லோரிடமும் திறமை உள்ளது. நாம் உள்வாங்கிக் கொள்ளும் விதம், வாங்கிக் கொண்ட விஷயத்தை எவ்வாறு வெளிப்படுத்துவது என்பதுதான் திறமை. அந்தத் திறமையைக் கற்றுத் தருவதற்காகத் தான் இதுபோன்ற பயிற்சி மையங்கள். ஆசிய, பசிபிக் பகுதிகளில் உள்ள நாடுகளை சாலைகள் மூலம் இணைக்கும் வகையில் வரும் டிச.16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை ஐ.நா. சபையில் உள்ள நாடுகளின் கூட்டம் இந்தியாவில் நடைபெற உள்ளது. வரும் டிச.3 ஆம் தேதி நடைபெற உள்ள முதல்கட்டப் பேச்சுவார்த்தையின்போது பாங்காக்கில் தொடங்கி, சென்னை வழியாக வரும் சாலையில் புதுக்கோட்டை-சிவகங்கை-ராமநாதபுரம் வழியாக தனுஷ்கோடி வரை 4-வழிச் சாலை அமைக்க வலியுறுத்தும் திட்ட வரைவு அளிக்கப்பட உள்ளது என்றார் அவர். dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக