சனி, 5 அக்டோபர், 2013

15 தொகுதிகளில் பா.ம.க. தனித்து போட்டி! பா.ம.க. அறிவித்து விட்டது.

தென்சென்னை, திருவள்ளூர், ஸ்ரீபெரும் புதூர், திருவண்ணாமலை, கடலூர், சிதம்பரம், திண்டிவனம், காஞ்சீபுரம், சேலம், தர்மபுரி, விழுப்புரம், ஆரணி, கிருஷ்ணகிரி, அரக்கோணம், கள்ளக்குறிச்சி 
பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக பா.ம.க. அறிவித்து விட்டது. இதையடுத்து வடமாவட்டங்களில் தங்களுக்கு சாதகமான தொகுதிகளை பா.ம.க தேர்வு செய்துள்ளது.
அதில் தென்சென்னை, திருவள்ளூர், ஸ்ரீபெரும் புதூர், திருவண்ணாமலை, கடலூர், சிதம்பரம், திண்டிவனம், காஞ்சீபுரம், சேலம், தர்மபுரி, விழுப்புரம், ஆரணி, கிருஷ்ணகிரி, அரக்கோணம், கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகள் அடங்கி உள்ளன.
கடந்த தேர்தல்களில் இந்த தொகுதிகளில் பா.ம.க. பெற்ற ஓட்டுகள் மற்றும் சமுதாய அமைப்பு வாரியாக இருக்கும் ஆதரவு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த தொகுதிகளை தேர்வு செய்துள்ளனர்.
இந்த தொகுதிகளில் தகுதியான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளை பா.ம.க. தீவிரப்படுத்தி இருக்கிறது.

சம்பந்தப்பட்ட தொகுதி அடங்கிய மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அடங்கிய கூட்டத்தை காட்டி வேட்பாளர்களை தேர்வு செய்கிறார்கள்.
ஒவ்வொரு தொகுதிக்கும் 3 முதல் 5 பேர் கொண்ட பெயர் பட்டியலை தயார் செய்கிறார்கள். இந்த மாத இறுதிக்குள் 15 தொகுதிகளின் வேட்பாளர்கள் பெயர் பட்டியலை அனுப்பி வைக்கும்படி கட்சி தலைமை கேட்டுக் கொண்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக