செவ்வாய், 21 டிசம்பர், 2021

நாம் தமிழர் மேடையில் ஆபாச வார்த்தைகள் குடியிருப்பு பகுதியில் பொறுமை இழந்து கொதித்த திமுக தொண்டர் .. அடிதடி

tamil.abplive.com  : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசையும் திமுகவையும் திமுக தொண்டர்களையும் மேடையிலேயே செருப்பை கழட்டி அடிப்பேன் என்று பேசியது திமுகவினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது அது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது இது திமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், திமுக மீது தொடர்ந்து அவதூறுகளையும், அரசியல் அண்ணா விரித்த நாகரீகத்தையும் அரங்கேற்றி வரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களை உடனடியாக கைது செய்யுமாறு வேலூர் மாவட்ட திமுக தகவல் தொழில் நுட்ப அணி சார்பாக வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மாரிதாஸ் கைதானது தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து ஒன்றை வெளியிட்டார். அதில், மாரிதாஸ் போன்றவர்கள் தங்கள் கருத்துகளை வீடியோ வாயிலாக தெரிவிக்கும்போது, அவர்களை ஒடுக்கும் விதமாக அவர்கள் மீது சட்டம் பாய்கிறது. இதேபோல், தான் என் தம்பி சாட்டை துரைமுருகனும் கருத்து தெரிவித்தபோது கைது செய்யப்பட்டார். இதில், கருத்து சுதந்திரம் என்ற சொல்லுக்கு அர்த்தம் எங்கு இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார்.

சீமான் பேசிய இந்த கருத்தை தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் அவரை சங்கி என்றும், மாரிதாஸ் ஆதரவாளர் மற்றும் பிஜேபியின் பி டீம் என்று திமுகவினரால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டார். இந்தநிலையில்,  கடந்த 15 ம் தேதி சென்னை அம்பத்தூரில்அப்துல் ரவூப் என்கிற தமிழ் தேசிய தொண்டருக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் 26 ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சியில் சீமான் கலந்து கொண்டார். அப்பொழுது பேசிய சீமான் திமுக அரசை வன்மையாக கண்டித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக