செவ்வாய், 1 அக்டோபர், 2013

வாசன் மீண்டும் தமிழ் மாநில காங்கிரசை ஆரம்பிக்கிறார் ? ராகுல் பெயர் தமிழ்நாட்டில் போணியாகாது ?

வாசன் காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி? அதன் பைனான்ஸூக்கும் ஆள் ரெடி?

Viruvirupu,தமிழக காங்கிரஸ் வட்டாரங்களில் தற்போது அதி பரபரப்பாக அடிபடும் சமாச்சாரம், “மத்திய அமைச்சர் வாசன் தனிக் கட்சி தொடங்குகிறாராமே..” என்பதாக உள்ளது. அவரது கட்சி, அடுத்த மாதமேகூட தொடங்கப்படலாம் என கூறும் ஆட்களும் அக் கட்சியில் உள்ளார்கள்.
சமீப காலமாக மத்திய அரசை லேசாக எதிர்க்கும் கருத்துக்களை வாசன் கூறிவருகிறார். முக்கியமாக இலங்கை தொடர்பாக மத்திய அரசு எடுத்துள்ள நிலைப்பாடு குறித்து, அந்த மத்திய அரசில் அமைச்சராக இருந்துகொண்டே அதிரடியான கருத்துக்களை கூறி வருகிறார், வாசன்.
சமீபத்தில் வாசன் கூறிய காரசாரமான கருத்து ஒன்று குறித்து ராகுல் கோபம் கொண்டதாகவும், அந்த தகவல் வாசனுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், டில்லியில் ஒரு பேச்சு உள்ளது. ராகுலின் கோபத்தை பற்றி வாசன் கண்டுகொள்ளவில்லை எனவும், ஆச்சரியத்துடன் கூறுகிறார்கள்.

கடந்த சில மாதங்களாகவே, ராகுல் காந்திக்கும், வாசனுக்கும் டேர்ம்ஸ் அவ்வளவு சரியாக இல்லை என்பதை, தமிழக காங்கிரஸ் கட்சியில் பலரும் ஒப்புக் கொள்கிறார்கள். கட்சிக்குள் ‘வாசன் எதிரணி’யைச் சேர்ந்தவர்களுக்கு, இப்போதெல்லாம் டில்லியில் செல்வாக்கு அதிகமாம்.
தமிழகத்தில் இன்றுள்ள அரசியல் நிலைமையில், நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகச் சொற்ப எண்ணிக்கையான தொகுதிகளில் ஜெயிப்பதே கடினம் என புரிந்து வைத்திருக்கும் வாசன், தனிக் கட்சி தொடங்குவதற்கு இதுதான் சரியான நேரம் என நினைக்கிறார் என்கிறார்கள், அவரது ஆதரவாளர்கள்.
வாசனின் தூதர் ஒருவர், தென் மாவட்டங்களை சேர்ந்த சில காங்கிரஸ் புள்ளிகளை ரகசியமாக சந்திக்க தொடங்கியுள்ளார் எனவும், கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது. புதிய கட்சிக்கு நிதி வழங்கவும், தமிழக தொழிலதிபர் ஒருவர் தயாராக உள்ளாராம்.
ஆனால், அவரது ஜாதிக்கட்சி அரசியல் பின்னணி குறித்து வாசன் தயக்கம் காட்டுகிறார் எனவும், ஒரு தகவல் உண்டு
viruvirupu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக