மின்னம்பலம் : மஞ்சள் பை இயக்கம் பூத்த கதை!
அரசுத் தலைவரான முதலமைச்சரால் நேற்று (டிசம்பர் 23) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள மஞ்சள் பை இயக்கம், எங்கு, யார் யாரால் விதையாக இடப்பட்டது என்பதை உறுதிபடச் சொல்லமுடியாது என்றாலும், பத்து ஆண்டுகளுக்கு முந்தைய துணிப்பை இயக்கம் இதன் முன்னோடி எனக் கூறலாம்.
பத்து ஆண்டுகளுக்கு முன்னர், சென்னைப் புத்தகக் காட்சியில், ‘மழை மண் மரம் மானுடம்’ என்கிற குழுவினர், பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக துணிப்பைகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்தனர். லட்சக்கணக்கான மக்கள் வந்துசெல்லும் மிகப்பெரிய திருவிழாவான சென்னைப்
புத்தகக் காட்சியில் தொடங்கினால் நிச்சயமாக நல்ல பலன் தரும் என அந்தக்
குழுவினர் நம்பிக்கையுடன் தொடங்கினார்கள்.
சனி, 25 டிசம்பர், 2021
மஞ்சள் பை இயக்கம் பூத்த கதை .. புத்தக திருவிழாவில் தொடங்கிய புள்ளி
உத்தராகண்ட்: தலித் பெண் சமைத்த உணவை சாப்பிட மறுத்த ஆதிக்க சாதி மாணவர்கள்
தலித் பெண் சுனிதா தேவி |
வட்டார உறுப்பினர் தீபா ஜோஷி |
உத்தராகண்ட் மாநிலம், சம்பாவத் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், சமையலர் பணியில் இருக்கும் தலித் பெண்மணி சமைத்த உணவை ஆதிக்க சாதிக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் சாப்பிட மறுத்துள்ளனர்.
இந்த விவகாரம் வெளியில் வந்ததையடுத்து, உணவு சமைத்த பெண்மணியை பணியிலிருந்து நீக்கியது மட்டுமின்றி, இந்தப் பதவிக்கு புதிதாக ஒருவரை நியமனம் செய்வதாகவும் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனால் இந்த விவகாரம் தீர்க்கப்பட்டுவிட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இந்த விவகாரம் மேலும் சிக்கலாக மாறக்கூடும் என்று பிபிசி இந்தியின் கள நிலவர ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சம்பாவத்தில் உள்ள சுக்கிடாங் இண்டர் காலேஜில் மொத்தம் உள்ள 230 மாணவர்களில், ஆறாம் முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் 66 மாணவ மாணவிகளுக்கு மதிய உணவு தயார் செய்யப்படுகிறது.
தலித் பெண் சமைத்த உணவை சாப்பிட மறுத்த ஆதிக்க சாதி மாணவர்கள்
பாக்ஸ்கான் தொழிலாளர்களுக்கு நிம்மதி.. தமிழக அரசு எடுத்த ஆக்ஷன்!
உயிர் பயத்தால் 8 டோஸ் தடுப்பூசி போட்ட நபர்: 9-வது முறையாக ஏமாற்ற முயன்றபோது கைது ... பெங்களூர்
file pictue |
மாலைமலர் : ஒரு டோஸ் தடுப்பூசி போடவே பலர் பயந்து வரும் நிலையில் உயிர் பயத்தில் போலி ஆவணங்கள் மூலம் 8 டோஸ் தடுப்பூசி போட்ட நபர் போலீசில் சிக்கிய சம்பவம் பேசப்படும் பொருளாக மாறியுள்ளது.
பெங்களூரு: கொரோனா என்ற கொடிய அரக்கன் இந்தியாவில் காலூன்றி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இருப்பினும் அதன் தாக்கம் இன்னும் இருந்து வருகிறது. இதற்கிடையே ஒமைக்ரான் என்ற உருமாறிய வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதில் மக்களை காக்க மத்திய அரசு கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை போடும் பணியை முடுக்கி விட்டுள்ளது. ஒரு நபர் 2 டோஸ் தடுப்பூசி போட அரசு அனுமதி உள்ளது. அத்துடன் ஒமைக்ரான் பரவலை தொடர்ந்து மக்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.
திருமாவளவன் : பாஜகவுக்கு எதிராக நாடு தழுவிய கூட்டணி அமைய ஸ்டாலின் முன் முயற்சி எடுக்க வேண்டும்
மின்னம்பலம் : பாஜகவுக்கு எதிராக நாடு தழுவிய கூட்டணி அமைய ஸ்டாலின் முன்முயற்சி எடுக்க வேண்டும் என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் வைத்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஆண்டுதோறும் விருது வழங்கும் விழா நடைபெறுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு அம்பேத்கர் சுடர் விருது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், பெரியார் ஒளி விருது வைகோவுக்கும், காமராஜர் கதிர் விருது நெல்லை கண்ணனுக்கும், அயோத்தி தாசர் ஆதவன் விருது குடியரசுக் கட்சி மூத்த தலைவர் கரியமால், காயிதே மில்லத் பிறை விருது இந்திய தேசிய லீக் தமிழ் மாநில தலைவர் பஷீர் அகமது, செம்மொழி ஞாயிறு விருது மொழியியலாளர் முனைவர் ராமசாமி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
இலங்கை திருக்கோவில் போலீஸ் நிலைய துப்பாக்கி சூடு 4 போலீசார் உயிரிழப்பு
BBC - Tamil : இலங்கையின் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் அமைந்துள்ள போலீஸ் நிலையத்தில் நேற்று (24) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு போலீசார் உயிரிழந்தனர்.
குறித்த நிலையத்தில் பணியாற்றி வந்த – போலீஸ் உத்தியோகத்தர் ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்.
நேற்றிரவு 11.40 மணியளவில் இச்சம்பவம் நடந்ததாக பிபிசி தமிழிடம், திருகோவில் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் போலீசார் மூவர் உயிரிழந்தனர். காயமுற்று வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டவர்களில் ஒரு போலீஸ் உத்தியோகத்தர் பின்னர் உயிரிழந்தார்.
மீண்டும் வேளாண் சட்டங்கள்..? மத்திய அமைச்சர் தோமர் பேச்சு ...
மாலைமலர் : பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய சீர்திருத்தமான வேளாண் சட்டங்கள் சிலருக்குப் பிடிக்கவில்லை என நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.
நாக்பூர்: மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்கள், விவசாயிகளின் தொடர் போராட்டங்கள் காரணமாக திரும்ப பெறப்பட்டது. வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அடுத்தாண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேச தேர்தலைக் கருத்தில் கொண்டே மத்திய பாஜக அரசு இந்த முடிவை எடுத்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தனர்.
இந்நிலையில் வேளாண் சட்டங்கள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படலாம் என மத்திய வேளாண் துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் சூசகமாக தெரிவித்துள்ளார்.
கலைஞரை சண்முகநாதன் சொற்படிதான் ஸ்டாலினே சந்திப்பார் .. புரோட்டோகால் முக்கியம்.. கோபாலபுரத்து நினைவுகள்
Umamaheshvaran Panneerselvam : கலைஞர் கருணாநிதியை சந்திக்க ஒருமுறை கோபாலபுரம் சென்றிருந்தோம்.அவர் உடல் நலிவுறத் தொடங்கியிருந்த நேரம் அது. ஆதலால் பார்க்க வருபவர்களை எல்லாம் சற்றே அதிகமாக காக்கவைத்து சோதித்து அவசியம் இருப்பின் மட்டுமே அனுமதித்து வந்தார்கள்.
கலைஞர் இல்லத்தின் வலதுப்புற இடம் எப்பொழுதும் ஒருவித நிதானம் தவழும் இடமாக இருக்கும். நிறைய பேர் காத்திருந்தாலும் உள்ளே சலசலப்பே எழவில்லை எனில் அங்கே சண்முகநாதன் இருக்கிறார் என்று புரிந்துகொள்ளலாம்.
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர ஊழலில்ஹெலிகாப்டர் பேர ஊழலில் சோனியா காந்திக்கு தொடர்பு இல்லை- அமலாக்கப் பிரிவு. AgustaWestland ‘SG’ stands for Sushen Gupta, not Sonia Gandhi
Mathivanan Maran - Oneindia Tamil : டெல்லி: அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர ஊழலில் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு தொடர்பு இல்லை என அமலாக்கப் பிரிவு விளக்கம் அளித்திருக்கிறது.
2010-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது.
அப்போது ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட விவிஐபிகளுக்காக 12 அதிநவீன சொகுசு ஹெலிகாப்டர்களை இத்தாலியின் அகஸ்டா வெஸ்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது.
ரூ3,600 கோடி மதிப்பிலானது இந்த ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்துக்காக அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு ரூ400 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சர்ச்சை வெடித்தது.
நாட்டின் விமானப் படை தளபதியாக இருந்த தியாகி உள்ளிட்ட பலரது தலைகள் இந்த விவகாரத்தில் உருண்டன.
பின்னர் 2014-ல் மத்திய அரசு இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்திருந்தது!
link click not Sonia Gandhi
2016-ம் ஆண்டில் விவிஐபி ஹெலிகாப்டர் பேர ஊழலில் சோனியா காந்திக்கு தொடர்பிருப்பதாகவும் சர்ச்சை வெடித்தது. ஆனால் சோனியா காந்தி இதனை திட்டவட்டமாக மறுத்திருந்தார். மேலும் இது தொடர்பான விசாரணைகளை எதிர்கொள்ளவும் தாம் தயார் எனவும் சோனியா கூறியிருந்தார்.
மராட்டியத்தை விட அம்பேத்கர் புகழை பரப்பியது திராவிட இயக்கம்தான்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
Vignesh Selvara கலைஞர் செய்திகள் : "அம்பேத்கர் சுடர் விருதை பெரியார் திடலில் பெறுவதை விட வேறென்ன பெருமை கிடைத்துவிடப் போகிறது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
“மராட்டியத்தை விட அம்பேத்கரின் புகழை அதிகமாகத் தமிழ்நாட்டில் பரப்பியது திராவிட இயக்கம்தான்!” என அம்பேத்கர் சுடர் விருது பெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்புரை நிகழ்த்தினார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆண்டுதோறும் பல்வேறு சான்றோருக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. முத்தமிழறிஞர் கலைஞர், ஆசிரியர் கி.வீரமணி, எழுத்தாளர் அருந்ததி ராய், இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன், கே.எஸ்.அழகிரி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், சொல்லின் செல்வர் ஆ.சக்திதாசன், பாவலர் வை.பாலசுந்தரம், பேராசிரியர் காதர்மொய்தீன் உள்ளிட்ட பலருக்கு இதுவரை வி.சி.க-விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
மாரிதாஸ் விடுதலை நீதிமன்றத்துக்கு ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!
மின்னம்பலம்: மாரிதாஸ் மீதான வழக்குகளை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
யு ட்யூபர் மாரிதாஸ் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை மதுரை உயர் நீதிமன்றம் அடுத்தடுத்து ரத்து செய்தது. குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து பற்றி மாரிதாஸ் இட்ட ட்விட்டர் பதிவுக்கு எதிரான வழக்கையும், கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவலுக்கு தப்லிக் ஜமாத் மாநாடுதான் காரணம் என்று அவர் வெளியிட்ட வீடியோவுக்கு எதிரான வழக்கையும் அண்மையில் மதுரை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருந்தது.
வெள்ளி, 24 டிசம்பர், 2021
கொல்கத்தாவில் மம்தா பிரதமர் கோஷம் ஸ்பீடு ..போட்டியில் ராகுல் - ஸ்டாலின்- சரத் பவார்.......
Mathivanan Maran - Oneindia Tamil : கொல்கத்தா: 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மமதா பானர்ஜி பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா தலைவர் பினய் தமங் அறிவித்துள்ளார்.
க்கா ஜன்முக்தி மோர்ச்சா தலைவர் பினய் தமாங், முன்னாள் எம்.எல்.ஏ. ரோஹித் சர்மா ஆகியோர் இன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மோலாய் கடாக், பிரத்யா பாசு ஆகியோர் முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தனர்.
மோலாய் கடாக் செய்தியாளர்களிடம் பேசுகையில், கூர்க்காலாந்து தனி மாநிலம் கோரும் டார்ஜிலிங் அரசியலில் புதிய பயணம் எங்களுக்கு... இந்த தலைவர்கள் வருகையால் திரிணாமுல் காங்கிரஸ் வலிமை பெறும் என்றார். பிரத்யா பாசு கூறுகையில், பாஜக மக்களை மத ரீதியாக பிரித்து கொண்டிருக்கிறது. ஆனால் பாஜகவின் அரசியலை திரிணாமுல் காங்கிரஸ் தோற்கடித்தது. டார்ஜிலிங் மேம்பாட்டுக்காக மமதா பானர்ஜியை அந்த மக்கள் நம்புகின்றனர் என்றார்.
ஈஷா யோகா ஜாக்கியின் யானை வழித்தட ஆக்கிரமிப் பு- மீண்டும் ஆய்வு ! அமைச்சர் ராமச்சந்திரன் அதிரடி
Mathivanan Maran - Oneindia Tamil : s தஞ்சாவூர்: ஈசா யோகா மையத்தின் ஆக்கிரமிப்பு குறித்து மீண்டும் ஆய்வு நடத்தப்படும் என்று வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 டெல்டா மாவட்ட விவசாயிகள், எம்.எல்.ஏபங்கேற்ற ஆலோசனை கூட்டம் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற விவசாயிகள் ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள், விளைநிலங்களை பாழ்படுத்தும் கருவேல மரங்களை அழிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இக்கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராமச்சந்திரன், கோவை ஈஷா யோகா மையம் ஒரு சென்ட் கூட ஆக்கிரமிக்கவில்லை என ஏற்கனவே அறிக்கை கொடுத்திருக்கிறது. வனத்துறையின் அருகில் உள்ள கட்டுப்பாடுகள் மீறப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.
பரமக்குடி அரசு பள்ளியில் 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது
மாலைமலர் : தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளிகளுக்கே சென்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுவினர் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
அதன்படி சில நாட்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பெருமாள் கோவில் மலை அரசு உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுவினர் பாலியல் வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர்.
நடிகர் வடிவேலுக்கு கொரோனா.. ராமச்சந்திரா மருத்துவமனையில்
மாலைமலர் : உடல்நிலைக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் வடிவேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நகைச்சுவை நடிகர் வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பின் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை சுராஜ் இயக்கி வருகிறார்.
இப்படப்பிடிப்பிற்காக நடிகர் வடிவேலு லண்டன் சென்றிருந்தார். இந்நிலையில் உடல்நிலைக்குறைவு காரணமாக லண்டனில் இருந்து திரும்பிய அவர் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பழங்குடியினர் பாட்டு - இருளர் இன பாரம்பரிய இசை
Makkal Athikaram :; பழங்குடி மக்களின் மத்தியில் பல்வேறு மெட்டுகளில் பாடல் பரவிக்கிடக்கிறது. உழைக்கும் மக்களின் தாளகதியும், உண்டு கொழுக்கும் கூட்டத்தின் தாளகதியும் வேறுவேறு என்பதை நிரூபிக்கின்றது பழங்குடி மக்களின் இந்த பாடல்.
கான்கிரீட் கூட்டுக்குள் அமர்ந்துகொண்டு உழைக்கும் மக்களின் விடுதலைக்கான பாடலை தேடுவதைக் காட்டிலும் அலைந்து திரிந்து விடுதலைக்கான மெட்டை தேடுவதே மக்களுக்கான கலையாக இருக்கும்!
தேடுவோம்!
பகிர்வோம்!
விடுதலைக் குரலாய் ஒலிப்போம்!
"பாலியல் வன்கொடுமையை ஊக்குவிக்கும் பாடல்" ... சரவெடி சரண் மற்றும் டோனி ராக் ஆகிய இரு கானா பாடகர்கள்
கலைஞர் செய்திகள் : "பாலியல் வன்கொடுமையை ஊக்குவிக்கும் பாடல்" : கொதித்த திருவள்ளூர் எஸ்.பி - அதிரடி ஆக்ஷனில் போலிஸார்!
பள்ளிச் சிறுமிகள் குறித்து ஆபாசமாக பாடல் பாடிய நபர் குறித்து திருவள்ளூர் எஸ்.பி வருண்குமார் ட்விட்டரில் பதிவிட்ட நிலையில், அவர் மீது போலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
பள்ளிச் சிறுமிகள் குறித்து ஆபாசமாக பாடல் பாடிய நபர் குறித்து திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி வருண்குமார் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட நிலையில், அவர் மீது போலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கக்கன் அந்தக் காலத்து அன்னா அசாரே?
Arul Ezhilan அந்தக் காலத்து அன்னா அசாரே!
பெரியாரும், அண்ணாவும், கலைஞரும், என்ன செய்தார்கள் என பக்கம் பக்கமாக எழுதலாம்.
கக்கன் என்ன செய்தார்?
“அவரு ரொம்ப எளிமையானவருங்க”
இதைத் தவிற இந்த முழு மூடர்களிடம் வேறு ஏதாவது கக்கனைப் பற்றி சொல்ல இருக்கிறதா? (சட்டியில் இருக்கணும் அல்லது சொல்கிறவன் மூளையில் இருக்கணும்) கக்கன் அந்தக் காலத்தில் வாந்த அன்னா அசாரே மோசமான அரசியல் தலைவர். நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாதவர். அவர் போலீஸ் மந்திரியாக இருந்த போதுதான் மொழிப்போர் தியாகிகள் கொல்லப்பட்டார்கள். தமிழகத்தின் அடிப்படையான சமூகக் கட்டமைப்பின் அஸ்திவாரம் இட ஒதுக்கீடு. அதில் முதன் முதலாக பொருளாதார அளவுகோலை நுழைத்து சிதைத்தவர் எமுஜியார் அந்த எம்ஜிஆரை ஆதரித்தவர் கக்கன்.
பொதுவாக அரசியலில் எதையும் சாதிக்காத மக்களுக்கு நல்லது செய்யாதவர்களைப் புகழ ஒரே ஒரு வரி போதும் “அவுரு ரொம்ப எளிமையானவருங்க”
நாம் தமிழர் ஹிம்லர் மீது தாக்குதல் நடத்துவதா?.. திமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
Rayar A - Oneindia Tamil சென்னை: தருமபுரி மாவட்டம், அரூரில் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் சில நாட்களுக்கு முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மேடையில் பேசிக் கொண்டிருந்தனர்.
நாம் தமிழர் கட்சியின் மாநில பேச்சாளர் ஹிம்லர் என்பவர் திமுக அரசை மிக மோசமாக விமர்சித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. மேலும் திமுகவினரையும் தமிழக முதல்வரையும் ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த திமுகவினர் சிலர் திடீரென மேடையேறி பேச்சை நிறுத்தும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து திமுகவினருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே கடும் மோதல் மூண்டது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அங்கு போடப்பட்டு இருந்த நாற்காலிகளும், மேஜைகளும் வீசப்பட்டு அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது.
மாரிதாஸ் மீது 2 ஆவது வழக்கு ரத்து: அதே நீதிபதி உத்தரவு!
மின்னம்பலம் : யு ட்யூபர் மாரிதாஸ் மீதான மற்றொரு வழக்கும் இன்று (டிசம்பர் 23) மதுரை உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. மாரிதாஸ் பதிவு செய்த ட்விட்டர் பதிவு தொடர்பாக அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்த நீதிபதிதான் இந்த வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
மாரிதாஸ் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் இறந்தது தொடர்பாக பதிவு செய்த ட்விட்டர் பதிவு தொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதை ரத்து செய்யுமாறு மதுரை உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் இந்த வழக்கில் மாரிதாஸ் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றப் பிரிவுகள் பொருந்தாது என்று கூறி வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். இது வழக்கறிஞர்கள் மத்தியிலும் ஓய்வுபெற்ற நீதிபதிகள் மத்தியிலும் அரசியல் வட்டாரத்திலும் கூட விவாதிக்கப்பட்டது.
வியாழன், 23 டிசம்பர், 2021
பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் கேரள பள்ளி சீருடை - இஸ்லாமிய குழுக்கள் போராடுவது ஏன்?
பி பி சி தமிழ் : கேரள அரசு பள்ளி ஒன்றில், பதின்ம வயது மாணவிகள் கால் சட்டைகள் அணிய அனுமதிக்கப்பட்ட பின், அது அம்மாநிலத்தில் சர்ச்சையானது. இந்த உடைகள் மீதுள்ள சர்ச்சை குறித்து டெல்லியில் உள்ள பிபிசியின் கீதா பாண்டேவும், கேரளாவில் அஷ்ரஃப் படன்னாவும் விளக்குகின்றனர்.
புதன்கிழமை காலை, ஸ்ரீங்கி சி.கே தனது புதிய சீருடையுடன் பள்ளி பேருந்திற்காக காத்துக்கொண்டிருக்கும் போது, முன் பின் அறிகம் இல்லாத பெண்ணிடமிருந்து வந்த பாராட்டு அவருக்கு மிகவும் மகிழ்ச்சியளித்தது.
திருநங்கையாக மாறிய மகனை ஆட்களை வைத்து கொலை செய்த தாய்.. சேலத்தில்
இந்நிலையில் கடந்த வாரம் வீட்டின் அருகே உள்ள ஒரு முட்புதரில் நவீன்குமார் காயங்களுடன் கிடந்துள்ளார் அவரை மீட்ட உமாதேவி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
இதில் சிகிச்சை பலனின்றி கடந்த இரு தினங்களுக்கு முன்பு நவீன் குமார் என்ற அக்ஷிதா உயிரிழந்தார். சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேக மரணம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
கட்டாய மதமாற்ற தடைச்சட்ட மசோதா கர்நாடகாவில் நிறைவேறியது
மாலைமலர் : கட்டாய மதமாற்ற தடைச் சட்ட மசோதா மீது சட்டசபையில் இன்று விவாதம் நடைபெற்றபோது மசோதாவை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்தது.
பெங்களூரு: கர்நாடகாவில் கட்டாய மதமாற்ற தடை சட்ட மசோதா கடந்த இரு தினங்களுக்கு முன்பு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. மசோதா விவாதத்திற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டிகே சிவக்குமார், சட்ட நகலை கிழித்து தரையில் வீசினார்.
பின்னர் காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தள்ளுவண்டியில் இறந்து கிடந்த சிறுவன்... போலீசில் சிக்கிய சிசிடிவி ஆதாரம்.. விழுப்புரத்தில்
மாலைமலர் : பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுவன் உணவு இல்லாமல் பட்டினியால் இறந்திருப்பது தெரியவந்தது.
விழுப்புரத்தில் சென்னை நெடுஞ்சாலையில் மேல் தெருவில் ஒரு ஷோரூம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தள்ளு வண்டியில் சுமார் 5 வயது மதிக்கத்தக்க சிறுவன் கடந்த 15-ந்தேதி காலை பிணமாக கிடந்தான். சிறுவனின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த சிறுவன் கொலை செய்யப்பட்டானா? என்பது குறித்து விசாரணையை போலீசார் முடுக்கினர். ஆனால் அந்த சிறுவன் யார்? எந்த ஊரை சேர்ந்தவன் என்ற விபரம் தெரியவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கையில் உணவு இல்லாமல் பட்டினியால் அவன் இறந்திருப்பது தெரியவந்தத
மீண்டும் வரும் ‘மஞ்சள் பை! பிளாஸ்டிக் குப்பைக்கு டாட்டா
முதலமைச்சர் ஸ்டாலின் இன்று இத்திட்டத்தைத் தொடங்கிவைக்கிறார்.
அடிப்படை வடிகால் கட்டமைப்பு இல்லாத இந்தியா போன்ற நாடுகளில் மழைக்காலங்களில் ஊர் முழுவதும் வெள்ளம் தேங்கிநிற்பதற்கு, பிளாஸ்டிக் குப்பைகளும் முதன்மையான காரணமாக இருக்கின்றன. பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள், பொட்டலங்கட்டும் காகிதங்கள் போன்றவையே இதில் அதிக அளவில் பாதகமாக இருக்கின்றன.
சீமான் கட்சியை (NTK) ஏன் தடைசெய்யவேண்டும்?
செல்லபுரம் வள்ளியம்மை : சீமானின் கட்சியை ,
ஜனநாயக கட்சிகளும் அரசுகளும் ஏன் இன்னும் தடை செய்யவில்லை?
இந்த கேள்வி பல வருடங்களாகவே எனக்குள் இருந்து வருகிறது
ஜனநாயக நாட்டில் அனுமதிக்கவே கூடாத பாசிச கருத்துக்கள் கோட்பாடுகளை கொண்டிருக்கிறது சீமான் கட்சி
அப்பாவி மக்கள் மத்தியில் குறிப்பாக சிறுவர்கள் மனதில் பாசிசத்தை விதைத்து வருகிறது
ஒரு படுமோசமான சர்வாதிகார அரசியலின் முகவுரையாகவே சீமானின் அரசியல் உள்ளது.
வெறுமனே உதறி தள்ளிவிடக்கூடிய உதிரிதானே என்று அமைதியாக கடந்து போவது நிச்சயம் ஒரு வரலாற்று தவறுதான் என்று தோன்றுகிறது
சீமான் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வருவார் ..
அல்லது ஆட்சிகளை அமைப்பதற்கு ஏதோவொரு வழியில் வெற்றிகளை பெறுவார் என்பதல்ல எனது கவலை.
வாக்கரசியலுக்கு அப்பாற்பட்டு அவர் விதைத்துவரும் நச்சு விதைகளின் தாக்கம் எதிர்காலத்தை ஒரு இருளுக்குள் தள்ளிவிடும் அளவுக்கு தீமையானதாகதான் தெரிகிறது
தீய சக்திகளுக்கு எண்ணிக்கை ஒரு பொருட்டே அல்ல
கலைஞரின் உதவியாளர் சண்முகநாதன் வழங்கிய ஒரே பேட்டி .. சமஸ்
சமஸ் : சண்முகநாதனுக்கும் இப்போது 75 வயது ஆகிவிட்டது. உடலில் ஏகப்பட்ட கோளாறுகள். முதுமையின் விளைவாக கலைஞர் மௌனமாகி ஓராண்டு நெருங்கும் நிலையிலும், வழக்கம்போல அன்றாடம் கலைஞரின் வீட்டுக்கு வந்துவிடுகிறார் சண்முகநாதன்.
"தலைவர் சீக்கிரமே தேறிவிடுவார்; கூப்பிடுவார்" என்று கோபாலபுரம் வீட்டில் அவருக்கென உள்ள சின்ன அறையில் எந்த நேரமும் வேலைக்கான ஆயத்த நிலையில் கணினி முன் உட்கார்ந்திருக்கிறார். பத்திரிகையாளர்கள் சூழவே இருந்து வந்தாலும் இதுவரை சண்முகநாதன் தன் வேலையைத் தாண்டி யாரிடமும் பேசியதில்லை. தன் வாழ்வில் அவர் அளித்த முதல் பேட்டி இது.
புதன், 22 டிசம்பர், 2021
இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை நேரில் சந்தித்த தூதரக அதிகாரிகள் - விரைவில் விடுவிக்க நடவடிக்கை
தந்தி டிவி : இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மீனவர்கள் கைது குறித்து இலங்கை அரசிடம் இந்தியா தனது கவலையை தெரிவித்துள்ளதாகவும்,
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் சிறையில் உள்ள மீனவர்களை சந்தித்து, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் மீனவர்கள் தங்கள் உறவினர்களுடன் தொலைபேசி வாயிலாக பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு மீனவரை தூதரக அதிகாரி நேரில் சந்தித்து நலம் விசாரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாரத்தில் இனி 4 நாட்கள் வேலை.. 3 நாட்கள் விடுமுறை- அடுத்த வருடமே புது சட்டம் அமலா? சம்பளம் குறையுமா?
Shyamsundar - Oneindia Tamil : இந்தியாவில் இனி அலுவலகங்களில் தொழிற்சாலைகளில் வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்ற சட்டம் கொண்டு வரப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மீதம் உள்ள 3 நாட்கள் வார விடுமுறை அளிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.
2021 தொடக்கத்திலேயே இது தொடர்பான செய்திகள் வெளியாகின.
வாரத்திற்கு வேலை நாட்களை நான்காக குறைக்கும் வகையில் தொழிலாளர் சட்டத்தில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வரப்போவதாக தகவல்கள் வந்தன.
ஆனால் இதில் மாநில அரசுகளின் கருத்தையும் கேட்க வேண்டும்.
தொழிலாளர் சட்டம் பொதுப்பட்டியல் என்பதால் மாநில அரசுகளும் இதற்கு ஏற்றபடி விதிகளை மாற்ற வேண்டும்.
அப்போதுதான் நாடு முழுக்க ஒரே மாதிரி தொழிலாளர் சட்டத்தை கொண்டு வர முடியும்.
ஆபாச படமெடுத்து மிரட்டிய மாணவரை தீர்த்து கட்டிய மாணவிகள் .. சென்னை கும்மிடிப்பூண்டியில் சம்பவம்
மாலைமலர் : மாணவிகளை பாலியல் ரீதியாக மிரட்டிய விவகாரத்தில் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டு இருப்பது பெற்றோர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை: கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பெரிய ஓபுளாபுரத்தை அடுத்த ஈச்சங்காடு கிராமத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வாலிபர் ஒருவரின் உடல் புதைக்கப்பட்டு இருந்தது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஆரம்பாக்கம் போலீசார் விரைந்து சென்று உடலை தோண்டி எடுத்து விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில் அந்த வாலிபர் கொலை செய்து புதைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரது பெயர் பிரேம் குமார் என்பதும், 20 வயதான அவர் தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
தூக்கியெறியப்பட்ட பாகங்களை கொண்டு ஜீப்பை உருவாக்கிய நபர் - புதிய கார் பரிசளித்த ஆனந்த் மகிந்திரா
மாலைமலர் தத்தாத்ராய லோஹர் உருவாக்கிய ஜீப் மகிந்திரா ஆராய்ச்சி மையத்தில் காட்சிக்கு வைக்கப்படும் எனவும் ஆனந்த் மகிந்திரா தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநில தேவராஷ்த்ரி என்ற கிராமத்தை சேர்ந்த தத்தாத்ராய லோஹர் என்பவர் பட்டறை வைத்துள்ளார். அவர் தனது மகனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக வாகனங்களின் தூக்கியெறியப்பட்ட பாகங்களை கொண்டு ஜீப் ஒன்றை வடிவமைத்துள்ளார். ரூ.60,000 மதிப்பில் உருவாக்கப்பட்ட அந்த ஜீப் எப்படி இயங்குகிறது என்பதை வீடியோ எடுத்து யூடியூபிலும் வெளியிட்டார்.
அந்த வீடியோவை பார்த்த மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா, அவரை பாராட்டி புதிய பொலிரோ கார் ஒன்றை பரிசளித்துள்ளார். இதுகுறித்து ஆனந்த் மகிந்திரா கூறியதாவது:-
சிசேரியன் என்பது சில்லறைக்கு செய்யும் மருத்துவ சேவையா?
Loganayaki Lona : சிசேரியன் என்பது சில்லறைக்கு செய்யும் மருத்துவ சேவையா?
பிரசவத்தில் தாய் சடலமாக ஆகாமல் இந்த தலைமுறைக் குழந்தைகள் அதே தாயிடம் வளர மிக முக்கியக்காரணம் இந்த நவீன மருத்துவத்தின் வரம் என்றால் அது மிகையல்ல.பாராட்ட வேண்டிய அறிவியல் வளர்ச்சியை உணவுக்கலப்படம் எனும் பொதுப் பிரச்சனைக்கும், மூடநம்பிக்கைகளுக்கும் இடையே பொறுத்தி விமர்சிப்பதை மறுத்தே இக்கட்டுரை எழுதும் எண்ணம் வந்தது. இதைக் குறித்து விரிவாக அலசும் முன் எதார்த்தமான இயற்கை ப்ரசவம் குறித்து பார்க்கலாம்.
பிரசவ காலம் முடிந்து குழந்தை அம்மாவின் இடுப்பெலும்பு எனும் பாதுகாப்பு அரணில் இருந்து 8 முதல் 14 மணி நேர வலி என்னும் போராட்டம் கடந்து கருப்பையின் வாய் திறந்து, பிறப்புறுப்பின் வழியாக உதிரம் கொட்ட வெளியேறி வருவது இயற்கைப் ப்ரசவம் ஆகும்.இதிலும் பிறப்புறுப்பில் கீறலிட்டே (Episiotomy)குழந்தை எடுக்கப்படும்.
இளம் பெண் தொழிலாளர்களும் ஃபாக்ஸ்கானின் கொடிய சுரண்டலும்
Chinniah Kasi : இளம் பெண் தொழிலாளர்களும் ஃபாக்ஸ்கானின் கொடிய சுரண்டலும்
- எஸ்.கண்ணன்
தீக்கதிர், டிசம்பர் 21, 2021
பத்து ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சர்ச்சைக் குரிய தொழிற்சாலையாக ஃபாக்ஸ்கான் தமிழ்நாட்டில் மாறியுள்ளது. தங்கியிருந்த விடுதியில் வழங்கப்பட்ட உணவில் இருந்த விஷத் தன்மை காரணமாக, வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு உபாதைகளுக்கு உள்ளாகி, 159 இளம் பெண் தொழி லாளர்கள், 9 மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இவர்களில் சிலர் இறந்து விட்டதாக வாய் மொழியாக பரவிய செய்தி, சமூக வலைத்தளத்தில் தீவிரமாக பரவி பெரும் போராட்டமாக மாறியது. போ ராட்டத்தை நடத்திய இளம் பெண் தொழிலாளர்கள் நள்ளிரவில் சாலையில் அமர்ந்து, உறுதியாக நின்றது பலரையும் பேச வைத்த உண்மை. இந்த நிகழ்வை பல கோணங்களில் அலசி ஆராய்ந்தாலும், ஃபாக்ஸ்கான் நிறுவனம் அதன் செயல்பாடு, காண்ட்ராக்ட் நிறுவ னம் மற்றும் அதன் செயல்பாடு, அரசு மற்றும் அதிகாரி கள், பல்வேறு அனுபவங்கள் ஆகிய பின்னணியில் விவாதிக்க வேண்டியுள்ளது.
ஃபாக்ஸ்கான் நிறுவனம்
செவ்வாய், 21 டிசம்பர், 2021
நாம் தமிழர் மேடையில் ஆபாச வார்த்தைகள் குடியிருப்பு பகுதியில் பொறுமை இழந்து கொதித்த திமுக தொண்டர் .. அடிதடி
இந்தநிலையில், திமுக மீது தொடர்ந்து அவதூறுகளையும், அரசியல் அண்ணா விரித்த நாகரீகத்தையும் அரங்கேற்றி வரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களை உடனடியாக கைது செய்யுமாறு வேலூர் மாவட்ட திமுக தகவல் தொழில் நுட்ப அணி சார்பாக வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பாட்டுப்பாடினால்தான் காணி கிடைக்குமென்றால் எந்த மெனிக்கேயை.. மலையக கவிஞர் எஸ்தர் நாதனியால்
Esther Nathaniel : மெனிக்கே மஹே இத்தே பாடல் பாடிய சிங்கள இராணுவ அதிகாரியின் மகளுக்கு அரசாங்கம் கொழும்பு பத்தரமுல்லைப்பகுதியில் காணியொன்றை வழங்கியுள்ளது.
அந்தப் பெண் பாடல் பாடி மட்டுமே பிரபல்யம் அடைந்தார்.நல்லது
ஆயினும் இந்த இலங்கையில் இரு நூறு ஆண்டுகள் உழைக்கும் தொழிலாள வர்க்கத்துக்கு நிரந்தரமாக கூலி இல்லை .
ஒரு கல் வீடுமில்லை நிலமும் இல்லை.
ஆயிரம் ரூபாவுக்காக அரசாங்கத்தின் காதில் ஊதாத சங்கு இல்லை.சிங்களப்பிள்ளை பாட்டு பாடியதும் பிரபல்யம் ஆனதும் அரசாங்கம் காணியை கொடுக்கிறார்கள் .
இம்மண்ணிலே உழைத்து உருகுலைந்து செத்த மலையக மக்களுக்காக துண்டு நிலம் அதிலொரு கல் வீடு அரசு தரவில்லையே தோழர்களே
அப்படியானால் மலையக மக்கள் பாடி பாடி பிரபல்யம் அடைந்தால் தருவிர்களோ இங்கே லயங்கள் தீப்பிடித்து சாம்பலாகி மக்களும் சாம்பலாகும் வரை வீடு நிலம் குறித்து எவருமே வாய் திறப்பதில்லை.
அக்கரப்பத்தனை டயகம தோட்டங்களில் எரிந்த லயத்தில் இருந்துஇடம்பெயர்ந்தவர்கள் இன்னும் முகாம்களிலே தங்கியுள்ளார்கள்.
சண்முகநாதன் - கலைஞர் - எம்ஜியார்! கலைஞரின் உதவியாளராக எம்ஜியாரை எதிர்த்து சேர்ந்த வரலாறு
கலைஞருக்கு பின்னால் சண்முகநாதன் |
tamil.indianexpress.com : 1976ம் ஆண்டு ஆட்சி மாறிய பிறகு, கலைஞர் சண்முகநாதனை வேலையை விட்டுவிடும்படி கூற, மாறனோ செயலாளர் ஆகும் வயதும் திறமையும் அவரிடம் இருக்கிறது. எனவே எதிர்க்கட்சி தலைவருக்கு உதவியாளர் வேண்டும் என்று கேட்டு வாங்கிக் கொள்ள்ளுங்கள் என்று அறிவுரை வழங்க, எம்.ஜி.ஆருடன் சில மனக்கசப்பிற்கு பிறகு கலைஞரின் பி.ஏ.வாக அவர் தன்னுடைய பணியை தொடர்ந்தார்.
“நாம் விரும்பி தாலி கட்டிக்கிட்ட பொண்டாட்டி மாதிரி தலைவர்” அவருடைய கோபம் நிமிடங்களை தாண்டாது என்பதை நியாபகத்தில் வைத்துக் கொள் என்று அன்பில் சமாதானப்படுத்த தன்னுடைய 50 வருட பணியில் இரண்டு முறை தான் கோபித்துக் கொண்டு கலைஞரை விட்டு விலகி இருந்துள்ளார் சண்முகநாதன். நல்ல நண்பன், அகத்தில் இருந்து பணியாற்றும் நபர், கலைஞரின் மன ஓட்டத்தை முன்பே அறிந்து அறிவித்து மற்றவர்களின் போக்கை அன்று தீர்மானிக்கும் அனைத்துவிதமான நபருமாக வாழ்ந்திருக்கிறார் சண்முகநாதன். சண்முகநாதனுக்கும் கலைஞருக்குமான உறவு அலுவல் ரீதியை தாண்டியும் பல சமயங்களில் நல்ல புரிதலுடன் கூடிய உறவாக இருந்துள்ளது.
தமிழக மீனவர்கள் சிறை பிடிப்பு; ராமநாதபுரம் மண்டபம் பகுதி மீனவர்கள் வேலை நிறுத்தம்
மாலைமலர் : ராமேசுவரம்,மீனவர்கள் 43 பேர் நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை அவர்களை சிறை பிடித்து சென்றது. மேலும் அவர்களது 6 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். இதனால் சக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் காலை ராமேசுவரம் கரை திரும்பியதும் இதுபற்றி தெரிவித்தனர்.
இதனால் மீனவ கிராமங்களில் பதற்றம் உருவானது. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை யாழ்ப்பாணம் துறைமுகத்திற்கு இலங்கை கடற்படையினர் கொண்டு சென்றனர். பின்னர் அங்கு படகுகளை நிறுத்தி விட்டு மீனவர்களை மட்டும் தலைமன்னார் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
பருத்தித்துறையில் இளைஞனை தூக்கி சென்ற பட்டம் .. கீழே விழுந்து..
அதிகமான உயரத்தில் இருந்து கீழே விழுந்ததனால் சிறு விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது
கலைஞரின் நிழலாக இருந்த எழுத்தர் கோ.சண்முகநாதன் காலமானார்; வயது 80!
கலைஞர் செய்திகள் : உடல்நலக் குறைவு காரணமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் சண்முகநாதன்.
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் ஆருயிர் நண்பரும் அவரது உதவியாளருமான கோ.சண்முகநாதன் காலமானார். அவருக்கு வயது 80.
உடல்நலக் குறைவு காரணமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் சண்முகநாதன்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கோ.சண்முகநாதனின் உயிர் பிரிந்தது. அவரது மறைவுச் செய்தி தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மம்தா பானர்ஜி கூட்டணியை திமுக ஏற்கவில்லை! மூன்றாவது அணிக்கு ஆதரவில்லை!
tamil.indianexpress.com : மம்தா முயற்சியை புறந்தள்ளிய திமுக: டெல்லி கூட்டணி நிலைப்பாடு இதுதான்!
பாஜகவுக்கு எதிராக காங்கிரஸைத் தவிர்த்து மம்தா பானர்ஜி மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியை புறந்தள்ளும் விதமாக திமுகவின் முன்னாள் அமைச்சர் டி.ஆர். பாலுவின் கருத்து அமைந்துள்ளது.
DMK refuse Mamata Banerjee, Mamata Banerjee Third Front farmin, DMK alliance confirm with congress,
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜகவுக்கு எதிராக காங்கிரஸைத் தவிர்த்து மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், மம்தாவின் முயற்சியை புறந்தள்ளும் விதமாக திமுக முரசொலியில் தலையங்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் திமுகவின் டெல்லி கூட்டணி காங்கிரஸ் கட்சியுடன் தான் என்று தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளது.
தேர்தல் சீர்திருத்த மசோதா: `5 கோடிப் பேரின் வாக்குகள் பறிபோகும்! சர்வாதிகாரத்தை நோக்கி மற்றுமொரு படி?
ஆ. விஜயானந்த் - பிபிசி தமிழ் : இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் `தேர்தல் சீர்திருத்த மசோதா' தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
`வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது. தேர்தல் ஜனநாயகத்தையே காலி செய்யக் கூடிய அம்சமாகவும் இந்த மசோதா உள்ளது' என்கின்றனர் எதிர்க்கட்சி எம்.பிக்கள்.
தேர்தல் சீர்திருத்த மசோதா' சொல்வது என்ன?
இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டையில் மாற்றம் கொண்டு வருவதற்குத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதற்கு ஏற்றார்போல, குடிமக்களின் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் தேர்தல் சீர்திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.
யூடியூப் பிரசவம்: குழந்தை பலி, தாய் மருத்துவமனையில் அனுமதி!
நக்கீரன் - ராஜ்ப்ரியன் : ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகரைச் சேர்ந்தவர் லோகநாதன். அவரது மனைவி கோமதி. இருவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து, சமீபத்தில் கோமதி கருவுற்றார். தனியார் மருத்துவமனையில் தொடர் பரிசோதனை செய்துவந்துள்ளனர். அவருக்கு டிசம்பர் 13ஆம் தேதி பிரசவம் நடக்கலாம் என மருத்துவர்கள் தோராயமாக தேதி குறித்திருந்தனர்.
MLM இன்டஸ் விவா ஹெல்த் சர்வீசஸ் மூலம் ரூ.1500 கோடி மோசடி.. 10 லட்சம் பேர் ஏமாந்த சோகம்.. என்ன நடந்தது தெரியுமா..?
Prasanna Venkatesh - good Returns Tamil : இன்டஸ் விவா ஹெல்த் சர்வீசஸ் நிறுவனம் இந்தியா முழுவதும் சுமார் 10 லட்சம் முதலீட்டாளர்களை (மக்களை) ஏமாற்றிய நிலையில்,
இந்நிறுவனத்தின் உரிமையாளர்களான அபிலாஷ் தாமஸ் மற்றும் சி ஏ அன்சார் ஆகியோரை அமலாக்கத்துறை நேற்று பெங்களூரில் இருந்து கைது செய்துள்ளது.
தெலுங்கானாவில் கச்சிபௌலி காவல் நிலையத்தில் சைபராபாத் போலீஸார் இன்டஸ் விவா ஹெல்த் சர்வீசஸ் நிறுவனம் முதலீட்டாளர்களை மோசடி செய்து பணத்தைக் கொள்ளையடித்துள்ளது
மார்ச் 2021ல் கண்டுபிடிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்தது. இது தொடர்பாக ஏற்கனவே 24 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 20 கோடி ரூபாய் பணம் கொண்ட வங்கி கணக்கும் முடக்கப்பட்டது.
இந்த வழக்கை அமலாக்கத் துறை கையில் எடுத்த நிலையில் தற்போது இந்நிறுவன உரிமையாளர்கள் அபிலாஷ் தாமஸ் மற்றும் சி ஏ அன்சார் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இவ்விருவரும் முறையற்ற வகையில் MLM திட்டம் மூலம் முதலீட்டாளர்களைச் சேர்த்து நேரடி விற்பனை பிரிவில் இறங்கியுள்ளது, இந்தியா முழுவதும் மிகப்பெரிய அளவில் மார்க்கெட்டிங் செய்து கமிஷன் குறித்து அதிகப்படியான விளம்பரம் செய்து முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளது.
வேலூர் ஜோய்ஆலுக்காஸ் கொள்ளை 15 கிலோ நகைகள் மீட்பு; மும்பையில் பயிற்சி எடுத்த திருடன் நடித்து காட்டினான்
தினமலர் : வேலுார்: விமானத்தில் மும்பைக்கு பறந்து சென்று 3 மாதம் பயிற்சி எடுத்த பின் வேலுார் நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்ட சிங்க முகமூடி கொள்ளையனை கைது செய்த போலீசார் மயானத்தில் புதைத்து வைத்திருந்த நகைகளை மீட்டனர்.
வேலுார், தோட்டப்பாளையத்தில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கடந்த, டிச.,15ம் தேதி சுவற்றை துளை போட்டு 15 கிலோ நகை, 500 கிராம் வெள்ளி, பிளாட்டினம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதில், நகைக்கடைக்குள் புகுந்து சிங்க முகக் கொள்ளையன் கேமராவில் ஸ்பிரே அடித்து கொள்ளையடித்தது கண்காணிப்பு கேமராவில் பதிவானது.
திங்கள், 20 டிசம்பர், 2021
கேஎன்.நேரு அர்ச்சகர்களை தேரில்வைத்து- தேரைத்தொட்டு முதலில் இழுத்தது.. மரியாதை என்கிறபெயரில் நடந்த பார்ப்பன சூதுதான்.
புகச்சோவ் : திருவாதிரை களி.....!
கல்லிடை தாத்தா மார்கழிக்கு வந்திடுவார். பாவை நோன்பெல்லாம் பிரபலமாகறதுக்கு முன்னாடியே ஆரம்பிச்ச வழக்கமாம். குமரி ஆச்சி காலைலயே அடிச்சி எழுப்பிவிட்ருவா!
வீட்டு முன்னயே ஆடவல்லான் ஆலயம். கையில உமிக்கரி பொட்டலத்தை கொடுத்து துவர்த்தை தோள்ல மாட்டிவிட்டு, போய் பல்தேய்ச்சி குளிச்சிட்டு தாத்தாவோடபோய் சேந்துக்கணும்.
தாத்தா எங்களுக்கு முன்னாடியேபோய், தேவாரமும் திருவாசகமுமாய் மாத்திமாத்தி வெண்பாக்களை ஆர்.சுந்தர்ராஜன் குரல்ல பாடிட்டிருப்பார்.
தேர்தல் சீர்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது ! மோடி அரசின் அடுத்த நாசகார திட்டம்!
மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு கடந்த ஆட்சியின்போது நிறைவேற்ற முடியாமல் போன திட்டங்கள் அனைத்தையும் தனக்கிருக்கும் பெரும்பான்மை பலத்தினால் இந்த ஆட்சியில் படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. பா.ஜ.க அரசு கொண்டு வரும் திட்டங்கள் யாவும் கார்ப்பரேட் நலன் சார்ந்ததாகவும் ஆர்.எஸ்.எஸ்ஸின் இந்துத்வா சித்தாந்தங்களின் அடிப்படையிலும் இருந்து வருகிறது.
மாங்காடு பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் கல்லூரி மாணவர் கைது
hindutamil.in : சென்னை: மாங்காட்டில் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக, கல்லூரி மாணவர் ஒருவரை போலீஸார் கைது செய்து, 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பு வெளியிட்ட அண்மைத் தகவல்: சென்னை - மாங்காட்டைச் சேர்ந்த 16 வயது மாணவி, பூந்தமல்லியில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 18-ம் தேதி சனிக்கிழமை வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மாணவியின் உடலை மீட்ட போலீஸார், பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
FOXCON நிறுவனமும் நக்கி பிழைக்கும் அபாயகரமான குட்டி தலைவர்களும்
புகச்சோவ் : Foxcon இவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்.....!? FOXCON......!
இந்தியாவின் பனாட்டு முதலாளிகள் நடத்தும் பெருநிறுவனங்களில் நடக்கும் அசம்பாவிதங்களின் போது, பெரு முதலாளிகள் எப்போதுமே அதற்கான இழப்பீட்டையும், இறந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைகளையும் பயத்தின் காரணமாக அங்கீகரிக்கவே முன்வருகின்றனர்.
அவர்கள் அந்நியராக இருப்பதால் கூடுதலாகவே செய்யத்தயாராகவுள்ளனர்.
ஆனால், இங்கே நக்கிப்பிழைக்கும் அபாயகரமான ஒருவகை வர்க்கமுண்டு.
பெரும்பான்மையினரின் குட்டி தலைவர்கள், அப்பகுதியின் பெரும்பான்மை சாதிகள், அப்பகுதியின் வலுவான அரசியல் கட்சியினர். அப்பகுதியின் கூலிப்படை தலைமை ரவுடிகள், அப்பகுதியின் பிரபலமான வழக்குரைஞர்கள்,
அப்பகுதியின் மக்கள் செல்வாக்கைப்பெற்ற குழுத்தலைமைகள் போன்றவர்கள்.