புதன், 30 மார்ச், 2022

ஹலால் என்பதே ஒரு பொருளாதார ஜிஹாத் தான்!" பாஜகவின் சி.டி.ரவி சர்ச்சை பேச்சு.. முழு பின்னணி

ஹலால் முறை

Vigneshkumar - Oneindia Tamil : பெங்களூர்: ஹலால் உணவு தொடர்பாக பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ள கருத்துகள் பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. மாதம் ரூ. 4999 செலுத்தி சென்னையில் வீடு வாங்கி செம சான்ஸ் சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாகவே ஹலால் இறைச்சி குறித்து தகவல் பரவி வருகிறது. இந்துக்கள் அனைவரும் ஹலால் இறைச்சியைத் தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அதில் கூறப்பட்டு வருகிறது.
உகாதி பண்டிகைக்கு மறுநாள், அசைவம் சாப்பிடும் இந்துக்கள் கடவுளுக்கு இறைச்சியைப் படையல் செய்து புத்தாண்டைக் கொண்டாடுவார்கள். இந்நிலையில், இந்த சடங்கைத் தவிர்க்குமாறு சமூக வலைத்தளங்களில் வலதுசாரி அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

பொருளாதார ஜிஹாத். கர்நாடகாவின் சில பகுதிகளில் இந்து பண்டிகை சமயத்தில் கோயில்களைச் சுற்றி இருக்கும் கடைகளில் முஸ்லீம்களுக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், இப்போது இதை இணையத்தில் சிலர் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் சி.டி.ரவி. "ஹலால் என்பது பொருளாதார ஜிஹாத். முஸ்லிம்கள் மற்றவர்களுடன் வியாபாரம் செய்வதைத் தடுக்க இந்த ஜிஹாத் பயன்படுத்தப்படுகிறது. இந்த முறை வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகிறது.

ஹலால் முறை ஹலால் இறைச்சியைப் பயன்படுத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தும் போது, ​​அதைப் பயன்படுத்தக் கூடாது என்று கூறுவதில் என்ன தவறு இருக்கிறது? அவர்களின் கடவுளுக்கு வழங்கப்படும் ஹலால் இறைச்சி அவர்களுக்கு (முஸ்லீம்களுக்கு) மிகவும் பிடித்தமானதாக உள்ளது. ஆனால் இந்துக்களைப் பொருத்தவரை இது யாரோ ஒருவரின் எஞ்சியதாகவே உள்ளது. முஸ்லிம்களிடம் இருந்து முஸ்லீம் மட்டுமே பொருட்களை வாங்கும் வகையில் இந்த ஹலால் முறை வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஏன் வாங்க வேண்டும் இந்துக்களிடம் இருந்து இறைச்சியை வாங்க முஸ்லிம்கள் மறுக்கும் போது, ​​அவர்களிடமிருந்து மட்டும் இந்துக்கள் இறைச்சியை வாங்க வேண்டும் என்று ஏன் வலியுறுத்த வேண்டும்? இதுபோன்ற வர்த்தகங்கள் இரு வழிகளில் செயல்பட வேண்டும். முஸ்லிம்கள் ஹலால் அல்லாத இறைச்சியைச் சாப்பிடச் சம்மதம் தெரிவித்தால் மட்டுமே, இந்துக்கள் ஹலால் இறைச்சியைப் பயன்படுத்துவார்கள்" என்று அவர் தெரிவித்தார். ஹலால் இறைச்சி தொடர்பாக சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளப்படும் இந்தப் பிரசாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ண்டிப்பு இதற்கிடையில், முன்னாள் முதலமைச்சரும், ஜேடிஎஸ் தலைவருமான குமாரசாமி, இத்தகைய பரப்புரைகளைக் கண்டித்துள்ளார். மாற்று மதத்தினரின் நம்பிக்கையைக் கெடுக்கும் வகையிலும் மாநிலத்தின் அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் இந்த பிரசாரம் உள்ளதாகவும் சாடியுள்ளார். "இந்த மாநிலத்தை எங்குக் கொண்டு செல்ல விரும்புகிறீர்கள் என்று இந்த அரசைக் கேட்க விரும்புகிறேன். தயவு செய்து மாநிலத்தைக் கெடுக்க வேண்டாம். வரும் காலத்தில் சில கடினமான நாட்கள் இருக்கும் என்பதால் அமைதியைச் சீர்குலைப்பவர்களை இளைஞர்கள் தவிர்க்க வேண்டும்

காங்கிரஸ் தான் காரணம் கர்நாடக மாநிலத்தில் இத்தகைய மதவாத அரசியலின் எழுச்சிக்குக் காங்கிரஸ் பொறுப்பேற்க வேண்டும். காங்கிரஸ் கட்சி தான் இத்தகைய அரசை மாநிலத்தில் கொண்டு வந்தது. இப்போது பாஜக அரசு மோசம் என்று காங்கிரஸ் கூறுகிறது. அதற்கு யார் பொறுப்பு? கர்நாடகாவில் இப்போது இந்த நிலை ஏற்பட ஜேடி(எஸ்) அல்லது குமாரசாமி பொறுப்பல்ல. காங்கிரஸ் செயல்பாடுகளால் தான் இப்போது மாநில மக்கள் அவதிப்படுகின்றனர்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக