சனி, 2 ஏப்ரல், 2022

மருத்துவத்துறையில் சீனியர்கள் - அஷிஸ்டன்ட்கள் என்ற முகமூடியில் உலவும் மனிதத்தன்மையற்ற மிருகங்களால் பறிபோன மருத்துவரின் உயிர்

 john Aaron Prabhu  :  Why I hate this profession.! It's not a noble one.! Anti Ragging Warning SoCalled Seniors
மருத்துவர்  அர்ச்சனா-விற்காக  கொதித்துக் கொண்டிருக்கும் மருத்துவர்களை நோக்கி சில கேள்விகள் …
இன்று வட இந்தியாவில் நடந்தது போல தமிழ்நாட்டில் அனுதினமும் இது போன்ற கொடுமைகள் இங்கும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன …
நீங்கள் நாள்தோறும் உடன் பணிபுரியும் பெண் மருத்துவர்களை அல்லது ஜூனியர் மருத்துவர்களை சீனியர்கள் என்ற ஒரே காரணத்தால் கொடுமைப்படுத்தாமலா இருக்கிறீர்கள்…?
25/26 வயதில்  இரண்டாமாண்டு முதுநிலை மருத்துவம் படித்துக் கொண்டு 30 வயது அல்லது 25-க்கு குறைவான வயதுடைய முதலாமாண்டு மருத்துவர்களை நீங்கள் நடத்தும் விதம் என்ன..?
தமிழகம் முழுவதும் பெரும்பாலான மருத்துவக்கல்லூரிகளில் இருந்து தொடர்ந்து இது போன்ற குற்றச்சாட்டுகள் வந்துகொண்டுதான் இருக்கிறது்...

இலங்கை மக்களுக்கு தமிழக முதல்வர் நீட்டும் உதவிக்கரம்

 

இராதா மனோகர் : தமிழ்நாடு முதலமைச்சர் திரு மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு,
இலங்கையில் பொருளாதார சிக்கல்களால் இன்னல் படும் தமிழ் மக்களுக்கு உதவி செய்வதற்கு ஒன்றிய அரசின் அனுமதியை கோரி இந்திய பிரதமர் மாண்புமிகு திரு நரேந்திர மோடி அவர்களிடம் தாங்கள்  கோரிக்கை விடுத்திருப்பதற்கு முதலில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
இலங்கையின் தற்போதைய பொருளாதார இன்னல்கள் வெறுமனே தமிழர்களுக்கு மாத்திரம் உரியதல்ல.
இலங்கையின் மொத்த மக்களுமே இன்று பெரும் இன்னல்களுக்கு ஆட்பட்டுள்ளார்கள் என்பது தெரிந்ததே.
இந்த இன்னல் காலங்களில் இலங்கை மக்களை சிங்களவர் தமிழர் என்று பிரித்து உதவி கோருவது அங்குள்ள மக்களுடையே  தேவையற்ற ஒரு கசப்புணர்வை மீண்டும் பரப்பி விடக்கூடும் என்ற அச்சம் உண்டாகிறது

மாநகராட்சி நகராட்சி பேரூராட்சிகள் சொத்து வரி உயர்வு!

மாலைமலர் : தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் சொத்து வரிகளை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டதற்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சொத்து வரி உயர்வு தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வர இருக்கிறது. முதல்-அமைச்சரின் பார்வைக்கு வராமல் இத்தகைய அறிவிப்பு செய்யப்பட்டிருக்கும் என நினைக்கிறேன்.
ஏற்கனவே, வரலாறு காணாத பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வினால் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிற பொதுமக்கள் இந்த சொத்து வரி உயர்வினால் மேலும் பாதிக்கக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் - வில்சன் DMK - MP

dhinakaran -தினகரன் : உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வேண்டும்: திமுக எம்.பி.வில்சன் கோரிக்கை
சென்னை: உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் என்று திமுக எம்.பி.வில்சன் கோரிக்கை விடுத்தார். சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட 4 இடங்களில் உச்சநீதிமன்ற கிளையை அமைக்க வேண்டும் என திமுக எம்.பி.வில்சன் தெரிவித்தார் 

டெல்லியில் அண்ணா - கலைஞர் அறிவாலயம்" : முக்கிய தலைவர்கள் பங்கேற்பு!

 கலைஞர் செய்திகள் : டெல்லி தி.மு.க அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலயத்தை தி.மு.க தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
டெல்லி தி.மு.க அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலயத்தை தி.மு.க தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அண்ணா - கலைஞர் அறிவாலயத்தின் முன் பகுதியில் அண்ணா, கலைஞர் ஆகியோரது சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன.

சீமான் மயங்கி விழுந்தார் .. திருவொற்றியூரில்

  நக்கீரன் செய்திப்பிரிவு : திருவொற்றியூரில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென மயங்கி விழுந்தார்.
சென்னை திருவொற்றியூர் அண்ணாமலை நகரில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதற்காக, அங்கிருந்த குடியிருப்புகளை அகற்றும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் இரண்டாவது நாளாக ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால் அங்கு பரபரப்பு நிலவுவதால் காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், பொதுமக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக, இன்று (02/04/2022) காலை 11.00 மணியளவில், அப்பகுதிக்கு வந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பொதுமக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இலங்கையில் போராட்டங்களை ஒடுக்க 36 மணி நேரம் ஊரடங்கு உத்தரவு

 மாலைமலர் : அதிபர் கோத்தபய பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை மற்றும் போராட்டம் வலுத்துள்ள நிலையில், இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் பொதுமக்கள் கடும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உணவு பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தினமும் 13 மணி நேரம் வரையில் மின்வெட்டு அமலில் உள்ளதால் பொதுமக்களின் மக்களின் இயல்பு  வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடிகளுக்கு அதிபர் அதிபர் கோத்தபய ராஜபக்சே எடுத்த முடிவுகளே காரணம் என கூறி எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இலங்கையில் அவசரநிலை பிரகடனம் - ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச உத்தரவு

BBC : இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி, மக்களின் தொடர் போராட்டங்களுக்கு மத்தியில், இலங்கையில் அவசரநிலையை பிரகடனப்படுத்தினார்
அந்நாட்டு ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இலங்கையின் கடன் அதிகமாகி, அந்நியச் செலாவணி கையிருப்பு தீர்ந்துபோனதால் இலங்கை இத்தகைய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.
நெருக்கடியைச் சமாளிக்க இந்தியா போன்ற நாடுகளில் கூடுதலாகக் கடன் வாங்குகிறது.
சர்வதேச செலாவணி நிதியத்திடம் கடன் பெறவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் இறக்குமதியை நம்பியிருப்பதால், அவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

காங்கிரஸ், இடதுசாரிகள், மாநில கட்சிகள் இணைந்து பாஜகவை எதிர்க்க வேண்டும்: ஸ்டாலின் அதிரடி

 Rajkumar R -     Oneindia Tamil :  டெல்லி : காங்கிரஸ் இடதுசாரிகள் மற்றும் மாநிலக் கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை எதிர்த்துப் போராட வேண்டும் எனவும், தமிழகத்தில் திமுகவுடன் இருப்பது போல் அகில இந்திய அளவில் கட்சிகளுடன் கொள்கை ரீதியான நட்புறவை காங்கிரஸ் வளர்க்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது நாளாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.
பின்னர் தலைநகர் டெல்லியில் வினோத்நகரில் உள்ள அரசு மாதிரி பள்ளியை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலினை, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் வரவேற்றனர்.

வெள்ளி, 1 ஏப்ரல், 2022

ஆளுநருக்கு எதிரான தனி நபர் மசோதா வில்சன் (DMK) தாக்கல் ராஜ்ய சபாவில்! மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க “டைமிங்”..

 Shyamsundar -   Oneindia Tamil :   சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவியை விமர்சித்து இன்று முரசொலியில் கட்டுரை எழுதப்பட்ட நிலையில்,
 மாநில சட்டமன்றங்கள் நிறைவேற்றும் மசோதா மீது ஆளுநர்கள் முடிவு எடுத்து ஒப்புதல் வழங்க கால நிர்ணயம் வகுக்க வேண்டும் என நாடாளுமன்ற மாநிலங்களவையில் தனிநபர் மசோதாவை தி.மு.க எம்.பி. பி.வில்சன் தாக்கல் செய்துள்ளார்.
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால், தமிழகத்தின் நலன் சார்ந்த சில முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதலளிக்காமல் கிடப்பில் வைத்து விடுகிறார் கவர்னர்.
ஒப்புதல் அளிப்பதற்கு அரசியலமைப்பு சட்டத்தில் கால நிர்ணயம் செய்யப்படாததால் தனக்குரிய அந்த அதிகாரத்தை பயன்படுத்தி கால தாமதம் செய்து வருகிறார் தமிழக கவர்னர் என்ற புகார் உள்ளது.

தமிழகத்தில் காங்கிரஸ் செல்வாக்கு சரிகிறதா?

 மின்னம்பலம் : டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் திமுக உள்ளிட்ட பிற கட்சியினருடன் உரையாடிக் கொண்டிருக்கும் படங்களை அனுப்பியது.
அந்தப் படங்களைப் பார்த்துவிட்டு
வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
"டெல்லியில் திமுக அலுவலக திறப்பு விழாவிற்காக சென்றிருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் திமுக மூத்த நிர்வாகிகள் உடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது டெல்லியில் உள்ள தமிழர்களை திமுக உறுப்பினர்களாக சேர்ப்பது குறித்த பேச்சு வந்தது.
அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் மற்ற கட்சிகளின் உறுப்பினர் சேர்க்கை பற்றிய விவாதமும் கொஞ்ச நேரம் நடந்திருக்கிறது.
அப்போது தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி டிஜிட்டல் மெம்பர்ஷிப் என்ற வகையில் மின்னணு முறையில் உறுப்பினர் சேர்க்கை நடத்தி வருவது பற்றி ஸ்டாலின் சீனியர் நிர்வாகிகளுடன் சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டுக்குரிய ஜி எஸ் டி 13,504.74 கோடி ரூபாய் உட்பட 20,860.40 கோடி ரூபாயை உடனே விடுவிக்க கோரி நிர்மலா சீதாராமனிடம் மு.க.ஸ்டாலின் மனு அளித்தார்.

 மாலைமலர் : சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டு நிலுவைத் தொகையான 13,504.74 கோடி ரூபாய் உட்பட 20,860.40 கோடி ரூபாயை உடனே விடுவிக்க கோரி நிர்மலா சீதாராமனிடம் மு.க.ஸ்டாலின் மனு அளித்தார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணமாக நேற்று முன்தினம் டெல்லி சென்றார்.
அங்கு தமிழ்நாடு அரசு இல்லத்தில் தங்கி உள்ள அவர் நேற்று காலை பாராளுமன்ற வளாகத்தில் உள்ள தி.மு.க. அலுவலகத்திற்கு சென்றார்.
இதை கேள்விப்பட்ட காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி பகல் 12.30 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்தார். இதன் பிறகு மதியம் 1 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்தில் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து பேசினார்.

கொழும்பில் ஊரடங்குச் சட்டம்.. குடியரசு தலைவர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம்

colombo curfewவீரகேசரி : ஜனாதிபதி இல்லத்திற்கு முன்பாக தொடரும் போராட்டங்களுக்குப் பின்னர், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கொழும்பின் பல பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, மத்திய கொழும்பு மற்றும் நுகேகொட ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உடன் அமுலுக்குவரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வீட்டிற்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்ற நிலையிலேயே, இந்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஊரடங்குச்சட்டம் மறு அறிவித்தல் வரை போடப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்,
இதேவேளை, களனி மற்றும் கல்கிசை பொலிஸ் பிரிவுகளிலும் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் ‘Press Meet’ நடத்திய முதலமைச்சர்... பிரதமர், அமைச்சர்கள் உடனான சந்திப்பு குறித்து விளக்கம்!

 கலைஞர் செய்திகள் : பிரதமர் மற்றும் அமைச்சர்கள் உடனான சந்திப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் 14 முக்கிய கோரிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்வைத்தார்.
மேலும், டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா-கலைஞர் அறிவாலய திறப்பு விழாவுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.
தொடர்ந்து ஒன்றிய அமைச்சர்கள் நிதின் கட்கரி, அமித்ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோரைச் சந்தித்து பேசினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த சந்திப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

ரஷிய வெளியுறவு மந்திரி இந்தியா வருகை ... உக்ரைன் போர் சூழலில்

 தினத்தந்தி : புதுடெல்லி, உக்ரைன் நாடு மீது ரஷியா தொடுத்து வரும் போரானது 36வது நாளாக நீடித்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பல நாடுகள் முயற்சித்த போதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன.
உக்ரைன் தலைநகர் கீவ், மரியப்போல், கார்கீவ், கார்சன் உள்பட பல்வேறு நகங்களில் ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதற்கிடையில், இந்த போர் உலக நாடுகளின் அரசியலில் பெரும் தாக்கம் ஏற்படுத்தியுள்ளது. மேற்கத்திய நாடுகள், ஆசிய நாடுகள், வளைகுடா நாடுகள் என பல்வேறு நாடுகளும் இந்த போரில் தங்கள் நிலைப்பாட்டை கவனமாக கையாண்டு வருகின்றன.

வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உச்ச நீதிமன்றம்

 மின்னம்பலம் : வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சாதகமானது என்றும், விரைவில் எட்டிவிடும் தொலைவிலேயே உள்ளது என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சாதியை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இட ஒதுக்கீட்டை முடிவு செய்ய முடியாது என்று வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இது பாமகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த தீர்ப்பு வன்னியர் சமூகத்திற்கும், சமூக நீதிக்கும் எதிரானது என்று கூறி மரக்காணம் இ.சி.ஆர் சாலையில் 50க்கும் மேற்பட்ட பாமகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மரக்காணம் போலீசார், சாலை மறியல் செய்த பாமக கட்சியினரை கைது செய்து அங்குள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

வியாழன், 31 மார்ச், 2022

சென்னை ஆல்பெர்ட் திரையரங்கம் மீது பெருநகர மாநகராட்சி ஜப்தி நடவடிக்கை!

கலைஞர் செய்திகள் : வரி செலுத்த தவறியதால் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கம் மீது ஜப்தி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது மாநகராட்சி நிர்வாகம்.
சொத்து மற்றும் கேளிக்கை வரி செலுத்தாத பிரபல திரையரங்கில் சீல் வைத்து ஜப்தி செய்தது சென்னை பெருநகர மாநகராட்சி.
2021 - 22ம் நிதியாண்டிற்கான சொத்து வரி செலுத்துவதற்கு இன்றே கடைசி நாள் என்றும் கட்ட தவறியவர்களுக்கு வட்டி விதிக்கப்படும் என சென்னை பெருநகர மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்திருந்தது.
வரி கட்டாததால் ஜப்தி.. சென்னையில் பிரபல தியேட்டர் மீது பெருநகர மாநகராட்சி அதிரடி நடவடிக்கை!

கிளிநொச்சி 20 மாணவர்கள் தங்கள் கைகளை தாங்களே பிளேட்டினால் வெட்டிய அதிர்ச்சி சம்பவம்

வீரகேசரி :  கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் சுமார் 20 மாணவர்கள் பிளேட்டினால்  தங்களது கைகளை  தாங்களே வெட்டிக்கொண்டுள்ளதாக சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு  முன்  தரம் ஒன்பதில் கல்வி பயிலும் மாணவர்கள் பலர் பிளேட்டினால் தங்களது கைகளை தாங்களே வெட்டியுள்ளனர்.
பின்னர் குருதியினை கடதாசி மூலம் துடைத்துவிட்டு கிருமி தொற்று நீக்கி திரவத்தை (சானிடைசர்)  காயத்தின் மேல் தெளித்து கொண்டதாக நேரில் பார்த்த  சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை குறித்த மாணவர்கள் சாதரணமாக செய்து கொள்வதாகவும், ஒருவருக்கு ஒருவர் பார்த்து வெட்டிக்கொண்டதன் மூலமே வெட்டியவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாகவும் சக மாணவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு.. இலங்கை தமிழர்களுக்கு உதவ அனுமதி தருக!" பிரதமரை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை!

 மாலைமலர் : டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாராளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார்.
புதுடெல்லி:  
பாராளுமன்றத்தில் 7 எம்.பி.க்களுக்கு மேல் உள்ள கட்சிகளுக்கு டெல்லியில் அலுவலகம் கட்டி கொள்ள மத்திய அரசு இடம் ஒதுக்கி கொடுத்தது.
அதன் அடிப்படையில் டெல்லியில் பிரமாண்டமாக தி.மு.க. அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. அண்ணா- கலைஞர் அறிவாலயம் என்று இந்த கட்டிடத்துக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
டெல்லி தி.மு.க. அலுவலக கட்டிட திறப்பு விழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது. இதற்காக தி.மு.க. சார்பில் எல்லா கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. சனிக்கிழமை மாலை இந்த கட்டிடத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

பார்ட்டிக்கு வந்த பெண்ணை நான்கு பேரோடு சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த நீச்சல் வீரர்.. பெங்களூரில் நடந்த பகீர் சம்பவம்!

டின்னருக்கு நம்பி வந்த பெண்ணை நண்பர்களுக்கு இரையாக்கிய நீச்சல் வீரர்.. பெங்களூரில் நடந்த பகீர் சம்பவம்!

கலைஞர் செயதிகள்  : பாதிக்கப்பட்ட பெண் மேற்குறிப்பிட்ட 4 வீரர்களில் ஒருவரான ரஜத் என்பவருடன் டேட்டிங் செயலி மூலம் பழகி வந்திருக்கிறார்.
டின்னருக்கு அழைத்து இளம் செவிலியரை நீச்சல் வீரர்கள் நால்வர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெங்களூருவில் நடந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண் மேற்குறிப்பிட்ட 4 வீரர்களில் ஒருவரான ரஜத் என்பவருடன் டேட்டிங் செயலி மூலம் பழகி வந்திருக்கிறார்.
இதையடுத்து கடந்த மார்ச் 24ம் தேதி நியூ பெல் ரோட்டில் உள்ள தனியார் உணவு விடுதியில் இரவு பார்ட்டிக்காக ரஜத் நர்ஸை வர வைத்திருக்கிறார். அப்போது பெண்ணை ஒரு அறைக்கு அழைத்து சென்றிருக்கிறார் ரஜத்.

நியூ கலிடோனியாவில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவு

 தினத்தந்தி : நவுமியா,  தெற்கு பசிபிக் நாடான நியூ கலிடோனியா தீவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நியூ கலிடோனியா பகுதியில் உள்ள டாடினில் 7.0 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து அந்த பகுதியில் அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டன.
இந்த நிலநடுக்கம் 10 கிமீ (6.21 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக யுஎஸ்ஜிஎஸ் தெரிவித்துள்ளது.  
இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. அதேபோல பொருள் தேசம் குறித்தும் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.

புதன், 30 மார்ச், 2022

“தமிழக முதலமைச்சர் எல்லா தொழில் முதலீடுகளையும் ஈர்த்துட்டாரு..” : கர்நாடக மேலவையில் புலம்பிய கொறடா!

பீட்டர் அல்போன்ஸ் : கர்நாடக மாநிலத்திற்கு வரவேண்டிய அநேக முதலீடுகள் தற்போது தமிழகத்திற்கு போவதாக கர்நாடக சட்ட மேலவையில் அரசு கொரடா வருத்தம்" தமிழக முதலமைச்சரின் திறமையான நிர்வாகத்திற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? சகோதரர் அண்ணாமலை அறிதல் நலம்!@CMOTamilnadu @INCTamilNadu
Image

கலைஞர் செய்திகள் : கர்நாடக மாநிலத்திற்கு வரவேண்டிய ஏராளமான தொழில் முதலீடுகள் தற்போது தமிழ்நாட்டை நோக்கி நகர்வதாக கர்நாடக சட்ட மேலவையில் அரசு கொறடா பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் பல்வேறு துறைகளிலும் தமிழ்நாடு பெரும் வளர்ச்சியைப் பெற்று வருகிறது.
2021ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை தமிழ்நாட்டில் வெளிநாட்டு நேரடி முதலீடு 41.5 சதவிகிதம் வளர்ச்சியடைந்து 17,696 கோடியை எட்டியுள்ளது.

அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் கடந்து வந்த பாதை

ss dmk

நக்கீரன் - வே.ராஜவேல்  : திமுக ஆட்சி அமைந்த பிறகு முதல்முறையாக அமைச்சரவையில் மாற்றம் வந்திருக்கிறது. முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரைச் சாதி கூறி விமர்சித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ராஜகண்ணப்பன் துறை மாற்றப்பட்டுள்ளது. ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்துத் துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.
தீவிர திராவிட இயக்க பற்றாளரும் கலைஞருக்கு பக்க பலமாக இருந்தவருமான மறைந்த எஸ். சிவசுப்ரமணியன் மகன் எஸ்.எஸ்.சிவசங்கர். 1996 – 2001 அரியலூர் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர், 2001-2006 அரியலூர் மாவட்ட ஊராட்சி உறுப்பினர், 2006-ல் ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினர், 2011-ல் குன்னம் சட்டமன்ற உறுப்பினர், 2016 ல் அரியலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு, குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
2021-ல் குன்னம் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

வன்னியர் உள் ஒதுக்கீடு ரத்து..மேல்முறையீடு செய்த தமிழக அரசு, பாமக.. உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு..!

  Rajkumar R -  Oneindia Tamil :  சென்னை : வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் அரசாணையை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மற்றும் பாமக தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்குல் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது.
கடந்த முறை ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு வன்னியர் சமூகத்துக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்தது.
தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு நடைமுறையில் உள்ள 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் , சீர் மரபினருக்கு 7 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 2.5 சதவீதம் என மூன்று பிரிவுகளாக உள் ஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் அறிவித்தது.

ஹலால் என்பதே ஒரு பொருளாதார ஜிஹாத் தான்!" பாஜகவின் சி.டி.ரவி சர்ச்சை பேச்சு.. முழு பின்னணி

ஹலால் முறை

Vigneshkumar - Oneindia Tamil : பெங்களூர்: ஹலால் உணவு தொடர்பாக பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ள கருத்துகள் பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. மாதம் ரூ. 4999 செலுத்தி சென்னையில் வீடு வாங்கி செம சான்ஸ் சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாகவே ஹலால் இறைச்சி குறித்து தகவல் பரவி வருகிறது. இந்துக்கள் அனைவரும் ஹலால் இறைச்சியைத் தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அதில் கூறப்பட்டு வருகிறது.
உகாதி பண்டிகைக்கு மறுநாள், அசைவம் சாப்பிடும் இந்துக்கள் கடவுளுக்கு இறைச்சியைப் படையல் செய்து புத்தாண்டைக் கொண்டாடுவார்கள். இந்நிலையில், இந்த சடங்கைத் தவிர்க்குமாறு சமூக வலைத்தளங்களில் வலதுசாரி அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

காதலனுடன் இருந்த இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்கள் கைது!

Three youths arrested for intimidating and sexually abusing a girl who was with her boyfriend!

நக்கீரன் -சுந்தர பாண்டியன் : கடலூர் அருகே உள்ள நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடலூரில் உள்ள ஒரு கடையில் வேலைப் பார்த்து வருகிறார்.
அந்த பெண்ணை குண்டு உப்பலவாடியைச் சேர்ந்த சரவணன் (வயது 23) என்பவர் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இருவரும் பணி முடிந்த பிறகு கம்பியம்பேட்டையில் ஒரு இடத்தில் தனிமையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது அங்கு வந்த மூன்று பேர் அவர்களை மிரட்டி வீடியோ எடுத்து அந்தப் பெண்ணை வன்கொடுமை செய்துள்ளனர்.
அந்த வழியாக காவல்துறையினர் வந்தபோது, அந்த பெண் இதுகுறித்து காவல்துறையினரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து இந்த மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அண்ணாமலை Vs ஆர்.எஸ்.பாரதி: தீவிரமாகும் மோதல்!

 மின்னம்பலம் :சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று(மார்ச் 29) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “விருதுநகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, எதற்காக முதல்வர் குடும்பத்தினர் தொடர்ச்சியாக துபாய் செல்கிறார்கள். 5000 கோடி பணத்துடன் துபாய் சென்ற மர்மம் என்ன என்று பேசியிருந்தேன். அதுபோன்று சென்னையில் நடைபெற்ற பட்ஜெட் கண்டன போராட்டத்தில், முதல்வர் துபாய் போய் இருக்கிறார். போகும்போது நிறைய நிதி எல்லாம் கூட்டிட்டு போகப் போகிறார். அது தமிழ்நாட்டுக்கு வரப் போகிற நிதியா, கோபாலபுரத்து நிதியா அல்லது அவருடைய சொந்தத்துக்கான நிதியா என்பது தெரியவில்லை என்று பேசியிருந்தேன்.

புதிய அரசியலமைப்பு குறித்து நம்பிக்கை கொள்ளவேண்டாம்!! கூட்டமைபிடம் ஜெய்சங்கர்‌ கூறினார்

 இலக்கியா : • 13 ஆம்‌.திருத்தச்‌ சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த தாம்‌
அரசாங்கத்துக்கு அழுத்தம்‌ கொடுப்போம்‌ – கூட்டமைபிடம்  ஜெய்சங்கர்‌  எடுத்துரைப்பு
புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்‌ என முழுமையான நம்பிக்கை வைக்க வேண்டாம்‌ என்றும்‌ ஆனால்‌ 13 ஆம்‌.திருத்தச்‌ சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த தாம்‌
அரசாங்கத்துக்கு அழுத்தம்‌ கொடுப்போம்‌ எனவும்‌ இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்‌ கலாநிதி எஸ்‌.ஜெய்சங்கர்‌ தமிழ்‌ தேசிய கூட்டமைப்பிடம்‌ உறுதியளித்துள்ளார்‌.
பிம்ஸ்டெக்‌ மாநாட்டில்‌ கலந்துகொள்ள இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்‌ ஜெய்சங்கர்‌ நேற்று பிற்பகல்‌ தமிழ்‌ தேசிய கூட்டமைப்பை சந்தித்து கலந்து உரையாடியிருந்தார்‌.

15 ஆண்டுகள் பழமையான வாகனங்கள் .. காலாவதியாகப்போகும் தொழில்கள்

May be an image of 2 people and text that says 'udnatutthlauanlue udgoturith பட்ஷெட் 2021-22 15 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த வர்த்தக வாகனங்கள் முழுமையாக அகற்றப்படும். -நிர்மலா சீதாராமன் JAYALUS PLUS ஓசரடு STCCL NETWORK 156 62 140 34 AлaaHaR AKAHATA 192 TI www.jayanewslive.com JAK 42 #BudgetwithJayaplus DIGITAL 53 ETWORK 31 MULTECITY 01-02-2021 11:44AM AM 108 TATA sky 1558 64 2. Jaya Plus SUN 790 50 wowaN 584 dishtr) jayapluschannel 584 159 jayaplusnews 136 52 JAYA PLUS m JayaPlusChannel'

Sivakasi Thamizhanda  :  RTI Act/public grievances தகவல் அறியும் உரிமை சட்டம்/மக்கள் புகார் பெட்டி
15 ஆண்டுகள் பழைய வாகனங்கள் நீக்கம்,
இதில் வாகனங்கள் மட்டுமல்ல*
1) சாலையோர மெக்கானிக்குகள்,
2) சாலையோர பஞ்சர் கடைகள்,
3) சாலையோர Spare parts கடைகள்,
4) spare parts-ஐ உற்பத்தி செய்யும் சிறு தொழில் நிறுவனங்கள்,
5) சாலையோரத்தில் Grease அடிப்பவன்,
6) லேத் பட்டரைகள்,
7) ஆண்டுக்கு ஒரு முறை FC செய்யவேண்டி வண்டியை புதுப்பிக்கும் தொழிலில் ஈடுபடும் பாடி கட்டுவோர்,
8) பெயிண்டர்,
9) வெல்டர்,
10) Auto electrician

செவ்வாய், 29 மார்ச், 2022

தமிழ்நாடு சுகாதார , மருத்துவ துறைகள் மெதுவாக ஒன்றிய அரசின் நேரடி கட்டுப்பாட்டிற்குள்.. ? ஒரு மருத்துவரின் கேள்வி

May be an image of 1 person and indoor

 Anu Rathna : சிலமாதங்களுக்கு முன்பு எனக்கு டெல்லியில் இருந்து அறிமுகமில்லா எண்ணில் இருந்து  தொலைபேசி அழைப்பு வந்தது.
நமஸ்தே என்று ஆரம்பித்த அந்த குரல்,நான் பேசுவது பொன்னேரி அரசு மருத்துவமனை மருத்துவர் அனுரத்னாவிடமா என ஆங்கிலத்தில் கேட்டார்கள்.
ஆம் நீங்க யார் என்றேன்.
புதுதில்லியில் இருந்து சுகாதாரத்துறை அமைச்சகத்தில் இருந்து அழைப்பதாக சொன்னார்கள்.
இந்தியில் பேசவா ஆங்கிலத்தில் பேசவா என்றார்கள்.எனக்கு ஆங்கிலம் மட்டுமே புரியும் என்றேன்.
சரி ஆங்கிலத்திலேயே பேசுவோம் என்று பேசத்தொடங்கியவர்கள் மருத்துவக்காப்பீடு குறித்து கேட்டார்கள்,நீங்க ஏன் உங்க மருத்துவமனையில் பிரதமமந்திரியின் விரிவான மருத்துவக்காப்பீடு மூலம் நோயாளிககுக்கு சிகிச்சை வழங்கவில்லை என்றார்கள்.
"நீங்க பேசுவது தமிழகத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையின் மருத்துவரிடம்,எங்களுக்கு எங்க மாநில முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளது,தமிழகத்தில் உள்ள அனைவரும் இத்திட்டத்தில் பயனடைகிறார்கள்,அதனால் எனக்கு PMJAY என்கிற பிரதம மந்திரியின் மருத்துவ காப்பீடு தேவைப்படல"என்றேன்.
சரிங்க மேடம் பிரதமமந்திரியின் மருத்துவ காப்பீடு மூலம் உங்க மருத்துவமனையில் சிகிச்சை கிடைக்க என்ன செய்யலாம்,உங்களுக்கு ஏதேனும் idea இருக்கா என்றார்கள்.ரொம்ப எளிமையா தன்மையா பொறுமையா கேட்கிறார்கள்.

கண்ணப்பன் துறை மாற்றப் பின்னணி! தொடர் சர்ச்சைகள்

தொடர் சர்ச்சைகள்: கண்ணப்பன் துறை மாற்றப் பின்னணி!

மின்னம்பலம் : தொடர் சர்ச்சைகளில் சிக்கி வந்த போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அந்தத் துறையில் இருந்து மாற்றப்பட்டு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பணியாற்றி வந்த எஸ். எஸ். சிவசங்கர் இன்று முதல் போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப் படுகிறார். இதற்கான அறிவிப்பை முதல்வர் மு.க. ஸ்டாலின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் மாளிகை இன்று மார்ச் 29ஆம் தேதி வெளியிட்டுள்ளது.
திமுக ஆட்சி அமைந்த கடந்த 10 மாதங்களில் அதிக சர்ச்சைகளுக்கு உள்ளான அமைச்சர் என்று பெயரெடுத்தவர் ராஜ கண்ணப்பன் தான்.
கடந்த 2021 ஆம் வருடம் தீபாவளி பண்டிகையை ஒட்டி போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு ஸ்வீட் கொள்முதல் செய்வதில் டெண்டர் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக முதன்முதலில் மின்னம்பலம் 2021 அக்டோபர் 18ஆம் தேதி செய்தி வெளியிட்டது.

மகனைப் புதைக்க இடம் தாராத நீங்கள் எல்லாம் கிறிஸ்டியன் சொல்லாதீங்க".. ஒரே மகனை இழந்த தாயின் கதறல்.!

school van accident son killed...mother blamed christian society

tamil.asianetnews.com -  vinoth kumar  :  ஒரு குழந்தையை புதைக்க இடம் கொடுக்க முடியாத நீங்கள் எல்லாம் எதற்கு கிறிஸ்டியன் என்று சொல்லவேண்டும் என்று  பள்ளி பேருந்து மோதி உயிரிழந்த தீக்சித் தயார் கதறியபடி கூறியுள்ளார்.
சென்னை விருகம்பாக்கம் இளங்கோவன் நகரை சேர்ந்தவர் வெற்றிவேல்.
இவர் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி ஜெனிபர். இவரும் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் போக்குவரத்துத்துறை அமைச்சராக நியமனம்! பிற்படுத்தபிற்பட்டோர் நல அமைச்சராக ராஜகண்ணப்பன் மாற்றம்

 மாலைமலர் : தமிழ்நாடு  அமைச்சரவையில் இரண்டு இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பனுக்கு வேறு இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவையில் மாற்றம்: போக்குவரத்துத்துறை அமைச்சராக சிவசங்கரன் நியமனம்
தமிழ்நாடு  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் இரண்டு இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ன. போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சிவசங்கரனிடம் போக்குவரத்துத்துறை கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: முன்னாள் மாணவர் கைது!

 Chinniah Kasi  : சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் மாணவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி மாணவி ஒருவர் சக மாணவர்களால் 2017ஆம் ஆண்டிலிருந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்.
இதுகுறித்து புகார் தெரிவித்த மாணவியை, பேரா.எடமன பிரசாத் சாதி ரீதியாக, அவமானப்படுத்தி, தொடர் தொந்தரவு கொடுத்துள்ளார். எனவே உள்புகார் கமிட்டியில் மாணவி புகார் செய்தார். விசாரணையில், குற்றம் நடந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

துபாயின் 6 முக்கிய நிறுவனங்களுடன் தமிழக அரசு ரூ.6,100 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

 தினகரன்  : துபாயின் 6 முக்கிய நிறுவனங்களுடன் தமிழக அரசு  ரூ.6,100 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஒப்பம் இடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: என்னுடைய பயணம் வெற்றிகரமாக, மகிழ்ச்சிகரமான பயணமாக அமைந்தது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
6 மிக முக்கியமான தொழில் நிறுவனங்களோடு ரூ.6,100 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது.
மேலும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 14,700 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அவர் தகவல் தெரிவித்துள்ளார்

99.99% மாணவிகள் ஹிஜாப் அணியாமல் பொதுத்தேர்வு எழுதினர்: கர்நாடக கல்வி அமைச்சர் தகவல்

 hindutamil.in  : பெங்களூரு: கர்நாடகாவில் திங்கள்கிழமை தொடங்கிய 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 99.99% மாணவிகள் ஹிஜாப் அணியாமல் தேர்வு எழுதினர் என்று அம்மாநில கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் கல்வி நிறுவனங்களுக்கு ஹிஜாப் அணிந்து வர மாநில அரசு தடைவிதித்தது. இந்த தடை உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்றம் மாநில அரசின் உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்தது. ஹிஜாப் தடையை எதிர்த்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்த நிலையில், உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி முறிவு... புதுச்சேரியில் ஆட்சி கவிழ்ப்பு?

tamil.samayam.com : புதுச்சேரியில் கடந்தாண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தற்போது, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதலமைச்சராக உள்ளார். அங்கு, என்.ஆர்.காங்கிரஸ் - 10, பாஜக - 6, சுயேச்சைகள் 6, திமுக - 2 மற்றும் காங்கிரஸ் - 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
புதுச்சேரி அமைச்சரவையில் பாஜக சார்பில் நமச்சிவாயம் மற்றும் சாய் சரவணன் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதோடு, சபாநாயகர் பொறுப்பும் பாஜகவின் ஏம்பலம் செல்வத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. ஆரம்பம் முதலே முதலமைச்சர் பதவிக்கு போட்டியில் இருந்த நமச்சிவாயம் உள்துறை, கல்வி, பொதுப்பணி உள்ளிட்ட முக்கிய துறைகளை தன் வசம் வைத்துள்ளார்.
ஆரம்பம் முதலே முதலமைச்சர் ரங்கசாமிக்கு எதிராக பாஜக செயல்படுவதாகவும், என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் எனவும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

துருப்புச் சீட்டு துபாய்: ஸ்டாலினுக்கு எதிராக பாஜக பிளான்!

 மின்னம்பலம் : வைஃபை ஆன் செய்ததும் பெரம்பலூரில் நடந்த பாஜக உள்ளாட்சி பிரதிநிதிகள் பயிற்சிக் கூட்டத்தின் சில படங்கள் முன்வரிசையில் வந்தன.
அவற்றை சேவ் செய்து கொள்ள ஒரு மெசேஜ் அனுப்பிவிட்டு, தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது வாட்ஸ்அப்.
"மார்ச் 26 ,27 தேதிகளில் பெரம்பலூரில் தமிழ்நாடு பாஜக சார்பில் வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் தமிழக பாஜக மையக் குழு கூட்டத்தையும் நடத்தலாம் என திட்டமிட்டிருந்தார்கள். தேசிய அமைப்பு பொது செயலாளர் பி.எல். சந்தோஷ் வருகை தந்திருப்பதால் மையக் குழு கூட்டத்தை நடத்தலாம் என முதலில் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் தமிழ்நாடு மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி, இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் வர முடியாததால் மையக் குழு கூட்டத்தை வரும் 30 ஆம் தேதி நடத்த முடிவு செய்திருக்கிறார்கள்.

திங்கள், 28 மார்ச், 2022

ஆஸ்கர் மேடையில் அறை விட்ட வில் ஸ்மித்துக்கு எழும் ஆதரவும் விமர்சனமும் - ஒரு விரைவுப் பார்வை

 .hindutamil.in : லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த 94-வது ஆஸ்கர் விருது விழாவில், "உங்கள் வாயிலிருந்து என் மனைவியின் பெயர் இனியும் வரக் கூடாது" என்று எஃப் சொற்களுடன் கடுமையாகக் கூறிய வில் ஸ்மித்தின் குரல் இன்னமும் சிலர் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
ஆஸ்கர் விருது விழாவை பிரபல நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக் தொகுத்து வழங்கினார்.
அப்போது, வில் ஸ்மித்தின் மனைவி ஜாடா ஸ்மித்தைப் பார்த்து, "ஜிஐஜேன் (அப்படத்தின் மைய கதாப்பாத்திரமான கதாநாயகி மொட்டை அடித்திருப்பார்) படத்துக்கு தயாராகி கொண்டிருக்கிறீர்களா?" என்று நகைச்சுவை தொனியில் கேட்டார்.

டீச்சரை பதுங்கி இருந்து வெட்டிய மாணவன் .. விருத்தாசலத்தில்

government school teacher attacked by student..police investigation

tamil.asianetnews.com  : விருத்தாசலத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில பெண் ஆசிரியரை பள்ளி மாணவர் ஒருவர் கத்தியால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலுார் மாவட்டம் விருத்தாசலம் காட்டுக்கூடலுார் ரோடு, திருவள்ளுவர் நகர் 1வது தெருவைச் சேர்ந்தவர் சரவணகுமார். இவரது மனைவி ரேகா (42). இவர் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பள்ளிக்கு அருகில் வீடு இருப்பதால், மதிய உணவு இடைவேளையில், தினசரி வீட்டிற்கு சென்று சாப்பிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

பேருந்து மோதி இறந்த மாணவனின் உடலை பெற்றுக்கொண்டனர்! சென்னையில் பள்ளி..

 மின்னம்பலம் : சென்னையில் பள்ளி பேருந்து மோதி மாணவன் உயிரிழந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவனின் பெற்றோருக்கு உறுதியளித்துள்ளார்.
சென்னை விருகம்பாக்கம் இளங்கோவன் நகரை சேர்ந்தவர் வெற்றிவேல். இவர் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெனிபர். இவரும் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களின் மகன் தீக்சித்(7) என்பவர் வளசரவாக்கம் அருகே உள்ள ஆழ்வார் திருநகர் பகுதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் படித்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை பள்ளி வளாகத்தில் பள்ளி வேன் மோதி தீக்சித் உயிரிழந்தார். இதையடுத்து மாவட்ட கல்வி அதிகாரி மார்க்ஸ், அம்பத்தூர் வருவாய்த் துறை அதிகாரி இளங்கோ, காவல் துணை ஆணையர் மீனா உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

2 நாள் பாரத் பந்த்; பல மாநிலங்களில் பாதிப்பு; தொழிற்சங்கத்தினர் போராட்டம்

 .hindutamil.in : புதுடெல்லி: நாட்டின் பல மாநிலங்களிலும் இன்று வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் தொழிற்சங்கத்தினர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத அகவிலைப்படி நிலுவையை உடனே வழங்க வேண்டும், மத்திய அரசு அலுவலகங்களில் 8.75 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்க கூடாது என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் இன்றும், நாளையும் (மார்ச் 28, 29) நாடுதழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதில் மத்திய, மாநில அரசு ஊழியர்களின் அகில இந்திய அமைப்புகள், காப்பீட்டு நிறுவனங்கள், வங்கி உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களின் தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளன.

இலங்கை அரசியலில் அதிரடி மாற்றம்? ரணில் பிரதமராகிறார்?

tamilmirror.lk  : பிரதமர் பதவியில் மாற்றங்கள் ஏற்படக்கூடுமென, அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாடு தற்போது முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், தற்போதைய அரசாங்கத்தினால் அரசியல் ரீதியில் பாரிய மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.
அதனடிப்படையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவியை துறப்பார் என்றும் அதன்பின்னர், அரசியல் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.click link - dailymirror.lk

சித்ரா ராமகிருஷ்ணாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு. பங்குச்சந்தை ஊழல் வழக்கு!

 மாலைமலர் : பங்கு சந்தையின் ரகசிய தகவல்களை இமயமலையில் இருக்கும் சாமியார் ஒருவரிடம் சித்ரா ராமகிருஷ்ணா பகிர்ந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தேசிய பங்குச்சந்தை தொடர்பான ரகசிய தகவல்களை கசிய விட்ட விவகாரத்தில், தேசிய பங்குச்சந்தை முன்னாள் இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணாவின் நீதிமன்றக் காவலை ஏப்ரல் 11ம் தேதி வரை நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
மேலும், சித்ரா ராமகிருஷ்ணாவின் கையெழுத்து மாதிரிகளை கேட்டு, சிபிஐ தாக்கல் செய்த விண்ணப்பத்தின் மீது நீதிமன்றம் விரைவில் உத்தரவு பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை திருப்பிக் கொடுத்த ரூ.927 கோடி: ஒருவர் கூட பயனடையவில்லையா?

ஆதிதிராவிடர் நலத் திட்டத்தால் அரசிடம் ஒப்படைக்கப்பட்ட ரூ.927 கோடி

தமிழக அரசு சமீபத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கியமான அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன. இந்த ஆண்டு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு தமிழ்நாடு அரசு ரூ.4281.76 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக (2016 - 2021 வரை) ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.927 கோடி செலவிடப்படாமல் அரசாங்கத்திடமே திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது ஆர்.டி.ஐ மூலம் பெற்றப்பட்ட தகவல்களில் தெரியவந்துள்ளது.
அதே போல் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் வெளிநாடு சென்று பட்டம் பெறுவதற்காக ஒதுக்கப்படும் நிதியும் முறையாக செயல்படுத்தப்படாமல் உள்ள தகவலும் ஆர்.டி.ஐ மூலம் தெரியவந்துள்ளது.

மே 9-க்குள் ரஷ்யா போரை நிறுத்திக்கொள்ள விரும்புகிறது? – என்ன காரணம்.. `The Kyiv Independent’ தகவல்

 விகடன் : மே 9-ம் தேதிக்குள் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா விரும்புவதாக உக்ரைன் ராணுவம் தகவல் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து கொண்டிருக்கிறது. போரின் தொடக்கத்தில் உக்ரைனின் ராணுவ வீரர்கள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றை மட்டுமே குறிவைத்துத் தாக்கிய ரஷ்யப் படைகள், போகப்போக அப்பாவி மக்களையும் தங்கள் குண்டுகளுக்குக் குறியாக்கிக் கொல்லத் தொடங்கின.
அதனால், உக்ரைன் மக்கள் உயிர் பயத்தில் அங்கிருந்து அண்டை நாடுகளுக்கு அகதிகளாக வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.

ஞாயிறு, 27 மார்ச், 2022

13 வயது மாணவி தற்கொலை முயற்சி - 55 வயது ஆசிரியர் முரளிகிருஷ்ணா பாலியல் சீண்டல்! போக்சோவில் கைது..

 கலைஞர் செய்திகள் :  13 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை.. 55 வயது ஆசிரியர் போக்சோவில் கைது - போலிஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை!
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், படித்து வருபவர் கூலித் தொழிலாளியின் 13 வயது மகள். இவர் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத போது, வீட்டில் உள்ள தின்னரை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதை கண்ட அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்து, மாணவியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். மாணவி தற்கொலைக்கு முயன்ற காரணத்தை கேட்ட பெற்றோர் அதிர்ந்து போயுள்ளனர்.

மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்குக்கு ஓராண்டு சிறை: முன்னாள் மத்தியப்பிரதேச முதல்வர்

Digvijay Singh to meet Congress MLAs and Ministers in Jaipur on Oct 1

BBC : முன்னாள் மத்தியப் பிரதேச முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான திக்விஜய் சிங்குக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து இந்தூர் மாவட்ட நீதிமன்றம் சனிக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
உஜ்ஜயினி தாக்குதல் வழக்கு என்று அறியப்படும் இந்த வழக்கில் திக்விஜய் சிங், முன்னாள் எம்.பி. பிரேம்சந்த் குட்டு உட்பட 6 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் பின்னணி என்ன?
2011ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி நடந்த ஓர் அரசியல் சம்பவம்தான் இப்போது முன்னாள் முதல்வர் ஒருவருக்கு சிறைத் தண்டனையை பெற்றுத் தந்துள்ளது.
அன்றைய தினத்தில் திக்விஜய் சிங் உஜ்ஜையினியில் உள்ள ஓட்டல் ஒன்றின் திறப்பு விழாவுக்குச் சென்றிருந்தார். அவருக்கு பாரதீய ஜனதா யுவ மோர்ச்சா தொண்டர்கள் அவரது வாகனத் தொடருக்கு முன்பாக கருப்புக் கொடி காட்டினார்கள்

ஸ்டாலின் துபாய் பயணம் | ரூ.2,600 கோடி முதலீடு, 9700 பேருக்கு வேலைவாய்ப்பு - யுஏஇ நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தம்

 .hindutamil.in : சென்னை: தமிழக்கத்தில் 2600 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 9700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் விதமாக ஐக்கிய அரபு நாடுகளின் முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகம் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளிடையே பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும், தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்திலும் துபாய் மற்றும் அபுதாபிக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். அந்தப் பயணத்தில் இன்று சனிக்கிழமை, முதல்வர் ஸ்டாலின் ஐக்கிய அரபு நாடுகளின் முதலீட்டாளர் அமைப்பின் உறுப்பினர்களை சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, தமிழகத்தின் சிறப்புகளையும், தமிழகத்தில் சிறந்த தொழில் சூழல் நிலவுவதையும் சுட்டிக்காட்டி, மாநிலத்தில் முதலீடுகள் மேற்கொள்ளுமாறு அமைப்பின் உறுப்பினர்களுக்கு முதல்வர் கோரிக்கை விடுத்தார்.

அனில் அம்பானி ! ஹீரோவாக இருந்து ஜீரோ ஆன கதை . சரிவுக்கு என்ன தான் காரணம்..?!

 Prasanna Venkatesh -  GoodReturns :  இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமங்களின் ஒன்றாகத் திருபாய் அம்பானி உருவாக்கிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வேகமாக வளர்ச்சி அடைந்த வந்த காலகட்டத்தில் படிப்பை முடித்த கையோடு 1983 ஆம் ஆண்டில் அனில் அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் ஒரு நிர்வாக அதிகாரியாகச் சேர்ந்தார்.
மாதம் ரூ. 4999 செலுத்தி சென்னையில் வீடு வாங்கி செம சான்ஸ்
2002ஆம் ஆண்டுகள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சாம்ராஜ்ஜியம் 15 பில்லியன் டாலர் அளவிலான மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதே ஆண்டுத் திருபாய் அம்பானி காலமானார், இதன் பின்பு பல பிரச்சனைகளுக்குப் பின்பு அம்பானி சகோதரர்கள் மத்தியில் சொத்து, வர்த்தகம் என அனைத்தும் பிரிக்கப்பட்டது.

ரஷியா - உக்கிரேன்! குறைந்த பட்சம் ஒரு முதலாளித்துவ ஜனநாயத்தையாவது பாதுகாப்போமா?

May be a meme of 2 people and text

Kamali Teps  : உண்மை..!   நேட்டோ மற்றும் அமெரிக்கா ஒட்டுமொத்த மனித குலத்தின் நலன்களை கணக்கில் எடுப்பதில்லை.
அவர்கள் சார்ந்த பொருளாதார நலன்களின் அடிப்படையிலேயே செயற்படுகின்றனர்.
நல்லது!
அதற்கு மாற்றான ஒரு தனியான நாடு அல்லது ஒரு முற்போக்கான முகாம் உலகில் இருக்கிறதா என்றால் கிடையாது.
அப்படியானால்.
ஒரேமாதிரியான இரண்டு முகாம்களுக்கு இடையிலான மோதலில் ஒரு தரப்பை ஆதரிப்பது அதுவும் ஆக்கிரமிப்பு யுத்தத்தை ஆரம்பித்த நாட்டை ஆதரிப்பது எந்த வகையான முற்போக்கு?