சனி, 2 ஏப்ரல், 2022

டெல்லியில் அண்ணா - கலைஞர் அறிவாலயம்" : முக்கிய தலைவர்கள் பங்கேற்பு!

 கலைஞர் செய்திகள் : டெல்லி தி.மு.க அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலயத்தை தி.மு.க தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
டெல்லி தி.மு.க அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலயத்தை தி.மு.க தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அண்ணா - கலைஞர் அறிவாலயத்தின் முன் பகுதியில் அண்ணா, கலைஞர் ஆகியோரது சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் தி.மு.க கொடி பறக்கும் வகையில் கொடி கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. பிரமாண்ட அறிவாலயத்தின் முன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட கொடி கம்பத்தில் தி.மு.க கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார்.
டெல்லி தி.மு.க அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலயத்தை தி.மு.க தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

டெல்லி அண்ணா - கலைஞர் அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா சிலையை திறந்துவைத்தார் தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன். முத்தமிழறிஞர் கலைஞர் சிலையை திறந்துவைத்தார் பொருளாளர் டி.ஆர்.பாலு!

டெல்லி அண்ணா - கலைஞர் அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் அரங்கத்தை திறந்துவைத்தார் முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின்!

அண்ணா - கலைஞர் அறிவாலய திறப்பு விழாவில் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் எழுதிய 'Karunanidhi - A Life' நூலை இந்து என்.ராம் வெளியிட சோனியா காந்தி பெற்றுக் கொள்கிறார். பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் எழுதிய 'A Dravidian Journey' நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து, திறப்பு விழாவில் பங்கேற்ற தலைவர்களுக்கு சால்வை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கினார் முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின்.

பின்னர், டெல்லி அண்ணா - கலைஞர் அறிவாலயத்தில் அமைந்துள்ள பேராசிரியர் நூலகத்தை திறந்து வைத்தார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி!

தேசிய அரசியலில் நிச்சயம் அண்ணா கருணாநிதி அறிவாலயம் இனி முக்கியப் பங்கு வகிக்கும் என அரசியல் அரங்கில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 "டெல்லியில் திறக்கப்பட்டது அண்ணா - கலைஞர் அறிவாலயம்" : முக்கிய தலைவர்கள் பங்கேற்பு! #DMKinDelhi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக